இறைவன் ஒருவனே என்பது குறித்து இறைநூல்கள் கூறுவது என்ன?

in 2026 ஜூலை

இறைவன் ஒருவனே என்பது குறித்து இறைநூல்கள் கூறுவது என்ன?

S.H. அப்துர் ரஹ்மான்

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்

அந்த  ஒரே  இறைவன்  பெயரால்….

இறைவன் ஒருவனே! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பது இறைநூலின் முக்கியமானக் கருத்தாகும். இதைப் பற்றி  கூறும்  சில  முக்கிய  வசனங்கள்.

1. இறைநூல்  வசனம்  (112:1-4)

கூறுவீராக: அவன் அந்த இறைவன் ஒருவனே.

அந்த இறைவன் (எவரிடமும் தேவையற்ற)  நிரந்தரமானவன்.

அவன் பெறவுமில்லை, பெறப்பட்டவனுமில்லை.

அவனுக்கு  நிகராக  எவரும்  இல்லை.

2. இறைநூல்  வசனம்  (2:163)

உங்கள் இறைவன் ஒரே இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் இல்லை; அவன் அளவற்ற அருளாளன்,  மிக்க கருணையாளன்.

3. இறைநூல்  வசனம்  (16:22)

உங்கள் இறைவன் ஒரே இறைவன்”.

4. இறைநூல்  வசனம்  (6:102)

அவனே உங்கள் இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் யாரும் இல்லை. அனைத்தையும்  படைத்தவன்  அவனே”.

5. இறைநூல்  வசனம் :  (20:14)

நிச்சயமாக நானே அந்த இறைவன் என்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் இல்லை; ஆகவே என்னையே  வணங்குங்கள்”.

6. இறைநூல் வசனம்  (3:18)

அந்த இறைவன் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இல்லை என்று இறைவன் சாட்சி கூறுகிறான்”.

இவை அனைத்தும் இறுதி இறைநூலில் இறைவனின் ஒருமையை வலியுறுத்தும் வசனங்கள்.

இறுதி இறைநூலில் “”இறைவன் ஒருவனேஎன்ற கருத்தை வலியுறுத்தும். மேலும் சில வசனங்கள்;

7. இறைநூல்  வசனம்  (5:73)

அந்த இறைவன் மூவரில் ஒருவன் என்று கூறுபவர்கள் நிச்சயமாக நிராகரித்துவிட்டார்கள். ஒரே இறைவனைத் தவிர வேறு இறைவன்  இல்லை.”

8. இறைநூல் வசனம் (17:42)

அவனுடன் வேறு கடவுள்கள் இருந்திருந்தால், அவர்கள் அர்சின் அதிபதியிடம் வழியைத் தேடியிருப்பார்கள்.

9. இறைநூல் வசனம் (21:22)

வானங்களிலும் பூமியிலும் அந்த இறைவன் தவிர வேறு தெய்வங்கள் இருந்திருந்தால் அவை இரண்டும் குழப்பமடைந்திருக்கும்.”

10. இறைநூல் வசனம் : (21:25)  

உமக்கு முன் எந்தத் தூதரையும் அறிவிக்காமல் நாம் அனுப்பவில்லை; என்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் இல்லை; எனவே என்னையே வணங்குங்கள்என்று அவருக்கு வஹீ அறிவித்தே அனுப்பினோம்.”

11. இறைநூல்  வசனம்  (37:4,5)

நிச்சயமாக உங்கள் இறைவன் ஒரு வனே; வானங்களுக்கும், பூமிக்கும் அவற்றுக்கு மிடையில் உள்ளவற்றிற்கும் இறைவன் அவனே”.

12. இறைநூல்  வசனம்  (47:19)

அந்த இறைவனைத் தவிர வணக்கத்திற் குரியவர் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்”.

13. இறைநூல்  வசனம்  (59:22-24)

அவனே அந்த இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் இல்லை…”

(இந்த வசனங்களில் இறைவனின் தனித் தன்மை மற்றும் பண்புகள் விளக்கப்படுகின்றன)

14. இறைநூல்  வசனம்  (23:116)

உண்மையான அரசன் உயர்ந்தவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை”.

15. இறைநூல்  வசனம்  (28:70)

அவனே அந்த இறைவன், அவனைத் தவிர  வணக்கத்திற்குரியவன்  இல்லை.” 

இவை அனைத்தும் இறுதி இறைநூலில் இந்த இறைவன் ஒருவனே என்ற அடிப்படை நம்பிக்கையை  வலியுறுத்தும்  வசனங்கள்.

16. இறைவன் ஒருவனே என்பது குறித்து பைபிள் :

பைபிளிலும்இறைவன் ஒருவனேஎன்ற கருத்தை வலியுறுத்தும் வசனங்கள் உள்ளன. சில  முக்கியமானவை:

1. உபாகமம்   (6:4)

இஸ்ரவேலே, கேள்; நம்முடைய தேவ னாகிய கர்த்தர் ஒரே கர்த்தர்”.

2. ஏசாயா   (45:5)

நானே கர்த்தர்; வேறொருவரும் இல்லை; என்னைத் தவிர தேவன் இல்லை.”

3. ஏசாயா  (44:6)

நானே முதல், நானே கடைசி; என்னைத் தவிர தேவன் இல்லை”.

4. ஏசாயா   (43:10,11)

எனக்கு முன்னும் தேவன் உண்டாகவில்லை; எனக்குப் பின்னும் இருக்கமாட்டான்; நானே கர்த்தர்; என்னைத் தவிர இரட்சகர் இல்லை.”

5. மாற்கு  (12:29)  இயேசு கூறியது

முதன்மையான கட்டளை; இஸ்ரவேலே கேள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒரே கர்த்தர்”.

6. 1 கொரிந்தியர்   (8:4)

ஒரே தேவனைத் தவிர வேறொரு தேவன் இல்லை”.

7. 1 கொரிந்தியர்  (8:6)

நமக்கோ ஒரே தேவன் பிதாவே; அனைத்தும் அவரிடமிருந்து உண்டாயின”.

8. எபேசியர்   (4:6)

அனைவருக்கும் ஒரே தேவனும் பிதாவும் இருக்கிறார்”.

9. 1 தீமோத்தேயு    (2:5) 

ஒரே தேவன் இருக்கிறார்; தேவனுக்கும் மனிதருக்கும் இடையே ஒரே நடுவரும் இருக்கிறார்”.

10. யாக்கோபு   (8:6)

தேவன் ஒருவரே என்று நீ விசுவாசிக் கிறாய்; அது நல்லது”.

மேலே கண்ட பைபிள் வசனங்கள் கிறிஸ்தவத்தில் ஒரே தேவன் என்ற நம்பிக் கையை வலியுறுத்துகின்றன.

இறைவன்  ஒருவனே  என்பது  குறித்து  தோரா:

தோரா யூத மதத்தின் முதல் ஐந்து நூல்கள்: ஆதியாகமம், யாத்திராகமம், லேவிய ராகமம், எண்ணாகமம், உபாகமம்) முழுவதும் இறைவன் ஒருவனே என்ற கருத்தை வலியுறுத்துகிறது. சில முக்கிய வசனங்கள்:

1.    உபாகமம்  (6:4) மா 

இஸ்ரவேலே கேள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒரே கர்த்தர்

இது யூத மதத்தின் மைய அறிக்கையாகக் கருதப்படுகிறது.

2. உபாகமம்    (4:35)

கர்த்தரே தேவன் என்று உனக்குக் காண் பிக்கப்பட்டது; அவரைத் தவிர வேறு இல்லை”.

3. உபாகமம்   (4:39)

மேலே வானத்திலும் கீழே பூமியிலும் கர்த்தரே தேவன்; வேறு எவரும் இல்லை என்பதை அறிந்துகொள்”.

4. யாத்திராகமம்    (20:2,3)

நான் உன் தேவனாகிய கர்த்தர்…. என்னைத் தவிர உனக்கு வேறு தெய்வங்கள் இருக்கக்கூடாது.”

5. உபாகமம்   (5:7)

என்னைத் தவிர உனக்கு வேறு தெய்வங் கள் இருக்க்கூடாது.”

6. உபாகமம்   (32:39) 

நானே அவன்; என்னோடு வேறு தேவன் இல்லை”. 

7. எண்ணாகமம்  (23:19) 

தேவன்  மனிதன்  அல்ல

தோராவில்இறைவன் ஒருவனேஎன்ற கருத்து முக்கியமாக உபாகமம் 6:4 மூலம் மிக வும் தெளிவாக வலியுறுத்தப்படுகிறது. யூத மார்க்கத்தில் இது தினசரி ஜெபங்களிலும் முக்கிய இடம் பெறுகிறது.

ஒரே இறைவன் தான் என்பது குறித்து அனைத்து இறைநூல்களும் தெளிவாகக் கூறியும் மனிதர்கள் பல கடவுள்களை இணை வைத்து வணங்குபவர்களாகவே உள்ளனர். சிந்தித்து தெளிவு அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

நிச்சயமாக இறைவன் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் இறைவனுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.  (4:48)

———–

மனிதன் ஏன் மண்ணால் படைக்கப்பட்டான்?

 . நஜ்முத்தீன்

அவனே (இறைவனே)  உங்களைக்  களிமண்ணால் படைத்தான்”.   (6:2)

கருப்புக் களிமண்ணில் இருந்து மணம் கலந்த களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தோம்” (15:26)

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்”.   (23:12)

அவன்(இறைவன்) ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுப்படுத்தினான். மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்து துவக்கினான்.”  (32:9)

இவர்களைப்(மனிதர்களை) பிசுபிசுப்பான  களிமண்ணால்  நாம்  படைத்தோம்”.   (37:11)

மனிதனை மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால்  படைத்தான்  (55:14)

இறைவனின் படைப்பில் கோடிக்கணக்கானப் பொருட்கள் இருக்கும்போது மனிதனை ஏன் களிமண்ணால் படைக்க வேண்டும்? 

மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் மனிதனின் படைப்பை மண்ணைக் கொண்டு படைத்ததாகவும்  இறைவன்  கூறியுள்ளான்.

மனிதன் எதிலிருந்த படைக்கப்பட்டான்? என்று சிந்திக்கட்டும்” (86:5) என்பதாகவும் கூறுகிறான்.

ஏன்? சிந்திப்பவர்களுக்கு அதில் ஓர் உண்மை தெரியும் என்பதாலே, மண் என்பது தாவரங்கள வளர்வதற்குத் தேவையான அடிப்படையான ஒரு பொருள். அவ்வாறு இருக்க மனிதனை களிமண்ணால் படைத்தேன் என இறைவன்  கூற  காரணம்  என்ன?

மண்ணில்  பல  வகை  உண்டு :

1. கருப்பு மண் (வளமிக்கது)

2. சிவப்பு மண் (இரும்புச் சத்து அதிகமுள்ளது)

3. பழுப்பு அல்லது மஞ்சள் மண் (கரிமப் பொருள் குறைவாக உள்ளது)

4. மேலும் மண்ணின் அமைப்பிலும் பலவகை  உண்டு.

உதாரணம் : (பு) மணற்பாங்கான மண் : நீர் விரைவாக  வடிந்து விடும்.

கலப்பு மண் : விவசாயத்திற்கு மிகவும் ஏற்றது.

களிமண்: நீரை அதிகமாகத் தக்கவைக்கும்.

பல வகையான மண்ணை இறைவனே படைத்திருந்தாலும் மனிதனை படைக்க களிமண்ணை தேர்ந்தெடுக்க காரணம் நீரை அதிகமாகத் தக்கைக்கும் தன்மை களிமண்ணுக்கு மட்டுமே  உண்டு.

அதாவது மனிதனுக்கு நீர் சத்து அதிக தேவை உள்ளவனாக இருப்பான், இருக்கிறான் என்பதாலே, மேலும் ஈரமான களிமண்ணைப் பயன்படுத்தி ஒரு பொருளை எப்படி வேண்டுமானாலும்  வடிவமைக்க  முடியும்  என்பதாலுமாகும்.

அது மட்டுமல்ல சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்பு மண்ணுக்கு இருப்பது போல் மனிதனிடம் காணப்படவேண்டும் என்பதாலுமாகும். அதாவது கோடை காலம், மழை காலம், வசந்த காலம் போன்ற பல கால நிலைகளிலும் மனிதன் வாழவேண்டும் என்பதாலுமாகும்.

மேற்கண்டவைகள்  எல்லாம்  மேலோட்டமான காரணமாகும்.

முக்கியமான காரணம் :

பணிவை  உணர்த்துவதற்காக.

அதாவது எவ்வளவு உயர்ந்த நிலையை (பதவி, புகழ், பணம்) அடைந்தாலும் ஆரம்பம் மண்ணிலிருந்தே என்பதையும், இறுதியும் மண்ணுக்கே திரும்புவான் என்பதை மறக்க கூடாது என்பதை இறைவன் மறைமுகமாக நினைவூட்டுகிறான்.

சாதாரணமாகத் தோன்றும் மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கியது இறைவனின் பேராற்றலை(வல்லமையை) எடுத்துக்காட்டு வதற்காகவே.

மனிதன் உண்ணும் உணர்வுகள் அனைத்தும் மண்ணிலிருந்தே பெறப்படுகின்றன. எனவே மனிதனின் உடலும் மண்ணுக்கே திரும்ப  செல்கின்றன.

——–

நம்பிக்கையும்…!  நாட்களும்…!

  . நஜ்முத்தீன்

இப்பூமியில் நாம் பிறப்பதற்கு முன், தாயின் கருப்பையை நோக்கி பல மில்லியன் கணக்கான விந்தணுக்கள் பயணிக்கின்றன. அந்த விந்தணுக்களில் பல ஆயிரங்கள் மட்டுமே உயிரோடு நீடித்தன. அவ்வாறு நீடித்ததில் ஒன்றே உயிர் பெற்று இறைவன் நாடியது மட்டுமே மனிதனாக உருவானது. அவ்வாறு உருவாகி மனிதனாக வந்தவர்கள் தான் நாம். அப்போது நமக்குக் கண்களோ, கைகளோ, கால்களோ,  சிந்திக்கும்  திறனோ  எதுவும்  இல்லை. 

இதையே இறைநூல்(குர்ஆன்) கீழ்க்கண்டவாறு  சுட்டிக்காட்டுகிறது.

மனிதன் குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக இல்லாதிருந்த  காலம்  இருந்ததில்லையா?”  (76:1)

இப்போது நமக்குக் கண்கள் உள்ளன; கை கால்கள் உள்ளது; சிந்திக்கும் திறனுள்ள மூளை உள்ளது; குடும்பம், உறவுகள், நண்பர்கள் என வாழ்வதற்கு உறுதுணையான பல அருட்கொடைகள் இறைவனால் அருளப்பட்டன. இருப்பினும் சில சிறு தோல்விகளாலும், சோதனைகளாலும்  மனம்  தளர்வது  ஏன்?

நம்பிக்கையே மனித வாழ்வின் அடிப்படை, குடும்ப உறவுகள், நட்பு, தொழில், விவசாயம், வணிகம் என அனைத்தும் நம்பிக்கையின் மீதே இயங்குகின்றன. நம்பிக்கை என்ற உணர்வு இல்லாமல் இருந்திருந்தால் மனித சமூகம் பெருகியிருக்காது, வளர்ச்சியடையாமல் சிதறிச்  சின்னாபின்னமாகியிருக்கும். நம்பிக்கை என்பதே வாழ்க்கை எனும் பயணத்தில் ஒளிவிளக்கு. அது இல்லை எனில் மனிதன் எளிதில் சோர்ந்துவிடுவான். நம்பிக்கையுடன் செயல்படுபவனே தடைகள் பல இருந்தும்  தடை களைத்  தாண்டி  சாதித்துள்ளனர்.

ஆனால் சமீப காலங்களில் அவநம்பிக்கை அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. யாராவது அன்பு காட்டினாலும் சந்தேகம்; அக்கரை செலுத்தினாலும் சந்தேகம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த அவநம்பிக்கை பல நல்ல மனிதர்களையும், நல்ல பல செயல்களையும்  பாதிக்கக் கூடியது.

நம்பிக்கை என்ற கண்ணாடியை உருவாக்க பல நாட்கள் தேவைப்படும்; ஆனால் அதை உடைக்க சில  நொடிகள் போதும்.

வாழ்க்கைக்கு தேவையான நம்பிக்கைகள் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது ஐந்து. அவைகள்: 

1.  தன்னம்பிக்கை:  தனக்கு இறைவன் தந்த திறமைகள், முயற்சிகள் மீது நம்பிக்கை கொள்வது.

2. இறை நம்பிக்கை : இறைவனின் அருள், கருணை மீது உறுதியான நம்பிக்கை வைத்திருப்பது. இந்த நம்பிக்கைதான் மனிதனுக்கு மன அமைதியையும்,  துணிவையும்  அளிக்கிறது.

3. இறைத்தூதர்கள் மீது நம்பிக்கை : இவர்களே பின்பற்றி வாழ்வதற்கான மிகச் சிறந்த முன்மாதிரி ஆவார்கள். (33:21)

4. சமூக நம்பிக்கை : குடும்பம், உறவுகள், நண்பர்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையுடன்  வாழ்வது.

5. எதிர்கால நம்பிக்கை : இன்றைய நாட்களின் கஷ்டங்கள் நிரந்தரமில்லை, நாளைய நாட்கள் சிறப்பாக அமையும் என்று நம்பிக்கையுடன் வாழ்வது.

மேற்கண்ட  ஐந்து  இணைந்தால்தான்:

1. வாழ்க்கையில்  முன்னேற்றம்  ஏற்படும்.

2. தோல்விகளை தாங்கும் மன வலிமை கிடைக்கும்.

3. மன அழுத்தம் குறைந்து இலக்குகளை அடைவதற்கான  உற்சாகம்  அதிகரிக்கும்.

வரலாற்றில் சாதனை படைத்த பலர் பல சோதனைகளை சந்தித்துள்ளனர். ஆனாலும் நம்பிக்கையை இழக்காததால் சாதித்துள்ளனர். அதுவே அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றன. நம்பிக்கை என்பது வெறும் எதிர்பார்ப்பு அல்ல.  மன  வலிமை.

எவ்வாறு என்றால்; எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில நாட்கள் இன்பம், சில நாட்கள் துன்பம், இரண்டும் கலந்ததே. ஆனாலும் எந்த நாட்களாக இருந்தாலும் மனிதன் முன்னோக்கி செல்ல ஒரு வழிமுறையை இறைவன் இறைநூலில்  கூறுகிறான்.

காலத்தின்  மீது  சத்தியமாக!

மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான், ஆனால் எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயலர்கள் புரிந்துகொண்டும், மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும், பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ  அவர்களைத்  தவிர    (108:1-3)

இறைவன் குறிப்பிடும்காலம்எனும் சொல் கடந்துவிட்ட காலத்தையும் குறிக்கும். கடந்து கொண்டிருக்கும்  காலத்தையும்  குறிக்கும். மனித வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மை விளங்கும். இறை வழிகாட்டுதலை ஏற்றுக்(நம்பிக்கை) கொண்டால் மட்டும் போதாது. அதன்படி ஆக்கப்பூர்வமான செயல்களை செய்த, செய்யக்கூடிய சமுதாயமும் தனி மனிதனும் மட்டுமே சீரும், சிறப்பாக வாழ்ந்தார்கள். மற்றவர் கள் தோல்வியை சந்தித்தனர். இதற்கு வரலாறே சாட்சி. எனவே உங்கள் மீதும் இறைவன் மீதும் நம்பிக்கை கொண்டு நல்ல நாட்கள் கெட்ட நாட்கள் என்று மூட நம்பிக்கையை கை விட்டுவிட்டு, பிறர் மீது குறை சொல்லி நம்பிக்கை இழப்பதை விட்டு  நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள். நேர்மையான வழியில் அல்லாஹ்  அருள் புரிவான்.  இன்ஷா அல்லாஹ்.

 

Previous post:

Next post: