ஹைடெக் தவ்ஹீது மத்ஹப் இமாமுக்கும் மற்ற 4 மத்ஹபு இமாம்களுக்கும் உள்ள வேறுபாடு

in 2010 டிசம்பர்

இந்த ஹைடெக் தவ்ஹீது மத்ஹப் இமாமுக்கும் மற்ற 4 மத்ஹபு இமாம்களுக்கும் உள்ள வேறுபாடுகளை இந்த அட்டவணையில் காணலாம்.
மற்ற 4 மத்ஹபுகள்

1. இமாம்கள் மறைந்து 200 ஆண்டுகளுக்குப் பின் அந்தந்த மத்ஹபுகள் தோன்றின
2. பிரதான இமாம் தனிதனி குட்டி அமைப்புகளை ஏற்படுத்தவில்லை.
3. சொல்லுக்கும் செயலுக்கும் மிகப்பெரும் மாறுபாடு இவர்களிடமில்லை.
4. தான் என்ற பெருமை அகம்பாவம் இவர்களிடம் மிகப்பெரும் அளவில் இல்லை.
5. அல்லாஹ் ரசூலின் பயம் பிரதானம்.
6. உலக ஆசை இல்லை.
7. இவர்களின் பெயரால்தான் தரீக்கா சட்டங்கள் அமைந்தன.
8. குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் மீறி தங்களது சொல் செயலில் தவறிருந்தால் மன்னிப்பு தேடியுள் ளார்கள்.
9. இந்த மத்ஹபுகளின் பெயரால் மார்க்கத்தை கத்தம், பாத்தியா, மவ்லூது, மீலாது என வியாபார மாக்குவார்கள்.
10. இமாம்களுக்கு கூட்டு இல்லை.
11. அறிவியல் விஞ்ஞானம் இல்லாத காலத்தில் இருந்ததால் ஒரே பிறை, நாளின் துவக்கம் போன்ற கேள்விகளுக்கு போதிய சட்டங்கள் இல்லை.
12. பெரிய அளவில் குழப்பங்கள் சுமார் 1000 வருடங்களாக இல்லை.
13. முஸ்லிம் என்ற அடிப்படையில் 4 மத்ஹபு பிரிவுகளுக்குள் திருமணம் செய்து கொள்வதுண்டு.
14. மற்ற மத்ஹபினரைப் பற்றி கேவலமாக, ஏளன மாக, வரம்பு மீறி புறம் பேசுதல் கிடையாது.
15. இமாம்களின் குடும்பத்தார் மத்ஹபுகளை வாரிசு உரிமை கொண்டாடவில்லை, மத்ஹபு களின் பெயரால் பணம் வசூலிக்கவில்லை.
16. ஒரு கருத்தில் வேறு மாறுபாடு கிடையாது. தவறான கருத்து என்றாலும் உறுதியாக இருப்பார்கள்.

ஹைடெக் தவ்ஹீத்(?) மத்ஹபு
1. இமாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே தவ்ஹீது(?) மத்ஹபு உருவாகிவிட்டது.
2. பிரதான இமாம் பல்வேறு அமைப்புகளில் ஒரே நேரத்தில் இருப்பார்.
3. சொல் ஊருக்கு மட்டும் தான்; இவருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
4. 100%க ண்டிப்பாக உண்டு.
5. ஆர்ப்பாட்டம், பேரணி, மாநாட்டுக்கு கூட் டமே பிரதானம்.
6. அளவுக்கதிகமாக உண்டு.
7. இவரே சட்டத்தை இயற்றுவார்.
8. குர்ஆன், சுன்னாவை லாஜிக், பாலிசி என மீறுவதையே தொழிலாகக் கொண்டவர்.
9. மார்க்கத்தை ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல், முற்றுகை என வசூல் வியாபரமாக்குவார்கள்.
10. இமாம் & கோ என்று ஒரு குருப்பே உள்ளது.
11. விஞ்ஞான யுகத்திலும் கற்காலத்தை நோக்கி பிற்போக்கு பிதற்றல்களை உளறுவது வாடிக்கை.
12. 24 வருடங்களில் எண்ணிலடங்கா குழப் பங்கள்.
13. நவீன இமாம் சார்ந்த ஜமாஅத்திற்குள் மட்டும் தான் திருமணம்.
14. இமாம் &கோ, யாரைப் பற்றியும் -எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமா னாலும் பேசுவார்கள், எழுதுவார்கள்.
15.இமாமின் குடும்பத்தார் வாரிசு உரிமை கொண்டாடுவதுடன், ஏகத்துக்கும் வசூலான தொகைக்கு ஆளாய் பறக்கிறார்கள்.
16.இன்றொன்றும் நாளையொன்றும் என மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.
 

Previous post:

Next post: