அறியாமையா……..?

in 2011 ஜனவரி

அபூ ஆயிஷா அல்- உம்ரா, ஏர்வாடி (நெல்லை)

அறியாமையா? அல்லது அறிந்துகொண்டே கண்மூடித்தனமாக புரோகித மவ்லவிகளைப் பின்பற்றி நரகத்தின் வாயிலுக்கு கூட்டம், கூட்டமாக செல்ல வேண்டும் என்று! கண் இருந்தும் குருடர்களாக, செவி இருந்தும் செவிடர்களாக, அறிவிருந்தும், சிந்திக்காதவனாக, செல்ல விரும்புகிறானா மனிதன்? அல்லாஹு ரப்புல் ஆலமீன் மனிதனுக்கு நபி(ஸல்) அவர்கள் வழியாக அருள் செய்த அறிவுக் கருவூலமான அல்குர்ஆன் என் னும் சத்திய நெறிநூலை புறக்கணித்து, மவ்லவி புரோகிதரர்கள் சொல்வது தான் சரி என்று நம்பும் முஸ்லிம்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர்களையும் மதிக்கும், மரியாதை இதுதான் என்றால் மனிதன் (குறிப்பாக பெயர் தாங்கி முஸ்லிம்கள்) பெரும் அநியாயக்காரர்களே! நஷ்டவாளிகளே!

காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலிருக்கிறான் (ஓரிறை) நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு பொறுமையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் கொள்கின்றனரே அத் தகையோரைத் தவிர (இவர்கள் நஷ்டத்திலில்லை.
(அல்குர்ஆன் 103:1,2,3)

நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலிருக்கிறான் என்ற அல்லாஹ்வின் சொல் சத்தியமானது; சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் என்ற அல்லாஹ்வின் சொல்லில் அறிவுள்ள முஸ்லிம்களுக்கு அழகான முன்மாதிரி இருக்கிறது. ஆனால் மனிதன்அந்த சத்திய வார்த்தையை மதிக்காமல் மார்க்கம் என்ற பெயரால் புரோகித மவ்லவிகள் சொல்லும் ஷைத்தானிய வார்த்தைகளைத்தான் நம்புகிறார்கள்.

வித்தியாசமான கேள்விகள், ஆற்றல் மிக்க பேச்சுக்கள், பேசுவோர், கேட்போர்கள் எல்லாம் சரியான (குர்ஆன், ஹதீஃத்) வழியில் சரியாக பயன் படுத்துகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லும் இயக்கவாதிகள் தங்கள் தங்கள் இயக்க தலைவர்களான புரோகித மவ்லவிகள் சொல்லைத் தான் சரிகாண்கிறார்களே அல்லாமல் அல்லாஹ், அல்லாஹ்வுடைதூதர் நபி(ஸல்) அவர்கள் சத்திய வார்த்தைகளை மதிக்கவே இல்லை என்று சொன்னால் மிகை இல்லைதானே! யா அல்லாஹ்! இப்படிப்பட்ட செயல்களிலிருந்து எங்கள் எல்லோரையும் நீ காத்தருள்.  அல்லாஹ், அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் சொல்லை மதிக்காதவர்கள் பற்றி சத்திய நெறிநூல் அல்குர்ஆன் சொல்லும் போது,

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும், ஊமையர்களும்தான்.(என்கிறது) (அல்குர்ஆன் 8:22)

அல்லாஹு ரப்புல் ஆலமீன், ஜின்களிலிருந் தும் மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே திட்டமாக நாம் படைத்துள்ளோம் என்றும் தனது சத்திய நெறிநூல் வழியாக சொல்கிறான். (7:179)

அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் (பூமியில் சுற்றி திரியும் மனிதர்களில்) கேவலமானவர்கள் அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அவற்றைக் கொண்டு நல்லுணர்வு பெறமாட்டார்கள்; அவர்களின் இயக்கத் தலைவர்களான புரோகித மவ்லவிகள் சொல்வதையே கண்மூடி பின்பற்றுவார்கள். அவர்களுக்கு கண்கள் உண்டு, ஆனால் அவற்றைக் கொண்டு அல்லாஹ்வுடைய அத்தாட்சி களைப் பார்க்க மாட்டார்கள். மவ்லவி புரோகிதரர்களின் வசீகர பயான்களிலும், அவர்களின் ஷைத்தானிய வார்த்தைகளிலும், மதிமயங்கி கண்விழித்து பார்ப்பார்கள். அவர்களுக்கு காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் அல்லாஹ், அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர்களின் நற்போதனையைக் கேட்க மாட்டார்கள்! ஆனால் அவர்கள் வழிபடும் இயக்கத் தலைவர்களான மவ்லவி புரோகிதர்களின் துற்போதனையை சத்திய வாக்காக, செவியேற்பார்கள், அறியாமையில் மூழ்குவார்கள். இவர்களை நாம் என்னவென்று சொல்வது? இல்லை! இல்லை! அல்லாஹுவின் சொல் உண்மையானது! சத்தியமானது!

“இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள்; இல்லை! அவற்றை விடவும் கேடு கெட்டர்கள், இவர்கள் தாம் (அல்லாஹ்வுடைய நெறிநூல் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்’ (அல்குர்ஆன் 7:179)

அல்லாஹுவும், அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர்களால் காட்டப்பட்டது மட்டுமே மார்க்கம் என்று நம்புகிறவர்கள் தங்களது அறிவு, சிந்தனைச் சக்தி, பார்வை, கேள்வி, பேசும் ஆற்றல் போன்றவற்றை குர்ஆன் ஹதீஃதோடு ஒத்துப் பார்ப்பவர்களாக இருப்பார்களே தவிர ஷைத்தானிய கருத்துக்களை பகிரங்கமாக சொல்லும் கோமாளி உலவிகளையும், ஜமாலிகளையும் அப்படியே பின்பற்ற மாட்டார்கள். ஜமாலிகளையும், உலவிகளையும் அறிவுள்ளவர்கள் பின்பற்றமாட்டார்கள், தங்களது அறிவை மவ்லவி புரோகிதரர்களிடம் அடகு வைத்தவர்கள் அறிவுள்ளவர்களா? அல்லது அல்லாஹுவும், அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் சொல் வதுதான் மார்க்கம் என்று நம்பி குர்ஆன், ஹதீஃதோடு உரசிப் பார்த்து, தனது அறிவைக் கொண்டு செயல்படுபவர்கள் அறிவுள்ளவர்களா? என்பதை அறிவுள்ளவர்கள் சிந்திப்பார்களா? நாளை இன்ஷா அல்லாஹ் மறுமை நாளில் மவ்லவி புரோகிதரர்களை பின்பற்றி அவர் சொல்வதை அப்படியே பின்பற்றியவர்கள், தங்களது வாயால் என்ன சொல்லி புலம்பப்போகிறார்கள் என்பதை நுன் அறிவாளன் அல்லாஹ் சொல்வதை பார்த்து அறிவுள்ளவர்கள் சிந்தித்து செயல்படுவார்கள்; அறிவில்லாதவர்கள் மறுமையில் நரகில் இப்படிப் புலம்புவார்கள்!

மேலும் “(அந்த எச்சரிக்கையாளரின் சொல்லை) நாங்கள் செவியேற்கிறவர்களாக அல்லது சிந்திப் போராக இருந்திருப்போமானால் கொழுந்து விட்டெரியும் நரகவாசிகளில் நாங்கள் ஆகியிருக்க மாட்டோம்’ என்றும் கதறுவார்கள். (அல்குர்ஆன்:6:10)

குர்ஆனும், ஹதீஃதும், சொல்லக்கூடிய விஷயங்களை உள்ளது உள்ளபடி சொல்லக்கூடியவர்களுக்கு இந்தபுரோகித சமுதாய துரோகி, உம்மத் தன் வாஹிதாவை கூறுபோட்ட சைத்தான் வைத்த பெயர் என்ன தெரியுமா? மனநோயாளி, பைத்தியக்காரன். இன்று இந்த சமுதாய துரோகியான புரோகித மவ்லவி பின்னால் மக்கள் கூட்டம் (இந்த புரோகித மவ்லவி பின்னால் சுய சிந்தனை அற்ற கூட்டம்) பணபலம் எல்லாம் இவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. இது போல் தான் இஸ்லாமிய மார்க்கத்தின் எதிரிகள், அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய தூதர்களுக் கும் எதிரான பிர்அவ்ன், ஹாமான், நம்ரூத், அபூ ஜஹீல் போன்றவர்களை அப்படியே கண்மூடி பின்பற்றியோர் நரகவாசிகளே. அது போல் இந்த மவ்லவி புரோகிதர்களை கண்மூடித்தனமாக, பின்பற்றுவோரின் நிலை பற்றி நாம் சொல்லத் தேவை இல்லை. அல்லாஹ்வுடைய சத்திய நெறி நூல் சொல்லி கொண்டே இருக்கிறது; அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும்! அபூ ஜஹீலின் வாரிசுகளான தவ்ஹீத் மவ்லவியும் அவரை அரவேக் காட்டுத்தனமாக அப்படியே பின்பற்றும் அறியாமை தொண்டர்களும் அறியாமை காலத்தில் இருக்கிறார்களா? என்ன? சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்; சிந்திப்பார்களா?

இந்த உலகில் தங்களது சுயநலத்திற்காக மார்க்கத்தை வளைத்து திரித்து ஷைய்த்தானிய வழியில் மக்களை அழைத்து நரகத்திற்கு பாதை காட்டும் புரோகித மவ்லவிகளை புறக்கணிப்பது முஸ்லிம்கள் மீது கடமை யாகும். இல்லையேல் அவர்கள் செல்லும் இடம் பற்றி அல்லாஹு ரப்புல் ஆலமீன் அறிய தருவதைப் பாருங்கள். (உலகில் தவறான வழியில் இட்டுச் சென்ற) பின்பற்றப்பட்ட (தலை)வர்கள், (மறுமையில் தம்மைப்) பின்பற்றியவர்களை விட்டு ஒதுங்கி, வேதனையை(க் கண்ணால்) கண்ட நிலையில், (உலகில்) அவர்களுக்கிடையே இருந்து வந்த உறவுகள் முறிந்து விடும்போது, (அத்தலைவர்களை பின்பற்றியவர்கள்,

“நிச்சயமாக நமக்கு (மீண்டும் உலகிற்கு)த் திரும்பிச் செல்லுதல் இருக்க வேண்டுமே! அவ்வாறிருந்தால், (தலைவர்களாகிய) அவர்கள் (இப்பொழுது) நம்மை விட்டும் நீங்கிக் கொண்டது போல், அவர்களை விட்டும் நாமும் நீங்கிக் கொள்வோமே என்று கூறுவார்கள்; இவ்வாறே அல்லாஹ் அவர்களுடைய செயல்களை அவர்களின் மீது கைசேதத்திற் குரியவையாக அவர்களுக்குக் காண்பிப்பான். இன்னும் அவர்கள் நரகத்தை விட்டும் வெளியேறுகிறவர்களும் அல்லர். (அல்குர்ஆன் : 2:166,167)

மேல்கண்ட அல்லாஹ்வுடைய சத்திய வழி காட்டல் நூல் உலகில் தவறான வழியில் இட்டுச் சென்று பின்பற்றப்பட்ட புரோகித (மவ்லவிகளான) தலைவர்கள் மறுமையில் தம்மை பின்பற்றியவர்களை விட்டு ஒதுங்கி விடுவார்கள் என்று ஆணித்தரமாக உறுதி கூறுகிறது. ஆனால் இந்த இம்மை வாழ்க்கையில் இந்த தவ்ஹீத் இயக்கத் தலைவரை கண்மூடித்தனமாக பின்பற்றி அவர் சொல்வதுதான் மார்க்கம் என்று நம்பிச் செயல்பட்டவர்களை தனது சுயநலத்திற்காக காட்டிக் கொடுத்து 13 வருடங்கள் கம்பி எண்ண வைத்து, தன்னை பாதுகாத்து, தனக்கும் தான் வழிகாட்டிய சிறைவாசிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கி கொண்டவர் யார்? என்பதை சிறையில் உள்ள அப்பாவிகளும், அவர்களின் குடும்பத்தார்களும் நன்கு அறிந்தவர்கள்தான். இங்கேயே (உலகத்தில்) இந்த மதவாதியான தவ்ஹீத் புரோகித மவ்லவியின் நிலை இது என்றால் மறுமையின் நிலை என்ன என்பதை மேல்கண்ட அல்லாஹுவின் சத்திய நெறிநூல் வார்த்தையை பார்த்து புரோகித மவ்லவியின் பக்தர்கள் சிந்திப்பார்களா? இல்லை என்றால் கைசேதமே என்று மறுமையில் புலம்ப போகிறார்களா? அல்லாஹ் நம் எல்லோருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்!

காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலிருக்கிறான் என்ற 103 அத்தியாயம் பற்றி மரியாதைக்குரிய தலைசிறந்த மார்க்க அறிஞரான இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்லும்போது இதில் மனிதனின் வெற்றிக்கான பாதை எது? தோல்விக் கான பாதை எது? என்று திட்டவட்டமாக எடுத்துரைக்கிறது. “மக்கள் இந்த அத்தியாயத்தைச் சிந்தித்துப் பார்த்தால், அதுவே அவர்களுக்கு நேர்வழிகாட்டப் போதுமானதாகும்’! என்று கூறியிருப்பது மிகச் சரியானதாகும். இதை அறிவுள்ள மக்கள்-புரோகித மவ்லவிகள் பின்னால் கண்மூடித்தனமாக செல்லும் முஸ்லிம்கள் சிந்திப்பார்களா? அல்லது நாங்கள் அறியாமையில்தான் இருப்போம் என்று அடம் பிடித்து அறியாமையில் மூழ்கப் போகிறார்களா? என்பதை காலமும், அல்லாஹுவின் தீர்ப்பும் முடிவு செய்யட்டும்!

யா அல்லாஹ்! உனக்கும் உன்னுடைய தூதர் நபி(ஸல்) அவர்களுக்கும் மட்டும் கட்டுப்பட்ட உண்மை முஸ்லிமாக வாழவும், மரணிக்கவும் செய்வாயாக! ஆமீன்.

Previous post:

Next post: