வானம் பூமியை படைத்தது ஒரே இறைவனா? பல கடவுள்களா?
S.H. அப்துர் ரஹ்மான்
“உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்”
“படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்”
“ஒரே இறைவனா? பல இறைவனா?” என்பது மனிதர்களின் ஆன்மீக சிந்தனைகளின் மையக் கேள்விகளில் ஒன்று.
இதற்கான பதில்
ஒரே இறைவன்தான் :
1. இந்து வேதங்களில் “ஏகமேவ அத்விதீயம்” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது “ஒரே ஒன்று, அதற்கு இணையாக இன்னொன்றில்லை”
2. “இஸ்லாத்தில் அந்த இறைவன் ஒருவனே”
3. கிறிஸ்தவம் – ஒரே கடவுள் : மூன்று வடிவம் திரித்துவம் – பவுல் ஏற்படுத்தியது.
4. யூத மதம்–கடவுள் ஒருவனே, அண்டத்தை படைத்தவன்.
ஒரே இறைவன்–ஏகத்துவம்
இறைநூல் தெளிவாகக் கூறுகிறது.
அந்த இறைவன் ஒருவனே. அவன் தேவைகள் அற்றவன். அவன் யாருக்கும் பிறக்கவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக எவரு மில்லை. (112:1-4)
“உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் எவனு மில்லை. அவன் அருளாளனும், கருணையுடையவனும் ஆவான்”. (2:163)
அந்த இறைவன் ஒருவனே. அவனுக்கு மகன் எவருமில்லை. வானங்களும் பூமியும் அவனுடையது. (4:171)
பல இறைவன் இல்லை என்பதை மறுக்கும் இறைநூல்.
“வானங்களிலும், பூமியிலும் அந்த இறைவனைத் தவிர பல கடவுள்கள் இருந்திருந்தால் வானமும், பூமியும் அழிந்துபோகும்” (21:22)
“அந்த இறைவன் மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனோடு வேறு எந்தக் கடவுளும் இல்லை இருந்திருந்தால், ஒவ்வொரு கடவுளும் தன் படைப்பைக் கொண்டு போயிருக்கும்; ஒருவர் மற்றொரு வர்மேல் ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள். (23:91)
இறை நூல்கள் அடிப்படையில் :
ஒரே இறைவன் மட்டுமே உண்டு. பல இறைவன் என்ற கருத்தை இறைநூல் முற்றிலும் நிராகரிக்கிறது. இறைவன் ஒருவனே. அவனே படைத்து பரிபாலிப்பவன். “பல கடவுள்களை வழிபடக்கூடாது” என்று எச்சரிக்கிறது.
“அந்த இறைவனையே வணங்குங்கள்; அவனுடன் யாரையும் இணை ஆக்கவேண்டாம்”. (4:36)
“அந்த இறைவனுடன் எதையும் இணை ஆக்காதிருங்கள்; இதுவே அவன் உங்களுக்கு கட்டளையிட்டது”. (6:151)
“லுக்மான் தனது மகனிடம் கூறினார்: “மகனே! அந்த இறைவனுடன் எதையும் இணை வைக்காதே. நிச்சயமாக, “இணை வைப்பது” ஒரு பெரிய அநியாயம். (31:13)
அந்த இறைவனை தவிர வேறு தெய்வங்களைச் சாட்சியாக எடுப்பீர்களா? கூறுங்கள்.
அவன் ஒரே இறைவன், நிச்சயமாக நான் நீங்கள் இணை வைப்பவைகளிலிருந்து விலகி இருக்கிறேன் என்று கூறுங்கள். (6:19)
“வானங்களிலும், பூமியிலும் அந்த இறைவனைத் தவிர வேறு தெய்வங்கள் இருந்திருந்தால் அவை அழிந்து போயிருக்கும். இறைநூல் இவ்வாறு பல இடங்களில் “அந்த இறைவனுடன் யாரையும் இணை வைக்கக் கூடாது” என்று எச்சரிக்கிறது. அதாவது ஒரே இறைவன் மட்டுமே என்பதை வலியுறுத்து கிறது. (21:22)
இறைநூல் அடிப்படையில் “இணை வைத்தல்” எவ்வளவு பெரிய பாவம் என்பதை பார்க்கலாம்.
மன்னிக்கப்படாத மிகப் பெரிய பாவம் :
“அந்த இறைவன், அவனுடன் இணை வைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். அதற்கு அப்பாற்பட்டதை அவன் விரும்பியவர்களுக்கு மன்னிப்பான். அந்த இறைவனுடன் இணை வைப்பவன் மிகப் பெரிய பாவத்தைச் செய்திருக்கிறான். (4:48)
இணை வைப்பவர்களுக்கான தண்டனை பற்றி இறைநூல்.
“அந்த இறைவனுடன் இணை வைப்பவனுக்கு சொர்க்கத்தை இறைவன் தடை செய்கிறான்; அவனுடைய இருப்பிடம் நரகமே” (5:72)
மிகப் பெரிய அநியாயம்:
“இணை வைத்தல் மிகப் பெரிய அநீதியாகும்” பயனற்ற வழிபாடு. (31:13)
“நீர் அந்த இறைவனுடன் இணை வைத்தல், உமது செயல்கள் எல்லாம் வீணாகி விடும்; நீ இழந்தவர்களில் ஒருவனாகிவிடுவாய்” பொய் தெய்வங்கள் உதவ முடியாது. (39:65)
“அந்த இறைவனைத் தவிர வேறு கடவுள்களை வேண்டிக்கொள்கிறார்களோ–அவர்கள் மறுமை நாள் வரை எந்த பதிலும் தரமாட்டார்கள்; அவர்கள் வேண்டுகோளை கூட அறியமாட்டார்கள். இவ்வாறானவர்களை விட அதிகம் வழி தவறியவர் யார்?” (46:5)
இறைநூலில் இணை வைத்தல் மிகப் பெரிய பாவம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இணை வைத்தல் மன்னிக்கப்படாத பாவம் அந்த இறைவனிடம் நேரடியாகப் பாவமன்னிப்பு கேட்காமல் இறந்துவிட்டால் அவருக்கு சொர்க்கம் மறுக்கப்படும், நரகமே இருப்பிடமாகும்.
இறைநூலில் ஒரே இறைவனை மட்டும் நம்புவோருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பலன்கள்:
சொர்க்கம் கிடைப்பது உறுதியாகும்.
“நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோருக்குச் சொர்க்கத் தோட்டங்கள் இருப்பதாகச் சுப செய்திகள் கூறுவீராக. அவற்றின் கீழே நதிகள் ஓடிக்கொண்டிருக்கும்.” (2:25)
அச்சம், துயரம் இன்றிய வாழ்வு உண்டு.
இந்த இறைவனை நம்புகிறவர்களும், மறுமை நாளை நம்புகிறவர்களும், நற்செயல்கள் செய்கிறவர்களும், அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் பலன் உண்டு. அவர்களுக்கு அச்சமும் இல்லை, அவர்கள் கவலைப்படமாட்டார்கள். மன்னிப்பும் பெரிய பலனும் உண்டு. (2:62)
“நம்பிக்கை கொண்டு நல்ல செயல் புரிவோருக்கு அந்த இறைவன் மன்னிப்பையும் பெரிய பலனையும் வாக்களித்திருக்கிறான்.” நல்ல வாழ்க்கை இவ்வுலகில் நன்மை நிறைந்த வாழ்க்கை மறுமையில். (5:9)
“ஆண் அல்லது பெண், யார் நம்பிக்கை கொண்டவராக இருந்து நற்செயல்கள் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அளிப்போம். அவர்களின் செயல்களுக்கு ஏற்ப மறுமையில் நற்கூலி தருவோம்.” நரகத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். (16:97)
“நம்பிக்கை கொண்டவர்களை அந்த இறைவன் காப்பாற்றுவான்; அவர்கள் செய்தவற்றினால் அந்த இறைவன் அவர்களை வெற்றியடையச் செய்வான்; அவர்களைத் துன்பம் எதுவும் தொடாது”. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (39:61)
ஒரே இறைவன் தான் என்பதை நம்பி, அவனுக்காக நற்செயல்கள் செய்தால் அவன் அருளால் சொர்க்கம், இவ்வுலகில் அச்சமின்றி வாழ்வு, பாவமன்னிப்பு உண்டு. நல்ல உலக வாழ்க்கை, மறுமையில் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவை கிடைக்கும். அத்தககைய சிறந்த வாழ்க்கைக்கு நம் அனைவருக்கும் கிடைக்க இறைவன் அருள் செய்வானாக!