குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 12 அபூ அப்தில்லாஹ் 2019 பிப்ரவரி தொடர்ச்சி….. உதாரணமாக : 12:51 வசனத்தின் இறுதியில் அஜீஸுடைய மனைவி இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர் களில் உள்ளவர்” என்று கூறினாள், என்று முடிவுற்றபின், 12:52 வசனத்தில் “இதன் காரணம் நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாதபோது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 11 அபூ அப்தில்லாஹ் 2019 ஜனவரி தொடர்ச்சி….. அவர்கள் கூறுகிறார்கள்: “இபாததுல் வலீ” என்ற அரபி பதத்திற்கு இறை நேசரை வணங்குதல், இறைநேச வணங்குதல் என்று இரு பொருள் எடுக் கலாம். தமிழ் மொழியில் வேற்றுமை உருபு (ஜகாரம்) பளிச்சென்று வெளியில் தெரிவ தால் எந்தக் குழப்பமும் இல்லை. நேசர், நேசர்+ஐ=நேசரை என்று தமிழ் மொழி வித்தியாசங்களை வெளிப்படுத்துகிறது. அரபி மொழியில் இந்த தெளிவு இல்லை’ என்று […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 11 அபூ அப்தில்லாஹ் 2018 டிசம்பர் தொடர்ச்சி….. இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் நிலை : அடுத்து, முத்தஷாபிஹ் வசனங்களின் உண்மைப் பொருளை “வர்ராஸிகூனஃபில் இல்மி” ஆழ்ந்தறிவுடையோரும் அறிவார்கள் என்ற கருத்தை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அவர்கள் கொடுத்துள்ள பெரிய ஆதாரம் வருமாறு. திருகுர்ஆனின் எந்த ஒரு வசனமும் எங்கே இறங்கியது என்று நான் அறிவேன்; எந்த ஒரு வசனமும் என்ன காரணத்திற்காக இறங்கியது என்பதையும் […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? நவம்பர் தொடர்ச்சி….. இந்த நமது விளக்கத்துக்கு மறுப்பாக : “உஸ்மான்(ரழி) அவர்களது பிரதியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதன் அர்த்தத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரிசைக் கிரமம், உச்சரிக்கும் ஓசை ஆகியவை உஸ்மான்(ரழி) காலத்துப் பிரதியை அடிப்படையாகக் கொண்டது என்பதே அதன் பொருளாகும். இவ்வாறு அல்ஜன்னத் மே, 90, பக்கம் 34ல் எழுதி மேலும் 30 ஜுஸ்வுகள், ஜேர், ஜபர் குறியீடு இன்னும் எதனையயல்லாமோ எழுதி நம்மை நையாண்டி […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 10 அபூ அப்தில்லாஹ் அக்டோபர் தொடர்ச்சி….. அடுத்து 3:7 குர்ஆன் வசனத்தை அரபி இலக்கணப்படி ஆராய்வோம். எந்த மொழியாக இருந்தாலும் இலக்கண அடிப்படையில் ஒரு வாக்கியம் முற்றுப் பெற எழுவாய், பயனிலை இன்றியமையா ததாகும். எனவே நாம் இப்போது 3:7 வசனத்தை எழுவாய், பயனிலை தெரியும் நிலையிலே பிரித்து எழுதுவோம். அவன்தான் (இந்)நெறிநூலை உம்மீது இறக்கினான். B. இதில் தீர்க்கமான (தெளிவான) வசனங்கள் இருக்கின்றன. இவைதான் இந்நெறிநூலின் […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?  ஆய்வுத் தொடர் – 9 அபூ அப்தில்லாஹ் செப்டம்பர் தொடர்ச்சி….. 39:23 வசனத்தில் “வர்ராஸிகூனஃபில் இல்மி” என்பவர்களைப் பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை. “யக்­வன ரப்பஹும்” என்று பொதுவாக தங்கள் ரப்பை அஞ்சுப வர்களைப் பற்றியே சொல்லப்பட்டிருக்கிறது என்பதையாவது அவர்கள் கவனிக்க வேண்டாமா? அவர்களது கூற்றுப்படி கல்வி யில் திறமைமிக்கோர் மட்டுமின்றி, தங்கள் ரப்பை அஞ்சும் அனைவரும் “முத்தஷாபிஹாத்” வசனங்களின் உண்மைப் பொருளை அறிந்து அவர்களின் மேனி சிலிர்க்கிறது என்று பொருள் […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? அபூ அப்தில்லாஹ் ஜூலை தொடர்ச்சி….. உதாரணமாக, “அலக்’ என்ற அரபிப் பதத்திற்கு இரத்தக்கட்டி என்ற பொருளும், ஒட்டி தொங்கிக் கொண்டு உறிஞ்சும் ஒன்று என்ற பொருளும் இருக்கத்தான் செய்தது. அன்றைய அரபி அறிஞர்களுக்கு இரத்தக் கட்டி’ என்று பொருள் கொள்வதே மிகச் சரியாகத் தெரிந்தது. ஆனால், இன்று அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யமும், மனித உடற்கூற்று துறையில் பாண்டித்யமும் உள்ளவர்கட்கே இரத்தக்கட்டி என்ற பொருள் தவறானது. ஒட்டித் தொங்கிக் கொண்டு உறிஞ்சும் […]

ஆய்வுத் தொடர் – 6 அபூ அப்தில்லாஹ் ஜுன் தொடர்ச்சி….. அல்லாஹ்வும் அவ்விருவரையும் வெகு அற்புதமாகக் காப்பாற்றி வளர்த்தது மட்டு மல்லாமல், மனித சஞ்சாரமே அற்ற அந்தப் பாலைவனத்தை ஒரு பெரும் நகரமாக மாற்றி அமைத்து விட்டான். உலகில் எந்த மூலைமுடுக்கில் உற்பத்தியாகக் கூடிய உணவு வகையாக இருந்தாலும் அவற்றின் புத்தம் புதிய நிலை (ய்reவிஜுஐeவிவி) மாறாமல் இன்று அங்கு கிடைப்பது ஆச்சரியம் இல்லையா? இந்தக் கடுமையான சோதனையில் இப்றாஹீம் (அலை) அவர்கள் வெற்றி பெற்றபின் சிறிது […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 5 அபூ அப்தில்லாஹ் முல்லாக்களின் வாதம் : மார்க்க விஷயத்தில் அரபி மொழி கற்று அதில் தேர்வு பெற்ற பண்டிதர்களுக்கு யூகித்தறிந்து இலக்கண இலக்கியத்தில் யூகம் செய்து ஒன்றை சொல்ல அனுமதி இல்லை என்ற நமது கருத்தை மெளலவிகள் மறுக்கிறார்கள். குர்ஆனின் 4:83 வசனத்தில், தகுதி பெற்றவர்கள் மார்க்கக் காரியங்களில் யூகித்தறிந்து சொல்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கி றதே! என்று அந்த வசனத்தில் வரும் “இஸ்தின்பாத்” என்ற ஒரு […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் -4 அபூ அப்தில்லாஹ் நிச்சயமாக நாம் உமக்கு வஹி மூலம் அறிவித்ததை (விட்டு) விட்டு, நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி, உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். அவ்வாறு நீர் செய்திருந்தால் உம்மை அவர்கள் (தங்கள்) உற்ற நண்பராக வும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உம்மை நாம் ஸ்திரப்படுத்தி வைக்காவிடில், நீர் ஒரு சிறிதேனும், அவர்களின் பால் சாய்ந்து விடக்கூடுமாயிருந்தது. அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால், நீர் ஜீவித்திருக்கும் பொழுதும், […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் -3 அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : மேலும் ஆராய்வோம்! இந்த வசனம் சம்பந்தமாக இன்னும் தெளிவாக ஆராய்ந்து அறிவதற்கு முயற்சிப்போம். காரணம் இந்த வசனத்தின் தெளிவான விளக்கத்தை நாம் அடைந்து கொள்வது. அல்குர்ஆனின் இதரஅனைத்து வசனங்களையும் பிரித்தறிந்து கொள்வதற்கும். “முஹ்க்கமாத்” வசனங்களைத் தெளிவாகப் புரிந்து செயல்படுத்துவதற்கும். அது நமக்குப் பெரிதும் உதவும். இந்த 3:7 வசனத்திலிருந்து, இரண்டு வகையான வசனங்கள் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி நமக்குத் […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-1 ஒரு முஸ்லிம் அரபியை நேசிப்பவன். அரபியைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவன் என்பதில் நமக்கு ஐயம் இருக்கமுடியாது. முஸ்லிம்கள் அனைவரும் அரபியைக் கற்றுக் கொள்ள முயல வேண்டும். இக்கட்டுரையைக் காரணம் காட்டி, “அரபி கற்றுக் கொள்ளத் தேவையில்லை” என்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். அரபி மொழியைக் காரணம் காட்டி, சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வையும், பிரிவினையையும் உண்டாக்கி, மார்க்கத்தை வியாபாரமாக்கி, ஒன்றுபட்ட சமுதாயத்தைச் சிதறடித்து, ஒரு சாரார் உலக ஆதாயம் […]

தொடர் ஆரம்பம்    முன்னுரை இறைவனால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் தங்கள் பிரசார பணியை அல்லாஹ்வுக்காக, மறுமைக்காக மட்டுமே செய்தனர். தங்கள் பணியைக் கொண்டுஇவ்வுலக ஆதாயம் அடைய அவர்கள் முயலவே இல்லை. தூதர்களுக்கெல்லாம் முத்திரையாக-இறுதித் தூதராக இவ்வுலகிற்கு வந்த முஹம்மது(ஸல்) அவர்களும் அல்லாஹ்வுக்காகவே, மறுமைக்காகவே பணி புரிந்தார்கள் தங்கள் பிரசார பணியை வியாபாரமாக்கவில்லை. இவை இறுதி நெறிநூல் குர்ஆனைக் கொண்டு நாம் அறிந்து கொள்ளும் உண்மையாகும்.

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-10 அவர்கள் கூறுகிறார்கள்: “இபாததுல் வலீ” என்ற அரபி பதத்திற்கு இறைநேசரை வணங்குதல், இறைநேசர் வணங்குதல் என்று இருபொருள் எடுக்கலாம். தமிழ் மொழியில் வேற்றுமை உருபு (ஜகாரம்) பளிச்சென்று வெளியில் தெரிவதால் எந்தக் குழப்பமும் இல்லை. நேசர், நேசர்+ஐ= நேசரை என்று தமிழ் மொழி வித்தியாசங்களை வெளிப்படுத்துகிறது. அரபி மொழியில் இந்த தெளிவு இல்லை” என்று அவர்கள் எழுதி இருப்பதும் இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது.

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-8 அடுத்து 3:7 குர்ஆன் வசனத்தை அரபி இலக்கணப்படி ஆராய்வோம்: எந்த மொழியாக இருந்தாலும் இலக்கண அடிப்படையில் ஒரு வாக்கியம் முற்றுப் பெற எழுவாய், பயனிலை இன்றியமையாததாகும். எனவே நாம் இப்போது 3:7 வசனத்தை எழுவாய் பயனிலை தெரியும் நிலையில் பிரித்து எழுதுவோம்.

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-7  விளக்கத்தை அறிவது என்றால் என்ன? தமிழ் அகராதியில் விளக்கங்காணுதல் என்பதற்கு ஆராய்ந்தறிதல் எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.  புரியாதிருந்த ஒருவிஷயத்தை சுய ஆய்வுக்குப் பிறகோ அல்லது பிறரது விளக்கத்திற்குப் பிறகோ புரிந்து கொள்ளுவதை “விளங்குதல்” அல்லது “விளக்கத்தை அறிதல்” என்று சொல்லப்படும். அறியாதிருந்த ஒருவிஷயத்தை அறிந்து கொள்ளுவதைக் கூட விளங்குதல் என்று சொல்லப்படுவதில்லை.

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-6  3:7 வசனத்தின் சரியான பொருள்: அவன்தான் (இந்) நெறிநூலை உம்மீது இறக்கினான். இதில் தீர்க்கமான (ஒரே பொருள்)வசனங்கள் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும் எஞ்சியவை பல்பொருள் பெறத்தக்கவை (தீர்க்கமற்றவை)யாகும். எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள் குழப்பங்களை நாடு, பல பொருள் வசனங்களின் முடிவுகளைத்தேடி அவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால் இவற்றின் உண்மைக் கருத்துக்களை (முடிவு-Final Verdict) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார். அறிவில் தேர்ந்தவர்களோ “நாங்கள் இவற்றில் […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-5 அரபி இலக்கண இலக்கியம் அவசியமா? அதற்கு முன்பு, அல்குர்ஆனிலுள்ள முஹ்க்கமாத் வசனங்களை விளங்கிக் கொள்ள அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியமே இல்லை. எனவே மார்க்கத்தை விளங்கிக் கொள்ள அவை அவசியமென்று ஒருசாரார் கூறி வருவது மிகவும் தவறான கூற்று என்பதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறோம். காரணம்: முஹ்க்கமாத் வசனங்கள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் நபித்துவ காலமான 23 வருடங்களில் தெளிவாக தத்துவ ரீதியிலும் (Theoretically)  நடைமுறை (Practically) […]