நபி வழியைப் பின்பற்றுங்கள் வெற்றிபெறுவீர்கள்!

in 2009 டிசம்பர்,பிறை,பொதுவானவை

நபி வழியைப் பின்பற்றுங்கள் வெற்றிபெறுவீர்கள்!
அபூ அப்தில்லாஹ்

முன்னாள் பிறை கணிப்பு கலைஞரின் சில கேள்விகளுக்குரிய பதில்கள்!

தாருல்ஹுதா நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் உமர் ஷரீஃப் பிறை கணிப்பு கலைஞர்களிடம் சில கேள்விகள் என்று 4 பக்க பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப் பிரசுரத்தில் மலிந்து காணப்படும் அறியாமை யை நாம் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

18.11.2007-ல் சென்னை பல்லாவரத்தில் இடம் பெற்ற சர்வதேச பிறை பற்றிய விளக்கக் கூட்டத்தில் சகோதரர் உமர் ஷரீஃப் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவை அவரது தாருல் ஹுதா பெயரிலேயே வெளியிட்டார். அப்போது பிறை கணக்கீட்டை அவர் ஏற்றும் இருந்தார். அப்படிப்பட்டவர் இப்போது இப்படியொரு அறிவீனமான பிரசுரத்தை வெளியிட்டுள்ளது எம்மை ஆச்சரியத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்றுவிட்டது.

எனவே அவரது தற்போதைய நிலைபற்றி விசாரித்து அறியும் கட்டாயம் எமக்கு ஏற்பட் டது. அப்படி விசாரிக்கும்போது நமக்குக் கிடைத்த தகவல்களை அறியத் தருகிறோம்.

ஜாக் அமீர் சகோதரர் ளு.மு. பிறைக் கணக் கீட்டிலிருந்து புறக்கண் பார்வைக்கு பல்டி அடி க்கும் முன்னர் ஒரு ரமழானில் சகோதரர் கோ வை மஸ்வூது அவர்களிடம் பிறைக் கணக் கீட்டை விவரித்து ரமழானின் இறுதிப் பகுதி யில் சென்னை ஜாக் மர்கஸில் உரை நிகழ்த் துமாறு கட்டளையிட்டிருக்கிறார். அப்போது சகோதரர் உமர் ஷரீஃப் அங்கு இஃதிகாஃப் இருந்துள்ளார். கோவை மஸ்வூத் தனது உரையை ஆரம்பிக்குமுன்னர் உமர் ஷரீஃபி டம் கருத்துக் கேட்டுள்ளார். அப்போது அவர் இது விஷயத்தில் எனக்குப் போதிய அறிவில்லை. நான் ஜாக் அமீரை தக்லீது செய்கிறேன் என்று கூறியுள்ளார். நவீன கணினி கணக்கீட்டின்படி முன்கூட்டியே பல வருடங் களின் மாதங்களின் முதல் பிறையை கணக் கிட முடியும் என கோவை மஸ்வூத்; தனது உரையில் தெளிவாக எடுத்து வைத்துள்ளார்.

உரைக்குப்பின்னர் உமர் ஷரீஃபிடம் அது பற்றி கருத்துக் கேட்டபோது கணினி கணக் கீட்டு முறை முற்றிலும் சரியானதே, ஏற்கத்தக்கதே என்று பதிலும் அளித்துள்ளார்.

இந்த நிலையில் ஸலஃபிகளின் கட்டுப் பாட்டில் உள்ள ஜாக் அமீர் பிறைக் கணக்கீட்டிலிருந்து கண்பார்வைக்கு பல்டி அடித்த வுடன் உமர் ஷரீஃபும் பல்டி அடித்துள்ளார் என்றே விளங்குகிறது. இப்படி பல்டி அடித்த வுடன் அவரது கணக்கீட்டு விளக்கத்தை ஏற்று பார்வையிலிருந்து பிறை கணக்கீட்டு முறை க்கு மாறிய சகோதரர்கள் உமர் ஷரீஃபிடம் சென்று நீங்கள் விளக்கிய பின்னர்தானே நாங் கள் கணக்கீட்டை ஒப்புக் கொண்டோம். இப் போது மாறிப்பேசுகிறீர்களே என்று கேட்டதற்கு, இல்லம்மா, கோவை மஸ்வூது எனது மண் டையை கழுவிவிட்டார். அதில் மயங்கி கணக் கீட்டை ஏற்றேன். ஆனால் இமாம் இப்னு தைமி ய்யா(ரஹ்) அவர்கள் கணிப்பை ஏற்கக் கூடாது என்று எழுதி இருக்கிறார். அதனால்தான் எனது நிலையை மாற்றிக்கொண்டேன் என்று பதில் அளித்துள்ளார்.

இதிலிருந்து நமக்கு என்ன விளங்குகிறது? சகோதரர் இதுவரை அல்லாஹ்வின் 2:134,141, 5:3, 3:19, 85, 7:3, 18:102-106, 33:36,66,67,68 கட்டளைகள்படி நேரடியாக குர்ஆன், ஹதீஸை படித்து, ஆராய்ந்து, விளங்கி அதன்படி நேர் வழியில் நடக்கும் நிலையில் இல்லை. இந்த இறைக் கட்டளைகளை நிராகரித்து யாரையும் தக்லீது செய்யும் முகல்லிதாகவே இருக்கிறார் என் பதை அவரது வாயாலேயே சொல்லி விட்டார். அதனால்தான் அவர் தன்னை ஸலஃபி என்று கூறிக்கொள்கிறார்.

மனிதர்களில் யார்மீதும் நம்பிக்கை வைக்காமல் அல்லாஹ்வின் பல நேரடிக் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு, அல்லாஹ்வின்மீதே முழு நம்பிக்கை வைத்து குர்ஆன், ஹதீஸில் பாடுபடுகிறவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை எளிதாக்கித் தருவதாக அல்குர்ஆன் 29:69 கூறுவதில் சகோதர் உமர் ஷரீஃபுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் ஜாக் அமீரையும், இமாம் இப்னு தைமிய்யாவையும் தக்லீது செய்யும் நிலையில் உள்ளார்.

அப்படி சுயமாக சிந்தித்திருந்தால் இமாம் இப்னு தைமிய்யாவின் காலம் ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டாகும். இப்போது நாம் இருப்பதோ 15-ம் நூற்றாண்டாகும். இமாம் இப்னு தைமி ய்யா மறுத்தது இந்துக்களிடமும், யூதர்களி டமும் இருக்கும் சோதிட அடிப்படையிலான (யுளவசழடழபல) கணிப்பீட்டு முறையையே அல் லாமல், இன்று 15-ம் நூற்றாண்டில் இருக்கும் அதிநவீன கணினி கணக்கீட்டை அல்ல என் பதை விளங்கி இருப்பார். இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் காலத்தில் இந்த கணினி கணக்கீட்டு முறை இல்லவே இல்லை என்ற சாதாரண அறிவையும் சகோதரர் உமர் ஷரீஃப் பெறவில்லை என்பது மிக வேதனைக் குரிய விடயமாகும்.

அதல்லாமல், நாங்கள்தான் அரபி கற்ற ஆலிம்கள், மார்க்க விற்பண்ணர்கள், மார்க் கத்தில் அதிகாரம் பெற்ற மேதாவிகள் என அபூ ஜஹீல் வாதம் செய்யும் இந்த மவ் லவி(?) வர்க்கத்தினருக்கு தோராய கணிப்பீட்டிற்கும் துல்லிய கணக்கீட்டுக்குமுள்ள வேறுபாடு தெரியவில்லை என்பதை அறியும் போது அவர்களின் அறிவாற்றலை சுய சிந்தனையாளர்கள் யாரும் விளங்கலாம். எப்படி இந்த மவ்லவி(?) வர்க்கம் சுயமாக சிந்திக்கத் தயாரில்லையோ அதேபோல் அவர்கள் பின் னால் கண்மூடிச் செல்லும் பெருங்கொண்ட மக்களும் (பார்க்க 6:116) சுயமாகச் சிந்திக்கத் தயாரில்லை எனும்போது அவர்கள் நேர்வழி பெறுவது எங்ஙனம்?

இப்போது சகோதரர் உமர் ஷரீஃபின் கேள்விகளிலுள்ள அபத்தங்களை அலசுவோம். முதலில், நபி(ஸல்) அவர்களின் இரண்டு ஹதீஸ்களை எடுத்து எழுதி இருக்கிறார். அவை வருமாறு.

‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள், நான் எவ்வாறு வணக்க வழிபாடுகளைச் செய்தேனோ அவ்வாறே நீங்களும் செய்யுங்கள். (புகாரீ)

‘நான் செய்யாததை மார்க்கம் என யாராவது செய்தால் அது தூக்கி எறியப்படும்’ (புகாரீ)

இந்த இரண்டு ஹதீஸ்களையும் நூற்றுக்கு நூறு அப்படியே நாங்கள் ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கிறோம். மார்க்கத்திற்கு உட் பட்டவற்றில் அணுவளவும் மாற்றம் செய்யாமல்தான் உண்மை முஸ்லிம்கள் நடக்க வேண்டும் அவர்களே நேர்வழி பெற்றவர்கள். இப்போது நபி(ஸல்) அவர்களின் தொழுகை சம்பந்தப்பட்ட இன்னொரு ஹதீஸை தருகிறோம்.

‘கிழக்கு அடிவானத்தில் வைகறை புலர்வது பஜ்ரு நேரத்தையும், சூரியன் உச்சி சாய்வது லுஹர் நேரத்தையும், ஒரு பொருளின் நிழல் அதே அளவு வருவது அஸர் நேரத்தையும், சூரியன் மறைவது மஃறிபு நேரத்தையும், வானில் செம்மேகம் மறைவது இஷா நேரத்தையும் அறிவிக்கிறது என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)

இப்போது சிறிது சிந்தியுங்கள்! சூரிய ஓட் டத்தைக் கண்ணால் பார்த்து தொழுவதுதூன் சகோதரர் உமர் ஷரீஃபின் கூற்றுப்படி நபிவழியாகும். இந்த நபிவழியைப் புறக்கணித்து அவர் நவீன கருவியான கடிகாரத்தைப் பார்த்து எப்படி தொழலாம்? அது மட்டுமா? தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகத்தில் ஹஜ் ஜுக்கு வருவார்கள் என்பது அல்குர்ஆன் 22:27 கூறும் வழி. நபி(ஸல்) அவர்களும் மதீனாவி லிருந்து மக்காவுக்கு ஒட்டகத்தில்தான் வந்தார்கள். உமர் ஷரீஃப் கூற்றுப்படி அதுதான் நபி வழி. பின் எப்படி இப்போது விமானத்தில் ஹஜ்ஜுக்குச் செல்கிறார்? அன்று ஹஜ்ஜில் இறந்தவரின் மனைவி மதீனாவில் இருக்கும் போது, ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் திரும்பி மதீனா வந்து கணவரின் இறப்புச் செய்தி சொன்ன பின்னரே அவரது மனைவி இத்தா இருந்திருப்பார். இதுவே உமர் ஷரீஃப் கூற்றுப் படி நபிவழி. பின் எப்படி அவர் இப்போது ஹஜ் ஜுக்குச் சென்றவர் இறந்த செய்தி தொலை பேசி மூலம் கிடைத்தவுடன் மனைவிக்கு இத்தா இருக்கும்படி ஃபத்வா கொடுக்கிறார்?

ஆம்! உமர் ஷரீஃப் அவர்களே உங்கள் புத்தியை யாரிடம் கடன் கொடுத்தீர்கள்? அல்லது என்ன நிர்பந்தம் உங்களை இப்படி அந் தர்பல்டி அடிக்க வைத்தது? முதலில் எவை எல்லாம் மார்க்கத்திற்கு உட்பட்டவை? எவையெல்லாம் மார்க்கத்திற்கு உட்படாதவை என்பதை விளங்க முற்படுங்கள்.

நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் மார்க்கத்தை நிறைவு செய்வற்காக இறுதித் தூதராக அனுப்பி வைத்தானே அல்லாமல், இவ்வுலக அறிவியல் வளர்ச்சியை நிறைவு செய்வதற்காக அல்ல என்பதை சிந்தித்து விளங்குங்கள். இதுவும் எமது சொந்தக் கருத்து அல்ல. நபி(ஸல்) மக்காவிலிருந்து மதீனா சென்ற சமயம், அங்கு மதீனாவாசிகள் வழமையாக செய்து கொண்டிருந்த அயல் மகரந்த சேர்க்கையை தடுத்ததால், பேரீச்சை விளைச்சல் குறைந்து விட்டது. அது பற்றி அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களிடம் முறை யிட்டபோது, அவர்களுக்கு நபி(ஸல்) தெளி வாக அறிவித்தார்கள்.

‘மார்க்க விடயம் பற்றி நான் ஒன்றைக் கட்டளையிட்டால் அதை அப்படியே எடுத்து நடப்பது உங்கள் கடமை. உலக விடயமாக ஒன்றைச் சொன்னால் அதில் நீங்கள் என்னை விட அனுபவமிக்கவர்களாக இருக்கலாம்’ என்று கூறி உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு நான் தடையில்லை என்று தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.

அதேபோல் அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட பரீரா(ரழி) என்ற நபிதோழி தனது அடிமைக் கணவன் முகீஸுடன்(ரழி) வாழ மறுத்தபோது, அவரது மனத்துயரத்தைக் கண்ட நபி(ஸல்) பரீராவை(ரழி) அவருடன் வாழும்படிச் சொன்னார்கள். உடனே பரீரா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் இது மார்க்கக் கட்டளையா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது மார்க்க கட்டளை இல்லை எனது பரிந்துரை என்றார்கள். ஆனால் பரீரா(ரழி) நபி(ஸல்) அவர்களின் இந்தப் பரிந் துரையை நிராகரித்து விட்டார்கள்.

மிகவும் கசப்பான உண்மை என்ன தெரியுமா?

மதகுருமார்கள் என உரிமை பாராட்டும் மதவியாபாரிகளான இந்த மவ்லவி(?) வர்க்கத் தினரிடம் காணப்படும் மிகப் பெரும், பெரும் வழிகேடுகள் என்ன தெரியுமா? எவை எல்லாம் மார்க்கத்திற்கு உட்பட்டவையோ, அவற்றில் கடுகளவும் மாற்றம் செய்யக் கூடாதோ அவற்றில் எல்லாம் மலையளவு மாற்றத்தை உண்டாக்கி மக்களை வழிகெடுப்பார்கள்.

இன்று இந்த மதகுருமார்களால் நடை முறைப்படுத்தப்படும் தர்கா சடங்குகள், தரீக் கா சடங்குகள், மத்ஹபுகள், இயக்கங்கள், அமைப்புகள், கழகங்கள், ஜாக், முஜாஹித், ததஜ, இதஜ, ஸலஃபி இவை அனைத்தும் எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் மிக வன்மையாகக் கண்டித்துக் கூறும் கடுகளவும் மாற்றத் திற்கு உட்படுத்தக் கூடாத ‘முஸ்லிமீன்’ ‘ஜமாஅத்துல் முஸ்லிமீன்’ என அல்லாஹ் கட் டளையிட்டபடி (21:92, 23:52, 22:78, 41:33) நபி (ஸல்) அவர்கள்; நடைமுறைப்படுத்திய அதாவது நபிவழிக்கு நேர்முரணானவையாகும்.

இவை அனைத்தும் நபிவழிக்கு உட்பட்டவை, மார்க்கத்திற்கு உட்பட்டவை என்றால் இவற்றிற்கு குர்ஆனிலிருந்தோ, ஹதீஸிலிருந்தோ, ஒரேயொரு ஆதாரத்தையாவது காட்டட்டுமே பார்க்கலாம். இவை அனைத்தும் ஹிஜ்ரி 400க்குப் பிறகு ஏற்பட்ட வழிகேடுகளே அல்லாமல் இவை எதுவும் நேர்வழி இல்லவே இல்லை. அதற்கு மாறாக முஸ்லிமீன், ஜமா அத்துல் முஸ்லிமீன் என்பதற்கு அல்குர் ஆனிலும், ஹதீஸிலும் எண்ணற்ற ஆதாரங்கள் இருக்கின்றன. இப்போது சிந்தியுங்கள்! இந்த மதகுருமார்களான மவ்லவிகள்(?) எவை எல்லாம் மார்க்கத்திற்கு உட்பட்டவையோ, அணுவளவும் மாற்றம் ஏற்படுத்துவது பெருங்குற்றமோ, பெருத்த வழிகேடோ அவற்றில் மலை யளவு மாற்றங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களால் மறுக்க முடியுமா?

சகோதரர் உமர் ஷரீஃபால் அவர் பின்பற் றும் ஸலஃபி கொள்கைக்கு எவ்வித சுயவிளக்கமும் இல்லாத ஒரேயொரு குர்ஆன் ஆயத்தையோ, ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீ ஸையோ எடுத்துத் தர முடியுமா? ஒருபோதும் முடியாது. அப்படியானால் குர்ஆனை, நபி வழியை உள்ளது உள்ளபடி எடுத்து நடப்பது யார்? அவரே பதில் சொல்லட்டும். இல்லா விட்டால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் தரட்டும். அவர் பின்னோர்களையோ, (கலஃபிகள்) முன் னோர்களையோ (ஸலஃபிகள்) தக்லீது செய் யாமல், நேரடியாக குர்ஆன், ஹதீஸை படித் துச் சிந்தித்தால் அவரது 4பக்க பிரசுரத்தில் எப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளை கேட் டுள்ளார் என்பது அவருக்கே விளங்கும்.

அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் என பீற்றிக் கொள்வோர் எப்படி ஆகவில்லை சுன்னத் வல் ஜமாஅத் என்ற நிலையில் ஹிஜ்ரி 400க்குப் பிறகு இடைத்தரகர்களாகிய புரோகிதர்கள் புகுத்திய புதியவைகளாகிய பித்அத்களை அரங்கேற்றி வருகிறார்களோ, அதேபோல் தங் களை ஸலஃபிகள் என பீற்றிக்கொள்வோரும் ஸலஃபுகளான அந்த முன்சென்றவர்கள் நடைமுறைப்படுத்தாத நபிவழிக்கு முரணானவற்றையே நபிவழி எனக் கூறிப் பின்பற்றுகின்றனர். அல்லது அந்த முன்சென்றவர்கள் ஸலஃபிகள் என ஒரு பிரிவு ஜமாஅத்தை அமைத்துச் செயல்பட்டதற்குரிய ஆதாரத்தைத் தந்து தங்களின் பித்அத்தான செயல் பாட்டை நபிவழிதான் என நிலைநாட்டட்டும். இந்த ஸலஃபி பிரிவு ஹிஜ்ரி 661-ல் பிறந்து 728-ல் மறைந்த இப்னுதைமிய்யா(ரஹ்) அவர் களுக்குப் பிறகு இவர்களாக கற்பனை செய்து கொண்டதாகும்.

நாமோ இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மட்டுமல்ல அனைத்து நபிமார்களும், கலீஃபாக்களும், நபிதோழர்களும் தங்களை முஸ்லிம்கள் என்று மட்டுமே அறிமுகப் படுத்தினார்கள் என்பதற்கு எண்ணற்ற குர் ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகத் தந்தே முஸ்லிமீனையும், ஜமா அத்துல் முஸ்லிமீனையும் நிலைநாட்டி வரு கிறோம்.

நபி(ஸல்) அவர்களது காலத்தில், அவர் களுக்கு முன்னயை ஆறாவது தலைமுறை குசையால் கி.பி.440-ல் நிறுவப்பட்ட தாருந் நத்வா என்ற ஜமாஅத்துல் உலமா புரோகித சபையையும், அதன் தலைவன் அபுல் ஹிக்க மையும் இழிவுபடுத்தி ஜாஹில்கள் என்றும் அபூ ஜஹீல் என்றும் அடையாளம் காட்டி, சமு தாயத்தில் ஆலிம்-அவாம் வேறுபாட்டை நிலை நாட்டும் அப்புரோகிதர்களை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஆலிம்-அவாம் வேறுபாடு இல்லாத ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தை நிலைநாட்டினார்கள். அல்லாஹ்வின் 21:92, 23:52 கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்தார்கள். அதையே தமது சமுதாயத்திற்கும் கட்டளையிட் டார்கள். நபி(ஸல்) அவர்களின் இக்கட்டளை யை அப்படியே ஏற்று முஸ்லிம் சமுதாயத் தில் ‘ஆலிம்’ என்றொரு தனிப்பிரிவு இல்லை என்று கூறி வருகிறோம். இதுவே நபி வழி. சமுதாயத்தை ஆலிம்-அவாம் என பிளவுபடுத்துவது ஷைத்தானின் வழி, அப்படிப் பிளவு ஏற்படுத்துகிறவர்களே தாஃகூத்கள் என்று அல்குர் ஆன் அடையாளம் காட்டுகிறது என்று கூறுகி றோம். எமது கூற்று தவறு என்று கூறும் மவ் லவி(?) வர்க்கம் உரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைத் தந்து மறுக்கட்டும்.

அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் என்போர் எப்படி மார்க்கத்திற்கு உட்படாத தொப்பி, தலைப் பாகையை மார்க்கமாகவும், அசலான சுன்னத்தாகவும், இல்லை பர்ழாகவும் கூறி அடம் பிடித்துக் கொண்டு, எஜமானன் அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட நபி(ஸல்) அவர்களால் கடைபிடிக்கப்பட்டு அசலான சுன்னத்தாக இருக்கும் தாடியை மழுங்கச் சிரைப்பதையும், பெரும்பாலான இமாம்கள் கசகசா தாடி வைத்து மக்களை ஏய்ப்பதையும் சரிகா ண்கிறார்களோ, அதேபோல்தான் ஸலஃபிகள் அல்லாஹ்வின், அவனது தூதரின் கட்டளைகளுக்கு முரணாக, மார்க்கத்திற்கு உட்பட்ட ‘முஸ்லிமீன்’ என்ற நிலைக்கு, நபிவழிக்கு முர ணாக தங்களை ஸலஃபிகள் எனக் கூறிக் கொண்டு, மார்க்கத்திற்கு உட்படாத 1430 வரு டங்களுக்கு முன்னர் மாதம் பிறப்பதை அறி வதற்குரிய ஒரே சாதனமாக-கருவியாக இருந்த பிறை பார்த்தலை, மார்க்கத்திற்கு உட்பட் டதாக்கி இந்த நவீன யுகத்திலும், பிறை பிறந் துவிட்டதை மிகமிகத் துல்லியமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை நிராகரித்து வானம் மிகவும் மாசுபட்ட இக்காலத்தில் 3-ம் பிறையை முதல் பிறை என பிதற்றி வருகிறார்கள். அந்த அடிப்படையில் உமர் ஷரீஃபால் வெளியிடப்பட்டதே இந்த நான்கு பக்க பிரசுரம்.

இப்போது சொல்லுங்கள் உமர் ஷரீஃப் அவர்களே! நபி(ஸல்) அவர்கள் செய்யா ததை மார்க்கமாக்கி இருப்பது நீங்களா? நாங்களா?

பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்கத்திற்கு உட்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? நபி(ஸல்) பிறையைப் பார்த்தார்களா? நபிதோழர்கள் அனைவரையும் பிறையைப் பார்த்து மட்டுமே நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்களா? ஆதாரம் தாருங்கள்.

பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது வணக்க வழிபாடு என்கிறீர்களே? ஆதாரம் தாருங்கள். நபி(ஸல்) அவர்கள் சொல்லாததை சொன்னதாக சொல்லும் உங்களுக்கு நபி(ஸல்) கடுமையாக எச்சரித்துள்ள மிகமிக ஆதாரபூர்வமான ஹதீஸ் பயத்தை-இறை அச்சத்தைத் தரவில்லையா?

வானம் பெரிதும் மாசடைந்துள்ள இன்று மூன்றாம் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து அதுதான் முதல்பிறை என்று அன்றுபோல் நாம் செயல்பட்டால் அது அல்லாஹ்விடத் தில் ஏற்றுக்கொள்ளப்படாதா? என்று கேட்டிருக்கிறீர்கள். அன்று தொலைத்தொடர்பு வசதி இல்லாத காரணத்தால் வெளியூரில் மரண மடைந்த கணவனின் மரணச் செய்தி காலதாமதமாக ஆள் மூலம் கிடைத்த பின்னரே அவ ரது மனைவி இத்தா இருந்தாள். உமர் ஷரீஃப் வாதப்படி அதுதான் நபி வழி. அன்று போல் இன்றும் வெளியூர் மரணச் செய்தி தொலைத் தொடர்பு மூலம் உறுதியாக உடனடியாகக் கிடைத்த பின்னரும் அவரது மனைவி ஆள் மூலம் செய்தி கிடைக்கும் வரை இத்தா இருக்காமல் இருப்பதை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்று உமர் ஷரீஃப் சொல்வாரா? அந்த துணிச்சல் அவருக்குண்டா?

இதோ அன்று நபி காலத்து நடைமுறை களில் ஒன்று: அஸ்மாபினத் அபீபக்கர்(ரழி) அறிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்களது காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் அதாவது நோன்பை துறந்த பின்னர் சூரியன் தென்பட்டது.

(புகாரீ ர.அ. 1959)

மேகம் சூழ்ந்த ஒரு நாளில் இன்றும் சூரி யன் மறைய இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கும் நிலையில் உமர் ஷரீஃப் நோன்பை துற ந்துவிட்டு இதுவும் நபி வழிதான் என்று வாதி டுவாரா? அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பாரா?

சகோதரர் உமர் ஷரீஃபின் நான்கு பக்க பிரசுரத்தில் அவர் எழுப்பியுள்ள அனைத்துக் கேள்விகளும் இவை போல் மிகமிக அபத்த மான-புத்திக்குச் சம்பந்தமே இல்லாத அறிவீ னமான கேள்விகளே. அவை அனைத்திற்கும் வரிக்குவரி நாம் பதில் கொடுத்தால் அவர் பெரிதும் அவமானப்பட்டுப்போவார். எனவே அப்படி வரிக்கு வரி பதில் கொடுப்பதைத் தவிர்க்கிறோம்.

அவரது கேள்விகள் அனைத்தையும் அறிவார்த்தமான கேள்விகளாக எப்போது எடுக்க முடியும் தெரியுமா? இன்று இந்த 21-ம் நூற்றாண்டில் நம்மிடம் அல்லாஹ் கொடுத்திருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிநவீன அறிவியல் கருவிகள், கணினி கணக்கீட்டு முறை இவை அனைத்தும் 1430 வருடங்களுக்கு முன்னால் நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்த நிலையில், இந்த நவீன கண்டுபிடிப்புகள் அனைத்தையும் நபி(ஸல்) புறக்ணித்து விட்டு, கண்டுகொள்ளாமல், பிறையைக் கண்ணால் பார்க்கக் காத்திருந்தார்கள் என்று உமர் ஷரீஃப் சொல்வாரேயானால், அதற்கு ரிய ஆதாரங்களைத் தருவாரானால் அவரது 4 பக்க பிரசுரத்தில் காணப்படும் கேள்விகளை நாமும் பரிசீலிக்கலாம். அப்படிச் சொல்வாரா? பின்னர் ஏன் இந்த பிதற்றலான கேள்விகள்?

சூரியனின், சந்திரனின் ஓட்டம் பற்றிய துல்லியமான கணக்கீடுகள் இல்லாத அன்றைய நபி(ஸல்) அவர்களின் காலத்தில், அன்று நபி தோழர்களிடையே ஏற்பட்ட மாதம் 29-ல் முடி கிறதா? 30-ல் முடிகிறதா? பார்ப்பது இரண் டாம் பிறையா? 3-ம் பிறையா போன்ற கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து சமுதாய ஒற்றுமை காக்க நபி(ஸல்) கூறியவற்றை, பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்குரிய ஆதாரமாக உமர் ஷரீஃபும் அவரைப் போன்றோரும் கூறுகிறார்களே! இதேபோல்தானே தொழுகை நேரங்களுக்காக சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார் த்துத்தானே ஐங்கால தொழுகைகளை நிறை வேற்றக் கட்டளையிட்டிருக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள்.

பிறை விடயத்தில் இப்படி விதண்டாவாதம் செய்யும் உமர் ஷரீஃபும் மற்ற மவ்லவிகளு ம்(?) சூரியன் விடயத்தில் ஏன் கண்டு கொள்ளாமல் விட்டனர்? பொதுவாக அஹ்ல ஹதீஸ் பிரிவினர்தான் குர்ஆன் வசனங்களை விட ஹதீஸ்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே அறியாமைதானே உமர் ஷரீஃ பிடமும் காணப்படுகிறது. அல்லாஹ் அல்குர் ஆன் 2:185-ல் ‘எவர் அம்மாதத்தை (ரமழானை) அடைகிறாரோ- (ரமழானுக்கு) சாட்சியாகிறாரோ (ஃபமன் ஷஹித) என்று கட்டளை யிட்டிருப்பதைப் புறக்கணித்து விட்டு, பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பது அறிவீனம் இல்லையா? அதாவது இன்று 1430-ல் கிடைத்திருக்கும் அதிநவீன கணினி கணக்கீட்டின் மூலம் அல் லாஹ் 2:185-ல் கட்டளையிட்டுள்ளபடி ரமழானை அடைந்துவிட்டதை-ரமழானில் நுழைந்து விட்டதைத் திட்டமாக துல்லியமாக அறிந்த நிலையில், மார்க்கத்திற்கு உட்படாத பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ்வின் கட்டளை யைப் புறக்கணிப்பதுதான் ஒரு முஃமினின் செயல்பாடா? அல்லாஹ் இதை ஏற்பானா?

அல்குர்ஆன் 55:05, 10:05, 17:12, 3:13, 25:61, 14:43, 16:12, 6:96, 21:33 போன்ற எண் ணற்ற இறைவாக்குகளில் சூரியனும், சந்திர னும் காலம் காட்டுபவை என இரண்டுக்கும் ஒரே அளவுகோலை அல்லாஹ் கொடுத்திருக்க, உமர் ஷரீஃப் போன்ற மதவியாபாரிகள் சூரியனுக்கு ஓர் அளவுகோல், அதாவது சூரிய ஓட்டத்தைப் பார்க்காமல் கடிகாரத் தைப் பார்த்து நேரம் அறிந்து ஐங்கால தொழுகை, நோன்பு ஆரம்பித்தல் முடித்தல் இவற்றை நிறைவேற்றுகிறவர்கள், சந்திரனுக்குப் பிறிதொரு அளவுகோலைக் கொடு த்து கணினி கணக்கீட்டின் மூலம் மிகமிகத் துல்லியமாக மாதம் பிறப்பதை அறிந்தாலும் அதை நிராகரித்து பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் காத்திருக்கச் சொல்கிறார்களே-மேலே குறிப்பிட்ட அனைத்து இறைக் கட்டளைகளையும் நிராகரிக்கச் சொல்கி றார்களே? இப்படிப்பட்டவர்களை நேர்வழி நடக்கும் மக்கள் அல்லாஹ்வுடைய அச்ச முடையவர்களாக ஏற்க முடியுமா?

அல்லாஹ் 2:85-ல் ‘நீங்கள் நெறிநூலில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இப்படிச் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலகில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமையிலோ அவர் களுக்கு மிகக்கடுமையான வேதனை உண்டு. இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை’ என்று எச்சரித் திருப்பது இவர்களைக் கட்டுப்படுத்தாது என்ற ஆணவமா?

குர்ஆனுக்கு நபியுடைய விளக்கத்தை ஏற்க வேண்டுமா? கணக்குக் கலைஞர்களின் விளக்கத்தை ஏற்க வேண்டுமா? என்று நையாண்டி செய்துள்ளார். உண்மையில் குர் ஆனுக்கு அல்லாஹ் நேரடியாகச் சொல்வதை யும் நபியுடைய விளக்கத்தையும் நிராகரித்து மனித விளக்கங்களைப் புகுத்துகிறவர்கள் மதவியாபாரிகளான மவ்லவி(?) வர்க்கத்தினரே என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை நம்மால் தரமுடியும். உமர் ஷரீஃப் வெளியிட் டுள்ள குர்ஆன் மொழி பெயர்ப்பையே எடுத்துக் கொள்வோம். 2-ம் அத்தியாயம் பகரா முதல் வசனம்: அலிஃப், லாம், மீம் இதற்கு உமர் ஷரீஃப் சரிகண்டு எழுதியுள்ள விளக்கம்.

‘அல்லாஹுத்தஆலா வானவர் ஜிப்ரயீல்-அலைஹிஸ்ஸலாம்-அவர்கள் மூலமாக நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திரு குர்ஆனாகிய’ என்பதாகும். இந்த விளக்கம் அல்லாஹ் கொடுத்ததா? அல்லாஹ்வுடைய ரசூல் கொடுத்ததா? என்ன பதில்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அது போல் ஒரேயொரு ஆதாரம். இதேபோல் அல்லாஹ் சொல்லாத, அல்லாஹ்வுடைய ரசூல் சொல்லாத, குறிப்பிட்ட குர்ஆனின் வசனம் நேரடியாகச் சொல்லாத பல ஆயிரக்கணக் கான விளக்கங்களை, மனிதக் கருத்துக்களை அவர் சரிகண்டு வெளியிட்டுள்ளதை எம்மால் சுட்டிக் காட்ட முடியும்.

இவர் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பில் மட்டுமல்ல. மதவியாபாரிகளின் அனைத்து குர்ஆன் மொழி பெயர்ப்புக்களிலும் அவர்கள் சார்ந்திருக்கும், எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணான (3:103,105, 6:153, 159, 12:108, 30:32, 42:13,14) பிரிவுகளுக்கு-பிளவுகளுக்கு ஏற்றவாறு தங்கள் சொந்த மனிதக் கருத்துக்களை புகுத்தி இருப்பதை எம்மால் புள்ளி விபரத்துடன் சுட்டிக் காட்ட முடியும்.

இப்போது 9:37 என்ன கூறுகிறது என்று பார்ப்போம். ‘(மாதங்களை) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் நிராகரிப்பையே அதிகப் படுத்துகிறது’, என்று அன்றைய நிராகரிப் பாளர்கள் போர் செய்வதற்குச் சாதகமாக மாத ங்களை முன்பின் ஆக்கியதையே இறை நிரா கரிப்பு என்று அல்லாஹ் கூறி இருக்கிறான் உண்மைதான். அதனால் இந்த மதவியாபா ரிகள் என்ன சொல்ல வருகிறார்கள்? முஸ்லிம் மத வியாபாரிகள் தங்களின் சுய ஆதாயத்தி ற்காக மாதங்களை முன்பின் ஆக்கிக் கொள்ளலாம் அது தவறு இல்லை. முஸ்லிம்களை இந்த 9:37 இறைக் கட்டளை கட்டுப்படுத்தாது என்கிறார்களா? அப்படியானால் உலகம் அழியும் வரை அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தை (3:19,85) விளக்கும் அல்குர்ஆனில் 9:37 இடம் பெறவேண்டிய அவசியம் என்ன? அல்லாஹ் தேவை இல்லாமல் சென்று போனவர்களின் இக்குற்றச் செயலை அல்குர்ஆனில் இடம் பெறச் செய்துள்ளானா? அந்த எண்ணத்தில்தானே அல்குர்ஆன் 7:80, 81, 11:78-83, 15:71-77 இறை எச்சரிக்கைகள் முஸ்லிம்களாகிய எங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறி அத்தீச்செயலை தங்களின் மதர ஸாக்களில் சிலபசில் (Syllabus) இல்லாத ஒரு பாடமாக வைத்திருக்கிறார்களா?

அன்றைய நிராகரிப்பாளர்கள் தங்கள் வச திக்கு ஏற்ப போர் புரிய மாதங்களை முன்பின் ஆக்கினார்கள். இன்றோ இந்த மதவியாபாரி கள் தங்களின் வியாபாரத்தை கனஜோராக நடத்த மாதங்களை முன்பின் ஆக்குகிறார்கள். ரமழான் மாதம் பிறந்து விட்டது என்பதை 100%க்கு 200% மிகமிகத் துல்லியமாக அறிந்த நிலையில், அதை அவர்களும் ஒப்புக்கொண்ட நிலையில், நபி(ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை கடமையாக ஆக் காத நிலையில் இவர்களாக அதை கடமையாக்கிக்கொண்டு ரமழானின் ஆரம்ப நாட் களை ஷஃபான் என்றும் ஷவ்வாலின் ஆரம்ப நாட்களை ரமழான் என்றும் கூறி மாதங்களை முன்பின் ஆக்குவது இறை நிராகரிப்பு அல்லாமல் வேறு என்ன? 12:111, 15:75,77 பார்த்து படிப்பினை பெறுவார்களா?

அதேபோல் 2:189 குர்ஆன் வசனத்தில் வரும் வீடுகள் என்பதற்கும் வாசல்கள் என்பதற்கும் பிறையின் இருப்பிடங்கள் என்று கணக்கு கலைஞர்கள் விளக்கம் கொடுக்கிறார்களே இது யார் கொடுத்த விளக்கம்? குர் ஆனுக்கு நபியுடைய விளக்கத்தை ஏற்க வேண்டுமா? கணக்கு கலைஞர்களின் விளக்கத்தை ஏற்க வேண்டுமா? என்று நையாண்டி செய்துள்ளார் உமர் ஷரீஃப். இப்போது 2:189 என்ன கூறுகிறது பாருங்கள்.

‘…மேலும்(நம்பிக்கையாளர்களே! இஹ் ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிட மாட்டீர்கள். எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின் றாரோ அவரே நல்லவர். ஆதலால் நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலை வாசல்களின் வழியாக(வே) வாருங்கள்…..’

இந்த வசனத்தில் இவர் அடைப்புக் குறிக்குள் சேர்த்துள்ளவை அல்லாஹ் சொன்னதா? ரசூல் சொன்னதா? ஆதாரம் தருவார்களா? மீக்காத்தில் இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை நிறை வேற்றிவிட்டு இஹ்ராமை கலைந்து விட்டு வீட்டுக்கு வருவார்களா? இஹ்ராமுடன் வருவார்களா? சொல்லுங்கள் உமர் ஷரீஃப் அவர்களே! அன்றைய மக்கள் அப்படித்தான் விள ங்கினார்கள் என்றே சொல்ல முடியும். 2:134, 141 இறைவாக்குகள் தௌளத் தெளிவாக நேரடியாக முன்னைய நபிமார்களைப் பற்றிக் கூறும்போதே ‘அந்த சமுதாயம் சென்று விட் டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களு க்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்’ என்று திட்ட மாகச் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இறைவாக்குகளை நிராகரித்துவிட்டு முன்னோர்களின் மனிதக் கருத்துக்களை ஆதாரமாக எடுக்கிறீர்களே? அல்லாஹ் ஏற்பானா? நபி(ஸல்) அவர்களை நாம் பின்பற்றுகிறோம் என்றால் அதற்கு 16:44, 64, 2:213 இன்னும் எண்ணற்ற இடங்களில் அவர் களைப் பின்பற்றச் சொல்லி அல்லாஹ் கட் டளையிடுகிறான். 52:48-ல் கூறுவது போல் நபியை தன் கட்டுப்பாட்டில், கண்காணிப்பில் வைத்து, நபியின் மனிதக் கருத்து நுழையும்போது அதை வஹீமூலம் தெளிவுபடுத்தி அவற்றை மார்க்கத்திலிருந்து நீக்கினான் என்பதற்கு பல குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக இருக்கின்றன. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு கலீஃபாக்களோ, நபிதோழர்களோ, தாபியீன்களோ, தபஅ தாபியீன்களோ, இமாம்களோ அவ்வாறு அல்லாஹ்வின் கண் காணிப்பில் இருந்தார்கள். அவர்கள் தவறும் போது- மார்க்கத்தில் மனிதக் கருத்தை நுழைக்கும்போது அல்லாஹ் வஹீ அனுப்பி அவர்களைத் திருத்தினான் என்பதற்கு ஆதாரம் தருவீர்களா? அப்படி ஒரு ஆதாரம் இல்லவே இல்லை. அப்படியானால் நபி(ஸல்) அவர் களுக்குப் பிறகு யாருடைய கருத்தாக இருந்தாலும் குர்ஆன், ஹதீஸுக்கு ஒத்திருந்தால் ஏற்கலாம். முரண்பட்டால் நிராகரிப்பதே நமது கடமை. அவர்கள் எப்படிப்பட்ட அறிஞர்கள், நாதாக்கள், அவர்கள் தவறாக விளங்கி இரு க்க முடியுமா என்று கூறி, அவர்களின் சுய கருத்துக்களை ஏற்றால் அது 7:3, 18:102-106, 33:36 இறைக் கட்டளைகள்படி இறை நிராகரிப்பாகும். 42:21, 49:16படி பெருங்குற்ற மாகும். முன்னோர்களைப் பின்பற்றுவது பெரும் வழிகேடு என்று கூறும் சுமார் 23 இறைவாக்குகளை நிராகரிப்பதாகும்.

காலையில் பிறந்து மாலையில் மறையும் பிறையைப் பார்த்துவிட்டு, பிறை பிறந்துவிட்டது, நாள் ஆரம்பித்து விட்டது என்று கூறி நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்று கூறுகிறீர்களே, இதற்கு நேரடியாகக் கூறும் ஒரேயொரு குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ உங்களால் காட்ட முடியுமா? நாள் பஜ்ரிலிருந்து ஆரம்பிக்கிறது என்பதற்கு எண் ணற்ற குர்ஆன் வசன ஆதாரங்களையும், ஹதீஸ் ஆதாரங்களையும் பலமுறை கொடுத்து விட்டோம்.

அல்குர்ஆன் நேரடியாகக் கூறுபவையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுபவையும் உங்களுக்கு முக்கியமாகத் தெரியவில்லை. முன்னோர்கள் காலையில் பிறந்து மாலையில் மறையும் பிறையைப் பார்த்து விட்டு, பிறை பிறந்துவிட்டது நாள் ஆரம்பமாகிவிட்டது என்று கூறியிருப்பதுதான் உங்களுக்கு மார்க்கமாகத் தெரிகிறது. நீங்களும் குறிப்பிட்டுள்ள 33:36 இறைக் கட்டளைப்படி இப்படிப்பட் டவர்கள் நேர்வழியில் இருக்க முடியுமா என் பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

நாளினுள், மாதத்தினுள் இப்போதைய நடைமுறைப்படி பின்வாசல் வழியாக நுழையாமல் முன்வாசல் வழியாக நுழைய வேண் டும் என்று கூறுவது குர்ஆனுக்கோ, ஆதாரபூர் வமான ஹதீஸ்களுக்கோ முரண்பட்டது அல்ல என்பதை அல்லாஹ்வின் அச்சமுடையவர்கள் விளங்கமுடியும். 36:39-ல் மனாசில்-தங்கு மிடங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்து ‘லாநக்த்துபு வலா நஹ்சுபு’ என்ற அரபி வாசகத்தை எப்படி தமிழ்ப்படுத்தியுள்ளீர்கள் பாருங்கள்.

‘நாங்கள் உம்மி சமுதாயம் (யூதர்கள் அல்லர், கிறிஸ்தவர்கள் அல்லர்) நாம் (நமது வணக்க நாட்களை முன்கூட்டி) எழுதிக் கொள்ளமாட்டோம். இன்னும் கணக்கிட்டுக் கொள்ள மாட்டோம்’ என்று தெளிவுபட கூறிய பின் இவர்கள் (கணக்கின்படி செல்பவர்கள்) எந்த சமூகத்தின் வழிமுறையை பின்பற்ற விரும்புகிறார்கள்? நபி அவர்களின் சமுதாயத்தையா அல்லது யூத கிருஸ்துவ சமுதாயத்தையா? என்று கேட்டுள்ளார் உமர் ஷரீஃப்.

இதுதான் அதன் பொருளா? அப்படியா கூறப்பட்டுள்ளது. 2:159, 161, 162 இறைக் கட்டளைகளை அப்படியே நிரூபித்துள்ளார் உமர் ஷரீஃப். மனிதர்களுக்காக நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும், அதனை நாம் நெறிநூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும்-யார் மறைக் கிறார்களோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களை சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்’ என்ற நிலைக்கு ஆளாகி இருக்கிறார்.

நாம் உம்மி சமுதாயம் எழுதுகிறவர்களும் இல்லை கணக்கிடுகிறவர்களும் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பத ற்கு அதுவா விளக்கம். அவரது கூற்றுப்படி 1430 ஆண்டுகளுக்கு முன்னர், இன்று அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கும் அறிவியல் நுட்பங்களையும், அறிவியல் முன்னேற்றங் களையும், கணினி கணக்கீட்டு முறையையும் முஸ்லிம்களுக்குக் கொடுக்காமல் யூத கிறி ஸ்தவர்களுக்கு மட்டுமே கொடுத்திருந்தான். நபி(ஸல்) அந்த கணக்கீட்டு முறையை நிராக ரித்து விட்டு பிறையைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறுகிறாரா உமர் ஷரீஃப். இதைவிட அறியாமை பிதற்றல் இருக்க முடியுமா?

அல்குர்ஆனையும், இறுதித் தூதரையும் அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்தானா? அல்லது முஸ்லிம்களுக்கு மட்டும் அனுப்பி வைத்தானா? ‘ஹுதன் லின்னாஸ்’ என்றும் ‘ரஹ்மத்துன் லில் ஆலமீன்’ என்றும் குர்ஆன் கூறுவதை எப்படி விளங்கி இருக்கிறீர்கள்? அன்று முஸ் லிம்கள் மட்டும்தான் உம்மிகள், யூத கிறித்தவர்கள் உம்மிகள் அல்லர் என்கிறீர்களா? ‘லன்நக்துப வலன் நஹ்சுப’ என்று அரபி வாசகம் இருந்தால் மட்டுமே எழுதிக்கொள்ள மாட்டோம், கணக்கிட்டுக் கொள்ள மாட்டோம் என்று மொழிபெயர்க்க முடியும்.

இவர் தனது கூற்றில் இப்படி எழுதி இருப்பது போல் உண்மையாளராக இருந்தால், இவர் மாதாமாதம் பிறையை கண்ணால் பார் த்து மட்டுமே நாட்களை கணக்கிடவேண்டும். அப்படியா செய்கிறார்? மாத, வருட காலண் டர்களைப் பயன்படுத்துகிறாரா? இல்லையா? அதுவும் யாருடைய காலண்டரைப் பயன் படுத்துகிறார்? இந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் சோதிட பஞ்சாங்க அடிப்படையில் கணித்து (கணக்கிட்டு அல்ல) வைத்துள்ளபடி அச்சடிக்கப்பட்ட காலண்டர்களையே பின்பற்றுகிறார். நோன்பிற்கும், பெருநாட்களுக்கும் மட் டுமே பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அதாவது இரட்டை வேடம் போடுவதோடு அவரே இந்து, யூத, கிறித்தவ சமுதாயங்களைப் பின்பற்றுகிறார். 4:112-ல் அல்லாஹ் கூறுவதுபோல் தான் செய்யும் பெருந்தவறை எங்கள் மீது தூக்கிப் போடுகிறார்.

இந்துக்களிடம், யூதர்களிடம், கிறித்தவர்களிடம் இருக்கும் சோதிட பஞ்சாங்க அடிப்படையில் கணிக்கப்பட்ட நாள் காட்டியை நாங்கள் ஒருபோதும் ஏற்பவர்கள் இல்லை. அன்று இல்லாமல் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் பாக்கியமான நவீன அதிநுட்ப அடிப்படையில் அமைந்த மிகமிகத் துல்லியமான கணினி கணக்கீட்டின் அடிப்படையில் தயாரான, எக்காலத்திற்கும் கூட்டலோ, கழித்தலோ எவ்வித குறைபாடுகளோ இல்லாத எண்ணற்ற அல்குர்ஆன் வசனங்கள் (55:05,10:05, 17:12, 3:13, 25:61, 14:43, 16:12, 6:96, 21:33) அடிப்ப டையிலான காலண்டரையே-நாள்காட்டியையே நாங்கள் பின்பற்றுகிறோம்.

நாள் மாலையிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற அடிப்படையிலும் சோதிட பஞ்சாங்க அடிப்படையிலும் தயாரான இந்து, யூத காலண்டரை மதவியாபாரிகளான மவ்லவி(?)வர்க்கமும் அவர்களை கண்மூடி பின்பற்றும் முஸ்லிம்களுமே பின்பற்றுகின்றனர்.

இன்று ஏற்படுவது போன்று அமாவாசை நபியின் காலத்தில் ஏற்படத்தானே செய்தது. அப்போது அதை அடுத்த நாள் முதல் பிறை என்பது நபிக்குத் தெரியாமலிருந்ததா? என்று கேட்டுள்ளார். உமர் ஷரீப்.

அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பிறை என்று எப்போது சொன்னோம்? எதில் எழுதி இருந்தோம்? இரவு 11.30க்கு பிறகு அமா வாசை ஏற்பட்டால் அது அடுத்த நாளும் நீடிக்கும். அப்போது அமாவாசைக்கு அடுத்த நாள் பிறை என்று சொல்ல முடியுமா? நாங் கள் நடப்பு மாதம் முடிவுற்று புதிய மாதம் ஆரம்பிக்கும் அதாவது சூரியன், சந்திரன், பூமி மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டிற்கு வந்து கன்ஜங்சன் ஆகும் அந்த நொடியிலும் ஒரு பகுதியையே குறிப்பிடுகிறோம். உதாரணமாக 1430 துல்கஃதா முடிந்து துல்ஹஜ் ஆரம்பிக்கும் 16.11.2009 திங்கள் 19:14:47 ருவு சர்வதேச நேரத்தில் அதாவது ஒரு விநாடி யின் ஒரு சிறிய பகுதியில் கன்ஜங்சன் இடம் பெறும் நாளுக்கு அடுத்த நாள் முதல் பிறை என்றே கூறுகிறோம். கன்ஜங்சன் அமாவாசை போல் சமயங்களில் இரண்டு தேதி, கிழமைகளிலும் பெரும்பாலும் சில மணி நேரங்களிலும் இடம் பெறுவதுபோல் கன்ஜங்சன் இடம் பெறாது. அது ஒரு வினாடியின் ஒரு சிறு பகு தியில் மட்டுமே இருக்கும். 1430 வருடங்க ளுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களது காலத்தில் அமாவாசையை அறிந்திருந்தார்களே அல்லாமல் கன்ஜங்சன் ஏற்படும் நொடி நேரத்தை அன்று துல்லியமாக அறிந்து கொள் ளும் கணினி கணக்கீட்டு முறை இருக்கவில்லை. கணினி கணக்கீட்டு முறையையும், இந்து, யூதர்களிடம் இருக்கும் பஞ்சாங்க, சோதிட கணிப்பீட்டையும் போட்டு மக்களைக் குழப்ப வேண்டாம் என்று உமர் ஷரீஃபையும், மற்றும் மவ்லவிகளையும்(?) கேட்டுக் கொள்கிறோம்.

திருகுர்ஆனுக்கு மனோ இச்சையின் அடிப் படையில் விளக்கம் கொடுப்பவனுக்கு நரகம் உண்டு என நபி(ஸல்) எச்சரித்துள்ளார்களே அதைப்பற்றிய பயம் கணக்கு கலைஞர்க ளுக்கு இல்லையா? என்று நையாண்டி செய் துள்ளார் உமர் ஷரீஃப். அவரும் சரிகண்டு அவரே வெளியிட்டுள்ள குர்ஆன் தமிழாக் கத்தை சுய சிந்தனையுடன் படிப்பவர்கள் மனோ இச்சையின் அடிப்படையில் விளக்கம் கொடுத்துள்ளது யார் என்பதை விளங்க முடியும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் உமர் ஷரீஃப் வெளியிட் டுள்ள தமிழாக்கத்தின் ஆரம்பத்திலேயே அலீஃப், லாம், மீம் என்று மூன்று எழுத்துக்களுக்கும் மனோ இச்சையின் அடிப்படையில் சுய விளக்கம் கொடுத்துள்ளதை எடுத்துக் காட்டியுள்ளோம்.

நாமோ மார்க்கத்திற்கு உட்பட்டவற்றில் குர்ஆன், ஹதீஸில் இருப்பதற்கு எவ்வித சுய விளக்கமும் கொடுக்காமல் உள்ளது உள்ள படி நடக்கக் கோருகிறோம். மார்க்கத்திற்கு உட்படாத அதே சமயம் மார்க்கத்தை நிலை நாட்டுவதை எளிமைப்படுத்தும் அறிவியல் முன்னேற்றங்களை எடுத்து நடப்பதை மார்க்கம் தடை செய்யாததால் அவற்றை ஏற்று நடக்கச் சொல்கிறோம். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரியனைப் பார்த்து நேரம் அறிந்து தொழுததற்கு மாறாக இன்று கடிகாரம் பார்த்து தொழுவதுபோல், ஒட்டகத்தில் ஹஜ் ஜுக்கு போனதற்கு மாறாக விமானத்தில் செல்வது போல், கணவனின் வெளியூர் மரணச் செய்தி காலம் தாழ்ந்து ஆள் நேரில் வந்து தகவல் சொன்ன பின்னர் மனைவி இத்தா இருந்ததற்கு மாறாக தொலைபேசித் தகவல் சுடச்சுடக் கிடைத்து உடன் இத்தா இருப்பது போல், பிறையைப் புறக்கண்ணால் பார்த்து காலம் தாழ்ந்து நோன்பு ஆரம்பித்து முடித்ததற்கு மாறாக கணினி கணக்கீட்டின் மூலம் முன்கூட்டிய ரமழான் பிறப்பதை அறிந்து, அல்லாஹ் 2:183, 184,185-ல் கட்டளையிட்டிருப்பது போல் குறிப்பிட்ட ரமழானில் மட்டும் நோன்பு நோற்பதை வலியுறுத்துகிறோம். இதை குர்ஆன், ஹதீஸுக்கு முரண் என்பவர் கள்தான் குர்ஆன், ஹதீஸுக்கு முரணாகவும், மனோ இச்சைப்படியும், தங்களின் புரோகிதத் தொழிலை தற்காத்துக் கொள்ளும் சுயநல, தீய நோக்குடனும்; செயல்படுகிறார்கள் என் பதை கண்மூடி அவர்கள் பின்னால் செல்லா மல் சுயமாகச் சிந்திப்பவர்கள் விளங்க முடியும்.

கணக்கின்படிதான் முதல் பிறயை சரியாக அடைய முடியும் என்று இருப்பின் பின்பு ஏன் நபி(ஸல்) அவர்கள் அந்த கணக்கை அறியவில்லை? அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏன் கணக்கைக் கற்றுக் கொடுக்கவில்லை? என்று அறிவீனமாகக் கேட்டு 49:16-ல் அல்லாஹ் சொல்வதுபோல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்படுகிறார் உமர் ஷரீஃப்  அல்லாஹ் அவரை மன்னிப்பானாக. இந்த 21-ம் நூற்றாண்டில் இருக்கும் மின்சார வசதி, வாகன விதி, அதி நவீன வசதி, சந்திரனுக்கே ஆள் அனுப்பும் வசதி, கணினி கணக்கீட்டு வசதி இப்படிப்பட்ட தொழில் நுட்பங்களை நபி(ஸல்) அவர்கள் ஏன் அறியவில்லை? அல்லாஹ் ஏன் இவற்றைக் கற்றுக் கொடுக்கவில்லை? என்று உமர் ஷரீஃப் கேட்டாலும் கேட்பார் போலும். அல்லாஹ் பாதுகாப்பானாக. இன்று அவர் தனது அலுவலகத்தில் புத்தகங்களை கோர்வை செய்ய வைத்திருக்கும் பல கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள் அன்று நபி(ஸல்) அவர்களது காலத்தில் அல்லாஹ் ஏன் கொடுக்கவில்லை என்று கேட்பார் போலும்.

சந்திர கணக்குகளை நபியோ நபி தோழர்களோ அறியாமல் இருந்தார்கள் என்று கூறுவது கூறுபவர்களின் அறியாமையை வெளிப்ப டுத்தவில்லையா? என்று கேட்டு உமர் ஷரீஃப் தனது அறியாமையைத்தான் வெளிப்படுத்தியுள்ளார். அரபி மதரஸாக்களில் தண்டச் சோறு சாப்பிட்டு, உஸ்தாது என்ற பெயரால் மனிதர்களுக்கு முன் மண்டியிட்டு அவர்கள் சொல்வது அனைத்தும் வேதவாக்கு(?) என்று குருட்டுத்தனமாக நம்பி, அந்த நம்பிக்கையி லேயே சில வருடங்களைக் கழித்துவிட்டு, மவ்லவி(?) என்ற காகிதப் பட்டத்துடன் வெளி வரும் இந்த மக்கு மவ்லவிகளுக்கு(?) மார்க்கமும் சரியாகப்புரியாது இந்த உலகமும் சரி யாகப் புரியாது பொது மக்களை, அவாம்கள்-பாமரர்கள்-மார்க்கம் தெரியாதவர்கள் என்று கூறிக்கொண்டே அவர்களிடமே கையேந்தி பிழைப்பு நடத்திக் கொண்டு ஆணவம் பேசுகிறவர்கள் இந்த மவ்லவிகள்(?) என்று நாம் கூறி வருவதை உண்மைப்படுத்தியுள்ளார்.

மனாருல் ஹுதா மாத இதழில் இவர்களின் இந்த மதரஸா கல்வியை குருகுல கல்வி என்று குறிப்பிட்டிருப்பதே எமது இந்தக் கூற்று க்குப் போதிய ஆதாரமாகும். அத்தியாயம் 73:20-ல் இறைவன் சொல்வதைக் கூர்ந்து கவனித்தால் பல உண்மைகள் தெரிய வரும். அல்லாஹ்தான் இரவையும் பகலையும் கணக் கிட்டு வைத்துள்ளான். நீங்கள் அதனைச் சரி வர கணக்கிட முடியாது என்பதும் அவனுக்கு தெரியும், என்று எழுதி சந்திர மாதத்தை துல்லியமாகக் கணக்கிட முடியாது என்று கூறி தனது அறிவீனமான வாதத்தை நிலைநாட்ட முற்பட்டுள்ளார் உமர் ஷரீ.ஃப். இரவும் பகலும் ஏற்படுவது சூரியனின் அடிப்படையிலா? சந்திரனின் அடிப்படையிலா? இந்த விபரம் தெரியாதவர்தான் அறிவீனமான 4-பக்க பிரசுரத்தை வெளியிட்டுள்ளார். இரவும் பகலும் ஏற்படுவதற்கும் சந்திரனுக்கும் சம்பந்தமே இல்லை. அது முழுக்க சூரியன் சம்பந்தப்பட்டது. அதனால் தான் சூரிய அடிப்படையில் கணக்கிடும்போது நான்கு வருடங்களுக்கொரு முறை ஒருநாளைக் கூட்டியும், 127 வருடங்களுக்குப் பிறகு ஒரு நாளைக் குறைத்தும் கணக்கிட வேண்டி யுள்ளது. அந்த சூரிய காலண்டரைத் தான் இவர்கள் தூக்கிப்பிடிக்கிறார்கள்.

நாங்களோ சூரிய காலண்டர் முறை தவறு குறையுள்ளது. கூட்டியும், குறைத்தும் கணக் கிட வேண்டியுள்ளது. ஆனால் சந்திரக் கால ண்டரில் அப்படி எவ்வித குறைபாடும் இல்லை. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட் டல், கழித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த அளவு மிகமிகத் துல்லியமானது. அது வே எவ்வித குறைவுமின்றி நடைமுறைப்படுத்தத் தகுதியான மனித குல காலண்டர் என்றே கூறுகிறோம்.

சந்திர காலண்டரை உலகில் நடைமு றைக்குக் கொண்டு வருவதாக இருந்தால், இந்த முல்லாக்கள் சொல்வது போல் மாதா மாதம் பிறையைக் கண்ணால் பார்த்துக் கொண்டும், அன்றாட அலுவல்களுக்கு கிரி கோரியன் சூரிய காலண்டரையும், இந்து, யூத சோதிட பஞ்சாங்க அடிப்படையிலான பிறைக் காலண்டரையும் நடைமுறைப்படுத்தும் கால மெல்லாம் அது சாத்தியப்படவே செய்யாது. என்று இந்த முல்லாக்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை-குர்ஆன் ஹதீஸ் போதனைகளை உள்ளது உள்ளபடி ஏற்று அதன்படி செயல்பட முன்வருகிறார்களோ சந்திர கால ண்டரை சரியாகக் கணக்கிட்டு நடைமுறைப்படுத்த முன் வருகிறார்களோ அப்போதுதான் முஸ்லிம் சமுதாயத்தைப் பிடித்துள்ள பீடை அகன்று சமுதாயம் மீண்டும் உன்னத சமுதாயமாக மாறும். முறைப்படி அல்லாஹ் அஞ்சி நடக்க முற்படும். அதனால் அல்லாஹ் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தருவான். இன்ஷா அல்லாஹ்.

நவீன கணக்கு கலைஞர்களின் சிந்தனை க்குரிய வாசலை திறந்து விட்டால் ஹதீஸை முற்றிலுமாகப் புறக்கணிக்கின்ற நிலை உரு வாகி விடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்று பிதற்றியுள்ளார். அதாவது அவரது புரோகித இனத்தை தக்க வைத்துக்கொள்ள முற்பட்டுள்ளார் உமர் ஷரீஃப்.

அல்லாஹ் தனது நெறிநூல் அல்குர் ஆனில் பல இடங்களில் சிந்திக்கமாட்டீர்களா? ஆராயமாட்டீர்களா? உங்கள் இதயத்தில் பூட்டா போடப்பட்டிருக்கிறது என்று கேட்கிறான். அல்லாஹ் மக்களைச் சிந்திக்க வற்புறுத்துகிறான் மேலும் அல்குர்ஆன் அல்ஃபுர்கான் 25:73-ல் ‘இன்னும் அவர்கள், தங்கள் இறை வனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டாலும், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார் கள்(சிந்திப்பார்கள்)’ என்று நல்லடியார்களை பாராட்டிச் சொல்கிறான். மேலும் 29:69-ல் ‘எவர்கள் நம்முடைய வழியில் முயல்கிறார்களோ (இஜ்திஹாது) நிச்சயமாக அவர்களை நம்மு டைய நேரான வழிகளில் நாம் செலுத்து வோம்ளூ நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய் வோருடன் இருக்கிறான்’ என்று உறுதி அளிக்கிறான்.

சகோதரர் உமர்ஷரீஃபோ இந்த அனைத்து இறைக் கட்டளைகளையும் புறக்கணித்து நிராகரித்து (குஃப்ர்) முஸ்லிம்களின் சுய சிந் தனைக்குப் பூட்டுப் போட்டு புரோகிதர்களாகி அவர்கள் பின்னால் கண்மூடி வர வழிவகை செய்கிறார்.

உண்மை என்ன தெரியுமா? ஆதாரபூர் வமான ஹதீஸ்கள் வெறும் ஆறாயிரத்தைத் தாண்டாத நிலையில் சுமார் 10 லட்சம் பொய் யான ஹதீஸ்களை கற்பனை செய்து மக்களி டையே பரப்பி இருக்கிறார்கள் இப்புரோகிதர்கள். அது போதாதென்று குர்ஆன் விரிவுரை (தஃப்ஸீர்) ஹதீஸ் விரிவுரை (தஃப்ஸீர்) என்ற பெயரால் கற்பனைகளையும், கட்டுக் கதைகளையும், யூத கிறிஸ்தவர்களின் கட்டு க்கதைகளையும் (இஸ்ராயீலியத்) நிரப்பி வால்யூம், வால்யூமாக புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள் இந்த முல்லாக்கள். முஸ்லிம்கள் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்தால் எங்கே தங்களின் தில்லுமுல்லுகள் அம்பலப்பட்டுப் போய் விடுமோ, தங்களின் புரோகித இனம் அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் முஸ்லிம்களின் சுயசிந்தனைக்கு முட்டுக்கட்டைப் போடுகிறார்கள். இவர்களின் இந்த தில்லு முல்லுகள் காரணமாகத்தான் சிந்திக்கும் முஸ்லிம்கள் ஹதீஸை நிராகரிக்கும் மோச மான நிலை உருவாகிறது. ஆக ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட ஆலிம்- அவாம் வேறுபாட்டை உண்டாக்கி 21:92, 23:52 இறைக்கட்டளை களுக்கு முரணாக சமுதாயத்தைப் பிளவு படுத்தி உலக ஆதாயம் அடையும், மதவியா பாரிகளான புரோகித மவ்லவிகளே(?) முழு முதல் காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்பதே சுய சிந்தனையாளர்கள் மறுக்க முடியாத உண்மையாகும்.
 

Previous post:

Next post: