குர்ஆனும் குவாஸர் நட்சத்திரமும்!
– எஸ். ஹலரத் அலி
அறிவியலின் வளர்ச்சி மனிதனின் பார்வையை பிரபஞ்சத்தின் ஆழத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நவீன வானியல் ஆய்வுகளில் விண்வெளியில் மிகவும் பிரகாசமான மற்றும் மர்மமான பொருட்களில் ஒன்றாக ”குவாஸர்கள் கருதப்படுகின்றன.
இந்த நவீன கண்டுபிடிப்புகளுக்கும், 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட திருக்குர் ஆனின் சில வசனங்களுக்கும் இடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமைகள் குறித்து பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“குவாஸர்கள் என்றால் என்ன?
குவார் என்பது “குவாசி–ஸ்டெல்லர் என்பதன் சுருக்கம். இவை மிகத் தொலைவில் உள்ள, அதீத ஆற்றலை வெளிப்படுத்தும் விண்மீன் மண்டலங்களின் மையப் பகுதிகள் ஆகும். ஒரு ”குவாஸர்” ஒட்டு மொத்த பால்வெளி மண்டலத்தை விட பல நூறு மடங்கு அதிக வெளிச்சத்தை உமிழக்கூடியது. இவற்றின் மையத்தில் உள்ள பிரமாண்டமான கருத்து களை தன்னைச் சுற்றியுள்ள வாயுக்களையும் தூசிகளையும் ஈர்த்து, ஒரு சுழல் வடிவத்தை உருவாக்கி, பேரொளியை வெளிப்படுத்துகின்றன.
குர்ஆனும் விண்வெளி நிகழ்வுகளும்!
திருக்குர்ஆனில் பிரபஞ்சத்தைப் பற்றி பேசும் பல வசனங்கள், வானியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக, பிரபஞ்சத்தில் உள்ள சில குறிப்பிட்ட நட்சத்திரங் களின் தன்மையை விவரிக்கும் வசனங்கள் குவாஸர்களின் பண்புகளோடு ஒத்துப் போவதாகக் கருதப்படுகிறது.
குவாஸர் நட்சத்திரங்களின் அறிவியல் பண்புகள்:
குவாஸர்கள் என்பவை பிரபஞ்சத்தின் மிக அதிக ஆற்றல் மற்றும் வெளிச்சம் கொண்ட விண்வெளிப் பொருட்களாகும். நவீன வானியலின்படி. இவற்றின் முக்கிய அறிவியல் பண்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. அதீத ஒளிர்வு
ஒரு குவாஸர் முழு பால்வெளி மண்டலமும் உமிழும் ஒளியை விட நூற்றுக்கணக்கான மடங்கு அதிக வெளிச்சத்தை உமிழக்கூடியது. இவை பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும், பூமிக்குரிய தொலைநோக்கிகள் மூலம் இவற்றை எளிதில் அவதானிக்க முடிகிறது.
2. பிரம்மாண்ட கருந்துளை
ஒவ்வொரு குவாஸரின் மையத்திலும் நமது சூரியனைப் போல பல மில்லியன் அல்லது பில்லியன் மடங்கு நிறை கொண்ட பிரம்மாண்டமான கருந்துளைகள் உள்ளன.
3. பொருட்கள் ஈர்க்கும் தட்டு
கருந்துளையின் தீவிர ஈர்ப்பு விசையின் காரணமாக, சுற்றியுள்ள வாயுக்கள், தூசிகள் மற்றும் விண்மீன்கள் ஒரு சுழல் வடிவ தட்டு போல கருந்துளையை நோக்கி ஈர்க்கப் படுகின்றன. இந்த தட்டில் உள்ள பொருட்கள் அதி வேகத்தில் சுழல்வதால் ஏற்படும் உராய்வு காரணமாக அதிக வெப்பமடைந்து ஒளியை வெளியிடுகின்றன.
4. கதிர்வீச்சுப் பீச்சுகள்
குவாஸர்களின் மையத்திலிருந்த காந்தப்புலத்தின் உதவியால் அதிவேக துகள்கள் மற்றும் கதிர்வீச்சுகள் ஒளியின் வேகத்திற்கு அருகில் இரு துருவங்களாக வெளியேற்றப்படு கின்றன.
5. அதிக சிவப்புப் பெயர்ச்சி
ஹப்பிள் விதிகளின்படி குவாஸர்கள் பூமிக்கு மிகத் தொலைவில விலகிச் செல்வதால், அவற்றின் ஒளியானது நிற மாலையில் சிவப்பு நிறத்தை நோக்கி நகர்ந்துள்ளது இது பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தை சேர்ந்தவை என்பதை உணர்த்துகிறது.
6. ஒளி மாறுபாடு
குவாஸர்களின் வெளிச்சம் ஒரே சீராக இருப்பதில்லை. நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் இவற்றின் பிரகாசம் மாறுபடுவதை அவதானிக்கலாம். இதன் மூலம், ஆற்றலை உருவாக்கும் மையப்பகுதி மிகச்சிறிய பரப்பளவைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.
1. துளைக்கும் நட்சத்திரம்
திருக்குர்ஆனின் 86வது அத்தியாயமான “அத்தாரிக்” சூராவில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
“மேலும், “தாரிக்‘ (என்ற) அந்த நட்சத்திரம் என்னவென்று உமக்குத் தெரியுமா? அது ஒளியால் துளைத்தச் செல்லும் நட்சத்திரமாகும்”. (குர்ஆன் 86:2,3)
இங்கு “தாரிக்‘ என்ற சொல்லுக்கு “இரவில் வருபவர்‘ அல்லது “தட்டும் தட்டி‘ என்று பொருள் கொள்ளலாம். குவாஸர்கள் மிக அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சை வெளிப் படுத்தி, விண்வெளியின் இருளைத் துளைத்துக் கொண்டு ஒளியைப் பாய்ச்சுவதால், இவை “துளைக்கும் நட்சத்திரம்‘ என்ற வர்ணனைக்கு மிக நெருக்கமாக அமைகின்றன.
2. விண்வெளியின் பிரமாண்டம்
குவாஸர்கள் பிரபஞ்சத்தின் விளிம்பில் காணப்படுபவை. குர்ஆன் பிரபஞ்சத்தின் பரப்பைப் பற்றியும், அதன் படைப்பின் நுணுக்கங்களைப் பற்றியும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.
“வானத்தை நாம் வலிமையைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் அதனை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம்” (குர்ஆன் 51:47)
இந்த வசனம் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்ற நவீன அறிவியல் உண்மையை உறுதிப்படுத்துகிறது. குவாஸர்கள் மிகத் தொலைவில் இருப்பதும், பிரபஞ்சம் விரிவடைவதைச் சுட்டிக்காட்டுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
அறிவியல் பார்வையில் ஒரு பார்வை :
குர்ஆனின் வசனங்களை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடும்போது, சில முக்கிய அம்சங்களைக் கவனிக்கவேண்டும்.
குறியீட்டு மொழி :
“குர்ஆன் ஒரு அறிவியல் பாடப்புத்தகம் மட்டும் அல்ல, அது ஒரு வழிகாட்டுதல் நூல். எனவே, அதில் உள்ள தகவல்கள் மனிதனின் அறிவு வளர வளர, புதிய கோணங்களில் புரிந்து கொள்ளக்கூடிய குறியீடுகளாகவே உள்ளன.
மறைபொருள் : பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதருக்கு, இவ்வளவு பிரமாண்டமான மற்றும் தொலைதூர விண்வெளி நிகழ்வுகளைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது, இது இறைவனின் நெறிநூல் என்பதற்கு ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது.
முடிவுரை : குவாஸர்கள் பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க படைப்புகள். குர்ஆனின் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள “ஒளியால் துளைத்துச் செல்லும் நட்சத்திரம்‘ என்ற கருத்து. மனித அறிவிற்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச ரகசியங்களை இறைமறை எவ்வாறு முன்னரே கோடிட்டுக் காட்டியுள்ளது என்பதற்கு ஒரு சான்றாகும். பிரபஞ்சத்தைப் பற்றி சிந்தனை செய்வதும், அதனை ஆராய்ச்சி செய்வதும் குர்ஆன் தூண்டும் ஒரு சிறந்த வழிபாடாகும். இந்த ஆய்வு, மனிதனின் அறிவையும் இறை நம்பிக்கையையும் ஒருசேர வளர்க்க உதவுகிறது.
**************
பயன்தராத தொழுகை….
மறு பதிப்பு :
M. முஹம்மது சலீம், ஈரோடு
அறிவியலின் வளர்ச்சி மனிதனின் பார்வையை பிரபஞ்சத்தின் ஆழத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நவீன வானியல் ஆய்வுகளில் விண்வெளியில் மிகவும் பிரகாசமான மற்றும் மர்மமான பொருட்களில் ஒன்றாக ”குவாஸர்கள் கருதப்படுகின்றன.
இந்த நவீன கண்டுபிடிப்புகளுக்கும், 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட திருக்குர்ஆனின் சில வசனங்களுக்கும் இடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமைகள் குறித்து பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“குவாஸர்கள் என்றால் என்ன?
குவார் என்பது “குவாசி–ஸ்டெல்லர் என்பதன் சுருக்கம். இவை மிகத் தொலைவில் உள்ள, அதீத ஆற்றலை வெளிப்படுத்தும் விண்மீன் மண்டலங்களின் மையப் பகுதிகள் ஆகும். ஒரு ”குவாஸர்” ஒட்டுமொத்த பால்வெளி மண்டலத்தை விட பல நூறு மடங்கு அதிக வெளிச்சத்தை உமிழக்கூடியது. இவற்றின் மையத்தில் உள்ள பிரமாண்டமான கருத்துகளை தன்னைச் சுற்றியுள்ள வாயுக்களையும் தூசிகளையும் ஈர்த்து, ஒரு சுழல் வடிவத்தை உருவாக்கி, பேரொளியை வெளிப்படுத்துகின்றன.
குர்ஆனும் விண்வெளி நிகழ்வுகளும்!
திருக்குர்ஆனில் பிரபஞ்சத்தைப் பற்றி பேசும் பல வசனங்கள், வானியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக, பிரபஞ்சத்தில் உள்ள சில குறிப்பிட்ட நட்சத்திரங்களின் தன்மையை விவரிக்கும் வசனங்கள் குவாஸர்களின் பண்புகளோடு ஒத்துப்போவதாகக் கருதப்படுகிறது.
குவாஸர் நட்சத்திரங்களின் அறிவியல் பண்புகள்:
குவாஸர்கள் (ஞற்ழிவிழிrவி) என்பவை பிரபஞ் சத்தின் மிக அதிக ஆற்றல் மற்றும் வெளிச்சம் கொண்ட விண்வெளிப் பொருட்களாகும். நவீன வானியலின்படி. இவற்றின் முக்கிய அறிவியல் பண்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. அதீத ஒளிர்வு
ஒரு குவாஸர் முழு பால்வெளி மண்டலமும் உமிழும் ஒளியை விட நூற்றுக்கணக்கான மடங்கு அதிக வெளிச்சத்தை உமிழக்கூடியது. இவை பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும், பூமிக்குரிய தொலைநோக்கிகள் மூலம் இவற்றை எளிதில் அவதானிக்க முடிகிறது.
2. பிரம்மாண்ட கருந்துளை
ஒவ்வொரு குவாஸரின் மையத்திலும் நமது சூரியனைப் போல பல மில்லியன் அல்லது பில்லியன் மடங்கு நிறை கொண்ட பிரம்மாண்டமான கருந்துளைகள் உள்ளன.
3. பொருட்கள் ஈர்க்கும் தட்டு
கருந்துளையின் தீவிர ஈர்ப்பு விசையின் காரணமாக, சுற்றியுள்ள வாயுக்கள், தூசிகள் மற்றும் விண்மீன்கள் ஒரு சுழல் வடிவ தட்டு போல கருந்துளையை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. இந்த தட்டில் உள்ள பொருட்கள் அதிவேகத்தில் சுழல்வதால் ஏற்படும் உராய்வு காரணமாக அதிக வெப்பமடைந்து ஒளியை வெளியிடுகின்றன.
4. கதிர்வீச்சுப் பீச்சுகள்
குவாஸர்களின் மையத்திலிருந்த காந்தப் புலத்தின் உதவியால் அதிவேக துகள்கள் மற்றும் கதிர்வீச்சுகள் ஒளியின் வேகத்திற்கு அருகில் இரு துருவங்களாக வெளியேற்றப்படுகின்றன.
5. அதிக சிவப்புப் பெயர்ச்சி
ஹப்பிள் விதிகளின்படி குவாஸர்கள் பூமிக்கு மிகத் தொலைவில விலகிச் செல்வதால், அவற்றின் ஒளியானது நிற மாலையில் சிவப்பு நிறத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இது பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தை சேர்ந்தவை என்பதை உணர்த்துகிறது.
6. ஒளி மாறுபாடு
குவாஸர்களின் வெளிச்சம் ஒரே சீராக இருப்பதில்லை. நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் இவற்றின் பிரகாசம் மாறுபடுவதை அவதானிக்கலாம். இதன்மூலம், ஆற்றலை உருவாக்கும் மையப்பகுதி மிகச்சிறிய பரப்பளவைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.
1. துளைக்கும் நட்சத்திரம்
திருக்குர்ஆனின் 86வது அத்தியாயமான “அத்தாரிக்” சூராவில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
“மேலும், “தாரிக்‘ (என்ற) அந்த நட்சத்திரம் என்னவென்று உமக்குத் தெரியுமா? அது ஒளியால் துளைத்தச் செல்லும் நட்சத்திரமாகும்”. (குர்ஆன் 86:2,3)
இங்கு “தாரிக்‘ என்ற சொல்லுக்கு “இரவில் வருபவர்‘ அல்லது “தட்டும் தட்டி‘ என்று பொருள் கொள்ளலாம். குவாஸர்கள் மிக அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சை வெளிப்படுத்தி, விண்வெளியின் இருளைத் துளைத்துக் கொண்டு ஒளியைப் பாய்ச்சுவதால், இவை “துளைக்கும் நட்சத்திரம்‘ என்ற வர்ணனைக்கு மிக நெருக்கமாக அமைகின்றன.
2. விண்வெளியின் பிரமாண்டம்
குவாஸர்கள் பிரபஞ்சத்தின் விளிம்பில் காணப்படுபவை. குர்ஆன் பிரபஞ்சத்தின் பரப்பைப் பற்றியும், அதன் படைப்பின் நுணுக்கங்களைப் பற்றியும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.
“வானத்தை நாம் வலிமையைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் அதனை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம்” (குர்ஆன் 51:47)
இந்த வசனம் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்ற நவீன அறிவியல் உண்மையை உறுதிப்படுத்துகிறது. குவாஸர்கள் மிகத் தொலைவில் இருப்பதும், பிரபஞ்சம் விரிவடைவதைச் சுட்டிக்காட்டுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
அறிவியல் பார்வையில் ஒரு பார்வை :
குர்ஆனின் வசனங்களை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடும்போது, சில முக்கிய அம்சங்களைக் கவனிக்கவேண்டும்.
குறியீட்டு மொழி :
“குர்ஆன் ஒரு அறிவியல் பாடப்புத்தகம் மட்டும் அல்ல, அது ஒரு வழிகாட்டுதல் நூல். எனவே, அதில் உள்ள தகவல்கள் மனிதனின் அறிவு வளர வளர, புதிய கோணங்களில் புரிந்து கொள்ளக்கூடிய குறியீடுகளாகவே உள்ளன.
மறைபொருள் : பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதருக்கு, இவ்வளவு பிரமாண்டமான மற்றும் தொலைதூர விண்வெளி நிகழ்வுகளைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது, இது இறைவனின் நெறிநூல் என்பதற்கு ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது.
முடிவுரை : குவாஸர்கள் பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க படைப்புகள். குர்ஆனின் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள “ஒளியால் துளைத்துச் செல்லும் நட்சத்திரம்‘ என்ற கருத்து. மனித அறிவிற்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச ரகசியங்களை இறைமறை எவ்வாறு முன்னரே கோடிட்டுக் காட்டியுள்ளது என்பதற்கு ஒரு சான்றாகும். பிரபஞ்சத்தைப் பற்றி சிந்தனை செய்வதும், அதனை ஆராய்ச்சி செய்வதும் குர்ஆன் தூண்டும் ஒரு சிறந்த வழிபாடாகும். இந்த ஆய்வு, மனிதனின் அறிவையும் இறை நம்பிக்கையையும் ஒருசேர வளர்க்க உதவுகிறது.
**********************************
ஏன் படிக்க வேண்டும்?
A. நஜ்முதீன்
உதிரத்தையும், உயிரையும் கொடுக்க துணிந்து பெற்று எடுத்து கண் இமை போல் பிரியாது இருந்த பிள்ளைகளை சுமார் 3 அல்லது 5 வயது ஆனவுடன் மூன்றாம் நபரை நம்பி தாய்மார்கள் பிரிய மனமில்லாமல், குழந்தைகள் அழுதாலும் நர்சரி பள்ளியில் விட்டுவிட்டு பிரிந்து வருவதை காண்கின்றோம்.
ஏன் நர்சரி பள்ளியில் விடவேண்டும்? ஆம்! அந்த குழந்தைக்கு பாசத்தை விட படிப்பே முக்கியம் என்பதால்,
அதுவரை படிப்பு என்றால் என்ன?
புத்தகம் என்றால் என்ன?
என்று தெரியாத பிள்ளைகளைத்தான் நர்சரி பள்ளியில் படிக்கவிடுகிறோம்.
ஒரு தாயை விட சுமார் 99 பங்கு அதிக பாசமுள்ள இறைவனும் மனிதனை பார்த்து முதலில் சொன்னது ஓதுவீராக! (படிப்பீராக) என்பதே.
அதாவது கல்வி அறிவு மிகவும் முக்கியம் என்பதாலே,
படிப்பீராக! என்று முதலில் சொல்லி யுள்ளான் எப்படி தாய்மார்கள் படிப்பு என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளை “படி‘ என்று சொன்னது போல், படிக்க தெரியாத மற்றும் அதுவரை பாதுகாக்கப்படாத இறைவழிகாட்டி நூலும் இல்லாத நேரத்தில் இந்த கட்டளையை இறைவன் முகம்மது நபி(ஸல்) அவர்களைப் பார்த்து கூறினான்.
இது ஆச்சரியமான ஒன்று. எவ்வாறு என்றால் எது ஒன்றையும் படிக்க வேண்டும் என்றால் அவர் படித்து இருக்கவேண்டும் அல்லது பாடசாலையாவது சென்று இருந் திருக்கவேண்டும். இவை எதுவுமே இல்லை.
ஆனாலும் படிப்பீராக! என்று இறைவன் கூறியுள்ளான்.
ஏன் படைத்தவனுக்கு தெரியவில்லையா? ஆம்! நன்கு தெரியும். ஆயினும் “படி‘ என்று ஏன் சொன்னான்?
(அது முகம்மது நபி(ஸல்) அவர்களுக்காக சொன்ன கட்டளை அல்ல. மனிதகுல சமுதாயத்திற்கு முகம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக சொன்ன கட்டளையாகும்)
மனிதன் ஏன் படிக்கவேண்டும்?
இதர படைப்புக்களைப் போல வெறுமனே உண்பதும், உழைப்பதும் மட்டும் மனித வாழ்க்கைக்கு போதுமானது அல்ல. மனிதன் விழிப்புணர்வு பெற்றவனாக இருக்கவேண்டும். அதாவது அறிவுள்ளவனாக மனிதன் இருக்கவேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமாகும்.
எனவேதான் என்மீது நம்பிக்கை (ஈமான்) கொள், எனக்கு அடிபணிந்து செல், என்னை (புகழ்ந்து நினைவு கூறு) என்று முதலில் கூறவில்லை.
மாறாக, படிப்பீராக! என்று தான் முதலில் கூறினான்.
ஏன் என்றால் மனிதன் படித்தவனாக இருந்தால்தான் அவன் தன்னையும், உலகையும், படைத்த இறைவனையும் புரிந்து கொள்ளமுடியும்.
எனவேதான் மனிதனை படைத்த போதும் கூட,
“எழுதுகோலால் (எழுதுவது எப்படி என்பதை) கற்று தந்தேன்‘ என்றும்
அவன் அறியாதவற்றை எல்லாம் மனிதனுக்கு கற்றுக்கொடுத்தேன்‘ என்பதாக கூறியுள்ளான். (96:4,5)
படித்தால் மட்டும் போதுமா? இல்லை. ஒரு எச்சரிக்கையும் செய்கிறான்.
ஏன் என்றால்;
“படித்துவிட்டதினால் தன்னைத் தேவையற்றவன் என்றோ, எல்லாம் தெரிந்தவன் என்றோ, மனிதன் கருதிவிடக்கூடாது என்பதால் அதில் “வரம்பு மீறக்கூடாது‘ என்ற எச்சரிக்கையும் செய்கின்றான்.
அவ்வாறு என்றால் எப்படி படிக்கவேண்டும்?
ஆம்! அதற்கு இறைவனே ஒரு விதிமுறையை சொல்லுகின்றான்.
“ஓதுவீராக! (படிப்பீராக) உம் இறைவனின் திருப்பெயரால்” (96:1)
ஒருவன் என்னதான் படித்தாலும், இறைவனைப் பற்றி புரியாமல், தன்னை படைத்தது யார்? என்று தெரியாமல் இருந்தால் அவன் படித்தவனாக இருந்தாலும் வழி தவறிவிடுவான்.
எப்படி?
எத்தனையோ மற்றும் பல உயர்தரமான உலக கல்விகளை கற்றவர்கள் கூட வழிதவறி படைத்தவனுக்கு பலர் இணை வைக்கிறார்கள், அல்லது சிலர் இறை மறுப்பாளராக இருக்கின்றார்கள் என்பதை நாம் காண்கின்றோம்.
எனவே இறை கட்டளைப்படி படியுங்கள். ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள் (கீழ்படியுங்கள்).
கல்வி மனிதனை அறியாமையிலிருந்து விடுவித்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும், செல்கிறது.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமானது. கல்வியை பெற்ற மக்கள் சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம் பெற்று நல்ல பங்களிப்பை கொடுக்க முடியும்.