விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2009 ஏப்ரல்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்:

உடல் தானம் கூடும் என்று சென்ற (மார்ச்) இதழில் குறிப்பிட்டிருந்தீர்கள்.

மூன்று காரியங்கள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டியதில்லை.

1. நேரம் வந்ததும் தொழுது விடுவது.

2. இறந்ததும் உடனே அடக்கம் செய்வது என்பது நபிமொழி

இறந்தவரின் எலும்பை முறிக்காதீர். ஏனெனில் அவர் உயிர் உள்ளவர் போன்று இருக்கிறார் என்பதும் நபி மொழி

நல்ல மய்யித் ஜனாஸா தன்னை தன் இருப்பிடத்திற்கு விரைவில் கொண்டு செல்லுங்கள் என்றும் கூறும் நபிமொழி.

இப்படி பல நபிமொழி இருக்க உடல் தானம் செய்யும் போது, பல மணி நேரம் உடல் கூறு போட்டு வேதனை செய்யப்படுவதுபோல் ஆகாதா? மழுப்பாமல் சரியான ஆதாரம் தருக். உம்மு நிதாஈ சென்னனை 23

விளக்கம் : சென்ற இதழில் ஐயமும் தெளிவும் பகுதியில் இடம் பெற்றதை மீண்டும் கவனமாகப் படித்துப் பாருங்கள். மறுமையில் நன்மையைப் பெற்றுத்தரும் நற்காரியங்கள் அல்லாஹ்வாலும், அவனது தூதராலும் ஏவப்பட்டிருக்க வேண்டும். இவ்வுலகில் நற்பலனைப் பெற்றுத் தரும் காரியங்களில் குர்ஆனிலோ ஹதீஸிலோ தடை இருந்தால் மட்டுமே அதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். மார்க்கம் இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்ற நிலையில் மிகத் தெளிவாக இருக்கிறது. மார்க்கத்தில் மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இந்தப் புரோகித மவ்லவிகளுக்கு அணுவளவும் இல்லை என்பதையும் பல முறை தெளிவுபடுத்தியுள்ளோம்.

5:3 இறைக் கட்டளைப்படி பரிபூரணம் அடைந்து முற்றுப் பெற்றுவிட்ட மார்க்கத்தில், மறுமை வெற்றிக்காக குர்ஆன், ஹதீஸில் இல்லாத – வழிகாட்டாத தர்கா, தரிக்கா, மத்ஹபு, இயக்கம், அமைப்பு என விதவிதமாகக் கற்பனை செய்து 33:36 இறைக் கட்டளைக்கு முரணாக பெருத்த வழிகேட்டில் இட்டுச் செல்லும் புரோகித மவ்லவிகளின் சுய விளக்கங்களை நீங்கள் ஏற்று நடந்தால் வழி தவறவே நேரிடும். அப்படிப்பட்ட புரோகித மவ்லவிகளை உடல் உறுப்பு தானத்தை ஹராம் – கூடாது எனக் கூறி மக்களை வழிகெடுப்பார்கள்.

இறந்ததும் உடனே அடக்கம் செய்ய வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒருவர் இறந்த ஓரிரு மணிக்குள் உறுப்புக்கள் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டால் மட்டுமே பலன் தரும். அதிக நேரம் ஆனால் அந்த உறுப்பகளும் இறந்துவிடும். அவற்றை பிறருக்குப் பயன்படுத்த முடியாது. எனவே உடல் உறுப்புகளின் தானத்தால் கால விரயம் ஒருபோதும் ஆகாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து நியாயமான காரணம் இன்றி இறந்த உடலை சிதைப்பதைத்தான் மார்க்கம் தடை செய்கிறது. இன்றைய நவீன மருத்துவத்தில் உயிருடனேயே உடலைக் கீரி பலவித சிகிச்சைகள் அளிக்கப்படுவதை அறிகிறோம். விபத்தில் முறிந்த எலும்புகளில் துவாரமிட்டு பட்டை பொருத்தப்படுகிறது. பெரும்பாலான பிரசவங்களே இன்று அறுவை சிகிச்சை மூலமே இடம் பெறுகிறது. அதல்லாமல் விபத்து சந்தேக மரணம் போன்றவை இடம் பெறும்போது போஸ்ட்மார்ட்டம் மூலம் உடல் அறுத்துச் சிதைக்கப்படுகிறது. காலதாமமும் ஏற்படுகிறது. இவற்றைத் தவிர்க்க முடியுமா?

பிறருக்குப் பயன்படும் உறுப்புகளை இறந்த உடலிலிருந்து எடுக்க இந்த அளவு கூட காலதாமதம் ஆவதில்லை. இறந்த உடல் உறுப்புக்கள் அகற்றப்பட்டு விடும். எனவே அடக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மேலும் அந்த உறுப்புக்களை அகற்றும்போது தேவையற்ற எலும்பு முறிவுகளுக்கும் இடமே இல்லை.

ஒருவர் இறந்துவிட்டால் பிரேதத்தை குளிப்பாட்டி அதற்காக தொழுகை நடத்தி அடக்க வேண்டும். அடக்கப்பட்ட உடல் உக்கி அழிந்து மண்ணோடு மண்ணாகி விடும். கடலில் இறக்கப்படும் உடல் மீன்களுக்கு இihயாகலாம். மறுமையில் இந்த உடலுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. இறந்தவரின் உடல் உறுப்புக்களை அகற்றி விட்டால், அவருக்காக தொழுகை நடத்தக் கூடாது என்பது பொருள் அல்ல. உடல் உறுப்புக்களை தானம் செய்யலாமா? என்ற கேள்விக்கு மார்க்கத்தில் தடை இல்லை என்பதற்கே ஆதாரங்களைத் தந்துள்ளோம். மற்றபடி முஸ்லிம்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்வது கடமை என்று நாம் கூறவில்லை.

இபப்டித்தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளியாகும்போது கிறிஸ்தவ புரோகித சபையின் தலைவர் போப் அவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிவியலாளர்களை கொடுமைப்படுத்தியதால், சிறையில் அடைத்ததால், சிலரை கொலை செய்ததால் அறிவியலாளர்களில் பலர் மதங்களை வெறுக்கவும். இறைவனை மறுத்து நாத்திகர்கள் ஆகவும் காரணமாயிற்று.

பொதுவாகப் புரோகிதர்களுக்கு ஒரு பயம் இயற்கையாகவே உண்டு. மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறோம் என்பதை அவர்களின் உள் மனம் எச்சரித்துக் கொண்டிருப்பதால், நவீன அறிவியல் உண்மைமகளில் எது வெளிப்பட்டாலும், அதனைக் கடுமையாக எதிர்ப்பதை தவிர்க்கக் அவர்களால் முடியாது. காரணம் அறிவியல் உண்மைகள் தங்களின் ஏமாற்றுத் தந்திரங்களைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்ற அச்சமேயாகும்.

இந்த அச்சத்தின் காரணமாகவே கணினி கணக்கீட்டின்படியுள்ள சர்வதேச தலைப்பிறை, உடல் உறுப்புகள் தானம் இத்தியாதி நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை மறுக்கும் அறிவீனமான நிலையிலேயே புரோகித மவ்லவிகள் இருப்பார்கள்.

மார்க்கத்தைத் தொழிலாக – வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வது, பொதுவாக மனிதர்கள் செய்யும் இறைவனால் தடுக்கப்பட்டுள்ள அனைத்து ஹராமிலும் மிகமிகக் கொடிய ஹராம் என்பதை விளங்க முடியாத புரோகித மவ்லவிகளா இதர தடுக்கப்பட்டவைகளை அறியப் போகிறார்கள். பட்டப் பகலில் பசு மாட்டைப் பார்க்க முடியாத குருடன் அமாவாசை இருட்டில் எருமை மாட்டைப் பார்க்க முடியுமா? ஒரு போதும் முடியாது. எனவே நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகித மவ்லவி பண்டிதர்கள். அபூ ஜஹீலைப் போல் ஒரு போதும் மார்க்கச் சட்டங்களை சரியாக விளங்கிச் சொல்ல முடியாது.

ஹலாலை ஹராம் என்றும், ஹராமை ஹலால் என்றும் திரித்துக் கூறி மக்களை வழிகெடுத்து அற்ப உலக ஆதாயம் அடைவதிலேயே குறியாக இருப்பார்கள்.

விமர்சனம் : ஜாக், ததஜ மட்டுமல்லாமல் அரபு நாடுகளிலுள்ள பெரும், பெரும் மார்க்க அறிஞர்கள் எல்லாம் தொழுகை இருப்பில் விரலசைப்பதை சரிகண்டு செயல்படுத்தும் போது, நீங்கள் அதில் குறை சொல்கிறீர்களே அப்துல்லாஹ், சென்னை.

விளக்கம் : இப்படிப்பட்ட சிந்தனைகள் தான் முஸ்லிம்களை தக்லீதின் பால் இட்டுச் செல்கின்றன. ‘அந்தப் பெரிய மனிதன் கையைப் பிடிக்கையில் எப்படிடீ மாட்டேங்கிறது? என்றொரு சொல் வழக்கு உண்டு. அதற்கும் இதற்கும் எவ்வித வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

அரபு நாட்டு அறிஞர்கள் மட்டுமல்ல உலகமனைத்துமுள்ள மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஏகோபித்துச் சொன்னாலும் அதனால் அது மார்க்கம் ஆகாது. அதற்குரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தையே அவர்கள் தர வேண்டும். குறையுள்ள ஹதீஸை அவர்கள் ஆயிரம் விளக்கங்கள் கொடுத்து நியாயப்படுத்தினாலும் அது மார்க்கமாகாது.

தொழுகையில் நான்கு இடங்களில் கைகளை உயர்த்துவதை (ரஃபயல்யதைன்) மறுத்துக் கூறும் ஆசிம்பின் குலைப் இடம் பெறும் ஹதீஸை மறுத்து நான்கு இடங்களிலும் கைகளை உயர்த்தும் இவர்கள், அதே ஆசிம் பின் குலைப் இடம் பெறும் விரலாட்டும் ஹதீஸை எப்படி சர் காண்கிறார்கள்? கைகளை உயர்த்த வேறு பலமான ஹதீஸ்கள் இருக்கின்றன என்பது அவர்கள் வாதமானால், அதேபோல் விரலை கிபுலாவை நோக்கி இஷாரா(நீட்ட) செய்யவும் வேறு பலமான ஹதீஸ்கள் இருப்பதை மட்டும் ஏன் நிராகரிக்கிறார்கள்.

ஆம்! நீங்கள் ஓர் உண்மைய அறிந்து கொள்ளுங்கள். அசத்தியம் அழிகிறது என்ற நூலின் ஆசிரியர் ஸைபுத்தீன் ரசாதி அதன் 35-ம் பக்கத்தில் தொப்புளுக்கு கீழே கைகளைக் கட்டவேண்டும் என்ற ஹதீஸ் பலவீனமாக இருந்தாலும் எங்கள் இமாம்களின் ஆய்வை தீர்ப்பை முழு நம்பிக்கையுடன் ஏற்று செயல்படுகிறோம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். உண்மையை ஒப்புக்கொண்டதற்கு அவரை பாராட்ட வேண்டும். ஆம்! மத்ஹபுகள், இயக்கங்களிலுள்ளவர்கள், அவர்கள் தொழகையில் கடைபிடிக்கும் முறைகளுக்குரிய ஹதீஸ்கள் ஆதாரபூர்வமானதோ, சந்Nதுகத்திற்குரியதோ, பலவீனமானதோ பிரச்சினை இல்லை. அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள அறிஞர்கள் சொன்னால் போதும், அதை அப்படியே செயல்படுத்துவார்கள். ஜாக், ததஜ இயக்கத்தினரும் அதற்கு விதிவிலக்கல். மார்க்கம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பது அவர்களது குறிக்கோள் அல்ல. அவர்களது மத்ஹப், இயக்கம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அவர்களின் அசலான் குறிக்கோள்.

Previous post:

Next post: