மூன்று நாள் பெருநாள் வருவது! மூணின் (MOON) தவறா? முஸ்லிம்களின் தவறா?

in 2024 பிப்ரவரி

மூன்று நாள் பெருநாள் வருவது!

மூணின் (MOON) தவறா? முஸ்லிம்களின் தவறா?

S.H. அப்துர் ரஹ்மான்

அந்நஜாத்தில் பிறை பற்றிய கட்டுரைகள், சிறப்பிதழ்கள் ஏற்கனவே பலமுறை வந்திருக்கின்றன. அவற்றை படித்தவர்களும் இருக்கிறார்கள், படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல! அந்நஜாத்தில் எது வந்தாலும் படிக்க போவதே இல்லை என்ற முடிவில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அந்நஜாத்தை யாருக்கும் தெரியாமல் மறைவாக படிக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள். கட்டுரைகள் பல வரலாம்; ஆனால் மாறுதல் எப்போது வரும் என்பதை அல்லாஹ்வே  அறிவான்.

தமிழகத்தில் சுமார் 1985ஆம் ஆண்டு தவ்ஹீத் பிரச்சாரம் துவங்கியது. அதன் விளைவாக சமுதாயத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டாயின. தவ்ஹீத் ஜமாத்தின் கருத்துக்களை ஆதரித்தவர்களும் இருந்தார்கள், எதிர்த்தவர்களும் இருந்தார்கள். ஆனால் சுன்னத் ஜமாத்தினருக்கும், தவ்ஹீத் ஜமாத் தினருக்கும் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் பிறை விசயத்தில் கருத்து வேறுபாடு சுமார் 1999ஆம் ஆண்டு வரை இல்லாமல் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி வந்தனர். சுமார் 2000ஆம் ஆண்டுக்கு பிறகு தவ் ஹீத் ஜமாத்தினர்களுக்கிடையே பல்வேறு கருத்துக்கள் குர்ஆனின் வசனங்களிலும், ஹதீஃத்களிலும்  தோன்ற  ஆரம்பித்தன. அதில் மிக முக்கியமாக பிறை விசயம் இருந்தது. அது மட்டுமல்ல பல பிரிவுகளுக்கு காரணமாக அன்றும், இன்றும் இருப்பது பிறை விசயம் மட்டுமே. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் சமுதாய தலைவர்கள், இயக்க நிர்வாகிகள், மார்க்க அறிஞர்கள் இதில் ஒத்த கருத்துக்கு வர  மறுப்பது  ஈகோ (பெருமை)  தான்.

முஸ்லிம்லீக்கும், முஸ்லிம்லீக் தலைவர்களும் பிரிந்ததை விட மூணால் (MOON) முஸ்லிம்கள்  பிரிந்ததே  அதிகம்.

இதுவரை  நடந்தது  இது!

இனி என்ன செய்யலாம்? ஒரே நாளில் பெருநாள் கொண்டாட முடியுமா?

முடியும்;  ஆனால்  முடியாது.

ஏன் என்றால் ஈகோ(பெருமை) இது இப்லீஸுக்கு முதலில் வந்தது. அவனுடைய வாரிசுகளுக்கும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அவ்வாறானால் பிறையைப் பற்றி சுருக்கமாக தெரிந்துகொள்ள வழி ஏதேனும் உண்டா? உண்டு, நம்மை படைத்தவன் என்ன சொல்கிறான்,  படைப்புக்கள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொண்டால்  போதும்.

பஜ்ருக்கு பிறகு சூரியன் உதயமாகு வதே  நாளின்  துவக்கம் என்று சிலரும்,

மஃரிபுக்கு பிறகே நாளின் துவக்கம் பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூறுவது.

ஆங்கிலேயர்கள்  என்ன  சொல்கிறார்கள் :

இரவு 12 மணிக்கு பிறகு அதாவது மணி 12.01 ஆகிவிட்டால் நாளின் துவக்கம் ஆரம்பம் என்று கூறுகிறார்கள்.

மேற்கண்ட மூன்றில் ஒன்றுதான் மட்டுமே சரியாக இருக்கமுடியும். அதாவது நாளின் துவக்கத்தை சரியானதை பின்பற்றினால் பிறையின் துவக்கத்திலும், முடிவிலும் கருத்து வேறுபாடு வராது. இது புரியாததினால்  வந்த  குழப்பமே

ரமழான் மாதம் மட்டும் பிறை பார்க்கும் வரை இந்த குழப்பங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும்.

மூன்று  நாள்  பெருநாள் :

சந்திரனானது (நிலா) ஒருபோதும் காணாமல் போவதில்லை. அது சிலர் கண்களுக்கு சில நேரம்/ சில நாள் தெரியாமல் இருக்கின்றது அவ்வளவே!

சூரியன் எப்படி மறைவதுமில்லையோ, உதிப்பதுமில்லையோ, அதுபோல சந்திரன் காணாமல் (இல்லாமல்) போவதுமில்லை, புதியதாக பிறப்பது மில்லை. அதுஅது இறைவன் கட்டளைப் படி அதன் பணியை செய்து கொண்டே இருக்கிறது. அதாவது சூரியன் மறைவது, உதிப்பது, சந்திரன் பிறப்பது என்பதெல்லாம் சொல் வழக்கத்தில் புரிதலுக்காக சொல்லப்பட்ட வார்த்தைகள் தானே தவிர, நிஜம் அல்ல. அவ்வாறு என்றால் எப்படி ரமழான் மாதத்தின் சரியான நாளின் துவக்கத்தையும், அந்த மாதத்தின் முடிவையும் தெரிந்து கொள்வது. 

அதற்கு முதலாவதாக எவரையும் தஃலீத்(கண்மூடித்தனமாக) பின்பற்றாமல் சிந்திக்க  வேண்டும்.  இரண்டாவதாக இன்று துல்லியமாக சந்திரனின் ஓட்டத்தை கணக்கீட்டு அறிவிப்பு செய்கின்ற ஜமாஅத் முஸ்லிமீன், ஹிஜ்ரா கமிட்டிகளின் அறிவிப்பை நீங்கள் ஆராயவேண்டும்.

இந்த வருட ரமழான் பெருநாள் 3 நாள் வருவதாக உள்ளது. அதாவது ஏப்ரல் 9ம் தேதி, 10ம் தேதி, 11ம் தேதி ஆகிய மூன்று நாள். இது முஸ்லிம்களின் தவறே; MOON-ன் (சந்திரனின்)  ஓட்டத்தின்  தவறு  அல்ல.

இதற்கு  காரணம் :

நாளின் துவக்கத்தை ஒரு சாரார் மஃக்ரிபில் ஆரம்பிக்கும்போது இரண்டு நாள் பெருநாளாக மட்டும் இருந்தது. அதாவது அரபு நாடுகளின் பகுதியில் தெரியும் பிறையின் காட்சியை கண்டு முதல் நாளும், இந்திய பகுதியில் தெரியும் பிறையின் காட்சியை கண்ட மக்களுக்கு இரண்டாம் நாளும் நோன்பின் ஆரம்பம் இருந்து வந்தது. இதை அறிவியல் மூலம் பிறையை கணக்கிட்டு ஒரே நாளில் பெருநாள் கொண்டுவருவோம் என்று துவங்கிய ஹிஜ்ரா கமிட்டி நாளின் ஆரம்பம் பஜர்  தான் என்பதை சொன்னாலும் (சூரியனின்) உச்சியை அடிப்படையாக கொண்ட UTC என்ற உலக நேரத்தை (ஆங்கில கணக்கிட்டு நேரத்தை) கொண்டு கணக்கீடு செய்யப்பட்டதால் தவறான காலண்டரை வெளியிட்டு மூன்றாவது நாள் பெருநாள் உண்டாகியது. ஹிஜ்ரி கமிட்டி தான். இரண்டை ஒன்றாக்குவோம் என்று தோன்றி தவறான ஆங்கில கணக்கால் (UTCயால்)  மூன்றாக  மாற்றியது.

இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் ரமழான் மாதம் பெருநாள் இதை தெளிவாக்க 3 நாட்களாக வரும். 

முதல் நாள் : ஏப்ரல் 9ல் செவ்வாய்க்கிழமை ஹிஜ்ரா கமிட்டியினருக்கு மட்டும் தனி பெருநாள்.

இரண்டாம் நாள் : ஏப்ரல் 10ம் தேதி புதன்கிழமை சவுதி அரேபியா நாடுகளும், சவுதியை பின்பற்றும் நாடுகளும் துருக்கியும் துருக்கியை பின்பற்றும் நாடுகளும் ஜமாத் முஸ்லிமீன் காலண்டரை பின்பற்று வோருக்கு  பெருநாள்.

மூன்றாம் நாள் : ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை இந்தியாவும் அதை சார்ந்த பாகிஸ்தான், பங்களாதேசம் நாடுகளும் மற்றும் காஜிகளின் அறிவிப்பை பின்பற்றும் மக்களும், அந்த  அந்த  பகுதியில்  பிறையை  பார்ப்பவர்களுக்கும்  பெருநாள்.

இந்த மூன்று நாட்களில் தனியாக பெருநாள் கொண்டாடுவது ஹிஜ்ரா கமிட்டியினர் மட்டும்தான். அதாவது சங்கமும் முடியும் முன்பே ஆங்கில நாட்காட்டியின் நள்ளிரவு அடிப்படையிலான UTCஐ கணக்கிட்டு தவறாக சங்கமம் நாளில் பெருநாள் கொண்டாடுவது ஹிஜ்ரா கமிட்டியினர்  மட்டுமே.

உச்சி முதல் உச்சி வரை ஒருநாள் என்ற Uவீளீயின் தவறான கணக்கை இவர்கள் விடாத வரையில் 3 நாள் பெருநாள் இரண்டாகவோ, ஒன்றாகவோ குறையாது. அதேபோல் பிறை சாட்சியை மறுத்து தம் பகுதியில் கண்ணால் நாம் பார்க்க வேண்டும் என்ற கருத்தை பின்பற்றுபவர்கள் மாறாதவரை இரண்டு நாள் பெருநாள் ஒரு நாளாக  ஆகாது.

பிறையை பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும், அவை மக்களுக்கு காலங்காட்டியாகவும் ஹஜ்ஜுடைய நாட்களை  காலம்  காட்டுபவையாகவும்  உள்ளன. அல்குர்ஆன்: 2:189

மேற்கண்ட இறைவசனப்படி ஹஜ் தேதியை சவுதி அறிவிக்கும்போது ஏற்று ஹஜ்ஜை நிறைவேற்ற செல்லும் மக்கள், அதுவே பெருநாட்களை சவுதி அறிவிப்புக்கு ஏற்க மறுக்கும் நாடுகள் மிக குறைவான நாடுகளே. அனைத்து உலக முஸ்லிம்களும் இதை ஏற்று பெருநாள் கொண்டாட தயாரானால் ஒரே நாளில் பெருநாள் என்பது சாத்தியமே. நாம் முயற்சி செய்யாதவரை இறைவன் இதில் ஒரு தீர்வை கொடுக்கமாட்டான். எனவே முயற்சி செய்வோம்.  இதில்  நமக்கு  வெற்றியை  கொடுப்பான்.    இன்ஷா  அல்லாஹ்.

Previous post:

Next post: