ஒன்றுபட்ட ஒரே சமுதாயம்

in ஒன்றுபட்ட ஒரே சமுதாயம்,பொதுவானவை

அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்
ஒன்றுபட்ட ஒரே சமுதாயம்
(அல்குர்ஆன் 21:92, 23:52)அன்புள்ள சகோதர, சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த 15-ம் நூற்றாண்டில் முஸ்லிம் சமுதாயம் மீண்டும் ஒன்றுபட அருள் புரிவானாக!

முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை!
இன்னும், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்ளூ நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். கோழைகளாகிவிடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும், நீங்கள் பொறுமையாக இருங்கள்ளூ நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் அன்ஃபால் 8:46)

இன்னும், நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் (ஒருபோதும்) பிரிந்துவிடாதீர்கள்………………………………………………….. (அல்குர்ஆன் ஆல இம்ரான் 3:103)

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் (குர்ஆன், ஹதீஸ்) தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிளவையுண்டுபண்ணிக் கொண்டு, பிரிந்து விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்ளூ அத்தகை யோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் ஆல இம்ரான் 3:105)

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிளவுகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகிவிட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் பிரிவைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.

(அல்குர்ஆன் அர்ரூம் 30:32) (மேலும் பார்க்க: 3:102, 6:153, 159, 12:108, 42:13,14) நபி(ஸல்) அவர்கள் தமது விடைபெரும் ஹஜ்ஜில் இறுதிப் பேருரையில் கட்டளையிட்டது இதோ!

நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழிதவறவே மாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் நெறிநூல் (அல்குர்ஆன்) ஆகும்.

நபி(ஸல்) அவர்களின் இந்த கட்டளைப்படி இந்த இறை எச்சரிக்கைகளை சுய சிந்தனையுடன் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி பல பிரிவுகளிலாக்குவது மாபெரும் குற்றம் நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை எளிதாக விளங்க முடியும் நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு அதாவது ஹிஜ்ரி 11க்கு பிறகு, சமுதாயத்தில் மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு ஏற்படுத்தியுள்ள, அனைத்துப் பிரிவுகளும் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அனுமதிக்காத புதியவைகள்-பித்அத்கள்-வழிகேடுகள்-நரகத்தில் கொண்டு சேர்ப்பவை என எளிதாக விளங்கி அவற்றை விட்டு தௌபா-பாவ மன்னிப்புக் கோரி விலகி விடுவார்கள். அவர்கள் மட்டுமே மறுமையில் வெற்றி பெற்று சுவர்க்கம் புக முடியும். அல்லாஹ்வையும், மறுமையையும் உறுதியாக நம்புகிறவர்கள் ஒருபோதும் அப்படிப்பட்ட பிரிவுப் பெயர்களில் செயல்படத் துணியமாட்டார்கள். ஷைத்தானின் பிடியில் சிக்கி நரகம் புக இருப்பவர்களே இப்படிப்பட்ட பிரிவுப் பெயர்களைக் கொண்டு 30:32-ல் அல்லாஹ் கூறுவதுபோல் மகிழ்வடைய முடியும்.

ஒற்றுமை ஒன்றுதான் உம்மத்தின் – சமுதாயத்தின் பலம் என்று அல்லாஹ் கூறி, நபி(ஸல்) நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்க, நாம் பல பிரிவுகளில் பிரிந்து நம்முடைய பலத்தை இழந்து விட்டோம். மாற்றார்கள் நம்மை இழிவோடு பார்த்துப் பழி சுமத்தும் நிலையை நாமே உருவாக்கிக் கொடுத்துள்ளோம். ஒரே நாளில் கடைபிடிக்க வேண்டிய நோன்பையும், பெருநாளையும் மாவட்டத்திற்கு மாவட்டம் மூன்று நாள் நடைமுறைப்படுத்தி மற்றவர்கள் நம்மைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதோடு, காறித்துப்பும் கேவல இழி நிலைக்கு ஆளாகி இருக்கிறோம்.
அவ்வாறு செய்ய வைத்துவிட்டு, நீலிக் கண்ணீர் விட்டு ஒப்பாரியும் வைக்கின்றனர் மார்க்க மேதாவிகளும், இயக்கத் தலைவர்களும் முஸ்லிம்கள் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் மிகமிகக் குறைவு. இப்புரோகிதர்கள் பின்னால் செம்மறி ஆட்டு மந்தை போல் கண்மூடிச் செல்பவர்கள்தான் மிகமிக அதிகம்.
இப்படிப்பட்டவர்களின் நிலைபற்றி அல்குர்ஆன் என்ன கூறுகிறது? இதோ படித்துப் பாருங்கள்:

இவர்கள் தாம் நேர்வழிக்குப் பதிலாக தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள். இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராதுளூ மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர். (அல்குர்ஆன் பகரா 2:16)

(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். (அல்குர்ஆன் பகரா 2:18) மேலும் பார்க்க 8:22,23, 7:175–179.

அன்று தாருந்நத்வா புரோகிதர்கள் பின்னால் சென்றவர்கள் எப்படிக் கண்மூடிச் சென்றார்களோ அதே போல் இன்றைய புரோகித மவ்லவிகளின் பின்னால் செல்கிறவர்கள், சுய சிந்தனையில்லாது கண்மூடிச் செல்கிறவர்களாகவே இருக்கிறார்கள். அப்புரோகிதர்களின் பேச்சைக் கேட்டு, நம்பி அதன்படி, குர்ஆன் வசனங்களையே அதிகமாகக் கொண்ட இப்படிப்பட்ட பிரசுரங்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அவர்களின் கைகளிலேயே திணிக்கப்பட்டாலும் அதைத் துண்டு துண்டாகக் கிழித்து எறிந்து விடுவர்கள். குர்ஆன் வசனங்களைக் கொண்ட பிரசுரங்களையே கிழித்தெறியும் அவர்;களை, அல்லாஹ் எப்படிக் கிழித்து எந்த நரகத்தில் எறியப்போகிறான் என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. எனவே அல்லாஹ்வும் அவர்களைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.

மிக அதிகமான மக்கள் அல்குர்ஆனை – நேர்வழியை விளங்க மட்டார்கள் என அல்லாஹ் பல இடங்களில் கூறி இருக்க, அப்படிப்பட்டவர்களுக்கு நாம் நேர்வழியை விளங்க வைக்க முடியுமா? முடியவே முடியாது. அதற்கு மாறாக சுவர்க்கம் புகும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்றும் அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். இதோ படித்துப் பாருங்கள்:

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவிசாய்த்து விளங்குவார்கள்) (அல்குர்ஆன் அல்ஃபுர்கான் 25:73)

அவர்கள், குறிப்பிட்ட புரோகித வர்க்கத்தினரின் நூலை மட்டும் பார்க்க மாட்டார்கள்ளூ அவர்களது பேச்சை மட்டும் கேட்க மாட்டார்கள். அதற்கு மாறாக எப்படி நடப்பார்கள்? இதோ குர்ஆன் கூறுகிறது:

எவர்;கள் தாவூத்களான புரோகிதர்களுக்கு அடிபணிவதைத் தவிர்த்துக் கொண்டு அவர்களிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வை முன்னோக்கி இருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம், ஆகவே (அந்த என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயம் கூறுவீராக!
அவர்கள் (யார் எழுதினாலும், பேசினாலும், அந்த உரையை) சொல்லைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தான், இவர்கள் தாம் நல்லறிவுடையோர். (அல்குர்ஆன் அஜ்ஜுமர் 39:17,18)
இந்த இரு இறைவாக்குகளும் தெள்ளத் தெளிவாக, குன்றிலிட்ட தீபமாக எதை விளக்குகின்றன?
மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு வழிகேட்டில் செல்லும் புரோகிதர்களான தாவூத்களுக்கு வழிபடுவதை – அதாவது அவர்கள் கூறுவதை அப்படியே கண்மூடி ஏற்பதைத் தவிர்க்க வேண்டும். இடைத்தரகர்களான அவர்களை விட்டும் முற்றிலும் விலகிவிட வேண்டும். 7:3 இறைக் கட்டளைப்படி அல்லாஹ்வை மட்டுமே முன்னோக்கி இருக்க வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனில் என்ன கூறி இருக்கிறான் என்று நேரடியாகப் பார்த்துப் படித்து விளங்கி அதன்படி நடப்பவர்களுக்கே அல்லாஹ்வின் நன்மாராயம் கிடைக்கிறது.

மேலும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் பின்னால் செல்லாமல், ஒரு குறிப்பிட்ட இயக்கப் புரோகிதர்களின் நூலை மட்டும் படிக்காமல், பேச்சை மட்டும் கேட்காமல், அனைத்துத் தரப்பினரின் நூல்களைப் படித்து, பேச்சைக் கேட்டு அவற்றிலுள்ள அழகானதை அதாவது குர்ஆன், ஹதீஸ்படி இருப்பதை மட்டுமே எடுத்து நடப்பவர்கள் மட்டுமே அல்லாஹ்வின் நல்லடியார்கள், அவர்களுக்கு மட்டுமே அல்லாஹ்வின் நன்மாராயம் கிடைக்கும். அவர்களை மட்டும்தான் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவர்கள் மட்டும் தான் நேர்வழி அடைய முடியும். அப்படிப்பட்டவர்களே நல்லறிவுடையவர்கள் என்று அல்லாஹ் நற்சான்று வழங்குகிறான். இந்த 39:17,18 இரண்டு இறைவாக்குகளையும் புரோகித மாயை, இயக்க மாயையை இவற்றை விட்டு விடுபட்டு நடுநிலையோடு படித்து உணர்கிறவர்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் எப்படிப்பட்ட இடைத்தரகர்களும் வர முடியாது என்பதை 7:3, 5:3, 3:19,85, 33:36, 59:7 போன்ற இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயமாக விளங்க முடியும். அவர்கள் 3:103 இறைக் கட்டளைப்படி அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அதன் நல்லுரைகளை ஏற்று அதன்படி நடக்க முன் வந்து விடுவார்கள். புரோகித மாயை, இயக்க மாயை இவற்றை விட்டும் விடுபட்டு விடுவார்கள். விலகி விடுவார்கள்.

ஒன்றுபட்ட சமுதாயத்திற்குப் புத்துயிர் அளிக்க முன் வந்து விடுவார்கள். அப்படி முஸ்லிம் சமுதாயத்தில் ஓரிரு விழுக்காட்டினர் முன் வந்துவிட்டாலும், அல்லாஹ் அருள் புரிந்து மீண்டும் இவ்வுலகின் போக்கில் பெரும் மாறுதல் ஏற்பட்டுவிடும். முஸ்லிம் சமுதாயம் மீண்டும் ஓர் உன்னத சமுதாயமாக மாறிவிடும். உலக மக்களை வழிநடத்தும் பெரும் பேறு பெற்றுவிடும். அல்லாஹ் 3:139-ல் வாக்களிப்பது போல், அதாவது

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் (தூய்மையான) நம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்கள்தாம் மிக மேலானவர்களாக இருப்பீர்கள். (ஆல இம்ரான் 3:139)

தூய்மையான இறை நம்பிக்கையாளர்கள் ஒருபோதும் சமுதாயத்தைப் பிளவு படுத்த மாட்டார்கள். இயக்கங்களை சரி காணமாட்டார்கள். 21:92, 23:52 இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தை மட்டுமே சரிகண்டு அதில் ஒன்றிணைவார்கள்.
அடுத்து உலக ஆதாயங்களைக் காட்டித்தான் இயக்கத்தினர் சமுதாயத்தைப் பிளவு படுத்துகின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் உலக ஆதாயங்களும் நிறைவாகக் கிடைக்காது. அதற்கும் ஒன்றுபட்ட சமுதாயமே அவசியம் என்பதை 24:55 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. அது வருமாறு:

உங்களில் எவர் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கிறான். அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணை வைக்காது, அவர்கள் எனக்கே அடி பணிவார்கள். இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அல்குர்ஆன் அந்நூர் 24:55)

அல்லாஹ்வின் இந்த உறுதிமொழி என்ன சொல்கிறது? அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடையில் எந்த இடைத்தரகரையும், அதாவது அவர்கள் மரணித்த முன்னோர்களாக இருந்தாலும் சரி, இப்போது உயிரோடிருக்கும் அறிஞர்களாக இருந்தாலும் சரி 7:3, 33:36, இறைக் கட்டளைகளுக்கு முரணாகக் கொண்டுவரக் கூடாது. அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணாக அவர்கள் கூறும் பிரிவு ஜமாஅத்துகளை, இயக்கங்களை ஷைத்தான் நமக்கு அழகாகக் காட்டுவதால் அவற்றை ஏற்கக் கூடாது. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து எப்பிரிவிலும், எந்த இயக்கத்திலும் சேர்ந்து சமுதாயத்தைப் பிளவு படுத்தாமல் ஒன்றுபட்ட சமுதாயத்தைக் கட்டிக் காத்தால் உலகில் ஆட்சி அதிகாரம் நிச்சயம் கிடைக்கும்.. (இன்ஷா அல்லாஹ்) என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆக சமுதாய சீர்கேட்டிற்கும், முஸ்லிம்களின் சீரழிவிற்கும், நாளை நரகம் புகவும் சமுதாயப் பிரிவுகளே காரணம் என்பது இங்கும் உறுதிப்படுகிறது. அது மட்டுமல்ல இவ்வளவு தெளிவாக அல்லாஹ் விளக்கிய பின்னரும் இயக்க மாயையில் சிக்கி சமுதாயத்தைப் பிளவுபடுத்துவோர், அல்குர்ஆனை நிராகரிக்கும் பெரும் பாவிகள் என்பதையும் இந்த 24:55 இறை எச்சரிக்கை உறுதிப்படுத்துகிறது. பதவிகளுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு சமுதாயத்தைக் கூறுபோடுவோர் பெரும் பாவிகள் என்பதோடு அவர்கள் எதிர்பார்க்கும் ஆட்சி அதிகாரமும் கிடைக்காது.

எனவே 21:92,93, 23:52–67 இறைவாக்குகளை மீண்டும் மீண்டும் படித்து உணருங்கள். தனி மனிதனாக அல்லாஹ்வின் முன்பு நிறுத்தப்படும், அந்நாளில் எதுவும் கூறி தப்பிக்க முடியாது. ஆகவே ஒன்றுபட வேண்டுமெனவும், இது அல்லாஹ்வின் கட்டளை எனவும் உறுதிப்பாட்டுடன் நாம் நினைத்தால், எந்தத் தலைவரின் மாய வசீகரப் பேச்சிலும் மயங்காமல் உடனே புறப்படத் தயாராக முடியும். தயாராகுங்கள். ஈடேற்றம் பெறுங்கள்.
இந்த நன்முயற்சி வெற்றியடையாது, தோற்றுப்போகும் என மனப்பால் குடிப்பவர்கள் ஏராளம். தங்கள் ஆதரவாளர்களை கலந்து கொள்ள விடாமல் தடுப்பதற்கு அனைத்து தந்திரங்களையும் கையாள்வர். இச்சமுதாயம் ஒன்றுபட்டால், தம் பிழைப்பில் மண் விழுந்து விடும் என எண்ணுகின்றவர்களை நிச்சயமாக அல்லாஹ் அடையாளம் காட்டுவான், இழிவுபடச் செய்வான். எனவே ஒன்றுபட்டச் சமுதாயத்திற்குரியவர்களே வாருங்கள்! வாருங்கள்!! வந்து பாருங்கள். இவர்கள் என்ன பேசுகிறார்கள்? இவர்களின் நோக்கம் என்ன? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த முறை அல்ல, எத்தனை முறை தோற்றாலும் இன்ஷா அல்லாஹ் மீண்டும், மீண்டும் முயன்று கொண்டே இருப்போம். காரணம் இதுவே அல்லாஹ் இட்ட கட்டளை. அதற்குரிய கூலியை, வெற்றியை அவனே தருவான்.

அகில இந்திய அளவில், குர்ஆன், ஹதீஸ்படி நடக்கும், நடக்கிறோம் என்று சொல்லும் அமைப்புகளோ, ஜமாஅத் அல் முஸ்லிமீன் என்ற நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற அமைப்பிலிருப்பவர்களோ, மத்ஹபினரோ, தரீக்காவினரோ, இயக்கத்தினரோ, அவற்றின் அனுதாபிகளோ, நடுநிலையாளர்களோ, ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும் அவசியம் வருகை தாருங்கள். குர்ஆன், ஹதீஸ் நேரடி போதனைகளைக் கேளுங்கள். நடுநிலையுடன் முடிவு செய்யுங்கள். ஒன்றுபட்டு ஈருலகிலும் வெற்றி வகை சூடுங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக.
நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற ஜமாஅத் அல் முஸ்லிமீனில் இணைகிறவர்கள், தங்களில் குர்ஆன், ஹதீஸில் அதிக அறிவுள்ளவராகவும், நேர்மையாளராகவும், ஒழுக்க சீலராகவும், சமுதாய நலனில் அதிக அக்கறை உள்ளவராகவும், பதவிக்கோ, அதிகாரத்திற்கோ ஆசைப்படாதவராகவும், விலை போகாதவராகவும், மார்க்கத்தை வைத்துப் பிழைப்பு நடத்தாதவராகவும், சத்தியத்தை அல்லாஹ்வுக்கு அல்லாது வேறு யாருக்கும் அஞ்சாது துணிந்து எடுத்துச் சொல்பவராகவும், மதநல்லிணக்கத்தை பேணுபவராகவும், அதே சமயம் அவரது தவறுகள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எடுத்துக் காட்டப்பட்டால் அடக்கத்துடனும், பணிவுடனும் ஏற்று தன்னைத் திருத்திக் கொள்பவராகவும் இருக்கக் கூடிய ஒருவர், இஸ்லாமிய முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்படுபவரே அமீராகவும், மற்றப் பகுதிகளுக்கு அந்த அமீரின் கீழ் செயல்படும் துணை அமீர்களும் தெரிவு செய்யப்பட்டு அல்லாஹ்வின் கட்டளைகள்படி நபி(ஸல்) அவர்களின் நடைமுறைப்படி செயல்பட்டால் இவ்வுலகில் பயமோ, துக்கமோ இல்லாத உன்னத மக்களாக, மற்றவர்களை வழிநடத்திச் செல்லும் உன்னத பேறு பெற்றவர்களாக, ஆட்சியாளர்களாக இருப்பதோடு, மறுமையிலும் உயர் பதவிகளுடன் சுவர்க்க வாழ்வு கிடைக்கும் இன்ஷh அல்லாஹ். இந்த நிலை உருவாகும் வரை எங்களின் இந்த முயற்சி தொடரும். அனைத்து அமைப்புகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைக் கூறி சமுதாய ஒற்றுமைக்கு வழிகாட்டுங்கள். பிரிவுகளின், இயக்கங்களின் தலைவர்கள் தங்களின் சுயநலம் கருதி வரவில்லை என்றாலும், அவர்களின் கீழ் செயல்படும் தொண்டர்கள், சமுதாய முன்னேற்றத்திலும், நலனிலும் அக்கறை கொண்ட அனைவரும் கலந்து கொண்டு நல் ஆலோசனைகள் கூறி வழி நடத்த அழைக்கிறோம் சகோதர வாஞ்சையுடன்.

நிகழ்வு நாள் : 15, 16 ஆகஸ்ட் 2009 சனி காலை 10 மணி முதல் ஞாயிறு இரவு 8மணி வரை (அல்லாஹ் நாடினால்)
இடம் : து.மு. மஹால், துறைமங்களம், பெரம்பலூர்.

என்ற முகவரியில் நடைபெறவுள்ள ஒற்றுமைக்கான முயற்சியில் கலந்து கொள்வோம். ஒற்றுமைக்கு தடைகள் என்ன?
என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைந்து ஒன்றுபடுவோம். அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் நுழைவோம்.

இப்படிக்கு
முஸ்லிம்கள் அனைவரின் வரவை ஆவலுடன் எதிர்பாக்கும்
ஒருங்கிணைப்புக் குழுவினர்
ஜமாஅத் அல் முஸ்லிமீன்

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு
தொடர்பு எண்: 9443392291

தொடர்பு எண்கள் :
பெரம்பலூர் : 9443304115, 9443392291
திருச்சி : 9443955333, 9710122152, 9442914198
நாகர்கோவில் : 9894932446, 9894815377, 9364148629
சென்னை : 9380022444, 9941073981
மும்பை : 09820201062
காயல்பட்டினம்: 9487124246
உடன்குடி : 9965843849

குறிப்பு :
15,16.08.2009 நிகழ்வுகளை email,SMS தங்கள் தங்கள் பகுதி உள்ளூர்
தொலைக்காட்சிகள், இதர தொலைக்காட்சிகள் மூலம் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் சகோதர, சகோதரிகளுக்கு, அல்லாஹ் ஈருலக நன்மைகளை நிறைவாகத்
தர துஆ செய்கிறோம்.
– ஒருங்கிணைப்புக் குழு

Previous post:

Next post: