தலைநகரத்தின் அவல நிலை!

in 2019 ஜுன்,தலையங்கம்

அந்நஜாத் –  ஜூன் 2019

ரமழான் -­ ஷவ்வால் 1440

  1. தலையங்கம்!
  2. அந்நியனாய் வாழ்வோம், அர்த்தம் புரியும்….
  3. குரங்கு, பன்றி, எலியாக உருமாறிய பனீ இஸ்ராயீல் மனிதர்கள்!
  4. தக்லீது – ஓர் ஆய்வு
  5. அமல்களின் சிறப்புகள்!
  6. தவ்ஹீது பேசும்  பிரிவினை இயக்கங்களும், அதன் குண்டர்களும்….
  7. உருவப்படம் வரையலாமா?   (பகுதி-2)
  8. ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்…
  9. அறிந்து கொள்வோம்…

தலையங்கம்!

தலைநகரத்தின் அவல நிலை!

இதுவரை கண்டிராத கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை மக்கள் சந்தித்து வருகின்றனர். பகலெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்கு சென்று உழைத்து களைப்பாகி வரும் மக்கள், இர வெல்லாம் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற தேடலில், கையில் குடத்துடன் அலைந்து கொண்டிருக்கும் அவல நிலை நம்மை துயரில் ஆழ்த்துகிறது.

இரவின் நிசப்தத்தை அடி பம்புகளின் சப்தமும் மக்களின் பேச்சுக் குரலும் விரட்டி அடிக்கின்றன. காலி குடங்களுடன் அடி பம்புகள் இருக்கும் இடங்களில் கூடும் மக்களின் நீண்ட நேர காத்திருத்தலில், சாதாரணப் பேச்சுக்கள் கூட ஓய்வின்றி இருக்கும் மக்களிடையே ஏற்படுகின்ற மன உளைச்சலில் கோபத்தை ஏற்படுத்தி, சண் டையிட்டுக் கொள்ளும் அவல நிலைக்கு சில இடங்களில் சென்று விடுகின்றன.

துவைக்க, குளிக்க, பாத்திரம் கழுவ மற்றும் கழிவறை உபயோகம் முதலிய அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட போதிய தண்ணீரை விலை கொடுத்து பெற்றுக் கொள்ளாதவர்கள் கூட இப்போது விலை கொடுத்து பெற்றுக் கொள்ள முன்வந்து விட்டதைக் காண முடிகிறது. ஏதோ ஒரு ஊரில் குடும்பத்தை விட்டு பிழைப்பதற்காக சென்னை வந்திருப்பவர்கள் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக தனித்து வசித்து வரும் முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சில இடங்களில் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து விடுவதால், இந்த நீரை தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால், விநியோகிக்கும் நீரைப் பயன்படுத்த முடியாத சூழல் ஆங்காங்கே உருவாகி இருப்பதாகவும் பத்திரிக்கை தகவல்கள் கூறுகின்றன.

முன்பு விநியோகிக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவில் பெருமளவு குறைக்கப்பட்டு, தற்சமயம் அரசின் குடிநீர் விநியோகம் 55 கோடி லிட்டர் மட்டுமே என்ற நிலைக்கு வந்துவிட்டது. அதுவும் பல பகுதிகளில் இரண்டு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பக்கத்து மாவட்டங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு வருவதாகவும், கல்குவாரிகளில் தேங்கி நிற்கும் நீரை சுத்தப் படுத்தி விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு கள் செய்து வருவதாகும் “தி இந்து” பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இருந்தாலும், சென்னையில் இருக்கும் நான்கு ஏரிகளிலும் நீர் வற்றிவிட்டது. நீர்நிலைகள் பாதுகாக்கப்படவில்லை என்றும், ஏரிகளில் தூர்வாறும் பணியை மேற்கொள்ள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழக அரசு மெத்தனத்தை கைவிட்டு களத்தில் இறங்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் அவல நிலை நீங்க, பிரச்ச னைகள் வரும்போது அவற்றை அப்போதைக்கு சமாளிக்கும் திட்டங்களுடன் அரசு செயல்படுவது பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு அல்ல. மழைநீர் சேமிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும், கடலில் சென்று கலக்கும் மழைநீரை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்கள் பள்ளிவாசலில் உளு செய்யும் நீர் வீணாகாமல் பூமிக்குள் செல்லுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் தொழிற்சாலைகளை (Water Desalination Plants)  நிறுவ, நீண்டகாலத் திட்டம் (Long Range Plan) வரையறுக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் செயல்பாடுகளை விரைவில் ஆரம்பித்து முடிக்க வேண்டும். இல்லை யேல் வல்லுநர்கள் எச்சரிப்பது போல, தண்ணீர் பஞ்சம் எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றால் அது மிகையாகாது.

Previous post:

Next post: