2010 செப்டம்பர்

அபூ அப்தில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாள்களை மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாகக் கொண்டாட அனுமதி வழங்கி இருக்கிறான். ஆண்கள் மஹல்லா பள்ளிகளிலும், பெண்கள் கடமையான ஐங்கால தொழுகைகளை தங்கள் வீடுகளிலும் தொழுது கொள்ள அனுமதித்த நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று தொழத் தடுக்கப்பட்ட மாதவிடாய் பெண்களையும் பெருநாள் திடலுக்கு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றால், தங்களின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைப்பதற்கு உரிய ஆடைகள் இல்லாத பெண்கள் கூட இரவல் ஆடையை வாங்கி அணிந்து கொண்டு பெருநாள் […]

ஐயம் : நபி(ஸல்) இரவுத் தொழுகை 8+3 என தொழுதிருக்க ஓர் ஆலிம் 8+3 போக விடிய விடிய நஃபில்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம் என்று கூறுகிறார். அவ்வாறு தராவீஹ் (தஹஜ்ஜுத்) தொழுத பின் பல நஃபில்கள் தொழலாமா?     ராஹிலா, உசிலம்பட்டி.

இப்னு ஹத்தாது 08.08.2010 ஞாயிறன்று சென்னை ஜாக் தலைமையகத்தில் “பிறைக் குழப்பமும் இஸ்லாமியத் தீர்வும்’ என்ற அறிவிப்போடு பலர் பேசினர். காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை அவர்கள் என்ன பேசுகிறார்கள்? அதில் ஏற்கத்தக்க ஆதாரங்களைத் தருகிறார்களா? அதை ஏற்போமே என்று 39:18 இறைக்கட்டளைக்கு அடிபணிந்து அங்கேயே இருந்து அவர்கள் உரைகளை கவனமாகக் கேட்டோம். பிறையைக் கண்ணால் கண்டிப்பாகப் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு உருப்படியான ஒரேயொரு ஆதாரத்தையும் அவர்களில் யாருமே தரவில்லை. மாறாக […]

நமது தாய்த்திருநாட்டின் 64ம் விடுதலை நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. எப்படித் தெரியுமா? பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவிட்டு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அவசர, அவசியத் தேவைகளுக்காகப் பிராயணம் செய்பவர்களுக்கும், கோவில், சர்ச், பள்ளிவாசல் செல்லும் மக்களுக்கும் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் பெரும் சிரமங்களைக் கொடுத்து, இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த பின்னரும் நமது இந்தியப் பிரதமர் சிறையில் அடைக்கப்பட்டது போல் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று நமது இந்திய தேசியக் […]

அபூ யாசிர், உடன்குடி  இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப் பத்தை ஏற்படுத்திய “”பத்ரு”போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தை யும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1430 ஆண்டுகள். இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.