2021 பிப்ரவரி

தலையங்கம்! இறையடிமை ஆகுவோம்! பூமி பெரும் அதிர்ச்சியாக, அதிர்ச்சி அடையும்போது, இன்னும் பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும்போது, அதற்கு என்ன நேர்ந்தது என்று மனிதன் கேட்கும்போது, அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்… உம்முடைய இறைவன் வஹீ(இறைச் செய்தி) 5லம் அதற்கு அறிவித்ததாக! அந்நாளில், தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, மக்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும், அதனை அவர் கண்டு கொள்வார்…. மேலும், எவன் ஓர் அணுவளவு […]

மக்களை மயக்கும் ஜனநாயகம்! அபூ பாத்திமா ஜனநாயகம்! மக்களுக்காக மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களே ஆட்சி செய்யும் பெருமை மிக்க ஆட்சி மக்களாட்சி – ஜனநாயக ஆட்சி என பெருமையாகப் பேசப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கும் இதில் பெரியதொரு மயக்கம் இருக்கவே செய்கிறது. மக்கள் சுதந்திரமாகச் செயல்படுத்துவதாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நடப்பதோ வேறு! பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி நடக்கும் ஆட்சி என்று கூறுவது உண்மையில் மிக மிகச் சிறுபான்மையினரின் விருப்பப்படி நடக்கும் ஆட்சியாகவே இருக்கிறது. காரணம் ஜனநாயகம் எனும் […]

படைத்த  இறைவனையே அஞ்சுங்கள்! ஷரஹ் அலி, உடன்குடி. இறை நம்பிக்கை கொண்டோரே! (படைத்த இறைவன்) அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (மறுமை) நாளைக்காக ஒவ்வொருவரும் எதைத் தேடி வைத்துள்ளார் என்பதை, அவர் கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்கின்றவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (அல்குர்ஆன் : 57:18) அவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள் : எவர்கள் அல்லாஹ்வை மறந்துவிட்டு இருக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அதனால், அவர்கள் தங்களையே மறந்து விடும்படி அல்லாஹ் செய்தவிட்டான். அவர்கள்தாம் பாவிகளாவர். […]

சமுதாயத்தை கல்வியில் தலை நிமிரச் செய்வோம்! அஹ்மது இப்ராஹீம், பளியங்குடி. இன இழிவு நீங்க இஸ்லாம்தான் தீர்வு என முழங்கிய பெரியாரின் அந்த வார்த்தைகளையே பேராசிரியர் கீ.வீரமணியின் தி.க. மற்றும் பெரியார் தி.க. போன்ற அத்தனை பகுத்தறிவுவாதிகளும் இந்த உண்மை தாழ்த்தப்பட்ட மக்களைப் போய் சென்றடையவிடாமல் திட்டமிட்டு மறைத்து விட்டனர். தொடர்ந்து மறைத்தும் வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களுடைய இன இழிவுகளை பற்றி எந்தக் கவலையும் படாமல் மத்திய மாநில அரசுகள் தரும் இட ஒதுக்கீட்டை அடைவதிலேயே […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 66 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த […]

படைத்தவனை மறுப்பது பகுத்தறிவு ஆகுமா? அப்துர் ரஹ்மான் அன்புச் சகோதரர்களே உங்கள் மீது படைத்த இறைவனின் சாந்தியும் சமாதானமும் ஏற்படட்டும். அவனே மனிதனைப் படைத்தான். (இறைநூல்: 55:3) இறைவனே உங்களை படைத்தான். அல்லாஹ் (ஏகன் இறைவன்) தான் உங்களைப் படைத்தான், பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான், அவனே பின்னர் உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான். இறைநூல் : 30:40 மனிதர்களில் பலருக்கு இதில் சந்தேகம் : இறைவன் உண்டா? கண்ணால் பார்க்காமல் […]

சாட்சியாளர்கள் …. அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம், திருச்சி. நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சாட்சியாளர்களே…. இந்த பூமியிலே மனித உருவம் பெற்று வருவதற்கு முன்னரே நாம், சாட்சியம் அளித்திருக்கிறோம். (இறைநூல் : 7:172) மேலும் கலிமாவை (ஷஹாதத்) மொழிந்து இஸ்லாத்தை தன் வாழ்வியலாக மாற்றிக்கொள்ளும் ஒவ்வொருவரும் சாட்சி கூறியவர்களெ… முஸ்லிம்களாகிய அனைவரும் தினந்தோறும் சாட்சி சொல்லக்கூடியவர்களாகவும், சொல்லக்கூடியவர்களுக்கு சாட்சிகளாகவும் இருக்கிறோம். நம்மைச் சுற்றி இருப்பவைகளுக்கு நாமும். நமக்கு அவைகளும் சாட்சிகளாக இருக்கின்றன. இறைநெறிநூலில் தூதர்கள் சமூகத்திற்கு சாட்சியாகவும் அவருக்கு […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? அபூ அப்துல்லாஹ் தொடர் – 6 மறு பதிப்பு : பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைக் கலப்பது போல் இந்தப் புரோகித மவ்லவிகள் குர்ஆன், ஹதீதுக்கு முரணான மார்க்க முரணான மூடச்சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும், உஸ்தாது(ஆசிரியர்) குருட்டு பக்தியையும் வஞ்சகமாக சிறுவர், சிறுமியர்களின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதித்து விடுகிறார்கள் என்ற விபரத்தைத் தொடர் ஐந்தில் விளக்கி இருந்தோம். அவர்களின் வஞ்சகப் புத்தி அத்துடன் முடிந்து விடுவதில்லை. மேலும் தொடர்கிறது. இவர்களின் அரபி […]

முஸ்லிம்களில் தூய்மையாளர் யார்? அபூ உஸ்மான், சென்னை. உலகத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் அனைவரும் தங்களை முஸ்லிம் என்று மட்டுமே அழைத்துக் கொள்ளவேண்டும். வேறு எந்தப் பெயரையும் வைத்து இந்த உலகத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதை குர்ஆனின் பல வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. உதாரணத்திற்கு ஒரு வசனம் பாருங்கள். எவர் அல்லாஹ்வின் பாதையில் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகின்றாரோ அவரை விட […]

நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜனவரி மாத தொடர்ச்சி … நரகத்தில் கொடிய விஷமுள்ள பாம்புகள் : நரகத்தில் கடுமையான விஷமுள்ள மிகப் பெரிய பாம்பகள், தேள்கள் இருக்கும். அது ஒருமுறை கொட்டினால் நாற்பது வருடங்கள் வரை அதனுடைய வேதனை இருக்கும். மேலும் நரகத்தில் “புக்த்” என்ற உயர் ரகமான பெரிய ஒட்டகத்தின் அளவு பாம்புகள் இருக்கும். அவற்றில் ஒன்று தீண்டினால் அதனுடைய கடுமையான வேதனை நாற்பது ஆண்டுகள் வரை […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர். காய்ச்சல் எதனால் உண்டாகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? நரகத்தின் வெப்பக்காற்றால் உண்டாகிறது. அப்துல்லாஹ்பின் உமர்(ரழி), புகாரி : 5723 தொற்று நோய் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியது என்ன? தொற்று நோய் என்பது கிடையாது என கூறினார்கள். அபூஹுரைரா(ரழி), புகாரி : 5717 சொர்க்கச் சோலைகளை யாருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்? நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ் சுவனங்களை வாக்களித்துள்ளான். அல்குர்ஆன் : 9:72 எது சிறந்த தர்மம் என […]

இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளில் முஸ்லிம்கள் அங்கத்தினர்களாக இருக்கலாமா? அபூ தஸ்னீம், குவைத் இன்றைய நவநாகரீக உலகில் அரசியல்வாதிகளுக்கு உள்ள அடையாளம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற சிறப்பு அம்சங்கள்தான் தகுதியாக கருதப்படுகிறது. இவை மூன்றும் இல்லையென்றால் அரசியல் உலகிலேயே அரசியல்வாதிகள் ஆச்சரிய கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள். நேர்மை என்ற வார்த்தைக்கு இன்றைய அரசியலில் இடம் கிடையாது. நேர்மையானவர்கள் அரசயிலில் புகுந்தால் பிறகு நாட்கள் செல்லச் செல்ல பன்றியோட சேர்ந்த கன்றுகளாகத்தான்ட இருக்க நேரிடும். ஒவ்வொரு வழிமுறைக்கும் சாக்கடை […]

ஐயம் : “மார்க்கத்தை மறைப்பவர்களை சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்” என்று குர்ஆன் கூறுகிறதே. அவ்வாறு சபிப்பவர்கள் யார்? ஆதாரத்துடன் தெரிவிக்கவும். தாவூது இப்ராஹீம், மதுரை. தெளிவு : குர்ஆன் கூறும் அந்த வசனத்தை முதலில் காண்போம். நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும், அதன் நாம் நெறிநூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும், யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான், சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்”. அல்குர்ஆன் : 2:159 சபிப்பவர்கள் யார் என்பது தங்களுக்கேற்பட்டுள்ள ஐயம். தமது குடும்பத்திலுள்ள தாய். தந்தை, மனைவி, மக்கள், […]