2014 ஜூலை

அபூ அப்தில்லாஹ் சூனியம்-சிஹ்ர் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அனைத்துத் தரப்பு மவ்லவிகளிடமும் கொடி கட்டிப் பறக்கின்றன. பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. வேதனைக்குரியது என்னவென்றால், குர்ஆனில் முஹ்க்கமாத் வசனங்கள் இரண்டாவது பொருளுக்கே இடமே இல்லாத ஒரேயொரு பொருளை மட்டுமே கொண்ட வசனங்கள், (3:7) அந்த வசனங்களை 2:159 வசனம் கூறுவது போல் தெள்ளத் தெளிவாகத் திட்டமாக, சர்வ வல்லமை மிக்க, முக்காலமும் அறிந்த அல்லாஹ்வே மனிதர்களுக்காகவே விளக்கி விட்டான். அவற்றில் இரண்டாவது பொருள் எடுப்பது அவற்றின் அசலான […]

MTM. முஜீபுதீன், இலங்கை ஜூன் 2014 தொடர்ச்சி…. விபசாரத்தை விட்டு மக்களைப் பாதுகாக்கும் மார்க்கம் இஸ்லாம் : அன்று முதல் இன்று வரை உலகில் பல வடிவங்களில் விபசாரம் பல இடங்களிலும் சமூகத்தை சீரழித்து வருகின்றது. இத்தீய செயற்பாடு மனிதர்களின் குடும்ப வாழ்க்கையைச் சீர்குலைத்து வருகின்றது. இதனால் குடும்பங்களில் பிரிவினைகள், கலாசார சீர்கேடுகள், நோய்கள், தந்தை யார் என அறிய முடியாத குழந்தைகளின் உருவாக்கம், அநாதை விடுதிகள் அதிகரிப்பு, கருக் கலைப்பு, குழந்தைக் கொலைகள் அதிகரிப்பு, விலை […]

சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஜகாத் வருடா வருடம் கட்டாயக் கடமை! – அபூ அப்தில்லாஹ் அல்குர்ஆன் கூறுகிறது : “”…பொன்னையும், வெள்ளியையும் சேமித்து, அவற்றை இறை வழியில் செலவிடாதோருக்கு நோவினை மிக்கத் தண்டனையை (தூதரே) நற்செய்தி கூறும்.” அந்நாளில் (அவர்களின் செல்வத்தை) நரக நெருப்பில் காய்ச்சி, அதன் மூலம் அவர்களின் நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகு களிலும் சூடு போடப்படும். “”நீங்கள் உங்களுக் காகச் சேமித்து வைத்தது இதுதான். எனவே நீங்கள் சேமித்தவற்றைச் சுவையுங்கள்”  (அல்குர்ஆன் : 9:34,35)

அல்குர்ஆன் ஆலஇம்ரான் : 3:102 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்ள வேண்டிய முறைப்படி பயபக்தி கொண்டு முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க விரும்பும் அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, திட்ட மாகத் துல்லியமாக எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி 1435 வருடத்திய ரமழான் மாதம் 28.06.2014 சனியன்று ஆரம்பித்து 26.07.2014 அதே சனியன்று 29 நோன்புகளுடன் முடிவடைகிறது. 27.07.2014 ஞாயிறன்று 1435 வருடத்திய ஷவ்வால் மாதத்தின் முதல் நாள். அன்று தான் நோன்புப் பெருநாள் தினம்.