இந்தியாவில் பெரும்பான்மை முஸ்லிம்கள் பின்பற்றுவது சுன்னத் வல் ஜமாத் கொள்கையா? அல்லது சிஆ கொள்கையா?

in 2025 அக்டோபர்

இந்தியாவில் பெரும்பான்மை முஸ்லிம்கள் பின்பற்றுவது

சுன்னத் வல் ஜமாத் கொள்கையா? அல்லது சிஆ கொள்கையா?

எஸ். ஹலரத் அலி, திருச்சி.

இந்தியாவில் பெரும்பான்மை முஸ்லிம்கள் பின்பற்றுவது சுன்னத் வல்ஜமாத் கொள்கையா? அல்லது சிஆ  கொள்கையா? என்ற கேள்வியை எவர் கேட்டாலும்உடனே புள்ளி விபரத்துடன் பதில் கிடைத்துவிடும். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றுவதுசன்னிஎனச் சொல்லப்படும் சுன்னத் வல்ஜமாத் கொள்கை தான் என்று ஆக்ரோமான பதில் வரும்.

ஆனால் இந்திய முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கை செயல்பாட்டில் அவர் களில் பெரும்பான்மையினர் அறிந்தும், அறியாமலோ பின்பற்றும் மார்க்கச் செயல்பாடுகள் அனைத்துமே சிஆ முஸ்லிம்களின் கொள்கையையும், சூபிகளின் தஸவ்வூப் கொள்கைகளை  மட்டுமே.

அல்லாஹ்வை மட்டுமே அழைத்து உதவி தேடவேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! ஆனால் சிஆ இஸ்லாத்தில் இறைவனுக்கு சமமாக இமாம்களை அழைத்து  உதவி தேடுவார்கள்.

யா! அலீயா அலீ விரைவில் வாருங்கள்! எங்கள் துன்பங்களை தீருங்கள்! என்ற முறைப் பாடு கூப்பாடு சிஆ முஸ்லிம்களிடம் உள்ளது. இதே நிலையே தஸவ்வூப் தரீக்கா கொள்கை தாங்கிய முஸ்லிம்கள் அனைவருமே ஆபத்து காலத்தில் அல்லாஹ்வை அழைக்க மாட்டார்கள்.

ஏனெனில் இம்மக்களைப் பொருத்தவரை அல்லாஹ் வெகு தூரத்தில் அர்சில் இருக்கிறான். ஆகவே நம் சமீபத்தில் உள்ள ஈராக் ஜெய்லான் நகரிலுள்ளஅப்துல் காதர் ஜீலானி அவர்களை, யா! முஹைய்யதீன்? என்று  அழைத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

ஆஷீரா தினத்தில் 9,10 இரு நோன்பு வைப்பது மட்டுமே சுன்னாவில் சொல்லப்பட்டது. ஆனால் நம் முஸ்லிம்களுக்கு இது போதாது.  ஆகவே.. சிஆக்களின் ஆறாவது இமாமான இமாம் ஜாஃபர் சாதிக் அவர்களுக்குபூரியான் பாத்திஹா ஓதிகீரனி வைத்தும்…” விறகு வெட்டியார் கிஸ்ஸா ஓதி அவரை மகிமைப்படுத்தினால் அவரின் பரக்கத் கொட்டோ என்று கொட்டிவிடும் என்று நம்புகிறார்கள்.

இன்றும் நமது வீடுகளில் ரஜப் மாதம் பிறந்துவிட்டால் இமாம் ஜாஃபர் சாதிக்(ரஹ்) அவர்களுக்காக வீடு, வாசல், தூய்மைப்படுத்தி புனிதமாக்கப்படும். ஒரு குழந்தை பிறந்தால்அக்குழந்தைக்காகஅகீகாவாக ஆடு அறுத்து அல்லாஹ்வுக்கு குர்பானி கொடுப்பது சுன்னா. ஆனால் இன்று இந்த சுன்னா காணாமல் ஆக்கப்பட்டுதற்போது குழந்தையின் பிறந்த நாளுக்கு வருடம் தோறும்கேக் வெட்டிகொண்டாடும்நவீன அகீகாநடந்து கொண்டிருக்கிறது. 

ஆடு வெட்டுவதற்குப் பதில்.. வருடந்தோறும் கேக் வெட்டுநடக்கிறது. அடுத்து திருமண சடங்கு சம்பிரதாயங்கள் எதிலும் சுன்னா அமல்கள் கலந்துவிடாமல் கவனமாக இருந்து பந்தக்கால் பாத்திஹா ஓதுவதிலிருந்து மாப்பிள்ளைக்கு சிரை கழட்டும் வரை சிறப்பாக செய்து விடுவார்கள்.

முஸ்லிம்களின் வீடுகளில்தான் சுன்னாவுக்கு இடமில்லாமல் விரட்டப்பட்டதென்றுஅல்லாஹ்வின் பள்ளியில் சென்று பார்த்தால் அங்கு இதை விட பெரும் கொடுமை! பள்ளி வாசலில் போர்டு தொங்கும்! “இது நான்கு மத்ஹபைச் சார்ந்த சுன்னத் வல்ஜமாத் கொள்கை  சார்ந்த  பள்ளி.”

ஆனால் பள்ளி பெயர் பலகையில் உள்ள சுன்னத்தை பள்ளிக்குள் பார்க்க முடியாது.

அல்லாஹு அக்பர் என்று பாங்கு சொல்வதில் ஆரம்பித்து” “அஸ்ஸலாமு அலைக்கும்! வரஹ்மத்துல்லாஹ்!” என்று இமாம் ஸலாம் கொடுத்து முடிக்கும் வரை தொழுகையில் சுன்னத்தான ஸஹீஹான ஹதீத்கள் எதுவுமே அமல் செய்யப்படமாட்டாது. மத்ஹப் இமாம் சொன்னதுதான் மார்க்கமாக அமல் செய்யப்படும். ஆனாலும் நாம் நம்ப வேண்டும். இது சுன்னத்  ஜமாத்  பள்ளி  என்று

அடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ராத்திரி வந்துவிட்டால்நம் மூஃமினான பெண்களுக்கு அவ்லியாக்களின்கப்ர் ஜியாரத்கட்டாயமாகிவிடும். அவ்லியாக்கள் எனும் இறைநேசச் செல்வர்களிடம் கையேந்துவதன் மூலமே காரியங்கள் சாதித்துக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டு வளர்ந்து  மரமாக  நிற்கிறது.

நல்லவன், கெட்டவன் கலந்து இருக்கும் பொதுக் கபர்ஸ்தானுக்கு செல்வது ஆண்களுக்கு சுன்னா என்பது மறக்கப்பட்டு அவ்லீயாக்களின் ஆன்மீக தலம் எனும் தர்ஹா செல்லுவதே அசல் இஸ்லாமாக்கப்பட்டு விட்டது. இன்று இந்தியா மற்றும் தமிழக முஸ்லிம்களில் 90% பேர்கள் சொல்வது சுன்னத்தாக இருக்கும்! ஆனால் செயல்பாடு எல்லாம் சிஆ கொள்கையாக இருக்கும். இதைத்தான்சொல்லு சுல்தான்..  செயல்  ஷைத்தான்!  என்று  கூறுவது.

மீலாது எனும் நபி பிறந்தநாளைக் காட்டினால் தான் அரசாங்கத்திடம் பிரச்சார அனுமதி பெறமுடியும் எனும் அவல நிலைக்கு நம்மை கொண்டுவந்து விட்டார்கள். ஆகவே இவர்கள் மேடை ஏறிப் பேசுவதற்கு மீலாது தேவைப்படுகிறது. இஸ்லாத்தின் ஆறாவது கடமையை கழகத்திற்காக செய்து முடித்தாலும், வருடம் ஒரு முறை மட்டுமே மீலாதுக்காக மேடை ஒதுக் கப்படும் இந்த வருசக் கத்தம் ஓதுவதற்கே இங்கு ஏராளமான சிபாரிசுகள்  சிதறிக்கிடக்கின்றன.

Previous post:

Next post: