விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2010 ஆகஸ்ட்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : நீங்கள் மனநோயாளி-பைத்தியம் என ததஜ தலைவராலும், பக்தர்களாலும் செய்தி வலைதளத்திலும் வாய்மொழியாகவும் பரப்பப் படுகின்றதே! நீங்கள் மனநோயாளியா? பைத்தியமா? தொலைபேசி விமர்சனம்.

விளக்கம்: அல்ஹம்துலில்லாஹ்! நபிமார்களுக்கு காஃபிர்களான புரோகிதர்களைக் கொண்டு கிடைத்த பட்டமே நமக்குக் கொடுக்கப்படுவது கொண்டு அல்குர்ஆனிலுள்ள இறைச் செய்தி யைப் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறும் தீய நோக்குடன் வளைத்துத் திரித்து மறைக்காமல் உள்ளது உள்ளபடி நாம் கூறுகிறோம்; நேர்வழியை மட்டுமே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம் என்பதற்கு இது மிகப்பெரிய ஆதாரமாகும்.

இப்போது அல்குர்ஆனில் நபிமார்களுக்கு மனநோயாளி-பைத்தியம் பட்டம் கொடுக்கப் பட்டதாகக் கூறும் இறைவாக்குகளை வரிசையாகப் பார்ப்போம்.

(நமது நபியாகிய உங்களை நோக்கி) ” நெறிநூல் அருளப்பட்டதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகின்றனர். (15:6)

அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) “”உங்களிடம் அனுப்பப்பட்ட (தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்” என்று சொன்னான். (26:27)

“”அல்லாஹ்வைத் தவிர (உங்களுக்கு) வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை; (அவனையே நீங்கள் வணங்குங்கள்)” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம்கொண்டு, (37:35)
“”என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை மெய்யாகவே விட்டு விடுவோமா?” என்றும் அவர்கள் கூறுகின்றனர். (37:36)

“”(அவர் பைத்தியக்காரர்) அன்று. அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கிவிட்டீர்கள்.) ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான். (37:37,38)

(அந்நேரத்தில் அவர்களின் நல்லுணர்ச்சி) எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நம்முடைய) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கின்றார். எனினும், அவர்கள் அவரை புறக்கணித்து, (அவரைப் பற்றி “”இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரன்தான்” என்று கூறினர். (44:13,14)

இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரன் அல்லது பைத்தியக்காரன் என்று கூறாமலிருக்கவில்லை. (51:52)

மூஸாவுடைய(சரித்திரத்)திலும் (ஒரு படிப்பினை) இருக்கின்றது. தெளிவான அத்தாட்சிகளுடன் அவரை ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பிய சமயத்தில், அவன் வலுவான தன் ஆட்சி யின் கர்வத்தால் அவரைப் புறக்கணித்து, “”இவரொரு சூனியக்காரர்; அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான். (51:38,39)

(நபியே!) நீங்கள் (நிராகரிப்பவர்களுக்கு வேத னையை) ஞாபகமூட்டிக்கொண்டே இருங்கள். உங்களது இறைவனின் அருளால் நீங்கள் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல. (உங்க ளைப் பற்றி) அவர்கள் (நீங்கள்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (52:29)

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம்முடைய தூதராகிய அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (துன்புறுத்துவதாகவும்) மிரட்டிக் கொண்டு மிருந்தார்கள். (54:9)

(நபியே!) நீங்கள் உங்களது இறைவனருளால் பைத்தியக்காரரல்ல. நிச்சயமாக உங்களுக்கு முடிவுறாத (நீடித்த) ஒரு கூலி இருக்கின்றது. நிச்சயமாக நீங்கள் மகத்தான நற்குணமுடைய வராகவே இருக்கின்றீர்கள். (68 : 2, 3, 4)

(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும்போதெல்லாம், அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். அன்றி, (உங்களைப் பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்தான் என்று கூறுகின்றனர். (68:51)

(நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்) இது, பொதுவாக உலகத்தார் அனைவருக்குமே ஒரு நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (68:52)

(மக்காவாசிகளே! நம்முடைய தூதராகிய) உங்களுடைய நண்பர் பைத்தியக்காரரல்ல. (81:22)

இந்த இறைவாக்குகள் அனைத்தும், நேர்வழியை- சத்தியத்தை எடுத்து விளக்கும் இறை அறிவிப்புகளை எவ்வித சுயவிளக்கமும் இல்லாமல் உள்ளது உள்ளபடி மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்த நபிமார்கள் மனநோயாளி, பைத்தியம் என பரிகசிக்கப்பட்டார்கள் என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்றன.

இப்படி நபிமார்களுக்கு மனநோயாளி-பைத்தியம் என பட்டம் கொடுத்து மக்களிடையே பரப்பியவர்கள் யார்? இறைவாக்குகளை நிராகரித்து, அவற்றிற்கு சுய விளக்கம் கொடுத்து, மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்ட, தங்களை மார்க்கம் கற்ற மேதைகள் என பிதற்றிய புரோகிதர்களும் அவர்களது பக்தர்களும் என்பதைக் குன்றிலிட்ட தீபமாக விளக்குகின்றன. இவற்றைப் படித்துப் பார்த்த பின்னரும் இப்புரோகிதர்கள் பின்னால் செல்பவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள், காதிருந்தும் செவிடர்கள், உள்ளம் இருந்தும் உண்மையை உணர முடியா மூடர்கள் என்பதில் சந்தேக முண்டா?

இந்த இறைவாக்குகள் அனைத்தும் நபிமார்கள் மனநோயாளி-பைத்தியம் என பரி கசிக்கப்பட்டதாகக் கூறுகின்றனவே அல்லாமல், நபிமார்களில் ஒருவர் கூட, தம்மை பயங்கர மாக எதிர்த்த எந்த நபரையும் மனநோயாளி-பைத்தியம் என பரிகசித்ததாக அல்குர்ஆனில் இல்லை.

அப்படி நபிமார்களைப் பரிகசித்தவர்கள் உலகில் மக்கள் கூட்டத்தையும், பண பலத்தையும், அதிகார பலத்தையும் கொண்டு திமிராக, ஆணவமாக நடந்து கொண்ட பிர்அவ்ன், ஹாமான், நம்ரூது, அபூ ஜஹீல் அவர்களைக் கண்மூடி பின்பற்றியோர் போன்ற நரகிற்குரியவர்களே அல்லாமல், இறைப்பொருத்தம் பெற்று சுவர்க்கம் அடையும் நல்லடியார்கள் அல்ல.

உண்மையில் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்பவர்களுக்கு மனநோயாளி-பைத்தியம் எனப் பட்டம் கொடுத்து மக்களிடையே பரப்பக் காரணம் என்ன தெரியுமா? அவர்கள் எடுத்து வைக்கும் உண்மைக் கருத்துகளை மறுத்து மக்கள் ஏற்கும் வகையில் வாதம் செய்ய வக்கற்றவர்களின் புகலிடம் மனநோயாளி- பைத்தியம் என்ற பட்டம்தான். இப்படி பரப்பித் திரிகிறவர்கள் நாம் எடுத்து வைத்த முறையான கேள்விகளுக்கு உரிய பதில்களை கடந்த 23 ஆண்டுகளாகத் தர முடிந்ததா? ஒரே மேடையில் நேரடியாகச் சந்தித்து குற்றச் சாட்டுக்களை எடுத்து வைத்து நீ உண்மையாளன்! சத்தியசீலன் என்பதை நிலை நாட்டு பார்க்கலாம் என்று பல வருடங்களாக பல முறை பகிரங்கமாக அந்நஜாத்தில் அழைத்தும் நம் அழைப்பை ஏற்று முன்வர முடிந்ததா? பிடரியில் பின்னங்கால் அடிபட ஓடுவது யார்?

தனது பக்தர்கள் தனது உபதேசத்தை ஏற்று அந்நஜாத்தைப் படிப்பதில்லை தொட்டும் பார்ப்பதில்லை என்ற தைரியத்தில் நான் பல முறை அழைத்தும் அவர்தான் பிடரியில் பின்னங்கால் அடிபட ஓடுகிறார் என தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யை அவிழ்த்து விடுகிறார். அதையும் மீறி யாரும் அபூ அப்தில்லாஹ் இப்படி பகிரங்கமாக அழைக்கிறாரே? ஏன் நீங்கள் பின் வாங்குகிறீர்கள்? என்று கேட்டால் இல்லம்மா! அவர் மனநோயாளி; அவருடன் விவாதிப்பதில் பலன் ஏற்படப் போவதில்லை என மழுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் ததஜ நிஜத் தலைவர். இப்போது நபி(ஸல்) அவர்கள் போதித்த சத்தியத்தை-நேர்வழியை மட்டுமே போதிப்பது யார்? நம்மீது, பிர்அவ்ன், ஹாமான் காரூன், அபூ ஜஹீல் போன்றோர் நபிமார்களை மன நோயாளி-பைத்தியம் என மக்களிடையே பொய்ச் செய்தியை பரப்பி உலக ஆதாயம் அன்று அடைந்தது போல், இன்று நம்மை மனநோயாளி-பைத்தியம் எனச் சொல்லி உலக ஆதாயம் அடைந்து வருகிறவர் யார்? என்பதை முறையாக அல்குர்ஆனைப் படித்து விளங்குகிற வர்கள் நிச்சயம் அறிவார்கள்.

அல்குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்காமல் 2:186 இறைக் கட்டளைக்கு முரணாக அதை நிராகரித்து அல்லாஹ்வை நம்பாமல், இந்தப் புரோகித மவ்லவிகளை நம்பி, அல்லாஹ்விடம் கேட்காமல் இப்புரோகிதர்களிடம் கேட்டு, அவர்கள் கூறும் ஷைத்தானிய வழிகேட்டு விளக்கங்களை ஏற்று அதன்படி நடப்பவர்கள் ஒருபோதும் நேர்வழி பெற முடியாது. அவர்கள் இறுதியில் ஒதுங்கும் இடம் நரகம் என்பதை அல்குர்ஆன் 33:36,66,67,68 இறைவாக்குகள் குன்றிலிட்ட தீபமாகப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.அல்லாஹ் அப்படிப்பட்டவர்களை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக

Previous post:

Next post: