கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்!

in 2009 நவம்பர்,தலையங்கம்,பொதுவானவை

கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்!
ஒரு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதாகியுள்ளார். இதற்கு முன்னரும் ஒரு முறை பிடி பட்டுள்ளார். அந்த ஆத்திரத்தில் என்னையே விரட்டி விரட்டி பிடிக்கிறீர்களே! இன்னும் என்னைவிட பிரபலமான வசதியான நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்களே! அவர்களைக் கைது செய்வதில்லையே என படபடத்து அவர்களை வரிசைப்படுத்தியுள்ளார். இச்செய்தியை வெளியிட்ட ஒரு நாளிதழ் அந்த நடிகைகளின் பெயர்களையும் பட்டியலிட்டுள்ளது. இதற்காக கூத்தாடிகளின் உலகமே வெகுண்டெழுந்தது. கண்டனக்குரல் எழுப்பியுள்ளது. ஆட்சியரிடம் முறையிட்டுள்ளது. நொண்டியை நொண்டி என்றால், குருடனை குருடன் என்றால் அவர்களுக்குக் கோபம் கொப்பளிக்கத்தானே செய்யும்.

உடனடியாக, வழக்கத்திற்கு முரணாக அந்த நாளிதழின் செய்தி ஆசிரியர் எவ்வித முறையான ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்துள்ளார். அவர் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் பாய்ந்துள்ளது. அதற்கு மாறாக பத்திரிகையாளர்களை கூத் தாடிகளில் சிலர் மிக அவதூறாக விமர்சித்துள் ளதை சுட்டிக்காட்டி போலீஸ் கமிஷனரிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர். அரசோ, காவல் துறையோ நாளிதழ் ஆசிரியரை கைது செய்த அந்த வேகத்தையும், உறுதியையும் அவ தூறாகப் பேசிய நடிக, நடிகைகளிடம் காட்டி, கைது செய்யவில்லை. கமிஷனர் ஊடகத் துறையினருக்குக் கொடுத்த உறுதிமொழி காற் றில் கரைந்து விட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது? கூத்தாடிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது இன்றைய ஆட்சி என்பது குன்றிலிட்ட தீப மாக ஒளிர்கிறது.

விபச்சார நடிகைகளின் முகத்தை மறைத்து முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணி வித்து காவல்துறையினர் அழைத்துச் செல்வது, காவல்துறையினருக்கு நடிகைகளிடம் இருக்கும் ஈடுபாட்டையும், முஸ்லிம்கள் மீதிருக்கும் துவே சத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. குற்றவாளிகளின் முகத்தை மறைத்து அழைத் துச் செல்வது அவர்கள் மேலும் மேலும் குற்றம் புரிய உதவியாக மட்டுமே இருக்கும்.

அவதூறாகப் பேசப்பட்டாலோ, எழுதப்பட் டாலோ பாதிப்புக்குள்ளானவர் நீதிமன்றத்தில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்து அது அவதூறுதான் என நிரூபிக்கப்பட்டால், நீதி மன்றமே சிறைத் தண்டனை விதிக்கும். இதுவே நடைமுறை. இந்த நடைமுறைக்கு மாறாக திரை யுலகத்திற்காக அரசும், காவல்துறையும் செயல் பட்டுள்ளன. பெண் வன்கொடுமை என்ற அடிப் படையில் நாட்டில் எத்தனையோ அராஜகங்கள் அட்டூழியங்கள் இடம் பெறுகின்றன. அங்கெல் லாம் அரசும், காவல்துறையும் இந்த அளவு அசுர வேகத்தில் செயல்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னராவது ஊடகத் துறையினர் பாடம் பயில வேண்டும். நடிக, நடி கைகள், … விட்டாலும் அதைப் பெரிய செய் தியாக வெளியிடும் அளவிற்கு ஊடகத் துறை யினர் கேவலப்பட்டுள்ளனர். கூத்தாடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்கம் பக்கமாக செய்தி வெளியிடுவதில் அனைத்து ஊடகத் துறையினரும் போட்டிபோட்டுச் செயல்பட்டு வரு கின்றனர். கூத்தாடிகள் மக்கள் மத்தியில் மிகை ப்பட்ட செல்வாக்குப் பெற ஊடகத் துறையினரே மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதன் பலனையே இப்போது அனுபவிக்கின்றனர்.

மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல் வதில் கூத்தாடிகளுக்கு எந்த வகையிலும் சளை த்தவர்கள் அல்லர் ஊடகத்துறையினர். அவதூறுகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பி பர பரப்பு ஏற்படுத்துவதில் மன்னர்கள்.அனைத்து வகை இதழ்களைத் திறந்தால் ஆபாசம், பெண்களின் அரை, முக்கால், முழு நிர்வாணம்ளூ காமத்தைத் தூண்டும் காட்சிகள். பெண்களை நிர்வாணமாகவும், ஆண்களை முழு மையாக உடல் மறைத்து ஆடை அணிபவர் களாகவும் காட்டும் மர்மம் என்ன? ஆண்கள் ஜட்டியோடு காட்சி அளித்தாலும் பரவா யில்லை. அதனால் ஆபாசம், காம உணர்வு ஏற்படப் போவதில்லை. அதற்கு மாறாக பெண் களின் இடை, பின்பக்கம், துருத்திக் கொண் டிருக்கும் மார்பகம் தெரிந்தால் போதும் ஆபாசம், காம உணர்வு பீரிட்டு பாயும். அப்படியானால் இன்றைய கூத்தாடிகள் என்ன செய்கின்றனர்? இரண்டு கால் மனிதனை அறிவை இழந்து இரண்டு கால் மிருகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் நாட்டில் ஈவ்டீஸிங், கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை என நாளுக்கு நாள் கணக்கு வழக்கு இல்லாமல் பெருகி வருகின்றன. அநியாய அட்டூ ழியங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.

முன்னர் பொய்க்கடவுள்களைப் கற்பித்த புரோகிதர்கள் மறைவாகச் செய்த மன்மத லீலைகள் நாத்திகம் தலைதூக்கிய பின்னர் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் ஆகி அந்த லீலைகள் பன்மடங்காகி வெள்ளித்திரை, சின்னத் திரைகளில் பவனிவர ஆரம்பித்து விட்டன. இயற்கையிலேயே இன விருத்திக்காக மனி தனிடம் காணப்படும் காம உணர்வு தவறான முறைகளில் தூண்டப்பட்டு எல்லை மீறி பெரும் தவறுகள் நிகழக் காரணமாகின்றது. இன்று நாட் டில் நீக்கமறக் காணப்படும் அனைத்து வகை அட்டூழியங்கள், கொடுமைகள், வன் செயல்கள், தீவிரவாதம் இன்ன பிற தீச்செயல்களை உர மிட்டு, நீர்பாய்ச்சி வளர்த்து வருவது கூத்தாடி களின் நெறிகெட்ட செயல்களே!

சிறுவர்களுக்குப் புகைக்கக் கற்றுக் கொடுப் பது கூத்தாடிகள், குடிக்கக் கற்றுக் கொடுப்பது கூத்தாடிகள், விபச்சாரம், கற்பழிப்பு, களவு, கொள்ளை, கொலை என அனைத்து வகை ஈனச் செயல்களையும் கச்சிதமாகக் கற்றுக் கொடுப்பது கூத்தாடிகள். கள்ள ஓட்டு கலாச் சாரம், அரசியல்வாதிகளுக்கு தில்லுமுல்லு செய்து பணம் பண்ணி பெரும் தாதாக்களாக, தலைவர்களாகக் கற்றுக்கொடுப்பது கூத்தாடி கள், ஆண்கள், பெண்களின் அறிவை மழுங் கடித்து மூட நம்பிக்கைகளை, மூடச் சடங்கு சம் பிரதாயங்களை இன்னும் பல அநாச்சாரங் களை, அன்றும் இன்றும் அனைத்து மதங்களின் மதகுரு மார்களும் வளர்த்து வந்தந்தை வரு வதை இன்று கூத்தாடிகளும் வளர்த்து வரு கின்றனர் என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

விபச்சாரத்தில் ஈடுபடாமல் ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ நடிக்க முடியுமா? ஒருபோதும் முடி யாது. இன உறுப்புகள் இணைவது மட்டும்தான் விபச்சாரமா? மனைவி அல்லாத பெண்ணை இச்சையுடன் பார்ப்பது கண்களின் விபச்சாரம், கையால் பிடிப்பது கை செய்யும் விபச்சாரம், முத்தமிடுவது வாய் செய்யும் விபச்சாரம், கட் டிப்பிடித்து கொஞ்சிக் குலவுவது உடல் செய் யும் விபச்சாரம், இந்த விபச்சாரங்களிலிருந்து விடுபட்டு நடிக்கும் ஒரு நடிகனையோ, ஒரு நடி கையையோ யாராலும் காட்ட முடியுமா! இந்த சில்லரை விபச்சாரங்களால் காமம் கட்டுக்கடங் காமல் தூண்டப்பட்டால், அது எங்கு போய் விடும்? அது விபச்சாரத்தை நிறைவு படுத்தும்.

அந்நியப் பெண்ணுடன் ஆட்டம் போட்டு, கட்டிப்பிடித்து, அரை நிர்வாணம், முக்கால் நிர் வாணம், முழுநிர்வாணத்துடன் உருண்டு, பிற ண்டு கொஞ்சிக் குலாவி, முத்தமிட்டு, காமத் தைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசி நடித்த கூத்தாடிகளில் ஆண்களிலும், பெண்களிலும் அதை நிறைவு செய்யாதவர்கள் அபூர்வத்திலும் அபூர்வம் என்று சொல்லி விடலாம்.

நடிகர்களில் சிலர் குர்ஆனை நேரடியாகப் படித்து நேர்வழியை விளங்கி இஸ்லாத்தைத் தழுவியவர்கள் நடிப்புத் தொழிலைக் கைவிட்டு சிறுசிறு தொழில் செய்து கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றனர். நடிப்புத் தொழிலை ஏன் கைவிட் டீர்கள் என்று அவர்களிடம் கேட்டால் நடிப்புத் தொழிலில் ஒழுக்கம் பேண முடியாது என்று உண்மை நிலையை மறைக்காமல் சொல்கின்றனர்.

ஒரு பிரபல நடிகை திருமணத்திற்கு முன்னர் உடல் உறவு கொள்வதில் தவறில்லை. ஆனால் கர்ப்பம் தரிக்காமல், எய்ட்ஸ் நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பேட்டி கொடு த்து நாடே சிரித்ததை நாம் அறிவோம். அரசும், உயர்நீதி மன்றமும் ஓரின சேர்க்கையை அனு மதித்து சட்டம் இயற்றிய நிலையில் விபச் சாரத் தையும் அனுமதித்து சட்டமாக்குவது வெகு தொலைவில் இல்லை.

ஆம்! முஸ்லிம்களே! உலகை வழி நடத்திச் செல்லும் பொறுப்பிலுள்ள நீங்கள் ஆல இம்ரான் 3:102, 103 இறைக் கட்டளைகள்படி அல்லாஹ் வுக்கு எந்த அளவு பயபக்தியுடன் நடக்க வேண் டுமோ, அந்த அளவு பயபக்தியுடன் நடக்காமல், முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்ட நிலையில் மரணிக்கத் தயாராகாமல், அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அல்லாஹ்வின் நேரடிக் கட்டளை களை அப்படியே எடுத்து அதன்படி நடக்காமல், 7:3, 33:36,66,67,68 இறைக் கட்டளைகளுக்கு முரணாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டும் புரோகிதர்களை நம்பி, அவர்களின் தவறான போதனைகளை வேதவாக்காக(?) எடுத்து நடப்ப தால், அதன் விளைவாக முஸ்லிம்களாகிய நீங் களே வழிகெட்டுச் செல்லும்போது மற்றவர்க ளுக்கு நீங்கள் நேர்வழி காட்டுவது எங்ஙனம்?
 

Previous post:

Next post: