ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணியா? மாநாடா? எதார்த்தம் என்ன?

in ததஜ

 அருளாளன் அன்பாளன் இறைவனின் பெயரால்…..

ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணியா? மாநாடா? எதார்த்தம் என்ன?

ததஜவினர் 2010 ஜூலை 4-ல் சென்னைத் தீவுத்திடலில் ஒடுக்கப்பட்டோரின் பேரணி என்றும் மாநாடு என்றும் பல மாதங்களாக அறிவிப்புச் செய்து வருகிறார்கள். கவுன்ட்டவுன் நடத்தி வருகிறார்கள். இதற்கு அவர்கள் ஆதாரமாகத் தருவது மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேல் மக்களை ஃபிர்அவ்னின் கொடுமைகளை விட்டு விடுவிக்க நடத்திய போராட்டங்கள் மற்றும் இஸ்ரவேல் சமுதாயத்தை எகிப்து நாட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றது. இது சரியா? நேர்வழியா என்று பல சகோதரர்கள் தொலை பேசியில் கேட்கிறார்கள்.

16.07.1431 (28.6.2010) திங்கள் அன்று மதுரையிலிருந்து ஒரு சகோதரர் தமுக்கம் மைதானத்தில் ததஜவினர் நடத்திய கூட்டம் பற்றியும் அதில் இவ்வுலகில் அனைவரும் முஸ்லிம்களே; எனவே கட்சி பேதம். இயக்க பேதம், கொள்கை பேதம் எதுவும் பாராமல் அனைவரும் திரண்டு வாருங்கள். எங்கள் உரைகளைக் கேளாமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. வந்து உங்கள் தலையைக் காட்டிவிட்டுச் செல்லுங்கள். அப்போதுதான் ஆட்சியாளரிடம் வைக்கும் நமது கோரிக்கைகளுக்கு உரிய பலன் கிடைக்கும் என்று அதன் தலைவர் பேசியதாகவும், மக்களிடம் கெஞ்சிக் கேட்டதாகவும் கூறி, கடந்த 25 ஆண்டுகளாக நீங்கள் கூறி வருவதை நன்கு அறிந்த நிலையில்தான். பள்ளிகளில் முஸ்லிம் சமுதாயத்தைப் பிளவுபடுத்திக் கூறுபோடுகிறார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அன்று ஃபிர்அவ்ன் இஸ்ரவேல் மக்களைக் கொடுமைப்படுத்திய அளவு இன்றைய இந்திய மத்திய, மாநில அரசுகள் முஸ்லிம்களை கொடுமைப்படுத்துகின்றனவா? அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றனவா? முஸ்லிம்கள் பெற்றெடுக்கும் ஆண் குழந்தைகளைக் கொன்றொழிக்கின்றனவா? இது எதுவுமே நடக்காத நிலையில் எந்த முகத்தோடு இவர்கள் மூஸா(அலை) அவர்களது சம்பவத்தை ஆதாரமாகத் தருகிறார்கள்.

மூஸா(அலை) அவர்களது அனைத்துச் செயல்பாடுகளும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே, வஹீ அறிவிப்பின்படியே இருந்தன என்பதற்குப் பல குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக இருக்கின்றன. (20ம் அத்தியாயம் (தாஹா) முழுமையாகப் படித்துப் பாருங்கள். 20:77 இறைக் கட்டளைப்படியே தமது சமுதாயத்தை எகிப்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றார்)

ததஜ தலைவர் இறை அறிவிப்பைப் பெற்றா குர்ஆன், ஹதீசுக்கு முரண்படும் இந்தச் செயல்பாடுகளைச் செய்யத் தூண்டுகின்றார். இஸ்ரவேல் சமுதாயம் அன்று மூஸா(அலை) அவர்கள் பின்னால் அணி வகுத்தது போல் இன்று முஸ்லிம் சமுதாயம் இவர் பின்னால் அணி வகுத்திருக்கிறார்களா?

3:139,186, 8:53, 13:11, 24:55, 41:34, 18:102-106 இத்தனை இறைவாக்குகள் அவரின் கண்ணில் படாமல் மூஸா(அலை) ஃபிர்அவ்னை எதிர்த்துப் போராடியது மட்டும் அவரின் கண்ணில் பட்ட இரகசியம் என்ன? உங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டாலும், உங்களது உடமைகள் பிடுங்கப்பட்டாலும் ஆட்சியாளரை எதிர்த்து கலகம் விளைவிக்கக் கூடாது. உங்கள் உரிமைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஹதீஸ்கள் கண்ணில் படாமல் மூஸா(அலை) அவர்களின் சம்பவம் மட்டும் கண்ணில் பட்ட மர்மம் என்ன?

ஆம்! மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேரணியும், மாநாடும் நடப்பதாகத் தெரியவில்லை. தங்கள் நலனை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுவதே இவை! இன உணர்வைத் தூண்டிவிட்டு வசூல் வேட்டையாடுவதையும், 2011ல் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் தங்கள் பலத்தைக் காட்டி கோடிகோடியாக பேரம் பேசவுமே இந்த முயற்சி உதவும். போன தேர்தலில் அம்மாவோடு இணைந்து, அம்மாவை ஆட்சியில் அமர்த்த, உயிரைக் கொடுத்து பாடுபட்டதுக்குக் கைமாறாகப் பல கோடிகள் சுருட்டியது பலரும் அறிந்த இரகசியம். 2011 தேர்தலில் எத்தனைக் கோடி சுருட்டலாம் என்பதற்கே இந்த வெள்ளோட்டம்.

எமது இந்தக் கூற்று தவறென்றால், அதைச் செயலில் நிரூபித்துக் காட்டட்டும். சமுதாய நலனுக்குப் பாடுபடுவதாகத் தானே இந்த ஆர்ப்பாட்டம். சமுதாயமே இந்த ஏற்பாட்டைச் செய்வதாக அறிவிக்கட்டுமே பார்க்கலாம். தங்கள் ததஜ கொடியைத் தவிர்த்து, தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்காகப் பிரத்தியேகமாக பொதுவான கொடி தயாரித்துக் கட்டியது போல், முழுச் சமுதாயத்தையும் பிரதிபலிக்கும் பொதுவான ஒரு கொடியைக் கட்டட்டுமே பார்க்கலாம். ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் அழைப்பது போல், அந்த சமுதாயத் தலைவர்களையும் அழைத்து மேடையேற்றி அவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கட்டும் பார்க்கலாம்.

இதற்கு அழகிய முன்மாதிரியாகத் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி திகழ்கிறார். தமிழ் பேசும்  மக்களின் உரிமைகளைக் கட்டிக்காக்க, செம்மொழித் தமிழை மேலோங்கச் செய்ய கோவையில் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைக் கட்சி சார்பு இல்லாமலும், தனது தி.மு.க. கட்சியின் ஒரேயொரு கொடியையும் பறக்க விடாமலும், கட்சி சார்பில்லாமல் தமிழ்ப் பேசும் அனைத்துத் தலைவர்களையும், மேடையேற்றி பேசவைத்ததையும் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். இதற்காக முதல்வரைப் பாராட்டலாம்.

முன்வருவாரா ததஜ தலைவர்? அப்படி ததஜ கொடியை மக்கள் கண்ணிலும் காட்டாமல், சமுதாயத் தலைவர்கள் அனைவரையும் கட்சி, இயக்க சார்பில்லாமல், சமுதாய நலனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அனைவரையும் பேசுவதற்கு அனுமதிப்பாரா? இறை நம்பிக்கையோ, மறுமை நம்பிக்கையோ இல்லாத நாத்திகர் தமிழக முதல்வர் கடைபிடித்த அழகிய முன்மாதிரியை இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் இருப்பதாகச் சொல்லும் ததஜ தலைவரும், இயக்கத்தினரும் கடைபிடிக்க முன்வருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். கால அவகாசம் இல்லை என்று பசப்பவும் முடியாது. அந்த அளவு தொடர்பு வசதிகள் நிறைந்த காலம் இது.

ததஜவை விளம்பரப்படுத்த தயாரித்து வைத்துள்ள இயக்கக் கொடிகள், இதர விளம்பரச் சாதனங்கள், தண்ணீர் பாக்கெட் முதல் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தனது ததஜ இயக்கத்தின் விளம்பரத்தைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் சமுதாய நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இப்பேரணியையும், மாநாட்டையும் நடத்த முன்வருவார்களா ததஜ தலைமையும், நிர்வாகிகளும், உறுப்பினர்களும்? அதுவே அவர்கள் சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கும். இல்லை என்றால்……!

அப்படித் தங்கள் ததஜ நலனைப் புறக்கணித்து சமுதாய நலனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட முன்வந்தால் மட்டுமே. அவர்கள் சமுதாய நலன் கருதி இந்த முயற்சியைச் செய்வதாகக் கூறுவதை மக்கள் ஏற்க முடியும். ஆனால் அவர்களின் செயல்பாடுகளும் அறிவிப்புகளும் அவர்களின் சொந்த நலனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதையே வெளிப்படுத்துகின்றன. இல்லை என்றால் ஒரு லட்சம் மக்கள் தானும் கூட முடியாத தீவுத்திடலில் 15 லட்சம் மக்கள் கூடப்போவதாகப் பொய்யுரைக்க முடியுமா? தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நீண்ட காலம் அனைத்து ஊடகங்களிலலும் தொடர்ந்து விளம்பரங்கள் செய்தும், கடும் முயற்சிகள் எடுத்தும், சுமார் 500 கோடிகள் செலவு செய்தும் அனைத்துக் கல்விக் கூடகங்களுக்கும்  5 நாட்கள் விடுமுறை அளித்தும் பெருத்த ஆரவாரத்துடன் தமிழக அரசே முனைந்து செயல்பட்ட கோவை மாநாட்டிற்கு இத்தனை இலட்சம் மக்கள் கூடுவார்கள் என அறிவிப்பு வெளியிடவில்லை. சுமார் ஆறுகோடி தமிழர்களைக் கொண்ட தமிழ் நாட்டில், கோவையில் கூடியதோ 10 லட்சத்திற்கும் உள்ளேதான். இந்த நிலையில் ஒரு கோடி முஸ்லிம்கள் கூட இல்லாத தமிழ்நாட்டில் 15 லட்சம் முஸ்லிம்கள் தீவுத்திடலில் கூடுவார்கள் என நாக்கூசாமல் தொடர்ந்து அறிவிப்புச்செய்கிறவர்களை உண்மை பேசுகிறவர்கள் என நம்ப முடியுமா? அதையும் அப்படியே கண்மூடி நம்பி பரப்பித் திரியும் ததஜவினருக்குச் சுய சிந்தனை இருப்பதாக நம்ப முடியுமா?

அதையும் ததஜ தலைவர் சிறிதும் வெட்கப்படாமல் வெளிப்படுத்தியும் உள்ளார். மற்றவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நமது ததஜவில் இருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அறிவில் குறைந்தவர்கள். சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள். அதனால்தான் மற்றவர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கு கொள்வதன் மூலம் குழம்பித் தவிக்கக்கூடாது என்பதால்தான் நான் தடுத்து வருகிறேன்” என நாக்கூசாமல் பதில் அளித்துள்ளார். அவர் பின்னால் அணி வகுப்பவர்கள் சுய சிந்தனை அற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆதாரம் இதோ நமக்கு வந்த e-mail.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

அந்நஜாத ஆசிரியர் அவர்களுக்கு,

எங்களின் பாசத்திற்குரிய அண்ணன் அவர்களை வசைபாடுவதற்காகவே பத்திரிக்கை நடத்துகிறீர்கள். குர்ஆன் ஹதீஸ் இருட்டறையில் வைக்கப்பட்டு, முஸ்லிம்களெல்லாம் தறிகெட்டு வாழ்ந்தபோது, அவர்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றியது யார்? எங்கள் அண்ணனல்லவா? 21ம் நூற்றாண்டின் தலைசிறந்த மார்க்க அறிஞர். சஹாபாக்கள் செய்த தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டுபவர். தலைசிறந்த சுவர்க்கவாதிகளின் ஜமாஅத் தலைவர், இஸ்லாம் சம்பந்தமான அனைத்தையும் அறிந்தவர். கேட்ட கேள்விக்கு பட்டென  பதிலளிப்பவர். பண்பாளர், கல்வியாளர், அறிஞர்களுக்கெல்லாம் அறிஞராக இருப்பவர். திருக்குர்ஆனை தனிநபராக தமிழாக்கம் செய்தவர். இணை வைப்பில் மூழ்கிக் கிடந்த நம் மக்களை ஏகத்துவத்திற்கு அழைத்து வந்த தன்னிகரில்லா தலைவர் மீது நீங்கள் எவ்வளவு வசைபாடினாலும் நாங்கள் ஏற்கமாட்டோம். நாங்கள் ஒரு மாதமல்ல பல வருடங்கள் அவரிடத்தில் இருந்தாலும் அவர் மீதுள்ள எங்களின் நம்பிக்கையை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.         வஸ்ஸலாம்.

நாள்: 13.4.10                                                இப்படிக்கு

இடம்: பழனி                                                பல்கீஸ் மணாளன்,

                                                  அம்பலகாரர் தெரு, பழனி-624 601.

அல்குர்ஆன் 2:134,141, 4:49, 53:32, 3:128, 28:56, 42:21, 49:16 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளை நிராகரித்துப் புறக்கணித்து அண்ணன் புகழ் பாடும் இவர்கள் எல்லாம் அண்ணனே கூறுவதுபோல் அறிவு குறைந்த முகல்லிதுகள் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? நாளை அண்ணன் பதினைந்து இலட்சம் மலக்குகள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள் என்று ரீல் விட்டாலும், தான் ஒரு நபி என்று ரீல் விட்டாலும் அவற்றைக் கண்மூடி ஏற்பவர்களே அவரது பக்தர்கள். யாரையும் கண்மூடிப் பின்பற்றாமல் (தக்லீது) குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் படித்து விளங்கவும், விளங்கியபடி நடக்கவும் பெரும் முயற்சி எடுப்பவர்களே 29:69ல் அல்லாஹ் கூறுவதுபோல் நேர்வழி பெற முடியும். அந்தச் சின்னஞ்சிறு கூட்டமே பாக்கியவான்கள்.அவர்களுக்கே நல்வாழ்த்துக்கள்! வஸ்ஸலாம்!!

செல்லிடைப்பேசி:                                                 இப்படிக்கு

9443955333, 9710122152                                    அபூ அப்தில்லாஹ்

புரோகிதர்களின் சுயநல, வசீகர, மாய உடும்புப் பிடியிலிருந்து விடுபட படியுங்கள், பரப்புங்கள் அந்நஜாத் மாத இதழ், திருச்சி-8. செல்லிடைப்பேசி: 93451 00888

Previous post:

Next post: