ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்…

in 2026 ஜுலை

ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்

எஸ்.எம்.அமீர், இலங்கை

ஜூன்  2026  தொடர்ச்சி

கலீஃபா உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்பஸராவின் ஆளுநராக முஃகீரா பின் ஷிஅபா(ரழி) அவர்கள் பதவி வகித்தார்கள். அப்போது; அவர்களின் தாய் வழிச் சகோதரர் களான, அபூபக்ரா(ரழி), சப்ல்பின் மஅபத்(ரழி), நாஃபிஉ பின் ஹாரிஸ்(ரழி) ஆகியோர், அன்னாரின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினார்கள். உடனேமுகீராபின் ஷிஅபா (ரழி) அவர்களைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, அபூ மூஸா அல் அஷ்அரீ(ரழி) அவர்களை அந்தப் பதவியில் கலீஃபா உமர்(ரழி) அவர்கள் நியமித்தார்கள். ஆனாலும் முகீரா பின் ஷிஅபா(ரழி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத தனால் குற்றம் சாட்டிப் பழி சுமத்திய, அபூ பக்ரா(ரழி), சப்ல் பின் மஅபத்(ரழி), நாஃபிஉ பின் ஹாரிஸ்(ரழி) ஆகியோருக்குத் தலா எண்பது கசையடிகள் கொடுக்கப்பட்டது. அவர்களதுகண்களும்பொய்தான் சொன்னது. (24:4,5, புகாரி பாகம் 3, பக்கம் 278, பாடம் 8ன் சிறு குறிப்பு ஐந்தாவது) இது போலவே,

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கலந்துகொண்ட பனூ முஸ்தலிக் போர் முடிந்து மதீனாவுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்த போது மதீனாவுக்கு அருகில் உள்ளபைதாஅல்லதுமாஅத்துல் ஜைஷ்எனுமிடத்தில் ஏற்பட்ட கசப்பான அசம்பாவிதத்தின் காரணமாக அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் படையினரை விட்டும் பின்தங்கி தனிமை யிலானார்கள். தற்செயலாக அன்னை ஆயிஷா(ரழி) அவர்களைக் கண்டுவிட்ட உத்தம நபித் தோழரானஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ(ரழி) அவர்கள். அன்னை ஆயிஷா(ரழி) அவர்களை அழைத்துக் கொண்டு நடுப்பகல் நேரத்தில் படையினரை வந்தடைந்தார்கள். அவர்கள் இருவரும் தாமதமாக வந்து சேர்ந்ததைக் கண்ட சிலகண்கள்பொய்யுரைத்தன. புனைந்து அவதூறைப் பரப்பின, அதன் முக்கிய பங்கு வகித்தவர்கள் நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் மற்றும் முஸ்லிம்களில், ஹஸ்ஸான் பின் ஸாபித்(ரழி), மிஸ்தஹ் பின் உஸாஸா(ரழி), ஹம்னா பின்த் ஜஹ்ஸ்(ரழி), ஹம்னா(ரழி) ஆகியோர் ஆகும். அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் மீது திட்டமிட்டபடி  அவதூறு  பரப்பியதனால்,

மதீனாவுக்கு வந்தடைந்ததும் ஒரு மாத காலமாக நோயுற்றார்கள்.

நோய்வாய்ப்பட்டிருந்த போது நோயுறும் காலத்தில் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்து காணமுடியவில்லை அதனால்,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது போக்கில்  சந்தேகம்  ஏற்பட்டது.

ஒரு மாதத்திற்கும் பிறகுதான்மிஸ்தஹ்‘(ரழி) அவர்களின் தாயாரான உம்முமிஸ்தஹ்‘(ரழி) அவர்கள் தன் மீது சொல்லப்பட்ட அபாண்டம் குறித்து சொன்ன தகவலறிந்து மேலும் நோய் அதிகரித்துவிட்டது  அதனால்,

தாய்வீட்டுக்குச் சென்று தன்னைக் குறித்த அவதூறு வதந்தி பற்றி அறிந்தவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் அனுமதி  கோரினார்கள்.

தாயிடமும் அதே செய்தியை அறிந்து இரவு பகலாகத் தாய்வீட்டில் இருந்தவாறே  அழுதார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தன்னை பிரித்துவிடுவது குறித்து அலீபின் அபீதாலிப்(ரழி), உஸாமா பின் ஸைத்(ரழி) அவர்களிடம் ஆலோசனை கேட்கின்றார்கள் என்ற தகவலும் கிடைக்கப் பெற்றார்கள். அதனால் மேலும்  நொந்து  போனார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பணிப் பெண்ணானபரீரா‘(ரழி) அவர்களையும் அழைத்து அன்னை ஆயிஷா(ரழி) குறித்து விசாரிக்கின்றார்கள் என்ற தகவலும்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு, அழகிலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அன்பிலும் என்றும் போட்டியாக இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது மற்றுமொரு மனைவியரான ஸைனத் பின்த் ஜஹ்ஷ்(ரழி) அவர்களிடமும், அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுடைய கற்பொழுக்கம் குறித்து விசாரிக்கின்றார்கள், என்ற தகவலும் கிடைக்கப் பெற்றார்கள்.  அத்துடன்;

தமது சகோதரி ஸைனத் பின்த் ஜஹ்ஷ்(ரழி) அவர்களுக்காக அவர்களின் சகோதரி ஹம்னா(ரழி), அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு எதிராக அவதூறு பேசிக்கொண்டு அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுடன் போரிடலானார். இந்தப் பிரச்சினையால், இஸ்லாத்தின் பின்னர் ஒற்றுமையாக இருந்தஅவ்ஸ்‘ “கஸ்ராஜ்ஆகிய இரு குலத்தாரும் இது விசயத்தில் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து சண்டையிடத்  தயாராகி  விட்டார்கள். தாய்வீட்டில் இரண்டு நாட்களாக உறக்கமும் வரவில்லை கண்ணீரும் நிற்க வில்லை ஈரல் பிளந்துவிடுமோ என் றெண்ணும் அளவிற்கு அழுதுகொண்டே  இருந்தார்கள்.

தாய்வீட்டிற்கு வந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு பலவாறாக எனக்குச் செய்திகள் வந்துள்ளது நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான் நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்பிவிடு என்று கூறினார்கள். இது அவர்களுக்கு மிகக் கடுமையான மன வேதனையை ஏற்படுத்தியது.  அப்போது;

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதற்கு; தனது சார்பாகப் பதில் கூறுங்கள் என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் வேண்டிக்கொண்டபோது அதற்காகத் தந்தை அபூபக்கர்(ரழி), அவர்களும் பதில் கூறத் தயாராகவில்லை.

தாயார் உம்மு ரூமானும் பதில் கூறத் தயாராகவில்லை.

உண்மையைத் தீர அறிந்துகொள்வதற்கான வஹியும் நின்றுபோன காலமாக அது  இருந்தது. “பலவீனமானவளானதனது விசயம் குறித்து வானத்திலிருந்து வஹி வரும் என்ற நம்பிக்கை அற்றுப்போய் பேசா மடந்தையானார்கள். (சுருக்கம்)

அப்போது தான் ஏழு வானங்களையும் கடந்து; ஆயிஷாவின் மீது அவதூறு கற்பித்தவர் கள் உங்களில் ஒரு குழுவினர் தான் என்று தொடங்கும். (24:11-20) வரையான பத்து வசனங்களை அருளினான். “பலவீனமானபோதைப் பெண்ணின் களங்கத்தை ஏக இறைவன் ஏழு வானங்களையும் கடந்து துடைத்தெறிந்தான் அழியாத ஏட்டிலும் எழுதச் செய்தான். (அன்னை ஆயிஷா(ரழி) இப்னு ஷாஹிப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்), உர்வாபின் ஸுபைர்(ரஹ்), சயீத் பின் முஸய்யப்(ரஹ்) அல்கமாபின் வக்காஸ்(ரஹ்) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத்(ரஹ்), புகாரி: 4141-4146, 4607, 4608, 4691, 4749-4758, 5164, 5882, 334, 336, 3388, 3672, 3773, 2661, 4025, 2879, 6477, 6478, 2766, 6662, 6663, 6679, 6844, 4845, 6857, 7500, 7545, 4583, 7369, 7370, 6621-6623, முஸ்லிம் 5349, 4901, 5711, 5712, 145, திர்மிதி, அபூதாவூத், இப்னு மாஜா, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்கம் 278-312) மேலும் அவதூறுக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததனால், ஹஸ்ஸான் பின் ஸாபித்(ரழி), மிஸ்தஹ் பின் உஸாஸா(ரழி), ஹம்னா பின்த் ஜஹ்ஸ்(ரழி), ஹம்னா(ரழி) ஆகியோருக்குத் தலா எண்பது கசையடிகள் வழங்கப்பட்டன. காரணம்அவர்களுடைய கண்களும் போய் சொன்னது அவர்களுடைய பார்வைகளும் பொய் சொன்னது‘.

நபித்தோழர்களானாலும் அவர்களது கண்களும்  பொய்  சொல்லும் :

ஸஃபிய்யா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாப்) இருந்தார்கள் அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம்அவசரப்படாதே!’ நானும் உன்னோடு வருகிறேன் என்றார்கள். எனது அறை உஸாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, “இங்கே வாருங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!’ எனக் கூறினார்கள். அவ்விரு வரும்ஸுப்ஹானல்லாஹ்இறைத்தூதர் அவர்களே!’ (நாங்கள் உங்கள் மீது சந்தேகப்படுபவர்களா?) என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “நிச்சயமாக(க் கண்கள் பொய் சொல்லிவிடும் அத்துடன்) ஷைத்தான் மனிதனின் ரத்தநாளங்களில் (எல்லாம்) ஓடுகின்றான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிட்டான் என நான் அஞ்சினேன்என்று தெளிவுபடுத்தினார்கள். (புகாரி 2038, 2035, 3281, முஸ்லிம், அபூதாவூத், இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், தாரமி, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 1, பக்கம் 590, 591)

Previous post:

Next post: