”எதனைப் பொய்யாக்குவீர்கள்!”

in 2009 மே,2009 ஜூன்

”எதனைப் பொய்யாக்குவீர்கள்!”

இன்ஜீனியர், விருதுநகர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவனுடைய குர்ஆனில் அர்ரஹ்மான் ஸூராவில், ‘ரப்பினு டைய அருட்கொடைகளில் எதனைப் பொய் யாக்குவீர்கள்’, என்று 31 முறை மீண்டும் மீண்டும் சவால் விட்டு, அறைகூவல் விடுகிறான்.

பொய்ப்பிக்க முடியும் என்பது அவ்வளவு இலகுவானது அல்ல. மிகச்சிறந்த அறிவாளி கூட அதனை நினைத்துக் கூட பார்க்க இயலவே இயலாது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வல்ல ரஹ்மானுடைய அருட்கொடைகளை, வசனங்களைப் பொய்யாக்க இயலவே இயலாது என்பது நன்றாகத் தெரிந்தும், சில மனித ஜென்மங்கள் ‘என்னால் இயலும்’ என்று கூறுவார்கள் என்பதாலோ என்னவோ ‘அவர் களுக்குக் கேடுதான்’ என்று வல்ல ரஹ்மான் அல்குர்ஆனில் மொத்தம் 12 இடங்களில் சபித்துள்ளான்.

‘பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடு தான்;’ அல்குர்ஆன் 52:11, 77:15,19,24,28, 34,37, 40,45,47,48, 83:10.

வல்ல ரஹ்மான் ‘கேடுதான்’ என்று சபித்துக் கூறியும், அதையெல்லாம் பொருட்படுத்தாது, அல்குர்ஆன் வசனங்களின் அர்த்தத்தை மாற்றியும், ஸகாத் பிறை போன்ற விசயங்களில் தங்களின் சொந்த கருத்துக்களையும் கூறியும் வருகின்றனர்.

‘எதனைப் பொய்யாக்குவீர்;கள்’, என்று பல தடவைகள் அறை கூவல் விடுத்த வல்ல ரஹ்மான், அதே ஸூராவில், 5வது வசனத்தில்,

‘சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்கி வருகின்றன’, என்று கூறியுள்ளான். எனவே கணக்கின்படி உள்ளது என்பது பொய்யாகாது என்பது தெளிவு.

மேலும் வானங்கள், நட்சத்திரங்கள் பற்றி அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதைக் காணீர்!

நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகு படுத்தியிருக்கிறோம். அல்குர்ஆன் 37:6

ஆகவே இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்;படுத்தினான். 41:12

சூரியனும் சந்திரனும் கணக்கின்படி இயங்கி வருகின்றன. 55:5

எனவே மனித ஜின் இனத்தினரான நீங்கள் இரு(வருப்பா)ரும் உங்களிரு சாரா ரின் ரப்பினுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? 55:13

மனிதன் பொய்யாக்க முற்பட்டால், அவன் பொய்யாக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் அவன் உலகம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், வானம் ஆகியவைகள் அடங்கிய அகிலத்தைப் புரிந்து கொள்ளட்டும்ளூ புரிந்து கொண்டு பின்பு சென்று பார்த்து விட்டு தெளிவு பெறட்டும். தெளிவடைந்த பின், அவன் பொய்யாக்கட்டும்.

புரிந்தால் தானே, அவன் அங்கெல்லாம் செல்ல முடியும். புரியவேயில்லையென்றால் எங்கே அங்கேயெல்லாம் செல்லப்போகிறான்.

தெளிவு பெற முடிகிறதா பாருங்களேன்! இதோ அல்லாஹ்வின் பூமி பூமியைச் சுற்றியுள்ள படைப்பு:

‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து வளர்த்துப் பரி பக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அல்குர்ஆன் 1:1

இதில் அகிலங்கள் – யுனிவர்ஸ் என்பது புரிந்துகொள்வதற்காக இலகுவாக்கப்பட்டு, கீழே வரையப்பட்டுள்ளது.

உண்மையில் இவைகளெல்லாம் கற்பனை செய்து பார்ப்பதைவிட மிகமிகப் பெரியது. மிகமிக தூரமானது. (Tremendous Distances)
அகிலங்கள் பற்றிய விளக்கம்:

நாம் வசிக்கும் பூமி உலகம் சூரிய மண்டலத்தைச் சார்ந்ததாகும். சூரிய மண்டலம் பால் மண்டலத்தின் (Milky Way Galaxy) ஒரு பகுதியே ஒரு பால் மண்டலத்தில் 10000 கோடி நட்சத்திரங்களுக்கும் மேல் உள்ளன. இதுவே மிகப் மிகப் பெரியது. இதே போன்று ஏகப்பட்ட பால் மண்டலங்கள் உள்ளன.

அவைகளின் எண்ணிக்கை 5000 கோடிக்கும் மேல்.

பால் மண்டலங்கள் அடங்கிய கூட்டத்தை கொத்து – Cluster  எனவும் கொத்துக்கள் கொண்ட கூட்டத்தை – சூப்பர் கிளஸ்டர் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

இப்போது படத்தை கவனியுங்கள்.

boomi-picture1

நன்றி : டிஸ்கவரி சேனல்

ஒரு பால் மண்டலம் கேளக்ஸி = 10000 கோடிக்கும் மேல் நட்சத்திரங்களைக்

கொண்ட கூட்டம்.

கொத்து (கிளஸ்டர்) = பல கேளக்ஸிகளைக் கொண்ட கூட்டம் 5000

கோடிக்கும் மேலான கேளக்ஸிகள்

சூப்பர் கிளஸ்டர் = கொத்துக் கூட்டம்

வல்ல அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மேற்கண்ட அகிலங்களை முதலில் மனிதன் புரிந்து தெளிவு பெறட்டும். பின்பு அவன் பொய்யாக்க முற்படட்டும். அவன் அவ்வாறு முற்பட வேண்டுமெனில், கண்ணால் கண்டு தெளிவு பெற வேண்டும். அதற்கு நேரில் சென்று பார்த்து வர வேண்டும்.

சென்று பார்த்து வர, பணக்காரர்களால் பயன்படுத்தப்படும் விமானங்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. இதில் சென்றால் கோடி வருடங்கள் ஆகும். ஒளியின் வேகமும் (186000 மைல் ஃ வினாடி) பிரயோசனப்படாது. இருப்பினும் இந்த ஒளியின் வேகத்தில் சென்றால் பூமியை வினாடிக்கு 7 முறை சுற்றி வரலாம். சந்திரனுக்கு 3 வினாடியில் சென்று வரலாம். ஆனால் ஒளியின் வேகத்தில் சென்று வர உபகரணம் எதுவும் இல்லை. மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள இடங்களுக் கெல்லாம் சென்றுவர ஆகும் காலத்தைக் காணீர்!.

விமானத்தில் ஒளியின் வேகத்தில்
செல்ல வேண்டிய இடம் 600 மைல் மணி 186000 மைல் வினாடி
1000கி.மீ.ஃமணி 300000 கி.மீஃ வினாடி

1. சூரியன் 17 வருடம் 8 மாதம் 8.5 நிமிடம்

2. மார்ஸ் 8 வருடம் 10 மாதம் 5 நிமிடம்

3. புளூட்டோ 690 வருடம் 1 மாதம் 5 மணி 2.5 நிமிடம்

4. மிக அருகிலுள்ள 0.48 கோடி வருடங்கள் 4.2 வருடம்
நட்சத்திரம்

5. அதிகமாக மின்னும் நட்சத்திரம் 0.96 கோடி வருடங்கள் 8.4 வருடம்

6. பால்; மண்டலக் கொத்தான 45 கோடி வருடங்கள் 400 வருடம்
கிளஸ்டரிலுள்ள
நட்சத்திரத்திற்கு

7. பால் மண்டல நடுப் 4200 கோடி 38000 வருடம்
பகுதிக்கு வருடங்கள்

8. அன்ட்ரோ மேடா 2.5 லட்சம் கோடி 0.22 கோடி வருடம்
கேளக்ஸி வருடங்கள்

நன்றி : டிஸ்கவரி சேனல்

அம்மாடியோவ்! ஒவ்வொன்றும் படுபயங்கரமான தூரங்கள். ஹூம் முடியுமா? நினைத்துக் கூட பார்க்க இயலாது. பின்பு சென்று பார்த்து வருவதாவது?

வினாடிக்கு 186000 மைல் வேகமான ஒளியின் வேகத்தில் சென்றுவர தற்போது எந்தவித உபகரணமும் கண்டு பிடிக்கவில்லை. இன்னும் காலம் செல்லச் செல்ல கண்டு பிடிக்கப்படுமோ என்னவோ அல்லாஹ் தான் அறிவான்.

இந்தப் படுபயங்கர வேகத்தில் சென்றாலே, அன்ட்ரோ மேடா கேளக்ஸிக்கு சென்று வர 22 லட்சம் வருடங்கள் (0.22 கோடி வருடங்கள்) ஆகுமாம். ஒரு மனிதனுடைய சராசரி ஆயுட்காலமே 60,70 வருடங்கள் தான்.

பின்பு எங்கே போய் பொய் ஆக்குவது? வல்ல ரஹ்மானுடைய ஒரு ஆயத்திற்கே அதாவது சூரியனும் சந்திரனும் கணக்குப்படி இருக்கின்றன என்பதற்காக இவ்வளவு தூரங்கள், காலங்கள்ளூ நினைத்துப் பார்க்கவோ, கற்பனை செய்யவோ முடியவில்லை. ஆனால் வல்ல ரஹ்மானுடைய இக்கணக்குகள், அகிலங்கள் ஆகியவைகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், கேடுகெட்ட கணக்கு என்று எழுதியவர்களின் முட்டாள்தனத்தைப் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த ஆயத்திற்கான விளக்கத்தை இன்னும் காணீர்!

பூமியின் ஒரே ஒரு பிறைக்கு (சந்திரன்- Moon) இங்கே ஏகப்பட்ட குழப்பங்களை உண்டு பண்ணித் திரிகின்றனர். பல பிறைகள் (சந்திரன்) இருந்தால், எப்படியெல்லாம் குழப்புவார்களோ? சூரிய மண்டலத்திலுள்ள பூமிக்கு ஒரே ஒரு பிறைக்கே இங்கே இந்தக் கூப்பாடு. இச்சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களுக்கு (மொத்தப் பூமியையும் சேர்த்து 9 கிரகங்கள் – நவகிரகம்) பல பிறைகள் உள்ளதைக் காணீர்!

கிரகம் (பிறைகள்
சந்திரன் – மூன்)

1. பூமி 1

2. செவ்வாய் 2

3. குரு 16

4. சனி 18

5. யூரேனியஸ் 15

6. நெப்டியூன் 8

7. புளுட்டோ 1

8. வீனஸ் –

9. மெர்க்குரி –

சனி கிரகத்திற்கு மொத்தம் 18 சந்திரன்கள், (பிறைகள்) உள்ளன. அவ்வாறே பூமிக்கு 18 பிறைகள் இருந்திருந்தால், ததஜவினர் 18ம் தங்கள் வீட்டு முற்றத்தில் தெரிந்தே ஆக வேண்டும் என்று உத்தரவு போட்டாலும் போடுவார்கள்.

மேலே அட்டவணையில் உள்ளபடி, ஒரு கிரகத்திற்கு எவ்வளவு சந்திரன்கள் இருந்தாலும், எந்தப் பிறை எந்த இடத்தில் உள்ளது எவ்வாறு நகரும், ஒவ்வொரு பிறைக்கும் எது முதல் பிறை என்பதை கணக்கின்படி மிகத் துல்லியமாகக் கண்டு பிடிக்க முடியும்.

ததஜவினரின் கண்களால் கண்டே தீர வேண்டும் என்ற புதிய கண்டு பிடிப்பின்படி, 18 பிறைகளில் எது எது எந்தப் பிறை என்பதை வித்தியாசப்படுத்தியே பார்க்க இயலாது. இதில் முதல் பிறை எது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. பிறகு காண்பதாவது: கத்திரிக்காயாவது. இது மாதிரி சந்தப்பங்களில், கணக்கின்படி தான் முடியும் என்பதை உணர்வைப் படிப்பவர்கள் உணர வேண்டும்.

சூரிய மண்டலத்தில் ஒன்பது கிரகங்களைப் படைத்து, மற்ற கிரகங்களுக்கு பல சந்திரன் களைப்படைத்த அல்லாஹ் பூமிக்கு ஒரே ஒரு சந்திரனைப் படைத்து, இலகுவாக்கி வைத்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!

எனவே கணக்கின்படி உள்ளன என்ற அல்லாஹ்வின் கட்டளை, மிகச்சிறந்த இலகுவான முறையாக உள்ளது என்பது கண்கூடு!

சந்திரன், சூரியன், பூமி, ஏழு வானங்கள் நட்சந்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி நாம் குறிப்பிட்டிருப்பது மிகவும் குறைவானதேயாகும். இன்னும் இதற்குள் எவ்வளவோ உள்ளது. நம்முடைய ஞானம் அவ்வளவே!

எனவே பொய்யாக்க முடியும், என்பது முடியவே முடியாது என்பது திண்ணம்! அதனால்தான் வல்ல ரஹ்மான் நீங்கள் இரு சாராரும் ரப்பினுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்;கள்? என்று பலமுறை குறிப்பிட்டுள்ளான்.

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். எனவே இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்? அல்குர்ஆன் 77:49-50

அல்லாஹ் மிக நன்கறிந்தவன்!

(நபியே! உங்களைப் பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான். (52:1)

(நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான். (77:15)

ஆகவே, (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான். (77:19)

ஆகவே, இவைகளைப்)பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! (77:24)

(நம்முடைய இந்நன்றிகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! (77:28)

Previous post:

Next post: