தேர்தல் சீர்திருத்தம் மிகமிக அவசியம்!

in 2010 டிசம்பர்,தலையங்கம்

நம் தாய்த் திருநாடான இந்தியா இன்று ஜனநாயகம் என்ற பெயரால் கடைபிடித்து வரும் பணநாயக தேர்தல் நடைமுறை, நமது நாட்டை மிக மிக ஆபத்தான ஒரு நிலைக்குக் கொண்டு செல்கிறது. பாராளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடர் ஆரம்பித்த நாளிலிருந்து சபையில் என்ன நடக்கிறது என்பதை நம் நாடு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

மக்கள் பணம் கோடிக் கணக்கில் வீண் விரய மாகி வருகிறது. இதற்காகவா ஒவ்வொரு னிPயும் மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஊதியத்தைப் பெறுகிறார்கள். இப்படிக் கூச்ச லிட்டுக் குழப்பம் விளைவிக்கவா இவர்களுக்கு இப்பெருந்தொகை கொடுக்கப்படுகிறது.

இதில் ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என பாகுபாடே இல்லாமல் போனதுதான் நாட்டு மக்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. நாட்டு மக்களை ஏமாற்றி மக்கள் சொத்தை நூறு கோடியாக அல்ல, ஆயிரம் கோடியாக அல்ல, லட்சம் கோடியாக கொள்ளை அடிப்பதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இதற்கெல்லாம் காரணம் என்ன? கொள்ளை யர்கள், கொலைகாரர்கள், வன்முறையாளர்கள், கேடிகள், ரவுடிகள், தாதாக்கள், சாராய வியா பாரிகள், கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகள், இப்படி மக்களிலேயே மிகமிகத் தரங்கெட்ட வர்கள் MPக்களாக, MLAக்களாக, MLCக்களாக எளிதாக வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் வாய்ப்புகள் நிறைந்தே இருப்பதுதான். அதே சமயம் நல்லவர்கள், வல்லவர்கள், மக்களுக்கு உண்மையிலேயே தொண்டு செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் அரசியலைவிட்டு ஒதுங்கி இருக்கும் நிலையே காணப்படுகிறது. இந்த பரிதாப நிலை மாற்றி அமைக்கப்படாதவரை நம் நாடு ஒருபோதும் உருப்படப் போவதில்லை.

வெளிநாட்டுப் பெரும் பெரும் பண முதலைகள், உள்நாட்டுப் பண முதலைகள் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் ஆவது நாட்டு முன் னேற்றம் அல்லவே அல்ல. வைக்கோல் காத்த நாய் போல் அப்பண முதலைகள் தங்கள் பல லட்சம் கோடிகளைக் காத்துக் கொண்டு பெருமை பேசமுடியுமே அல்லாமல், அவர்கள் கூட மன நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கை வாழ முடியாது. பலர் தற்கொலை செய்து கொள்வ தையும் செய்தி ஏடுகள் பறை சாற்றுகின்றன. அதனால்தான் பல்லாண்டு களாக உலகின் முதல் பணக்காரராக இருக்கும் பில்கேட்ஸ், அவர் சேகரித்த பல்லாயிரம் கோடி களில் பெரும் பகுதியை ஏழை மக்கள் நோய் நொடியிலிருந்து விடுதலைப் பெறக் கொடுப்ப தோடு அதற்காக முழு மூச்சாகப் பாடுபடவும் தயாராகி விட்டார். மைக்ரோ சாஃப்ட் என்ற நிறுவனத்தை உருவாக்க எந்த அளவு வேர்வை சிந்தியிருப்பேனோ, அந்த அளவு ஏழை மக்களுக்காக இனி பாடுபடுவேன் என்று கூறி அதற்கான முயற்சிகளில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து விட்டார்.

அதே போல் அவருக்கு அடுத்த நிலையில் இரண்டாவது அல்லது மூன்றாவது பணக்காரர் வாரன் பப்பெட் என்பவரையும் தன்னைப் போல் ஏழைகளின் உயர்வுக்காக அவருடைய சொத்துக்களில் 99%ஐ எழுதி வைத்துவிட்டு, அந்தப் பணியில் பில்கேட்ஸுடன் இணைந்து செயல்பட அவரையும் உருவாக்கி விட்டார்.

இதில் பெரும் பெரும் பண முதலைகளுக்கு நல்லதொரு படிப்பினை இருக்கிறது. என்ன தான் பணம் சேர்த்து பில்கேட்ஸ் போல் உலக முதல் பணக்காரர் ஆனாலும் வாழ்க்கையில் மன நிம்மதியோ, சந்தோசமோ, வாழ்க்கையை முறையாக முழுமையாக அனுபவிக்கும் பாக்கியமோ ஒருபோதும் கிட்டாது.

நலிந்த நடுத்தர, ஏழை மக்களின் உயர் வுக்காக உழைக்கும் போதே அந்த நிம்மதி, சந் தோசம், வாழ்க்கையை முறையாக முழுமை யாக அனுபவிக்கும் பாக்கியம் இவை அனைத் தும் கிடைக்கும் என்ற உண்மையை பில் கேட்ஸ், வாரன் பப்பெட் போன்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். வெறும் பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தால் இறுதியில் மனம் வெதும்பித் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குக் கூட கொண்டு சேர்த்து விடும். இப்போது அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இதில் இதை விட பெரும் படிப்பினை இருக்கிறது. பில் கேட்ஸ், வாரன் பப்பெட் போன்றவர்கள் முறையாக தொழில் செய்து சிகரத்தைத் தொட்டவர்கள். அவர்களுக்கே அவர்களின் பெரும் பணத்தால் மன நிம்மதியோ, சந்தோ சமோ வாழ்க்கையை முறையாக, முழுமையாக அனுபவிக்கும் பாக்கியமோ கிடைக்கவில்லை.

ஆனால் அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ முறையாகப் பணத்தை ஈட்டவில்லை என்பதை அவர்களே நன்கு அறிவார்கள். முறை தவறிய வழிகளில் கையூட்டு வாங்கி, அதிகாரத்தை முறைகேடாகச் செலுத்தி, இன்னும் பல ஒழுங்கீனங்கள் மூலமே பல ஆயிரம் கோடிகளை சேர்த்து வருகிறீர்கள். உங்களின் உள் மனமே உங்களைச் சதா துளைத்துக் கொண்டிருக்கும். அதிலேயே வெந்து துடித்துக் கொண்டிருப்பீர் கள். இது போதாதென்று உங்களின் தில்லுமுல்லு கள், மோசடிகள் வெளிப்பட்டு விடுமோ, அம்ப லத்துக்கு வந்து விடுமோ என்ற பயத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களால் மன நிம்மதியாக இருக்க முடியுமா? அமைதியான வாழ்க்கை கிடைக்குமா? தினம் தினம் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருப்பீர்கள்.

முதன் மந்திரிகள், மத்திய, மாநில மந்திரிக ளின் மூத்த அதிகாரிகளின் மோசடிகள் அம்பலத்திற்கு வந்து நாடே நாறிக் கொண்டிருப்பதை பார்க்கத்தானே செய்கிறீர்கள். இந்தப் பரிதாப நிலை உங்களுக்கும் வர வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? சிந்தியுங்கள். அனுமதிக்கப்பட்ட வழிகளில் பெரும் பொருள் சேர்த்தவர்களுக்கே அப்பெரும் பணம் மன நிம்மதியை, சந்தோ சத்தை, வாழ்க்கையை முழுமையாக, முறையாக அனுபவிக்கும் பாக்கியத்தைத் தரவில்லையே! மிகவும் தவறான வழிகளில் பணம் குவித்த உங்களுக்கு மன அமைதி, சந்தோசம், வாழ்க் கையை முழுமையாக முறையாக அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்குமா? ஒரு போதும் கிடைக்காது.

மன அமைதி, சந்தோசம், வாழ்க்கையை முழுமையாக முறையாக அனுபவிக்கும் பாக்கியம் உங்களுக்கு வேண்டுமா? அதை உங்கள் பல்லாயிரம் கோடி பணம் ஒருபோதும் தராது. பில்கேட்சைப் போல், வாரன் பப்பட்டைப் போல் நீங்கள் முறை தவறி சேர்த்து வைத்துள்ள பெரும் பணத்தை ஏழைகளின் உயர்வுக்காகக் கொடுத்து விடுங்கள். அவர்கள் பெறும் மகிழ்ச்சியை நீங்களும் பெறுவீர்கள்.

அடுத்து, ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து தேர்தல் முறையை மாற்றியமைத்துச் சட்டம் இயற்றுங்கள். கோடிக்கணக்கான பணத்தை தவறான வழிகளில் ஈட்டி அதில் ஒரு பகுதியைச் செலவழிப்பவர்களே ஆட்சியாளர்களாக வர முடியும் என்ற தவறான தேர்தல் முறையை மாற்றி, மக்களுக்கு உண்மையிலேயே தொண்டு செய்ய ஆர்வமுள்ள, நீதமுள்ள, நல்லவர்கள், வல்லவர்கள் எவ்வித செலவும் இல்லாமல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி.க்கள் ஆகும் வகையில் சட்டத்தைத் திருத்துங்கள்.

தேர்தல் காலங்களில் மக்களைச் சந்தித்து கையூட்டுக் கொடுக்கும் இழிநிலையை மாற்றுங் கள். மக்கள் எவ்வித நிர்பந்தத்திற்கும் ஆளாகாமல் முழுமையான சுதந்திரத்துடன் தங்களுக் காக உண்மையிலேயே பாடுபடும், தொண்டு செய்யும் நல்ல பண்பாளர்களை, அறிவாளர்களை, நல்லவர்களை, வல்லவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, இன்று பண நாயகமாக இருக்கும் தேர்தல் முறையை உண்மை ஜன நாயகமாக மாற்றி அமைக்க முன் வாருங்கள். வருவீர்களா? பொறுத்துப் பார்ப்போம்.

அடுத்து இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்களுக்கும் நல்லதொரு படிப்பினை இதில் இருக்கிறது. இன்று நாட்டில் மலிந்து காணப்படும் கையூட்டு, ஒழுங்கீனம், முறைதவறி பொருள், சொத்து சேர்த்தல், கூடா ஒழுக்கம் இவை அனைத்தும் கெட்டவை, கூடாதவை என உங்கள் பகுத்தறிவும், மனச் சாட்சியும் அறிவுறுத்தத்தான் செய்கின்றன.
இந்த நிலையில் பழுத்த மூத்த நாத்திகர்களும் இப்படிப்பட்ட முறைகேடுகள் மூலம், ஏழைகளை வஞ்சித்துத் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் பல்லாயிரம் கோடிகளை குவிக்கும் அளவில் அவர்களைத் தூண்டும் சக்தி எது?

அந்த சக்தியால் உந்தப்பட்டுத்தானே தங்கள் பகுத்தறிவும், மனச்சாட்சியும் சரிகாணாத இந்தச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த சக்தி எது?

அதுபோல் பெரும்பாலான நாத்திகர்கள் தங்களின் பகுத்தறிவு சரிகாணாத, மனச்சாட்சி உறுத்தும், தீய செயல்களில் ஈடுபட அவர்களின் பகுத்தறிவுக்கே முரணாகவே அவர்களைத் தூண்டும் அத்தீய சக்தி எது? ஆம்! மனிதனைப் படைத்து, இவ்வுலக வாழ்வை சோதனைக்காகக் கொடுத்து மனிதனைச் சோதிக்க மனிதனுக்கு விரோதியாக இறைவன் படைத்த சாத்தான்தான் அத்தீய சக்தி. அத்தீய சக்தியை உணரும் நாத்திகர்கள் அத்தீய சக்தியைப் படைத்த இறைவனை உணர முடியவில்லையா? பரிதாபம். தங்களின் பரிதாப நிலையை நாத்திகர்கள் மறுமையில் பார்க்கத்தான் போகிறார்கள். இறைவனோ மறுமையோ இல்லை என்றால் நாத்திகர்கள் தப்பித்தார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக இறைவனும், மறுமையும் இருந்து விட்டால் அவர்களின் நிலை என்ன?

பெரியார்தாசனை அப்துல்லாஹ்வாக மாற்றிய இந்தக் கேள்வியை மற்ற நாத்திகர்களும் கேட்டு விடை காண முன்வர வேண்டும். அப்போதுதான் ஏழை எளிய மக்களின் நலனில் முழுமையான ஈடுபாட்டுடன் பில்கேட்ஸைப் போல், வாரன் பப்பட் போல் முழு மூச்சாக ஈடுபட வழி பிறக்கும்.

Previous post:

Next post: