சாட்சிகளில் இறைசாட்சியே மேலானதாகும்!!
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
சாட்சியங்களில் பல வகை உண்டு:
அவை : 1. மனசாட்சி
2. மனிதர்கள் சாட்சி
3. இறைவன் சாட்சி.
மனசாட்சி : மனசாட்சி என்பது வெளியிலிருந்து வரும் கட்டளை அல்ல. நமது உள்ளத்திலிருந்து எழுந்து மூளையின் உத்தரவுப்படி செய்யும் ஒரு ஆற்றலாகும்.
சில நேரம் நன்மையை செய்யத் தூண்டும்.சில நேரம் தீயதையும் செய்ய தூண்டும். அதாவது ஒவ்வொருவரின் சூழ்நிலை, சந்தர்ப்பத்தை பொறுத்து மனசாட்சிபடி அவரின் செயல் வெளிப்படும்.
மனசாட்சி என்பது ஒருவருக்கு சரியாகவும், மற்றவர்க்கு அதுவே தவறாகவும் தோன்றும். யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவரைப் பார்த்து கேட்பார்கள்.
“உனக்கு மனசாட்சியே இல்லையா?” என்பதாக அதனால்தான் சொன்னார்கள், “தவறுக்கு துணிந்த மனிதன் வருந்துவதில்லை”
பல மதங்களில் மனசாட்சி என்பது இறை வனின் (கடவுளின்) குரலாக கருதப்படுகிறது.
இதைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? எனறால் உள்ளத்தில் அதை வடிவமைத்ததாகவும், அதற்கு நன்மை–தீமை இரண்டையும் அறிவித்துக் கொடுத்ததாகவும் கூறுகிறது. மேலும் அதை சரியாக செயல்பட்டவர் வெற்றி பெற்றார் என்றும், அதை தவறாக பயன்படுத்தியவர் நட்டமடைந்தார் என்பதாக கூறுகிறது.
இறைநூல் : “உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! (அதன் (உள்ளத்தில்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத்(உள் ளத்தை) தூய்மைப்படுத்தியவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்.” (அல்குர்ஆன் 91:7-10)
எனவே மனசாட்சியை நாம் எல்லா நேரமும் சரி காணமுடியாது.
மனிதர்கள் சாட்சி : இது மூன்று வகைப்படும்.
1. உண்மையை மட்டுமே கூறுவது.
2. உண்மை அல்லாததை உண்மை என்று கூறுவது. உண்மையை மறைத்து கூறுவது.
3. பொய் சாட்சி என்பது.
உண்மைசாட்சிஎதையும்மாற்றாமல், பயம், பேராசை சுயநலம் இல்லாமல் கூடுதல்–குறைவு இன்றி நேர்மையாக உண்மையைச் சாட்சியாக கூறுதல்.
இறைநூல்: “இறை நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ, பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக (இறைவனுக்காக) சாட்சி கூறுவோராகவும் ஆகிவிடுங்கள்!
(வாதியோ–பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன், நீதி வழங்குவதில் மனோ இச்சையை (மனசாட்சியை) பின்பற்றாதீர்கள்!
“நீங்கள் சாட்சியை மறைத்தாலோ அல்லது சாட்சி சொல்ல மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்” (அல்குர்ஆன் 4:135)
மேற்கண்ட வசனத்தில் சாட்சியாளர்கள் எப்படி இருக்கவேண்டும், எப்படி சாட்சி சொல்ல வேண்டும் என்பதை தெள்ளதெளிவாக இறைநூல் மூலம் இறைவன் வழிகாட்டியுள்ளான்.
உண்மை அல்லாததை உண்மை என்று கூறுவது:
மேற்கண்டவற்றை சாட்சியாக கூறாவிட் டாலும் சாட்சிக்கு மேலாக எல்லா மதகுருக் களும் உண்மை அல்லாததை உண்மை போல் பேசுகிறார்கள்.
மதத்தின் பேரால் தவறான கொள்கையை, சரியான கொள்கை போல் சொல்லி உண்மை அல்லாததை உண்மை போல் பேசுகிறார்கள், செய்கிறார்கள். நாளடைவில் அதில் மக்களை நிலைத்திருக்கவும் செய்கிறார்கள்.
உதாரணமாக : பல கடவுள் கொள்கை, மற்றும் பல்வேறான அறிவுக்கு பொருந்தாத மூடநம்பிக்கைகள் இந்து மதத்தில் உள்ளன.
முக்கடவுள் கொள்கை, இறைத் தூதருக்கு பிரத்தியோகமாக வழங்கப்பட்ட சில நோய் நிவாரணங்களை இப்போது இவர்கள் செய்து மக்களை நம்பவைத்து உண்மை அல்லாததை உண்மை போல் கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள்.
உதாரணம் : குருடர் பார்க்கிறார்,
செவிடர் கேட்கிறார்
எல்லா மனிதர்களின் பாவங் களையும் அவரே சுமந்து கொள்வார்.
உதாரணம் : இஸ்லாம் மார்க்கத்தில் இறந்த வர்கள் கேட்கிறார்கள், பார்க்கிறார்கள், குறைகளை களைவார்கள், வேண்டுதலை நிறை வேற்றுவார்கள் இன்னும் பல, இது இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கு மாற்றமானது, ஆனால் சில மதகுருமார்கள் உண்மை போல் இதை பேசுகிறார்கள். இவர்கள்தான் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவர்கள்.
பொய்சாட்சி : தன் சுயநலனுக்காகவோ, பிறரை காப்பாற்றுவதற்காகவோ, பிறர் பொருளை அபகரிப்பதற்காகவோ தவறான சாட்சி சொல்வது.
இதன் (பொய்சாட்சி) விளைவு என்ன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே இதைப் பற்றி நாம் விரிவாக எழுதவில்லை.
எனவேதான் எல்லா மதங்களிலும் பொய் சாட்சி பெரும்பாவங்களில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது.
இறைசாட்சி : பொதுவாக கடவுள் பெயரால் சொல்லக்கூடிய சாட்சிக்குத்தான் எல்லா மதங்களிலும் மதிப்பும்/நம்பிக்கையும் கூடுதலாக உள்ளன.
அதாவது மனசாட்சியைவிட, மனிதர்களின் சாட்சியை விட கடவுளை சாட்சியாக வைத்து கூறப்படும் சாட்சிக்கு தான் நம்பிக்கை அதிகம்.
இஸ்லாத்தின் பார்வையில் சாட்சிகளைப் பற்றி இறைநூல் என்ன கூறியுள்ளது.
இஸ்லாத்தில் பல்வேறான செயல்களுக்கு (நல்லது கெட்டது) சாட்சிகளை மையப்படுத்த சொல்கிறது.
எனவே தான் இறைவன் முதல் மனிதரையும் அவர் மூலம் உலகம் அழியும் நாள் வரை தோன்றி மறைக்க கூடிய அனைத்து மனிதர்களையும் படைத்துவிட்டு ஆன்மாவாக இருந்த நிலையில் அனைத்து மனித உயிர்களிடம் முதலில் கேட்டது சாட்சிதான் என்பதை இறைநூல் (குர்ஆன்) கூறுகிறது.
“இறைவன், ஆதமுடைய முதுகுகளிலிருந்து அவர்களின் வழித்தோன்றல்களை (மனிதர் களை) வெளிப்படுத்திவிட்டு, நான் உங்களுடைய இறைவனல்லவா? என்று கேட்டுவிட்டு, அதற்கு அவர்களையே சாட்சியாக்கினான்.”
“ஆம்! நாங்கள் சாட்சி கூறுகிறோம்” நீதான் எங்கள் இறைவன் என்று அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் “நாங்கள் இதை மறந்தவர்களாக அலட்சியமானவர்களாக இருந்துவிட்டோம்” என்று கூறாதிருக்கவும், எங்களின் முன்னோர்கள் இணைவைத்தனர், நாங்களும் அதைப் பின்பற்றி இணைவைத்தவர்களாக இருந்தோம் என்று கூறாதிருக்கவும், (இந்த சாட்சி வாங்கப்பட்டது)
மேலும் அவர்களுக்குப் பின்வந்த சந்ததிகளாக இருந்தோம். அந்த வீனர்களின் செயலை பின்பற்றினோம். அந்த வீனர்களின் செயலுக்காக எங்களுக்கு நீ ஏன் தண்டனை கொடுக்கிறாய் என்று மறுமை நாளில் நீங்கள் கேட்காதிருப்பதற்காகவே இவ்வாறு உங்களிடம் சாட்சி வாங்கினோம். (அ.கு. 7:172,173)
அதாவது எவரும் தன்னுடைய அறியாமைக்கு முன்னோர்களை சாக்காக (காரணமாக) சொல்லி தப்பிக்க முடியாது. மனிதனாக பிறந்த எல்லா உயிர்களுக்கும் மனசாட்சியையும், அறிவாற்றலையும், சிந்திக்க கூடிய சக்தியையும் இறைவன் அளித்துள்ளான்.
இறை வழிகாட்டுதல் அடங்கிய குர்ஆன் உலகம் முழுவதும் பல மொழிகளில் வந்துள்ளது. அதை படித்து உணர்ந்து நேர்வழி பெறுவது ஒவ்வொருவடைய கடமையும் ஆகும். இறைசாட்சி தான் நல்லவர்களின் சாட்சிகளிலேயே மேலானதாகும். (பார்க்க வசனம் 6:19)