உலக நாடுகள் எப்படிப்பட்டது தெரியுமா?

in 2025 அக்டோபர்

தலையங்கம் :
உலக நாடுகள் எப்படிப்பட்டது தெரியுமா?

இந்திய அரசியலிலும் சரி, தமிழக அரசிய லிலும் சரி, அரசியல்வாதிகள் தேர்தல் நேரங் களில் அல்லது ஆட்சி அமைக்க பெரும் பான்மை தேவையான நேரத்தில் ஒன்றை அடிக்கடி  சொல்வார்கள். 

அது  என்ன  தெரியுமா?

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர  எதிரியும்  இல்லை

அதுபோல உலக நாடுகளிலும் உண்டு. ஆனாலும் இந்திய அரசியல் கட்சிகளைப் போல் மிகவும் கேவலமான/சுயநலமான நண்பன்,  எதிரி  என்று  கிடையாது.

உதாரணமாக அமெரிக்காவை பார்ப்போம்.

அமெரிக்காவுடன் மிகவும் நெருங்கிய நட்புறவு நாடு என்றால் அது இஸ்ரேல் ஆகும். அதை அல்லாமல் நேட்டோ (NATO) உறுப்பி னர்களின் நாடான இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் முதலியவை.

மேற்கண்ட NATO நாடுகள் அமெரிக்கா என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் மற்றும் ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவரும் எந்த தீர்மானத் தையும் ஆதரிக்கும், வாக்களிக்கும்.

மேலும் ஜப்பான், தென்கொரியா நம்பிக்கையான கூட்டாளி நாடுகளாகும். அதுபோல் ஆஸ்திரேலியா எப்பொழுதுமே பாரம்பரிய கூட்டாளி நாடாக இருக்கின்றது.

மற்றும் மேற்கத்திய ஐரோப்பா (WESTERN EUROPE COUNTRIES) நாடுகளும் அமெரிக்கா வின் நட்பு நாடுகளாக உள்ளன.

அவை :  AUSTRIA, BELGIUM, LIECHTENSTEIN, LUXEMBOURG, MONACO, NETHERLANDS, SWITZERLAND, PORTUGAL ஆகிய  நாடுகள்.

மேற்கண்ட நாடுகளை அல்லாமல் அரபு நாடுகளில் சவுதி அரேபியா, குவைத், கத்தார், UAE போன்ற முஸ்லிம் நாடுகளும் கூட்டணி நாடுகளாக உள்ளன.

அமெரிக்காவிற்கு எப்படி நட்பு நாடுகள் உள்ளனவோ அதுபோல பகை நாடுகளும் (எதிரி நாடுகள்) உள்ளன.

அவற்றில் மிக முக்கியமானது ரஷ்யா நீண்டகால  எதிரியாகவே  உள்ளது. அடுத்து சீனா பொருளாதார ரீதியாக அமெரிக்காவிற்கு போட்டியானதாகவும், எதிரியாகவும் உள்ளது.

மேலும் வடகொரியா அணு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதால் அமெரிக்காவிற்கு அஞ்சாத நாடாக  உள்ளது. அதுபோல ஈரானும் அணுவை தேவையான அளவு வைத்தி ருப்பதாலும், மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகளை அமெரிக்காவின் அச்சத்திலிருந்து பாதுகாப்பதால் எதிரி நாடாக உள்ளது.

இவைகள் அல்லாமல் அவ்வப்பொழுது நமது நாடு அரசியல் போல் உறவாகவும் இல்லாமல், எதிரியாகவும் இல்லாமல் சில மத்திய கிழக்கு நாடுகளும் உள்ளது. மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அமெரிக்காவிற்கு நட்பு நாடு, எதிரி நாடு என்பதை கீழே குறிப்பிட்டுள்ள பட்டியல் மூலம் காணலாம்.

நண்பர்கள் : எதிரிகள் :

சவுதி அரேபியா ஈரான்

குவைத் ஆப்கானிஸ்தான்

கத்தார் சிரியா

U.A.E.

பஹரீன்

ஓமன்

மேற்கண்ட ஆதரவு முஸ்லிம் நட்பு நாடுகளில் அமெரிக்காவுடன் வாணிபம், வான் பாதுகாப்பு, இராணுவ உதவிகள் முதலியவற்றை  வைத்திருக்கின்றன.

எதிரி நாடுகளில் பெரும்பாலும் மத ரீதியான காரணங்களாலும், இராணுவ பிரச்சனைகளாலும் எதிரிகளாக உள்ளன. உலகிலுள்ள ஏனைய அமெரிக்கா ஆதரவு எதிரி நாடுகளைப் பற்றி நிலைமையை இங்கு நாம்  பேசப்  போவதில்லை. மாறாக நாம் குறிப்பிட விரும்புவது, அமெரிக்கா ஆதரவு நாடுகளாக இருக்கின்ற முஸ்லிம் நாடுகளின் நிலைதான் இன்று பேசு பொருளாக  இருக்கின்றது.

அதாவது ஆதரவு நாடு என பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டு கூடி, கொண்டாடி கொண்டிருந்த கத்தார் நாட்டின் மீது அமெரிக் காவின் ஏவல் நாடான இஸ்ரேல் சமீபத்தில் தாக்குதல் நடத்தியதில் அரபு உலகமே பதட்டத்தில்  உள்ளது. 

இந்த  நிலைக்கு  காரணம் :

எந்த மண்ணில் அதே மொழியை பேசும் தூதரையும் மக்களிடையே அனுப்பி அன்றே குர்ஆன் மூலம் அல்லாஹ் எச்சரித்தும் அதை அலட்சியம்  செய்ததால்  வந்த  நிலைமை.

அல்லாஹ் சொன்ன அந்த எச்சரிக்கை என்ன?

இறை நம்பிக்கை கொண்டவர்களே! யூதர்களையும்,  கிறிஸ்தவர்களையும் உங்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். அவர்களில் சிலர் சிலருக்கு (உங்களுக்கு எதிராக) நெருங்கிய நண்பர்களாய் இருக்கின்றனர். மேலும், உங்களில் எவரேனும் அவர்களைத் தம் உற்ற நண்பர்களாய் ஆக்கி கொண்டால், அவரும் அவர்களைச் சார்ந்தவர்களாகவே கருதப்படுவார். நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்காரர்களுக்கு நேர்வழி காட்டுவதில்லை.”  (அல்குர்ஆன் 5:51)

மேற்கண்ட வசனம் அன்றுள்ள யூத, கிறிஸ்தவர்களை குறித்து எச்சரிக்கையாக அருளப்பட்டிருந்தாலும் முக்காலத்திற்கும் அது மிகவும் பொருந்தக்கூடிய வசனமாக உள்ளது. குர்ஆனின் மிக சிறப்புக்களில் இதுவும் ஒன்று. எனவேதான் அல்லாஹ், இறை நம்பிக்கையாளர்கள் நயவஞ்சகர்களை நெருங்கிய நண்பர்களாக ஆக்கிக் கொள்ளக்கூடாது என மற்றொரு வசனத்தின் மூலமும் (3:118) தடை விதிக்கின்றான்.

ஏனெனில் நயவஞ்சகர்கள் தமது பலத்தைக் கொண்டும், சூழ்ச்சியினாலும் இறை நம்பிக்கை கொண்டோருக்குக் கேடு விளைவிப்பதில் குறையேதும் வைக்கமாட்டார்கள். அதாவது தங்களால் முடிந்த அளவிற்கு இறை நம்பிக்கையாளர்களுக்கு தீங்கு செய்ய முயன்று கொண்டிருப்பார்கள். இறை நம்பிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தை பார்த்து அவர்கள் சந்தோ­ம்  அடைவார்கள்.

அரபு நாடுகள் எதிரியை இனம் கண்டுகொள்ளவேண்டும். எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.  நம்முடைய சகோதர/சகோதரிகள், குழந்தைகள் அமெரிக்காவின் ஏவல் நாடான இஸ்ரேல் மூலம் வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்பத்திற்கு ஆளாகி கொண்டிருந்த போது, நாங்கள் சொகுசாக வாழ்ந்தால் போதும் பாலஸ்தீன மக்கள் என்னவானால் எங்களுக்கு என்னவென்று  அலட்சியமாக  இருந்தீர்கள்.

அவர்களை நெருங்கிய நண்பர்களாக ஆக்கிக் கொண்டதால் இந்த நிலை நாளை உங்களுக்கும் வரும் என அல்லாஹ்வின் எச்சரிக்கைதான் இப்போது கத்தார் நாட்டை அவர்கள்  தாக்கியது. 

அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூத ரின் எச்சரிக்கையையும் நம்பக்கூடிய முஸ்லிம் களாக இருந்திருந்தால் என்ன செய்து இருப் பார்கள்?

எப்போது பாலஸ்தீன நாட்டை பறித்து இஸ்ரவேலர்களிடம் கொடுத்தபோதே பகைமை வெளிப்படுத்திருக்க வேண்டும். ஆதரவை விலக்கி கொண்டிருந்திருக்க வேண்டும். அமெரிக்கா நாட்டில் அரபுகள் செய்துள்ள முதலீடுகளை விலக்கி முஸ்லிம் ஆதரவு நாடுகளில் முதலீடு செய்திருக்க வேண்டும்.

பகைவனும் நண்பனாக தெரியும் அது நாள்பட்ட பின்பே புரியும்என்பது கூட தெரியாததின் விளைவே. இவைகள் யாவும்.மற்றொரு தீர்வையும் அரபு நாடுகள் முன்னெடுக்க  வேண்டும். ஹீயா, சன்னி முஸ்லிம்கள் என்ற வேறுபாட்டை கலைந்து ஒன்றுபடவேண்டும்.

அதாவது அமெரிக்காவையும், இஸ்ரேலையும் நேரிடையாக எதிர்க்க கூடிய நாடுகளையும்,  மறைமுகமாக எதிர்க்க கூடிய நாடுகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டு இராணுவ படையை (அரபு நேசபடையை) ஏற்படுத்தி எந்த நேரமும் போரிட தயாராக இருக்கச் செய்யவேண்டும். அதற்கான ஒரு முயற்சியை நீங்கள் செய்வீர்களேயானாலே எதிரிகள் அடங்கி விடுவார்கள். அல்லாஹ்வின் உதவியும்  கிடைக்கும்.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (முரண்பட்டு பிரிந்து கிடந்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்துவிடும். பொறுமை யாளராக இருங்கள்! பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். (.கு. 8:46)

Previous post:

Next post: