முஸ்லிம் மதகுருமார்களின் புரோகித மாயை லீலைகள்
முன்னுரை:
ஆன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!
ஆஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
எல்லாம்வல்ல அல்லாஹ் எனக்கும் உங்கள் அனைவருக்கும் சத்தியத்தை-நேர்வழியை-இஸ்லாத்தை உள்ளது உள்ளபடி அறிந்து அதில் உறுதியாக நின்று, அதன்படி செயல்பட அருள் புரிய அவனிடமே இறைஞ்சுகிறேன்.
இப்போது உங்கள் கைகளில் இருக்கும் இந்நூல், பொழுது போக்காகவோ, பிரயாணத்தில் இருக்கும்போதோ, படுத்துக் கொண்டு தூக்கம் வரும் வரையிலோ முழுக் கவனமில்லாமல் படிக்கும் (Light reading) நூல் அல்ல.
இதைப்;;;; படிப்பதெற்கென்றே நேரம் ஒதுக்கி பொறுமையாக, உரத்த சிந்தனையுடன் படிக்க வேண்டிய நூல்: படிக்கும்போது பக்கத்தில் அவசியம் அல்குர்ஆன் மொழி பெயர்ப்பை வைத்துக் கொள்ளுங்கள். இந்நூலில் காணப்படும் அனைத்து இறைவாக்குகளையும் உடனுக்குடன் அல்குர்ஆனிலேயே பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். உதாரணமாக 30:32 என்;று குறிப்பிட்டிருந்தால முதலில் இருக்கும் எண் 30 அத்தியாய எண்: அடுத்துள்ள எண் 32 வசன எண். ஆல்குர்ஆனை திறந்து பார்க்கும்போது அதன் மேல்பகுதியில் பெரும்பாலும் பாகம் அல்லது பகுதி அல்லது அந்த பாகத்தின் ஆரம்பத்திலுள்ள வசனம் குறிப்பிடப்பட்டிருக்கும்.அடுத்து அத்தியாய எண்ணும் அத்தியாயத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும்;. பாகம்(ஜூஸ்வு) லிருந்து 30 வரையும், அத்தியாய எண்கள் 1லிருந்து 114 வரையும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆத்தியாயத்தின் ஏறு வரிசையில் பார்;த்துக் கொண்டு போனால் அத்தியாயம் 30 வரும்போது நீங்கள் 30ம் அத்தியாயத்தின் பெயரையும் அர்ரூம் என்று அறிந்து கொள்ளலாம். 30 அர்ரூம் என்றிருக்கும் பக்கங்களில் வரிசையாக மேலிருந்து கீழாக வசனங்களின் எண்கள் குறிப்பிட்டு வசனங்களும் எழுதப்பட்டிருக்கும். ஆதில் 32-ம் வசனம் நீங்கள் பார்க்க வேண்டிய வசனம். இப்படி நூலிலுள்ள அனைத்து வசனங்களையும் நீங்கள் நேரடியாக அல்குர்ஆனில் பார்த்;து உறுதி செய்து கொள்ள முடியும். அப்போதுதான் இவை நமது எஜமானன் அல்லர்ஹ்வின் நேரடிக்கட்டளைகள் என உணர்ந்து இறையச்சத்துடன், இறை உணர்வுடன் (தக்வா) நடக்கும் ஆர்வம் ஏற்படும்.
முஸ்லிம்களில் 99.9% னரை இப்புரோகிதர்கள் அல்குர்ஆனை விட்டுத் தூரப்படுத்தி வைத்திருப்பதால் இப்படி விளக்கும் கட்டாயம் ஏற்படுகிறது.
இன்று முஸ்லிம் சமுதாயத்தினர் எந்த அளவு நயவஞ்சகப் புரோகிதர்களின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் பற்றிப் பிடிக்க வேண்டிய அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டும் நூல் அல்குர்ஆனிலிருந்து தூரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்;? ஆதனால் எந்த அளவு மூட நம்பிக்கைகளிலும், மூடச் சடங்குகளிலும் மூழ்கி இருக்கிறார்கள்? என்பதை எல்லாம் பார்க்கும்போது உலகை வழி நடத்திச் செல்லக் கட்டளை இடப்பட்ட சமுதாயம் நடுநிலைச் சமுதாயம்: சாட்சி சொல்லும் சமுதாயம்: இப்படிப்பட்ட சமுதாயத்தின் நிலை இதுவா? ஏன வேதனைப்பட நேரிடுகிறது.
இன்றைய முஸ்லிம்களில் மிகமிகப் பெரும்பான்மையினர், முஸ்லிமாக இருப்பதற்கு அடிப்படையான உறுதிமொழி ஷலாஇலாஹ இல்லல்லாஹ்| – கடவுளே இல்லை: ஒரேயொரு கடவுளைத்தவிர என்பதையே அறியாதிருக்கின்றனர். ஆதனால்தான் திருமணம் முடிக்கும் மாப்பிள்ளைக்கு, இப்புரோகிதர்கள் ஷகலிமா| என்ற உறுதி மொழியைச் சொல்லிக் கொடுத்து திருமணம் முடித்து வைக்கின்றனர்.
கலிமாவே தெரியாத முஸ்லிம்கள் அல்குர்ஆனைப் பற்றி என்ன தெரிந்திருக்கப் போகிறார்கள்? அவர்களைப் பொறுத்தமட்டிலும் அதனுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்களாகவே தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர். 99% இத்தகையவர் களிடம் ஒரு முஸ்லிமின் அடையாளமான ஐங்கால தொழுகை இருப்பதில்லை. ஆவர்கள் நம்பிக்கை வைத்துள்ள புரோகித மவ்லவிகள் உபதேசப்படி மூடநம்பிக்கைகள் அடிப்படையிலான சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு அல்லாஹ்வின் பொருத்தமும், சுவர்க்கமும் கிடைத்து விடும் என்ற மூட நம்பிக்கையில் இருப்பவர்கள்: பெரும் நஷ;டமடைவார்கள்.
பேணுதலற்ற தொழுகையாளிகளின் நிலையும் பரிதாபத்திற்குரியதே அவர்களின் தொழுகை மத்ஹபுகளின்படி இருக்கும். இவர்களுக்கும் அல்குர்ஆனின் தொடர்பு இருக்காது. ஆவர்களில் ஒரு சிலர் பள்ளிக்கு வரும்போது தொழுகைக்குப்பின் அங்கிருக்கும் அல்குர்ஆனை எடுத்து முகர்ந்து விட்டு, தலையில் வைத்துவிட்டு மீண்டும் அங்கேயே வைத்து விடுவார்கள். அதுவும் தொழுகைக்கு செய்த ஒளூ இருக்கிறது என்ற தைரியத்தில், ஒளூ இல்லாமல் குர்ஆனைத் தொடக் கூடாது என்று அவர்கள் நம்பியுள்ள புரோகிதர்கள் பயம் காட்டி வைத்திருக்கிறார்களே!
அடுத்து! நாங்கள் தக்லீதை விட்டு விடுபட்டு விட்டோம். குர்ஆன், ஹதீஸ்படி நடக்கிறோம் என பொய்யாகக் கூறும் புதிய மத்ஹபினராகிய ஜாக், ததஜ போன்ற இயக்கவாதிகளின் நிலையும் பரிதாபத்திற்குரியதே. ஆவர்கள் ஒளூ இன்றி குர்ஆனை தொடலாம் என்பதை ஒப்புக் கொள்வார்கள். பொருள் அறியவும் முற்படு வார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஜாக், தவ்ஹீத், மவ்லவி(?)கள் மொழி பெயர்த்த ஷிர்க், பித்அத்கள் நிறைந்த குர்ஆன் மொழி பெயர்ப்பில் முழு நம்பிக்கை வைத்து அதையே கண்மூடி ஏற்பார்கள்.
இந்த அனைத்துவகைப் புரோகித மவ்லவிகளின் பிடியிலிருந்து விடுபட்டு சுயமாக தன்னம்பிக்கையுடன் அல்குர்ஆனிலுள்ள இந்நூலில் காணப்படும் குர்ஆன் வசனங்களைப் படித்து உணர்ந்து, எவ்வித சுய விளக்கமும் இல்லாமல், அவற்றின்படி நடப்பவர்களே வெற்றியாளர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த நேர்வழி நடக்கும் சிறுபான்மைக் கூட்டத்தில் நம் அனைவரையும் இணைத்தருள்வானாக.