2002 நவம்பர்

இஸ்லாம், எல்லாம் வல்ல ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம்-வாழ்க்கை நெறி அதன் சட்ட திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் கவனத்தில் கொண்டு இறைவனால் வடிவமைக்கப்பட்டவை. முறையாகவும், நடுநிலையோடும் சிந்திக்கத் தெரிந்தவன் அதில் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது. அதில், மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருளாதாரத்தை எந்தெந்த முறைகளில் ஈட்டுவது கூடாது; ஈட்டிய செல்வத்தை எந்தெந்த முறைகளில் செலவிட வேண்டும்; எந்தெந்த முறைகளில் செலவிடுதல் கூடாது என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக […]

இஸ்லாமிய ஆய்வு மற்றும் வெளியீட்டு மையம், ஏர்வாடி 2002 அக்டோபர் மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹிஜ்ரி 1423 ரஜப் மாதத்துடைய 29ஆவது நாள். அன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் டெல்லியில் 12 நிமிடமும் லிபியாவில் 22 நிமிடமும் பிறை இருந்தது. எனவே 2002 அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹிஜ்ரி 1423 ஷஃபான் மாதத்தின் முதல் தேதியாகும். ஷஃபான் மாதத்தின் 14வது நாள் பெளர்ணமி தினத்தில் சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இது கீழ்க்கண்ட நாடுகளில் தெரியும்.

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் புத்தகம்   ஆய்வுத் தொடர் : 20 – M.அப்துல் ஹமீது, திருச்சி. “திருக்குர்ஆனின்  சிறப்புகள்” எனும் தலைப்பில் சில சூராக்களை (குறிப்பாக யாசீன் சூரா) சிலாகித்து பல விஷயங்களை ‘அமல்களின் சிறப்புகள்” புத்தகம் எழுதியிருக்கிறது. அவற்றில் மிகைப்படுத்தப்பட்டு பல விஷயங்கள் உள்ளன. அப்புத்தக ஆசிரியருக்கு மிகைப்படுத்தப்பட்டவைகள் உறுத்தலாக இருந்திருக்கும் போல் தெரிகிறது. எனவே எழுதுவதை எல்லாம் எழுதிவிட்டு ஒரு சில குறிப்பையும் தருகிறார். ஆசிரியரின் அக் குறிப்பாவது:

விமர்சனம்: மார்ச் 2002  அந்நஜாத் இதழில் வந்த விளக்கங்களுக்கு விமர்சனம்.’ 1. ஷவ்வால் முதல் நாள் பெருநாள் கொண்டாடித்தான் தீரவேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. 2. அதற்கு மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதே நபி(ஸல்) அவர்களின் நடைமுறை. அதனால் தான் தொழக்கூடாத மாதவிடாய் பெண்கள், தக்க காரணமின்றி வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ள கன்னிப் பெண்கள் அனைவரும் ஈத்கா வருமாறு கட்டளையிட்டார்கள்.