பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்

in 2009 டிசம்பர்

‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’
அல்குர்ஆன் 3:61

1. அல்லாஹ்வின் மீது ஆணையாக ‘ஸலபி’ பிரச்சினை காரணமே இல்லை, பல நண்பர்கள் ஒருவரை நிர்வாகியாக ஏற்படுத்தித் தொடங்கிய பத்திரிகைக்கு தன்னை உரிமையாளர்; என சட்டப்படி பதிவு செய்து கொண்டதும், அதை நாம் தட்டிக் கேட்டும் மாற்ற முன் வாரததுமே காரணமாகும் என 26.12.1987 பிரசுரத்திலும்,

2. அடுத்தவருக்குச் சொந்தமானதை தன்னுடையதாக்கிக் கொண்டதும் அமானித மோசடியும் தான் பிளவு ஏற்பட முக்கிய காரணம், இதை எங்கேயும் நான் நிரூபிக்க முடியும் என்பதை உறுதியாக கூறுகிறேன் என புரட்சி மின்னல் பிப்ரவரி 1988 பக்கம் 120லும்,

3. 29.7.87-ல் நூருல் அமீன், மற்றும் இளைஞர் இயத்தினருக்கு எழுதிய கடிதத்தில் சுமார் 20 அவதூறுகளை எழுதியும்,

4. 1987லிலிருந்து இன்று 2009 வரை கடந்த 23 வருடங்களாக உலகம் முழுவதும் அவரும், அவரது கைத்தடிகளும், அவரது பக்தர்களும் பரப்பித் திரிந்த பெரும் அவதூறுகளையும்,

5. இவை அனைத்திலும் முத்திரையாக கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாகி, தன்னால் தூண்டிவிடப்பட்டவர்களையே காட்டிக் கொடுத்தும், இன்றைய நடைமுறைப்படியுள்ள மாமூல்களைக் கொடுத்தும் தன்னை விடுவித்துக் கொண்டு சாட்சி சொல்லும்போது, அந்த வழக்கிற்கும் எனக்கும் கடுகளவும் சம்பந்தமில்லாத என்னைப்பற்றி ‘(அந்நஜாத்) பத்திரிக்கைக்காக வாங்கப்பட்ட சொத்தை பொருளாளர்(அபூ அப்தில்லாஹ்) தன் பெயரிலேயே பதிவு செய்து கொண்டதால், அந்த துரோகத்தைப் பொறுக்க முடியாமல் நான் நஜாத் பத்திரி கையிலிருந்து ஒரு வருடத்திலேயே வெளியேறி விட்டேன் என்று துணிந்து அப்பட்டமாக அவதூறு கூறியும், அதையே நாடு முழுவதும் பரப்பியும் திரிந்த பொய்யன் பீ.ஜை. 21.11. 2009 அன்று திருச்சி து.ஆ.ஐ. குற்றவியல் நீதி மன்றத்தில் கோர்ட் உத்தரவுப்படி ஆஜராகி, ‘நான் அவ்வாறு கூறவில்லை’ (அவதூறு பரப்ப வில்லை) என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், பொய் வாக்குமூலம் கொடுத்தும், மாமூல் கொண்டு குறுக்கு விசாரணையை தவிர்த்தும் விடுதலையாகிவிட்டார்.

எங்கேயும் இந்த அவதூறுகளை நிரூபிப்பேன் என சவால்விட்டுத் திரிந்த பீ.ஜை இறுதியில் தஞ்சம் அடைந்தது பொய் வாக்குமூலத்தில். அல்குர்ஆன் 7:175-179படியுள்ள அவரது இழிநிலை சுயசிந்தனை யாளர்கள் அறிந்ததே. ஆயினும் அவரது கைத்தடிகளும், பக்தர்களும் இந்த அவதூறுகளை நன்கு அறிவார்கள். காரணம் அவர்களும் சேர்ந்துதான் இந்த அவதூறுகளை உலகம் முழுவதும் பரப்பினார்கள். இந்த நிலையில் பொய்யன் பீ.ஜை. நீதிமன்றத்தில் நீதிபதிமுன் இந்த அவதூறுகளை நான் பரப்பவில்லை என பகிரங்கமாக பொய் வாக்குமூலம் கொடுத்த பின்னரும், பீ.ஜை. நேர்மையாளர், உண்மையாளர் என நம்புகிறவர்களுக்கு சுய சிந்தனை இல்லவே இல்லை. முகல்லிதுகள் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியுமா?

தற்செயலாக விபச்சாரத்தில் சிக்கியதால் மறுமை தண்டனைக்குப் பயந்து மீண்டும் மீண்டும் பல முறை நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு மரண தண்டனையையே பெற்ற ஒரு பெண்மணியின் ஈமான் இறை நம்பிக்கை எங்கே? கேவலம் ஓரிரு வருட சிறைத் தண்டனைக்குப் பயந்து, மறுமை தண்டனையை மறந்து திட்டமிட்டுக் கெட்ட நோக்கத்துடன் பீ.ஜை உலகம் முழுவதும் பரப்பிய அவதூறுகளை அதாவது அப்பட்டமான தனது குற்றத்தை மறைத்து வாக்குமூலம் கொடுத்த பொய்யன் பீ.ஜையின் ஈமான்-இறை நம்பிக்கை எங்கே? நடு நிலையாளர்களே முடிவு செய்யுங்கள். கடந்த 23 வருடங்களாக பரப்பி வந்த அவதூறுகளில் கடுகளவு உண்மை இருந்தாலும் அதை எடுத்துக் காட்டி நான் உண்மையைத்தான் 23 வருடங்களாகக் கூறிவந்தேன் என்று உண்மை பேசி இருக்க முடியும். கடுகளவும் உண்மை இல்லாத காரணத்தால்தான் சொன்னவற்றை சொல்லவில்லை என பொய் கூறி விடுதலை பெற நேரிட்டது. பீ.ஜை 4:112, 33:58 இறைவாக்குகளை நிராகரித்து (குஃப்ர்) பாவியாகலாம். அவர் பின்னால் கண்மூடிச் செல்லும் சகோதர, சகோதரிகளுக்கு ஓரளவு ஈமான் இருந்தாலும் 51:55-ல் அல்லாஹ் கூறுகிறபடி உணர்வு பெறலாம். பீ.ஜை பக்தர்களே உணர்வு பெறுங்கள்.

இவ்வாறு பீ.ஜை நம்மீது மட்டுமல்ல அவதூறு கூறிவருவது. 1987லிலிருந்து இதுவரை பீ.ஜையின் முன் னேற்றத்திற்கும், பேர் புகழுக்கும், வளமான வாழ்விற்கும் அல்லாஹ்வை அடுத்து முழுக்க முழுக்கக் காரணமாக இருந்த கமாலுத்தீன்(S.K) பஸ்லுல் இலாஹி, முஹ்யித்தீன் உலவி, ஹாமித் பகிரி, இஸ்மாயில் நாஜீ, ஹைதர் அலீ, ஜவாஹிருல்லாஹ், பாக்கர் போன்ற சுமார் 100 முக்கிய நபர்கள் மீதும் இவ்வாறே பீ.ஜை அவதூறு பரப்பி வருகிறார். இதிலிருந்தே அவரின் இழிபுத்தியை அறிவை அவரிடம் கடன் கொடுக்காமல், கண்மூடித்தனமாக அவரைப் பின்பற்றாமல், அவரது வசீகர சூன்;யப் பேச்சில் மயங்காமல் சுயமக சிந்திப்பவர்கள் நிச்சயமாக எளிதில் உணர முடியும். அவரது வசீகர, புரோகித உடும்புப் பிடியிலிருந்து அல்லாஹ் முஸ்லிம் இளைஞர், இளைஞிகளைக் காப்பாற்றி அருள்வானாக. ஆமீன்.

 

அவதூறு பேர்வழிகள் பாவத்தைச் சுமப்பவர்களே!

எவரேனும் யாதொரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதனைத் தான் செய்யவில்லையென்ற மறைத்து குற்றமற்ற(மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான். (4:112)

எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள் நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர். (33:58)

மார்க்க அறிவைப் பெற்றும் உலக ஆசையால் மனோ இச்சைக்கு அடிமைப் பட்டவர்கள் அடையும் இழி நிலை!

நீங்கள் அவர்களுக்கு ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பியுங்கள். அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சி களைக் கொடுத்திருந்தோம். எனினும் அவன் அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே ஷைத்தான் அவனைப் பின் தொடர்ந்து சென்றான். (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான். (7:175)

நாம் எண்ணியிருந்ததால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றி விட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. நீங்கள் அதனைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களுக்கு உதாரணமாகும். ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) படித்துக் காண்பியுங்கள்.(7:176)

நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய மக்களின் இவ்வுதாரணம் மிகக் கேவலமானது. அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். (7:177)

அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்துகின்றானோ அவர்களே நெரான வழியை அடைந்தவர்கள். எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே! (7:178)

நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன. எனினும் அவற்றைக் கொண்ட (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு. எனினும் அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு. எனினும் அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக கேடுகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவர்.  (7:179)

Previous post:

Next post: