என்னை பின்பற்றுங்கள்!!
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
இவ்வுலகில் இப்போது (2025வரை) சுமார் 800 கோடி பேருக்கு மேல் மக்கள் வாழ்கின் றார்கள். இதற்கு முன்பு பல கோடிக்கணக் கான மனிதர்கள் வந்தார்கள், வாழ்ந்தார்கள், மறைந்தார்கள்.
இதில் பிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னனும் உண்டு, இவ்வுலகை ஆட்டிப் படைத்த ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியும் உண்டு. உலகில் பெரும் பகுதிகளை வென்ற மாவீரன் அலெக்சாண்டரும் உண்டு, பல அமெரிக்கா அதிபர்களும் உண்டு, அண்ணல் காந்தியடிகளும் உண்டு, சுமார் நூற்றுக்கு மேற்பட்ட அரசியல், ஆன்மீக தலைவர்களும் உண்டு, அடிமைகளாக வாழ்ந்தவர்களும் உண்டு, மற்றும் சாதாரணமான பாமர மக்களும் உண்டு.
இவர்களில் என்னை பின்பற்றுங்கள் சொன்னவர் ஒரே ஒரு மனிதர் தான் என்று அவரைத் தவிர வேறு எந்தவொரு மனிதரும் என்னை பின்பற்றுங்கள் என்று சொன்னதில்லை; சொல்லவும் முடியாது. அதற்கு காரணம்; பொது வாழ்க்கையில் ஈடுபடக்கூடிய அரசியல் தலைவர் களாகட்டும், ஆன்மீக தலைவர்களாகட்டும் அவர்களின் அந்தரங்க வாழ்க்கை வேறாகவும், பொது வாழ்க்கை வேறாகவும் இருக்கும்.
ஆனால் அந்த ஒரே ஒரு மனிதரால் மட்டும் எப்படி என்னை பின்பற்றுங்கள் என்று சொல்ல முடிந்தது? ஆம்! அவரால் சொல்ல முடிந்ததற்கு காரணம் அவருடைய இல்வாழ்வும் சரி, பொது வாழ்வும் சரி திறந்த புத்தகமாக இருந்ததே ஆகும். அவரிடம் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தனவா? என்றால் இல்லை. மிக மிக சாதாரண குடிமகன் வசிக்கக்கூடிய குடிசையில்தான் அவரும் வாழ்ந்தார்.
1. அவருக்கு மனைவி – மக்கள் இருந்தார்களா?
ஆம்! இருந்தார்கள், ஆயினும் குடும்ப வாழ்விலும், குடும்பத்தாரிடமும் நல்ல முறையில் வாழ்ந்தார்.
2. அவர் ஆன்மீக தலைவராக இருந்தாரா?
ஆம்! இருந்தார், ஆயினும் ஆன்மீக தலைவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தார்.
3. அவர் ஆட்சி செய்தாரா?
ஆம்! செய்தார், அனைத்து மன்னர்களுக் கும், அரசியல் தலைவர்களுக்கும் எடுத்துக் காட்டாக இருந்தார்.
4. அவர் வாணிபம் செய்தாரா?
ஆம்! செய்தார், வாணிபம் என்றால் அதில் பொய் கலந்திருக்கும். ஆனால் பொய் சொல்லாத நேர்மையான வியாபாரியாக இருந்தார்.
5. அவர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தாரா?
ஆம்! அவருக்கு அனைத்து வசதிகளும் அவரின் காலடியில் கிடந்தன. ஆனால் எளிமையான வாழ்வே வாழ்ந்தார்.
6. அவர் போருக்கு தலைமை தாங்கினாரா?
ஆம்! அவரே சுமார் 17 போரில் தலைமை தாங்கி நடத்தி, போரில் எப்படி நடந்து கொள்ளவேண்டும், எதிரிகளை எப்படி கையாள வேண்டும், யாரை மன்னிக்க வேண்டும், யாரை தண்டிக்க வேண்டும் என அனைத்திலும் வழிகாட்டினார்.
இன்னும் அந்த மனிதரிடம் ஏராளமான நற்குணங்கள் இருந்தன.
எனவேதான் அவர் மட்டுமே உலக தலை வர்களில் அன்றும், இன்றும் முதன்மையாக (வீலிஸ்ரீ) இருக்கிறார்.
அவர் யார்?
அவர்தான் இறுதி இறைத்தூதர் முகம்மது நபி(ஸல்) அவர்கள். அவருடைய வாழ்வு இறை வழிகாட்டி நூலான குர்ஆனாகவே இருந்தது. அவர் ஒருவரே அனைத்துலக மக்களுக்கும் முன்மாதிரி என இறைவனால் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட உத்தமராவார்.
எனவேதான் அவரை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டு உலக முழுவதும் சுமார் 210 கோடி பேர் வாழ்கிறார்கள். நமது இந்தியாவில் சுமார் 20 கோடி பேருக்கு மேல் உள்ளனர்.
அவரை பின்தொடர்பவர்களுக்கு குறிப்பாக ஒன்றை கூறி சென்றார். அது “நீங்கள் பிரிந்து விடாதீர்கள், ஒற்றுமையாக இருந்தால் நீங்களே மேலோங்குவீர்கள்” என்பதாக. ஆனால் வேதனையான வியம் என்னவென்றால் அவரை பின்பற்றுபவர்கள் சுமார் 100க்கு மேற்பட்ட பிரிவினர்களாக பிரிந்து கிடக்கின்றனர்.
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடையை நினைத்துப்பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்; அவனே உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான். அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான்; நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 3:103
உலக தலைவர்களிடையே இல்லாத ஒரு சிறப்பும் இவருக்கு உண்டு.
பொதுவாக எந்தவொரு தலைவரையும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை நேரில் பார்த்து பின்பற்றுபவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். ஆனால் இவரை நேரில் பார்த்தவர்களை விட நேரில் பார்க்காது பின்பற்றுபவர்களே உலகில் அதிகம். இது உலகில் வேறு எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத மிகச் சிறப்பாகும்.