ஐயமும்! தெளிவும்!!

in 2009 ஏப்ரல்,ஐயமும்! தெளிவும்!!

 ஐயமும்! தெளிவும்!!
 
  ஐயம் : வெட்கப்படுவதால் சில காரியங்களின் பலனை அடைய முடிவதில்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தில் வெட்கப்படுவது நல்லது என்கிறார்களே இத சரிதானா? ஆதாரங்களுடன் விளக்கவும், க.இப்ராஹிம், பேரணாம்பட்டு.
 
 தெளிவு : கூச்ச சுபாவனத்தினால் வெட்கப்படுபவர்கள் காரியங்களில் வெற்றி பெறுவது இயலாத காரியம். 4 பேர் இருக்கின்ற இடத்திற்குச் சென்று பேசக்கூச்சப்படுதல் கூடாது. நியாயமான தேவைகளைப் பெற உரிய அலுவலகம் சென்று மார்க்கத்தை எடுத்து வைக்கவும் கூச்சப்படக்கூடாது. மொத்தத்தில் நல்ல காரியங்கள் செய்வதற்கு வெட்கப்படக்கூடாது.
 
 ஆனால் பாவமான காரியங்களைச் செய்வதற்குக் கண்டிப்பாக வெட்கப்பட்டே ஆக வேண்டும். பாவச் செயல்களை எவை என்பன பற்றி, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மிக அழகாக கூறியிருப்பதைப் பாருங்கள்.
 
 
 ‘எதைச் செய்யும் பொழுது உள்ளத்தில் (செய்யும் ஆசை: செய்து விட்டால் அவர்களை அல்லாஹ்விடம் பாவியாகிவிடுமோ என்ற) குழப்பமும், கூடாதே என்ற எண்ணமும் ஏற்படுகிறதோ அது பாவச் செயலாகும்’ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தனர். அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சிம்ஆன்(ரழி), நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹ்மத்
 
 
 வெட்கப்படுவதன் சிறப்பு குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதையும் சுவனத்தில் கொள்Nவுhம்.
 
 
 ‘ஈமான் என்பது 60 அல்லது 70க்கும் மேற்பட்ட வாசல்களைக் கொண்டதாகும். அதில் மிகவும் கடைசி நிலையில் உள்ளது. வழியில் கிடக்கும் தொல்லை தருபவற்றை அகற்றுவதாகும். அடிபணிவதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்ற கொள்கை அதில் உயர்ந்த நிலையாகும். வெட்கப்படுவதும் ஈமானில் ஒரு பகுதி தான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம், இப்னு மாஜா.
 
 
 எனவே இஸ்லாம் மார்க்கத்தில், ‘வெட்கப்படுவது நல்லது’ எனக் கூறப்பட்டது பாவமான காரியங்களை செய்வதற்கே என்பதைப் புரிந்த கொள்வோமாக!
 
 
 ஐயம் : ஜோதிடர்கள் கூறும் சில செய்திகள் நடக்கின்றன. பல செய்திகள் நடப்பதில்லை நடக்கக்கூடிய செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகவாவது ஜோதிடரை அணுகலாம் அல்லவா? ஆனால் ‘உங்கள் இஸ்லாம்’ அதைத் தடுப்பது ஏன்?
 ளு. தாமோதரன், மதுரை.
 
 
 தெளிவு : எதிர்காலத்தில் நடைபெறவிருக்கின்ற விஷயங்களில் ஜோதிடம் கூறுவதில் உண்மையும் இருக்கிறது பொய்யும் இருக்கிறது. உண்மையைத் தெரிந்து கொள்வதற்காகவாவது ஜோதிடம் பார்க்கலாம் என்பதே தங்களின் வாதம்.
 
 
 எதிர்காலத்தில் நடைபெறவிருப்பதாக ஜோதிடர் கூறும் விஷயங்களில், உண்மை எது என்பதை, விஷயம் நடைபெறுவதற்கு முன்பாகவே உங்களால் எப்படி அறிந்து கொள்ள முடியும்? தங்களால் அறிந்து கொள்ள முடியும் என்ற ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொள்வோம். அதன்பின் என்ன நடக்கும் தெரியுமா?
 
 
 நடைபெறவிருக்கின்ற விஷயம் துக்ககரமானதாக, வேதனைத் தரக்கூடியதாக, அமங்களமானதாக இருந்தால், உங்கள் நிலை என்னவாகும் என்பதை யோசியுங்கள். அந்த விஷயம் நடந்த பின் துக்கம் அடையக்கூடிய தாங்கள், நடப்பதற்கு முன்பாகவே அதாவது ஜோதிடனிடமிருந்து தெரிந்து கொண்ட உடனேயே துக்கப்பட, ஆரம்பித்து விடுவீர்கள். வேதனைப்படுவீர்கள். சரியாக சாப்பிட மாட்டீர்கள், பணிகளில் கவனம் செல்லாது: உறக்கத்தைத் தொலைந்து விடுவீர்கள்: குடும்பத்தாரிடம் எரிந்து விழுவீர்கள்: வேலைகளைச் சரிவரச் செய்யாததால் கெட்ட பெயர் ஏற்படும்: மன உளைச்சலுக்கு உள்ளாகி விடுவீர்கள். இறுதியில் மனநோயாளிகாகவம் தாங்கள் ஆகிவிடக்கூடும். உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் இத்தனைச் செயல்களையும் தவிர்த்துக் கொள்வதற்காகவோ அல்லது எப்படிப்பட்ட துக்கமானாலும் தாங்கிக் கொள்ளக் கூடியவராக தாங்கள் இருந்தாலோ, நீங்கள் அடுத்து என்ன செய்ய முயல்வீர்கள் தெரியுமா? நடைபெறவிருக்கின்ற அந்த விஷயத்தை அதாவது துக்கமான நிகழ்ச்சியை நடைபெறாமல் செய்து விட முட்டாள்தனமாக முயற்சிப்பீர்கள். அந்நிகழ்ச்சியை தங்களால் தடுத்து நிறத்திவிட முடியுமா? அதுவும் முடியாது! ஏனென்றால், அது இறைவன் விதித்ததல்லவா?
 
 
 மொத்தத்தில் தாங்கள் கையாலாகாமல் நடைபிணமாகி விடுவீர்கள்! பயப்படாதீர்கள்! ஜோதிடனை அணுகினால் அவன் கூறும் நிகழ்ச்சி நடைபெறுகிறதோ இல்லையோ, மேற்கூறியவைகள் நடைபெற ஆரம்பித்து விடும்.
 
 
 எனவே ஜோதிடம் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! ஜோதிடம் கூறுவதில் சில உண்மைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். பத்து விஷயங்கள் சொன்னால், அதிர்ஷ்டவசமாக இரண்டு விஷயங்கள் கூடவா நடக்காமல் போகும் என்ற எதிர்பார்ப்புடன் ஜோதிpடன் கூறுவான் என தர்க்க ரீதியாக பதில் தந்து விட முடியும். ஆனால் எதிர்காலத்தில் நடைபெற இருப்பதில் நடக்கவிருக்கும் ஒன்றிரண்டை ஜோதிடன் எப்படிச் சொல்கிறான் என்பதையும் இஸ்லாம் தௌ;ளத் தெளிவாகக் கூறுவதைப் பாருங்கள்.
 
 
 ‘இறைவன் வானுலகில் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி முடிவெடுத்தவுடன், வழுக்குப் பாறையில் விழுந்த இரும்பு வளையல் போல, வானவர்கள் தங்கள் சிறகுகளை பணிவுடன் அடிப்பார்கள். அவர்களின் திடுக்கம் நீங்கிய பின் (தங்களுக்குள்) உங்கள் இறைவன் கூறியது என்ன என்று கேட்டுக்கொண்டு ‘உண்மையே கூறினான்’ எனப் பதிலும் கூறிக் கொள்வார்கள். (ஷைத்தான்கள்) சிலருக்கு மேல் சிலராக அதனை (ஒட்டுக்) கேட்க முயற்சிப்பார்கள். அவற்றில் ஓரிரு வார்த்தையை செவியுறவும் செய்வார்கள். அதைத் தங்களுக்குக் கீழே உள்ளவர் களுக்கு அனுப்புவார்கள். சில சமயங்களில் கீழுள்ளவர்களுக்கு அவர்கள் தகவல் அனுப்புவதற்கு முன், தீப்பந்தமும் அவர்களைத் தாக்கும் தாங்கள் ஒட்டுக் கேட்ட செய்தியுடன் 100 பொய்களைக் கலந்து, சூனியக்காரர்கள், ஜோதிடர்களிடம் சமர்ப்பிப்;பார்கள். அவற்றில் வானிலிருந்து செவியுற்ற ஒரு வார்த்தை மட்டும் மெய்யாக நடந்தேறும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரழி). நூல்கள் : புகாரீ, முஸ்லிம் சுனன் இப்னு மாஜா.
 
 
 ‘உங்கள் இஸ்லாம்’ என்று தங்கள் ஐயத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். குறிப்பிட்ட சாராரின் பூர்வீக சொத்தல்ல இஸ்லாம். உலகங்களின் ஒரே இறைவன் இறக்கி அருள்பரிந்துள்ள வழிகாட்டலான புனித குர்ஆன் முஸ்லிம்களுக்கான நெறிநூல் என்று, முஸ்லிம்களிலுள்ள ஒரு சில அறிவிலிகள் கூறிக்கொண்டிருப்பதன் விளைவாகத்தான் தாங்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளீர்கள். உலகங்களுக்கெல்லாம் ஒரே இறைவன் தெரிவிப்பதைப் பாருங்கள்.
 
 
 ‘(இந்த குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை’ அல்குர்ஆன் 6:90
 
 
 ‘இஸ்லாம்’ என்ற அரபி மொழி வார்த்தைக்கு ‘(ஒரே இறைவனுக்கு) அடிபணிதல், கீழ்ப்படிதல்’ போன்ற பொருளும், ‘சமாதானம்’ என்ற பொருளும் உண்டு. எனவே, ஒரே இறைவனுக்கு மட்டும் தன்னை முழுமையாக அடிபணியச் செய்து இணங்கி நடப்பவன் சமாதானத்தை அடைவான் என்பதே இஸ்லாம் என்பதன் பொருள். அப்படி வாழ்பவர் ‘முஸ்லிம்’ ஆவார். எனவே இஸ்லாத்திற்குத் தேவை அதைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே.
 
 
 அனைத்தையும் படைத்தவன் நிச்சயமாக ஒரே ஒரு இறைவனாகத்தான் இருக்க முடியும். அவன் வழிகாட்டிய மார்க்கம் எது என்பதை அறிய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். அதை அறிய முயற்சித்திருப்பீர்களேயானால், உங்கள் இஸ்லாம் என்று கூறியிருக்கமாட்டீர்கள்.
 
 
 ஐயம் : கெட்டவர்கள் செய்து கொண்டிருக்கும் சதக்காவை அல்லாஹ் ஏற்பதில்லை என்று கூறுவது உண்மையா?
 K.S.அர்ஷத் அலி, ரியாத், சவூதி அரபியா
 
 
 தெளிவு : கெட்டவர்கள் என்று தாங்கள் குறிப்பிடுவது எந்தச் செயல்களின் அடிப்படையில் என்ற எமக்குத் தெரியவில்லை. இக்கருத்தில் அமைந்த ஹதீஸ் ஒன்றைத் தருகிறோம். பார்வையிடுங்கள்.
 
 
 ‘மோசடிக்காரனிடமிருந்து தர்மத்தையும், ஒழுவின்றி தொழுபவனின் தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உலமா இப்னு உமைக்(ரழி), நூல் : முஸ்லிம். அஹமது அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, தப்ரானி, இப்னு மாஜா
 
 
 ஐயம் : எனக்கு அடிக்கடி இரத்தப் போக்கு ஏற்பட்டு விடுகிறது. அது போன்ற சமயங்களில் எப்போதேனும் மாதவிடாய் காலமும் வந்து மாதவிடாயும் ஏற்பட்டு விடுகிறது. இதனால் மாதவிடாய் நின்று விடுவதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதுபோன்ற நேரங்களில் தொழகையை எப்போது தொழுவது என்று தெரியவில்லை. நான் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவன். இதைப்பற்றி 2 இஸ்லாமிய பத்திரிக்கைகளுக்கு எழுதியதில் சில மாதங்களாகியும் எனக்கு பதில் கிடைக்கவில்லை. அந்நஜாத் பத்திரிகையாவது எனது பிரச்சனைக்குத் தீர்வைத் தரமுடியுமா?
 R.A.நஷ்ரீத் பானு, கஃபெ.
 A.ரியாஸ் அஹமது, சென்னை-1.
 
 
 தெளிவு : வரிசை முறையில் பதிலளிக்க எம்மிடம் பல கேள்விகள் முன்னுரிமை பெற்றிருப்பினும், தங்கள் கேள்வியின் முக்கியத்துவம் கருதி பதிலளிக்கிறோம்.
 
 
 முதலில், அடிக்கடி ஏற்படும் இரத்தப் போக்கிற்காக சரியான மருத்துவரிடம் சிகிச்சை பெறுங்கள். தங்கள் பிரச்சனைக்கு இறைத்தூதர் கூறியுள்ள தீர்வை அந்நஜாத்தில் இடம் பெறச் செய்கின்றோம். அதற்கும் முன்பாக தங்களிடம் மனம் திறந்து சிறிது நேரம் மார்க்கம் பேச விரும்புகிறோம்.
 
 
 மார்க்கத்தை அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ள தொழுகையாளியான தாங்கள், அல்லாஹ்வையும், அவன் இறக்கி அருள் புரிந்துள்ள நேர்வழிகாட்டியான அல்குர்ஆனையும், அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களையும், அந்த இறுதித் தூதரின் போதனைகளான ஹதீஸ்களையும் முழுமையாக நம்பவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
 
 
 நம்பிக்கை(ஈமான்) கொண்டவர்கள் தங்களை முஸ்லிம் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 41:33) என்று அல்லாஹ் பரிசுத்த குர்ஆனில் கட்டளையிட்ட பின்பும், தங்களை ‘ஹனஃபீ’ என்று கூறுகிறீர்களே…?
 
 
 தங்களுக்கு அல்லாஹ்வின் மீதும் குர்ஆனின்மீதும் நம்பிக்கையில்லையா?
 
 
 அல்லாஹ்(ஜல்) தனது இறுதித் தூதரின் மூலமாக அறிவித்துத் தந்திருக்கின்ற மார்க்கத்தில் ஹனஃபீ, ஷாஃபிஈ, மாலிகி, ஹன்பலீ, என்ற மத்ஹபுகளை அறிமுகப்படுத்தவில்லையே. நபி(ஸல்) அவர்களும், அவர்களுடைய எண்ணற்ற சஹாபாக்கள் எவருமே தம்மை ஹனஃபீ என்றோ, ஷாஃபிஈ என்றோ, மாலிகி என்Nறூ, ஹன்பலீ என்றோ கூறிக்கொள்ளவில்லையே. இறுதித் தூதர்(ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு, எண்ணற்ற சஹாபாக்கள், தாபியீன்கள், தபவுதாபியீன்கள், இமாம்கள் அகியோரின் கால கட்டத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப் பட்ட இந்த மத்ஹபுகளில் தன்னை இணைத்துக் கொள்ள, உண்மை முஸ்லிம் எவ்வாறு முன் வருவார்? அப்படி இறைக்கட்டளையின் பேரில் மார்க்கத்தில் ஒன்றை அறிமுகப்படுத்த நபிமார்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அப்படியிருக்க 4 மத்ஹபுகளை அறிமுகப்படுத்தியவர்கள் நபிமார்களா? நபிமார்கள்தான் என்றால், முஹம்மது நபி(ஸல்) அவர்களை அறுதித் தூதர் என்று தாங்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லையா?
 
 
 இந்த 4 மத்ஹபுகளைப்பற்றி சொல்லப்படாத இறைத்தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் தாங்கள் முழு நம்பிக்கை கொள்ளவில்லையா?
 
 
 மார்க்கத்தின் தலைவர்களாக தாங்கள் எண்ணிக் கொண்டிருக்கும் ஹழ்ரத்மார்களையோ அல்லது வேறெந்த எப்பேர்ப்பட்ட பெரியார்களையோ நம்பிக் கொண்டு, குர்ஆன், ஹதீஸ் காட்டாத ஒன்றில் தாங்கள் ஹனஃபியாக இருப்பீர்களேயானால், நன்றாக அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்களெல்லாம் நிங்கள் சுவர்க்கம் செல்லும் வழியைக் காட்டவில்லை. மாறாக நரகம் செல்லும் வழியையே காண்பித்துள்ளார்கள் என்பதை அல்குர்ஆன் 33ஆம் அத்தியாயத்தின் 66,67,68 ஆகிய 3 வசனங்களைப் பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதே அத்தியாயத்தின் 21ஆம் வசனத்தில் நபி(ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றும்படி படைத்தவன் கட்டளையிட்டிருப்பதையும் பார்வையிட்டு தெளிவு பெறுங்கள்.
 
 
 தாங்கள் படும் வேதனையிலும் தொழுகையைப் பற்றிக் கவலைப்படும் சகோதரியே! தங்களுக்கேற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தரும் அழகிய தீர்வைக் கண்ணுறுங்கள்.
 
 
 ‘ஃபாத்திமா பின்து அபீஹுபைஷ்(ரழி) அவர்கள் இரத்தப் போக்கு ஏற்பட்டவர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்களிடம் வந்து தமக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றிக் கேட்சிறார்கள்) அவர்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள். ‘அது மாதவிடாயாக இருந்தால், தெரிந்து கொள்ளக்கூடிய கரிய நிறத்தில் அமைந்திருக்கும். அந்தச் சந்தர்ப்பத்தில் தொழுகையை விட்டுவிடுவீராக. அது அல்லாத மற்ற இரத்தமாக இருந்தால், ஒளூ செய்து விட்டுத் தொழுவீராக’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஃபாத்திமா பின்நு ஆபீஹு பைஷ்(ரழி), நூல்: நஸயீ
 
 
 ‘ஃபாத்திமா பின்நு அபீஹுபைஷ்(ரழி) அவர்களுக்கு இரத்தப் போக்கு எற்பட்டது. ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விடாத உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. தொழுகையை விட்டுவிடலாமா? என்று அவர் நபி(ஸல்) அவர்கனிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அது ஒரு நோயேயாகும்: அது மாதவிடாய் அல்ல. எனவே மாதவிடாய் ஏற்பட்டால் தொழுகையை விட்டு விடு, அது நின்றுவிட்டதும் இரத்தத்தின் சுவடுகளைக் கழுவி விட்டு ஒளூ செய்த கொள்’ என்று கூறினார்கள். ‘அப்படியானால் (மாதவிடாய் நின்று விட்டால்) குளிப்பது அவசியம் இல்லையா? என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், (குளிக்க வேண்டும் என்பது) எவருக்கும் சந்Nதுகம் இல்லாத ஒரு விஷயம் அல்லவா? என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்நு அபீஹுபைஷ்(ரழி), நூல் : நஸயீ.
 
 
 ‘அல்லாஹ்வின் தூதரே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. நான் தொழுகையை விட்டு விடவா?’ என அபூஹுபைஸ் அவர்களின் மகள் ஃபாத்திமா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அது ஒரு நோய்தான் மாதவிடாய் அல்ல. மாதவிடாய் வந்தால் தொழுகையி விட்டு விடு. மாதவிடாய் (கால) அளவு முடிந்து விட்டால் உன்னிடமிருந்துள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்தி தொழுது கொள்’ என கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி). நூல்கள் புகாரீ: முஸ்லிம், அபூதாவூத் திர்மிதீ, நஸயீ, முஅத்தா மாதவிடாய் கால அளவை இரத்தப் போக்குள்ளவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தை கீழேயுள்ள ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
 
 
 ‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒர பெண் இரத்தப் போக்குடையவராக இருந்தார். அவருக்காக நான் நபி(ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். இந்நிலை ஏற்படும் முந்தைய மாதத்தில் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்ட (நாட்களின்) இரவு, பகலை எண்ணட்டும் (நடப்பு) மாதத்தில் அந்த (நாட்களின்) அளவு வந்ததும் தொழகையை விட்டு வ்டட்டும். அந்த நாள் சென்றதும் குளிக்கட்டும். பின்பு துணியால் இறுகக் கட்டிக் கொள்ளட்டும். பின்பு தொழட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை உம்முசலமா(ரழி), நூல்கள்: அபூதாவூத், நஸயீ, முஅத்தா
 
 
 இரத்தப் போக்கு மட்டும் இருக்கும் நாட்களில் ஒளூ செய்து விட்டுத் தொழலாம். இரத்தப் போக்குடைய நாட்களில் இரத்தம் அதன் நிறத்திலல்லாமல், தெரிந்து கொள்ளக்கூடிய கரிய நிறத்தில் இருந்தால் மாதவிடாயும் அப்போது ஏற்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம். இப்படி நிகழும் போது தொழுகையை விட்டுவிட வேண்டும். இது ஒரு வழி: அடுத்தபடி, இரத்தப் போக்குடைய நாட்களில் சென்று முடிந்த முந்தைய மாதத்தின் மாதவிடாய் ஆமை;பித்து முடிவுற்ற நாட்களின் இரவு பகல்களை கணக்கிட்டு, அதே அளவு இரவு பகல் எண்ணிக்கையைக் கணக்கிட்டு நடப்ப மாதத்தில் கையாண்டு, இறுதியில் குளித்து விட்டு துணியால் இறுகக கட்டிக் கொண்டு தொழுகையை ஆரம்பித்து விடவேண்டும்.
 
 
 மேலே குறிப்பிட்ட தீர்வு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குக் கொடுத்த தீர்வு, தங்களுக்கு இறைத்தூதரின் போதனைகளில் நம்பிக்கை இல்லாவிட்டால், தாங்கள் மதித்துப் போற்றும் ஹஜ்ரத்களை அணுகுங்கள். விளையாட்டுத்தனமாக தீர்ப்புகள் கிடைக்கலாம்.
 
 
 ஏனெனில் : தொழுகையில் அத்தஹிய்யத்து ஓதி முடித்து ஸலாம் கொடுப்பதற்குப் பதிலாக, வேண்டுமென்றே பின் துவாரத்தின் வழியாக காற்று விட்டு தொழுகையை முடிப்பது கூடும். ஸலாம் கொடுக்க வேண்டியதில்லை’ என்று ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல்களான துர்ருல் முக்தார், ஹிதாயா, சுன்ஸு, குதூரி, ஷரஹுல் விகாயா ஆகியவைகள் கூறுகின்றன.
 
 
 அழகாக ஸலாம் கொடுத்து தொழுகையை முடித்துக் கொள்வது நபிவழி அசிங்கமாக (வேண்டுமென்றே) குசு விட்டு தொழுகையை முடித்தக் கொள்வது மத்ஹபு வழி!
 
 
 காற்றுப் பிரிந்தால் தொழுகை முறிந்து விடும் என்ற கருத்திலுள்ள நபிமொழியை நெஞ்சழுத்தமாக கேலி செய்யும் சட்டங்கள்தான் மத்ஹபுகளின் சட்டங்கள், ஹஜ்ரத்மார்களை தங்களின் பிரச்சனைக்காக அணுகினால், மத்ஹபு அடிப்படையில் இது போன்ற கிறுக்குத்தனமான பதில்களைத் தந்தாலும் தரலாம்.
 
 
 இப்போது சொல்லுங்கள்! தாங்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் பின்பற்றி வாழும் முஸ்லிமா? அல்லது அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தராத மத்ஹபைப் பின்பற்றி வாழும் ஹனஃபியா?

Previous post:

Next post: