ஜமாஅத் அல் முஸ்லிமீன்

in ஒன்றுபட்ட ஒரே சமுதாயம்,பொதுவானவை

  جماعة المسلمينஜமாஅத் அல் முஸ்லிமீன் அல்லாத பிரிவுப் பெயர்கள் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் தமிழ் மொழி பெயர்ப்பு.
ஹூதைஃபத்துல் யமான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி(ஸல்)அவர்களிடம் மக்கள் (எப்போதும்) நல்லதைப் பற்றியே கேட்பவர்களாக இருந்தனர். நானோ கெட்டது என்னை மிகைத்து விடாமல் இருக்க கெட்டது பற்றியே கேட்க்கூடியவனாக இருந்தேன். ஒருமுறை….

நான் : அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் அறியாமையிலும் தீமையிலும் (மூழ்கி) இருந்தபோது, அல்லாஹ் எங்களுக்கு (இஸ்லாம் என்ற) இந்த நல்லதை அருளினான். இந்த நல்லதற்குப் பின்னர் கெட்டது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!!

நான் : அந்த கெட்டதற்குப் பின்னர் நல்லது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!! ஆனால் அது தகனுன் – களங்கப்பட்டிருக்கும்.

நான் : அதனது தகனுன் – களங்கம் என்ன?

நபி (ஸல்) : ஒரு கூட்டம் எனது நேர்வழி அல்லாததைக் கொண்டு மக்களை வழி நடத்துவார்கள். நீங்கள் அவர்களை (அச் செயல்களைக்) கண்டறிந்து (அவற்றை) நிராகரித்து விடுவீர்கள்.

நான் : அந்த நல்லதற்குப் பின்னர் கெட்டது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!! (சிலரால்) நரகத்தின் வாயிலுக்கு அழைப்பு விடுக்கப்படும். எவர்கள் அந்த அழைப்பை ஏற்கிறார்களோ அவர்கள் அதில் (நரகத்தில்) எறியப்படுவார்கள்.

நான் : யாரஸூலல்லாஹ்! அவர்களைப் பற்றி (எனக்கு) விளக்குவீர்களாக.

நபி (ஸல்) : அவர்கள் நம்மைச் சார்ந்தவர்களாகவும் நாம் பேசுவதையே பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.

நான் : (அவர்கள் வலையில் சிக்காமல் இருக்க) அப்போது (எப்படி நடக்கவேண்டு மென்று) எனக்கும், (என்னைப் போன்றவர்களுக்கும்) என்ன கட்டளை இடுகிறீர்கள்?

நபி (ஸல்) : (அப்போதும்) நீர் ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஐயும் அதன் இமாம் ஐயும் பற்றிக் கொள்வீராக.

நான் : (நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற ஜமாஅத் அல் முஸ்லிமீன் என்ற) என்ற அந்த ஜமாஅத்தோ, அதனது இமாமோ இல்லை என்றால்…..?

நபி (ஸல்) : (மத்ஹபு, தரீக்கா, இயக்கம், கழகம் போன்ற) எல்லாப் பிரிவுகளையும் விட்டு (தூர) ஒதுங்கி வாழ்வீராக. அப்படியே உமது மரணம் வரை மரவேர்களைச் சாப்பிட்டுக் காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே!.

புகாரி : மனாகிப் 4/803, ஃபிதன் 9/206, முஸ்லிம் : இமாரா 3/4553, 4554

திர்மிதி : ஃபிதன் 57, இப்னுமாஜ்ஜா : ஃபிதன் 2/3979, தயாலிஸி : 1/443

Previous post:

Next post: