2018 மார்ச்

எஸ்.ஹலரத் அலி,- திருச்சி அல்லாஹ் படைத்த பெரும்படைப்புகளில் மனிதப்படைப்பு ஒன்றாகும்.எல்லா படைப்புகளையும் படைத்து இறுதியில் களிமண் சத்திலிருந்து ஆதி தந்தை ஆதம் (அலை) அவர்களை  படைத்தான். அவர்களிலிருந்து ஹவ்வா (அலை), இப்படி ஒரு ஜோடி ஆண் பெண்ணிலிருந்து மனித வர்க்கம் பல்கிப் பெருகியது. பிறக்கும் குழந்தைகள் சில நேரம் ஆணாகவும், சில நேரம் பெண்ணாகவும் பிறப்பதற்கு என்ன காரணம்? அன்று மதீனாவில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்னும் யூத மதகுரு, ஆண,பெண் குழந்தை பிறப்பு குறித்து […]

. தொடர் – 6 தோழர் ஹம்துல்லாஹ் நாம் “”அல்லாஹ்வின் திருநாமங்கள்” என்ற தொடரில் இதுவரை “அல்லாஹ்’ என்ற சொல்லை உபயோகிப்பதற்கு முன் ஏகஇறைவன் “ரப்பு’ என்ற அன்றைய அரேபியர்களிடையே புழக்கத்திலிருந்த சொல்லைக் கூறியே தன்னை அறிமுகப் படுத்தினான். அறிமுகப்படுத்துகிறான் என் பதை திருக்குர்ஆன் கூற்றுகள் மூலம் கண்ட றிந்தோம். சுமார் நான்கு இறை அறிவிப்பு (வஹி)களுக்கு பின் ஐந்தாவதாக அருளப்பட்ட “”அல்-பாத்திஹா” (பொருள் : அறிமுகம், முகவுரை) என்ற ஏழு வசனங்களை தனி சிறப்பு மிக்க […]

விமர்சனம் : அந்நஜாத் மார்க்கப் பணிக்கு கூலிகூடாது என்கிறது அதே நேரத்தில் மார்க்கப் பணிக்கு கூலி வாங்கும் கூட்டம் “”அல்குர்ஆன் 2:273” ஆதாரம் காட்டி, நியாயப்படுத்துகிறார்களே! கூலி கூடுமா? கூலி கூடாதா? வார்னர் நதீர், நாகர்கோவில் விளக்கம் : பொய்யுரைப்பதில் மன்னர்கள், அண்டப் புளுகர்கள், ஆகாசப் பொய்யர் கள், மக்களை வழிகெடுப்பதில் இந்த மவ்லவிகளை விடக் கேடுகெட்டவர்கள் இந்த உலகில் காணப்படும் ஏனைய அனைத்து மக்களின் மதகுருமார்களிலும் யாரும் இல்லை! காரணம் அவர்களில் யாரிடமும் இறையளித்தப் பாதுகாக்கப்பட்ட […]

ஐயம் : மூன்றாம் பாலினம் பற்றி இஸ்லாத்தின் பார்வை என்ன? அவர்களுக்கு பெற்றோர்களின் சொத்தில் பங்கு என்ன? அவர்களை இறந்தால் குளிப்பாட்டுவது யார்? S.M. நாசர், நாகர்கோவில் தெளிவு : மூன்றாம் பாலினம் கிடையாது. அவர்கள் ஆண்தான், அவர்களுக்கு ஆண் களுக்குரிய அனைத்து சொத்துரிமைச் சட்டங்களும் செல்லுபடியாகும். மேலும் அவர்கள் ஆண்களாக இருப்பதால் இறந்துவிட்டால், ஆண்களே குளிப்பாட்டுவதற்கு அனுமதி உண்டு. இஸ்லாம் இவர்களை ஆண்களாகத் தான் முடிவெடுக்கிறது. இவர்கள் எந்த விதத்திலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்கப்பட முடியாதவர்கள். […]

மர்யம்பீ, குண்டூர், 1. கிரகணத் தொழுகை நபி(ஸல்) அவர்கள் வழியா? கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி : 1041 2. மறுமை, மழை, கர்ப்பங்களில் உள்ளது, நாளை சம்பாதிப்பது, மரணிக்கும் பூமி எது என்பதையும் அல்லாஹ்தான் அறிவான் என அல்லாஹ் கூறும் வசனம். அத்.31, வசனம் 34 3. வெட்கம் எதனுடைய கிளைகள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? ஈமானுடைய கிளைகள், புகாரி : 4. ஜும்ஆ நாளில் குளிப்பது […]

அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! தொடர் : 34 M.. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் தமிழாக்கமும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ­வ்வால் பிறை ஹிஜ்ரி 1357 எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. […]

இப்னு ஸதக்கத்துல்லாஹ் நபிகள் நாயகம், நாயகம் என்ற சொல்லை எழுதாதவர்கள், பேசாதவர்கள் தப்லீக்கில் இருந்து தவ்ஹீது வரை ஒருவர் பாக்கியில்லை. பீ.ஜே.வைப் பொறுத்த வரை அந்நஜாத் ஆரம்பிக்கப்பட்ட (1986)தி லிருந்து தமுமுகவை ஆரம்பிக்கும் (1995) வரை, குர்ஆனிலோ, ஹதீஃதிலோ நபிகள் நாயகம் என்ற வார்த்தை இல்லை. நபி, ரசூல் என்றுதான்   இருக்கிறது. எனவே, நபி, ரசூல் என்று குறிப்பிடுவதுதான் சரி என்று எழுதியும், பேசியும் வந்தார். தமுமுக ஆரம் பிக்கப்பட்ட பிறகு பெரும்பான்மை முஸ்லிம்களை வளைத்துப் போடுவதற்காக […]

அபூ அனீஸ் அல்லாஹு ரப்பில் ஆலமீன் அகில உலகத்தாருக்கும் இறக்கி அருள் புரிந்திருக்கும் பரிசுத்த குர்ஆனின் முதலாம் அத்தியா யத்தின் நான்காவது வசனத்தை (1:4) கவனமாக படியுங்கள்; சிந்தனை செய்யுங்கள், சிந்தித்தபின் கட்டுரையை மேற்கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். இந்த ஆயத்தை நானும் படித்த நாளிலிருந்து சிந்திக்காமல், சமீபத்தில்தான் சிந்திக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு, அல்ஹம்துலில்லாஹ். அற்புதமான தெளிவு கிடைத்தது. அத்தெளிவை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தவறு இருப்பின் தெரிவித்தால் திருத்திக் கொள்கிறேன். 1:4 இறை வசனத்தின் […]

இப்னு ஸதக்கத்துல்லாஹ் “”…அவர்களில் ஒரு சாரார், அல்லாஹ் வின் வசனங்களைக் கேட்டு, நன்கு விளங்கிய பிறகு வேண்டுமென்றே அதை புரட்டக் கூடியவர்கள்” 2:75 மேலும், அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர். கட்டுக்கதைகளை (அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர நெறிநூலை அறிந்து வைத்திருக்கவில்லை, மேலும், அவர்கள் (வீண்) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. 2:78  மறைந்த அபூ அப்தில்லாஹ் அவர்கள் பிறை, கணக்கீடு, நாளின் துவக்கம் குறித்து பீ.ஜே. ஜமாஅத்திடம் 46 கேள்விகள் கேட்டிருந்தார்கள். வெகுநாட்களாக அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், […]

காளிச்சரண் சரப்! இந்தப் பெயரை சமீபத்தில் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் ஒரு பிரபலம். பாஜகவை சார்ந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர். இவர் செய்த அசிங்கம் தேர்தல் பணிக்காக சென்றுகொண்டு இருந்தவர். வழியில் பொது இடத்தில் காரை நிறுத்தி, அருகிலிருந்த கட்டிடச் சுவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இவரின் இந்த அருவருப்பான செயலைக் காட்டும் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருக்கிறது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு சுகாதாரப் பணிகள் […]