அசத்தியத்தில் இருந்து சத்தியத்தை நோக்கி !

in 2009 மே

அசத்தியத்தில் இருந்து சத்தியத்தை நோக்கி !

முகம்மது அலி ஜின்னா, தாம்பரம், 9380088424

அல்ஹம்துலில்லாஹ்! எனது இரட்;சகனே உன்னையே நான் துதிக்கின்றேன். அல்லாஹ் வின் மாபெரும் கிருபையால் அந்நஜாத் மாத இதழை நான் சுமார் இருபத்தி மூன்று ஆண்டு களாக படித்து வருகின்றேன். குர்ஆனையும் ஹதீஸையும், தாங்கி வரும் முதல் தமிழ் இஸ் லாமிய ஏகத்துவத்தின் புரட்சி மாத இதழ் நஜாத் என்பதை வரலாறு தெரிந்த எந்த ஒரு முஸ்லிமும் மறுக்க இயலாது; அல்ஹம்துலில்லாஹ்.

இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் குர்ஆனையும், ஹதீஸையும் தான் பின்பற்ற வேண்டும் என்று விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் இருந்த சமயம், முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் நஜாத் என்ற வார்த்தை மிக வேகமாக பரவியது. மலத்தை விட அசிங்கமான வார்த்தையாக எண்ணி அதை உச்சரித்தார்கள். காரணம் முஸ்லிம்களிடம் உள்ள மூட பழக்க வழக்கங்களையும், இணை வைப்புச் செயல்களையும், தர்கா வணக்கத்தை யும், இஸ்லாத்தின் அடிப்படை அஸ்திவாரத்தை தகர்த்தெறியும் மவ்லூது எனும் அரபி பாடலையும், நஜாத் இதழ் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் மிகக் கடுமையாகச் சாடியது.

அச்சமயம் பள்ளி வாசல்களில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களே தொழுவதற்கு வருவார்கள். இளைஞர்கள் பள்ளியின் பக்கம் தொழ வர மாட்டார்கள். மவ்லூது ஓதி சாம்பராணி போடவும் நேர்ச்சை வாங்க மட்டும் வரும் காலம் அது. அரை குறை ஆடையுடன் இருக்கும் புத்தகங்களை மதிப்பாக வைத்திருப் பார்கள். ஆனால் (வெற்றியின் பக்கம்) நஜாத் என்ற பெயர் சொல்லப்பட்டால் அவர்கள் உள்ளங்கள் கொதிப்படைந்து தாக்க வருவார் கள். உதாரணத்திற்கு எனக்கு அப்போது வயது 23 இருக்கும். சிறு வயதில் இருந்தே ஐவேளை தொழக் கூடியவன். 16 வயதிலி ருந்து கடை வைத்து நடத்திக் கொண்டிருக் கிறேன். எப்போதும் கல்லா டேபிள் மேல் ரைகாலில் ஜான்டிரஸ்ட் குர்ஆன் தமிழாக்கம் வைக்கப்பட்டு அன்றாடம் ஓதும் பழக்கமும் உண்டு.

ஐவேளை தொழுபவர்களே எனது நெருங்கிய நண்பர்கள். மார்க்க கருத்துகளை பரிமாறிக் கொள்வோம். அப்போது திருநெல் வேலியை சார்ந்த யூசுப் என்ற நண்பர் வண்ட லூரில் உள்ள கிரஸன்ட் கல்லூரியில் பணியா ற்றிக் கொண்டு டீ.நு.இ படித்துக் கொண்டு இருந் தார். அப்போது நான் தர்;கா, மவ்லூது பிரியன். அவர் மவ்லூது பற்றி அதன் அர்த்தங்களைச் சொல்லி குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் என்னிடம் அமைதியாக அழகிய முறையில் விவாதிக்கின்றார். எனக்கு பதில் சொல்ல முடியவில்லை. கோபம் வருகிறது; என்னிடம் சத்தியம் இல்லாததால் அவர் கேட்ட கேள்வி க்கு பதில் சொல்ல முடியாமல் கைகால் பறத்துகிறது; திணருகிறேன். ஒன்றும் முடியாமல் டேபிலில் இருந்த கண்ணாடியிலான டேபில் வெயிட்டை எடுத்து கண் இமைக்கும் நேரத் தில் என் நண்பன் யூசுப் மீது எறிகிறேன்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அவன் மீது படாமல் சற்று அருகில் விற்பனைக்கான கண்ணாடி பொருள்கள் மீது வேகமாக விழுந்து பொருள்கள் சிதறுகின்றன. (அவன் முகத்தின் மீது விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?) என் இரு விழிகளும் முகமும், கோபக்கனலாக மாறியது. எனது நண்பன் யூசுப் அமைதியாக சென்றுவிட்டான். நான் பதற்றத் துடன் சிந்திக்க முற்படுகிறேன். அவன் அடிக் கடி நஜாத் பத்திரிகை பற்றி கூறுவான். பத்திரி கையையும் காட்டுவான். அதை பற்றி பேசாதே, கொண்டு வராதே என்று மிகக் கண்டிப்புடன் கூறுவேன். ஒருநாள் கடை கல்லா டிராயரில் நஜாத் பத்திரிகையை வைத்துவிட்டு சென்று இருக்கிறான். நான் திறந்ததும் நஜாத் பத்திரிகை இருந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். எனக்கு கோபம் வரவில்லை. ஆச்சரியப்பட்டேன். அக்கம் பக்கம் பார்க்கிறேன். ஏன் மலத்திற்கு சமமாக நான் எண்ணிய பத்திரிகை ஆயிற்றே! செக்ஸ் புத்தகத்தைவிட அசிங்கமாக உலமாக்களால் கருத வைக்கப்பட்ட பத்திரிகை ஆயிற்றே! சேரில் அமர்ந்து என் இரு கரங்களையும் டேபில் டிராயரின் உள்ளே வைத்துக் கொண்டு வெளி யில் யாருக்கும் தெரியாமல் மனம் படபடக்க நஜாத் பத்திரிகையை பிரித்து பார்க்கிறேன்.

என் கண்களை என்னால் நம்ப முடிய வில்லை. நஜாத் புத்தகம் குர்ஆன் தமிழாக் கத்தால் என்னிடம் பேசியது என்னை எரித்தது. நான் நம்பவில்லை. இது குர்ஆனாக இருக் காது; பொய்யாக இருக்கும் என எண்ணி டேபிலில் இருந்த ஜான் ட்ரஸ்ட் குர்ஆன் தமிழாக்கத்தை எடுத்து (அப்போது அது 40 ரூபாய் வசீலா தேடுவதின் சட்ட திட்டங்கள் புத்தம் இலவசம். அப்போது ஊருக்கு இரு தமிழாக்கம் இருப்பதே ஆச்சரியம்) அந்த வசனங்களை சரி பார்க்கிறேன், வார்த்தைகளை படிக்கிறேன், சிந்திக்கிறேன், ஆராய்கிறேன், சுப்ஹானல்லாஹ் அந்த சில நிமிடங்களில் என்னைப் படைத்து பரிபாலித்து வரும் கிருபை யாளன் என் உள்ளத்தை நஜாத்-வெற்றியின் பக்கம், நஜாத்-நேர்வழியின் பக்கம், நஜாத்-ஈடேற்றத்தின் பக்கம் திருப்பி விட்டு விட்டான். அல்ஹம்துலில்லாஹ். அதனால் தான் குர் ஆனையும் ஹதீஸையும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லக் கூடியவர்களுக்கு நஜாத்காரன் என்று சமுதாயத்தால் பெயர் வைக்கப்பட்டது. அவர்கள் கூடி நமக்கு வைத்த பெயரை அவ மதிக்கக்கூடாது என்ற நன்னோக்கத்தில் எனது கடைக்கு நஜாத் என்ற பெயரை வைத்துள்ளேன்.

அந்த நஜாத் அன்று சொன்னது, முஸ்லிம் முரசை படியுங்கள். நர்கிஸை படியுங்கள். சொல்லில் அழகானதை எடுத்துக் கொள்ளுங் கள் என்று குர்ஆன் வசனத்தையும் போட்டு இருந்தது. அன்று முதல் பல பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நஜாத், ரஹ்மத், நர்கிஸ், முஸ்லிம் முரசு, ஜன்னத், பிலால், விடியல், சமநிலைச் சமுதாயம், சொர்கத் தோழி, வைகறை, உணர்வு, மக்கள் உரிமை, மக்கள் ரிப்போர்ட், இன்னும் பல பத்திரிகை களை படித்து அதில் உள்ள அழகானதை குர்ஆன் ஹதீஸ{க்கு உட்பட்ட வைகளை எடுத்துக் கொள்வேன்.

அதேபோன்று யாருடைய பேச்சாக இருந் தாலும் குர்ஆன் ஹதீஸ{க்கு உட்பட்ட வையா என்றே ஆராய்வேன். பேசக்கூடியவர் யார் என்று பார்க்க மாட்டேன். அது புட்டபர்த்தி சாய்பாபாவாக இருந்தாலும் சரி, P.ஜெய்னுல் ஆப்தீனாக இருந்தாலும் சரி, சங்கராச்சாரியாக இருந்தாலும் சரி, டெல்லி இமாம் புஹாரியாக இருந்தாலும் சரி சொல்லக் கூடியது குர்ஆன், ஹதீஸ{க்கு உட்பட்டதா என்றே ஆராய்வேன். ஒருநாள் புர்கா அணிந்த என் மனைவியும் நானும், நமது சமுதாய நலனுக்கு எதிரியாக உலா வந்த சங்கராச்சியார் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி கூடத்துடன் சேர்ந்த இலவச மருத்துவமனைக்கு செல்கிறோம். மருத்துவர் எங்களுக்கு முன்சென்ற நபரை பரிசோதித்துக் கொண்டு இருக்கிறார். எங்கள் இருவர் பார்வை க்கும் தெரியாத இடத்தில் ஜன்னல் வழியாக ஒருவர் மருத்துவரிடம் எல்லோரும் சென்றதும் எனக்கு தெரிவியுங்கள். நான் அப்போது வந்து உங்களை சந்திக்கிறேன் என்கிறார். மருத்துவர் இல்லை இப்போதே வாருங்கள். உங்களை கவனித்து அனுப்பி விடுகிறேன் என்று கூற அவர் பலமுறை மறுக்கிறார்.

மருத்துவரின் கட்டாயத்தின் பேரில் நாங்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு தூய்மையான வெள்ளை உடையில் தனியாக வந்த அவர் எங்கள் இருவரையும் கைகூப்பிய வண்ணம் அடக்கத்துடன் எனக்கு அனுமதி அளியுங்கள்; மருத்துவரை பார்த்து என்னை காட்டிவிட்டு உடனேயே திரும்பி விடுவேன் என எங்களிடம் அனுமதி கேட்கிறார். நானும் என் மனைவியும் மனப்பூர்வமாக சம்மதிக்கின்றோம். மருத்துவ ரிடம் காட்டிவிட்டு ஒரு சில நிமிடங்களில் திரும்பிய அவர் மீண்டும் எங்கள் இருவரிடமும் சாரி என்று மன்னிப்புக் கேட்கிறார். நன்றியும் சொல்லிவிட்டு செல்கிறார். சங்கராச்சாரியார் படம் அங்கே பெரிய அளவில் வைக்கப்பட்டு இருந்தது. நாங்கள் உள்ளே செல்கிறோம். மருத்துவர் எங்களுக்கு நல்ல பழக்கப்பட்டவர். எங்களை பரிசோதித்து விட்டு முடிந்ததும் உங்களுக்கு முன்னால் வந்தவர் யார் தெரியுமா? என்றார்; தெரியாது என்றேன்.

சங்கராச்சாரியார் படத்iதை காட்டி அவரு டைய கூட பிறந்த தம்பிதான் அவர் என்றார். இதுபோன்ற பல நூறு கல்வி கூடமும, மருத் துவமனைகளும், கல்லூரிகளும் இந்தியாவில் பரவலாக உள்ளது. அனைத்தும் இவர் கட்டுப் பாட்டில்தான் உள்ளது.

ஒவ்வொன்றாக சென்று பார்வையிட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னது எங்கள் இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. நாங் கள் முஸ்லிம் என்று தெரிந்தும் புர்கா அணிந்த நிலையில் இருந்தும் இலவசமாக பார்க்க வந்து இருந்தும், இந்திய அளவில் பிரபல்யமாக கடவுள் என்று வணங்கி வரக்கூடிய ஒருவரின் உடன் பிறந்த தம்பி, நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி கூடம், கல்லூரிகள், மருத்துவமனை களை நிர்வகிக்கக்கூடிய ஒருவர் மனித உரிமையில் நடந்துக் கொண்ட விதம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) நமக்கு கற்றுக்கொடுத்தது என் மனக்கண்முன் நிலலாடியது. நாம் செயல்படுத்தவில்லை.

அவர் செயல்படுத்தி காட்டினார். அடுத்த வர் மானம், அடுத்தவர் உரிமை விசயத்தில் இன்றைய தவ்ஹீதின் தலைமகனாக பீற்றிக் கொள்பவர் படுத்தும் பாடு, ஆடும் ஆட்டத்தை பார்த்து வருகிறோம். அகில உலக தவ்ஹீதின் தலைமகன் நான்தான் என்று பீற்றிக்கொள்ளும், 2005-க்குப் பின் நாங்கள் கட்டிய பள்ளி வாசல் கள்தான் இறையச்சத்தின் அடிப்படையில் கட்டப்பட்டவை என சூளுரைத்து ஆணவத்தின் உச்சிக்கு சென்றுவிட்டதை பார்க்கின்றோம். அவருக்காக பிரார்த்திப்போம். அகில உலக தவ்ஹீதின் தலைமகனை(?) உலகுக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்தியதும் இந்த நஜாத் இதழ்தான். நாம் யாவரும் ஒற்றுமையாக அல்லாஹ்வின் கயிற்றை-குர்ஆனை பலமாக பற்றி பிடித்து ஒன்றுபட்ட சமுதாயமாக வாழ் வோம். இன்ஷா அல்லாஹ். குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவோரே குர்ஆன், ஹதீஸை பின்பற்ற ஆசை கொண்டோரே தன்மானத் தோடு வாழ முயற்சி செய்யுங்கள். நஜாத் இதழை படியுங்கள். குர்ஆன் ஹதீஸ்படி அதில் உள்ள அழகானதை எடுத்துக் கொள்ளுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

Previous post:

Next post: