இணைவைத்தல்

S. கமாலுத்தீன் இப்போது நமது சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்துவரும் செயல்களை சிறிது சிந்தித்துப் பாருங்கள்! இறந்தவர்கள அழைத்து உதவி தேடுகிறாாகள்! கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள்! தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள்! இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள்! “எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள்” என்று கபுரில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களிடம் வேண்டுகிறார்கள்! “யாஸாஹிபன்னாஹுரி குன்லி நாஸரீ” – நாகூர் ஸாஹிபே! எனக்கு உதவுங்கள்! என்ற பொருள் […]

ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன் இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே தான் இம்மாதத்திற்கு ஸஃபர்-பயணம் என்ற பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இம்மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அந்த மாதம் (ஸஃபர்) பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது.