இஸ்லாத்தின் பார்வையில் மத நல்லிணக்கம்!

in 2026 ஜூலை

இஸ்லாத்தின் பார்வையில் மத நல்லிணக்கம்!

எஸ். ஹலரத் அலி

1. மதநல்லிணக்கம் என்றால் என்ன? இஸ்லாமிய  வரையறை! 

நல்லிணக்கம் = எல்லா மதமும் ஒன்று.

நல்லிணக்கம் = எல்லா மனிதனும் கண்ணியமானவன்.

இஸ்லாம் சொல்லும் நல்லிணக்கம்….

தஆயுஷ் சில்மி” – சமாதான  சகவாழ்வு!

கொள்கையில் சமரசம் இல்லை. மனிதனாக வாழ்வதில் சகோதரத்துவம். குர்ஆன் 49:13

மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒரு வரையயாருவர் அறிந்துகொள்ள உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கி னோம். அல்லாஹ்விடம் உங்களில் மிக கண்ணியமானவர் மிக இறையச்சமுடையவரே.”

அடிப்படை  மூன்று  தூண்கள் :

1. தவ்ஹீத் : வணக்கத்தில் சமரசம் இல்லை. “உங்கள் மார்க்கம் உங்களுக்கு, என் மார்க்கம் எனக்கு”. அல்குர்ஆன் 109:6

2. அத்வ் நீதி : முஸ்லிம் அல்லாதவனாக இருந்தாலும் அநீதி கூடாது. “ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பு நீதி செய்யாமல் இருக்க தூண்டவேண்டாம். நீதி செய்யுங்ள்.” அல்குர்ஆன் 5:8

3. பிர்ருநன்மை! உங்களுடன் போரிடாத, விரட்டாத மாற்று மதத்தவருக்கு நன்மை செய்யுங்கள். அல்குர்ஆன் 60:8

2. அன்று  நபி(ஸல்)  காலத்து  நல்லிணக்கம்:

ஏழு நடைமுறை உதாரணங்கள்!

2.1 மதீனா சாசனம் : உலகின் முதல் அரசியலமைப்பு !

622ல் நபி(ஸல்) மதீனா வந்ததும் செய்தது.

யூதர்கள், முஸ்லிம்கள் ஒரே உம்மத்ஒரே சமுதாயம். அவர்களுக்கு அவர்கள் மார்க்கம், நமக்கு நம் மார்க்கம், மதீனா மீது எதிரி தாக்கினால் இருவரும் சேர்ந்து போரிடுவோம்.”

முடிவு : மத அடிப்படையில் இல்லை, தேச அடிப்படையில் குடியுரிமை, வரி, பாதுகாப்பு, உரிமை  சமம்.

2.2  நஜ்ரான் கிறிஸ்தவர்கள் பள்ளிவாசலில் வழிபாடு!

நஜ்ரானிலிருந்து 60 கிறிஸ்தவ பாதிரிகள் வந்தார்கள். விவாதம் முடிந்ததும் அவர்கள் வழிபாடு  நேரம்  வந்தது.

நபி(ஸல்) சொன்னார்கள்: “என் பள்ளிவாசலின் கிழக்கே தொழுதுகொள்ளுங்கள்அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் சிலுவையை நோக்கி தொழுதார்கள்.  ஆதாரம்: இப்னு ஹிஷாம்.

2.3  அண்டை வீட்டு  யூதருக்கு  ஆட்டு  இறைச்சி!

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) ஆடு அறுத்தார்கள். “நம் யூத பக்கத்து வீட்டுக்காரருக்கு கொடுத்தீர்களா?” என்று திரும்ப திரும்ப கேட்டார்கள்.    (திர்மிதி : 1943)

நபி(ஸல்) சொன்னார்கள்: “ஜிப்ரீல் அண்டை வீட்டார் பற்றி சொல்லி சொல்லி, அவருக்கு வாரிசுரிமை வந்துவிடுமோ என்று நினைத்தேன்.      (புகாரி : 6014)

2.4   ஜனாஸாவுக்கு  எழுந்து  நின்றது!

ஒரு யூதரின் ஜனாஸா போனது. நபி(ஸல்) எழுந்து நின்றார்கள். “இது யூதரின் ஜனாஸாஎன்றார்கள். “அது ஒரு ஆத்மா இல்லையா?” என்று கேட்டார்கள்.     (புகாரி : 1311)

2.5  ஹுதைபியா  உடன்படிக்கை!

மக்கா காஃபிர்களுடன் ஒப்பந்தம். பாதகமான சரத்துகள். ஆனாலும் கையயழுத்து போட்டார்கள். “வாக்குறுதியை மீறாதீர்கள்      (அல்குர்ஆன் 16:91)

இரண்டு ஆண்டில் மக்கா வெற்றி கிடைத்தது.

2.6 எதிரிக்கும்  நீதி!

யூதர் ஒருவரின் கவசத்தை அலி(ரழி) எடுத்ததாக வழக்கு காஜி ஷிரைஹ் முன் நபி(ஸல்) மருமகன் அலி(ரழி) தோற்றார்கள். யூதருக்கு நீதி கிடைத்தது. அவர் கலிமா சொன்னார்.

2.7 கட்டாய  மதமாற்றம்  இல்லை!

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை(.கு. 2:256)

மக்கா வெற்றிக்கு பின்னும் யாரையும் கட்டாயப்படுத்தி  முஸ்லிமாக்கவில்லை.

சுருக்கம் : “அன்று நல்லிணக்கம் = 1. உயிர், உடைமை,  வழிபாட்டு  பாதுகாப்பு. 

2. நீதி,  3. சமூக உறவு,  4. கொள்கையில் உறுதி.

3. இன்று 2026ல் மத நல்லிணக்கத்தின் சவால்கள்:

3.1 இன்று நடப்பது என்ன?

1. “எல்லாம் ஒன்று  கலாச்சாரம்:

நோன்பு நோற்று தீபாவளி கொண்டாடுஎன்ற அழுத்தம். இது நல்லிணக்கம் இல்லை. இதுதம்யீஉ”-கரைத்தல். இஸ்லாம் மறுக்கிறது.

2. இஸ்லாமோஃபோபியா: தாடி, ஹிஜாப், ஹலால் எல்லாம் பயங்கரவாத சின்னமாக காட்டப்படுதல்.

3. அரசியல் பயன்பாடு:

வாக்குக்காக மத பிரிவினை. “அவர்கள் நாம்கதை.

4. சமூக ஊடக வெறுப்பு: ஒரு நிமிட ரீல்ஸ் ஒரு சமூகத்தையே கொடூரமாக சித்தரிக்கும்.

3.2 இன்று இஸ்லாம் சொல்லும் நல்லிணக்கம்! ஐந்து  வழிமுறைகள் !

சூழல் இஸ்லாமிய நிலைப்பாடு. ஆதாரம்

1. பண்டிகை வாழ்த்து சொல்வது ஆகும். ஆனால் கோவிலுக்கு போய் பூஜையில் கலந்துகொள்வது கூடாது. இப்னுதைமியா(ரஹ்) கூறுகிறார். மாற்று மதத்தவரை மகிழ்விப்பது பித்ரு வணக்கத்தில் கலப்பது கூடாது.

2. கோவில்,  சர்ச்  பாதுகாப்பு!

முஸ்லிம் அரசின் கடமை உமர்(ரழி) பைத்துல் முகத்தஸ் சர்ச்சில் தொழ மறுத்தார். “நாளை முஸ்லிம்கள் இதை மசூதி ஆக்கிவிடுவார்கள்என்ற அச்சத்தால் 

குர்ஆன் 22:40 வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

3. உணவு,  வியாபாரம்! 

வேதக்காரர்கள் உணவு ஹலால். அல்குர்ஆன். 5:5

அவர்களுடன் வியாபாரம், கடன், பரிசு எல்லாம் ஆகும். நபி(ஸல்) யூதரிடம் அடமானம் வைத்து தானியம் வாங்கினார்கள். புகாரி 2068

4. திருமணம்!

முஸ்லிம் ஆண் வேதக்கார பெண்ணை  மணக்கலாம். முஸ்லிம் பெண் கூடாது. காரணம் குடும்ப தலைமை, குழந்தை மார்க்கம்.  அல்குர்ஆன் 5:5

5. அநீதிக்கு  எதிராக  ஒன்றுபடுதல்!

சுற்றுச்சூழல், ஏழ்மை, போதைக்கு எதிராக எல்லா மதத்தவருடனும் சேர்ந்து போராடலாம். “ஹில்ஃபுல் ஃபுழூல்அநீதிக்கு எதிரான நபி(ஸல்) இளமை கால ஒப்பந்தம். நபி(ஸல்) “இன்று  அழைத்தாலும் போவேன்.’

4.   அன்றுக்கும் இன்றுக்கும் உள்ள வித்தியாசம் !

அன்றுமதீனா 622 இன்று 2026 

அரசு இஸ்லாமியம்!’ முஸ்லிம்கள் பாதுகாப்பு கொடுத்தார்கள். “அரசு மதச்சார்பற்றது!’. 

முஸ்லிம்கள் பாதுகாப்பு கேட்கிறார்கள். “எதிரி தெளிவு!’ : காஃபிர், முஸ்லிம், போர் ஒப்பந்தம் தெளிவு.

எதிரி தெளிவில்லை‘ : கருத்தியல் போர், ஊடக போர், “நரேட்டிவ்போர். “மதம் தனித் தனி!’ சமூகம் கலக்கவில்லை. கலாச்சாரம், கல்யாணம், உணவு எல்லாம் கலக்கிறது.

நல்லிணக்கம் = உடன்படிக்கை

நல்லிணக்கம் = சகிப்புத்தன்மை + சட்ட போராட்டம்!”

5. முடிவுரை : உண்மையான நல்லிணக்கத்தின் ஃபார்முலா.

இஸ்லாம் சொல்லும் நல்லிணக்கம் = “உறுதி + உபகாரம்

1. அகீதாவில உறுதி:

அல்லாஹ் ஒருவன் முஹம்மது(ஸல்) இறுதி தூதர் இதில் 0% சமரசம். 

2. முஆமலாத்தில் உபகாரம் :

அண்டை வீட்டார். சக பணியாளர், நாட்டு மக்கள். எல்லோருக்கும் 100% நீதி, உதவி, புன்னகை.

இமாம் ஷாஃபி சொன்னார் : “எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. அல்லாஹ்வை திருப்திப்படுத்து. மக்கள் தானாக திருப்தியாவார்கள்

இன்று நமக்கு தேவை : “குர்ஆனை ஒரு கையில், அரசியலமைப்பை மறு கையில்பிடித்து நடப்பது. குர்ஆன் சொன்ன நீதியை அரசியலமைப்பு வழிகேள். அரசியலமைப்பு கொடுத்த உரிமையை குர்ஆன் சொன்ன ஒழுக்கத்தோடு பயன்படுத்து.

நன்மை தீமை சமமாகாது. அழகியதை கொண்டு தீமையை தடு. அப்போது உனக்கும் அவனுக்கும் பகை இருந்தால், உற்ற நண்பனாக ஆகிவிடுவான்”. .கு. 41:34

இதுதான் இஸ்லாத்தின் நல்லிணக்கம். அன்றும், இன்றும், என்றும்!

******************

அறிந்து கொள்வோம்!

ரஹிமுத்தீன்,  குண்டூர்

1.  வரக்க இப்னு நவ்ஃபல் அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எந்தவித உறவுமுறை?

கதீஜா(ரழி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன்.   ஸஹீஹுல் புகாரி:3

2.  நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ரோமப் பேரரசராக இருந்தவர் யார்?

ஹிரக்ள் (யஹராக்ளியஸ்).  ஸஹீஹுல் புகாரி 7

3.  நாணம் (ஹயா) ஈமானில் என்னவாக இருக்கிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

ஒரு கிளையாக இருக்கிறது.   புகாரி : 9

4.  எவருடைய இஸ்லாம் மிகச் சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பாதுகாப்பு தருகிறாரோ அவரே.  புகாரி 11

5.   எதுவரையில் ஈமான் கொண்டவராக ஆகமாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

தமக்கு விரும்புவதையே தம்(முஸ்லிம்) சகோதரருக்கும் விரும்பும் வரை.   புகாரி 13

6.   நயவஞ்சகத்தின் ஓர் அடையாளம் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

அன்சாரிகளிடம் வெறுப்பு கொள்வது.   புகாரி 17

7. நரகத்தில் அதிகமான பெண்கள் இருக்க காரணம் என்ன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நன்றி  மறப்பவர்கள்.   புகாரி 29

8.  அறியாமைக்காலப் பண்பு (ஏதுவது) கொண்டிருந்தவர் நீர் என யாரை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

அபூதர்.    புகாரி : 30

9.   நபி(ஸல்) அவர்கள் கஃபாவை முன்னோக்கி (கிப்லாவாக) தொழுத முதல் தொழுகை  எது?

அஸ்ர்.  புகாரி : 40

10. கஃபா கிப்லாவாக அறிவிப்புக்கு முன் பைத்துல் முத்தஸை முன்னோக்கி தொழுத தொழுகைகளை அல்லாஹ் என்ன செய்யமாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

வீணாக்கமாட்டான்.   புகாரி 40

11. இஸ்லாத்தை உளத்தூய்மையுடன் ஏற்றுக் கொண்டவரின் நிலை என்னவாக இருக்கும் என  நபி(ஸல்)  கூறினார்கள்?

கடந்த கால பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துவிடுவான்.  புகாரி: 41

12. ஒரு வாற் கோதுமை எடையுள்ள நன்மை செய்தவர் எங்கிருந்து வெளியேறி விடுவார் என  நபி(ஸல்)  கூறினார்கள்?

நரகத்தை  விட்டு.    புகாரி : 44

13.  விரும்பி தொழும் தொழுகை எது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நஃபில்.  புகாரி : 46

14.  மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று இது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? 

நம்பகத்தன்மை பாழாக்கப்படுவது. புகாரி : 59

15. உளூவில் குதிகால் நனையாத நிலை என்னவாக ஆகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நரக நெருப்பின் கேடு.      புகாரி : 60

16.  மரங்களில் இலைகள் உதிர்வதில்லை என எந்த மரத்தை கூறினார்கள்?

பேரீச்சை மரம்.   புகாரி 61

17.  மூஸா(அலை) அவர்களின் பணியாளர் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

யூஷா  பின்  நூன்.  புகாரி : 74

18.  இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களை அணைத்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் எப்படி பிரார்த்தனை செய்தார்கள்?

இவருக்கு குர்ஆனைக் கற்றுத் தருவாயாக.     புகாரி : 75

19.  ஹஜ்ஜின் போது கல் எறிவதற்கு முன்பு குர்பானி கொடுப்பதை பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

குற்றமில்லை.    புகாரி : 84

20.  ஹர்ஜ் என்றால் என்ன நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

கொலை.    புகாரி :  85

Previous post:

Next post: