அந்நஜாத்தின் நோக்கம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலானதே!

in தலையங்கம்

    
1960லிருந்து 1982வரை சுமார் 23வருடங்களாக நாமும் மற்ற முஸ்லிம்களைப் போல் ஆலிம்கள், அல்லமாக்கள், மவ்லானாக்கள், மவ்லவிகள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் இந்த இடைத்தரகர்களிடம் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கத்தான் செய்தோம். அவர்கள் சொல்லுவதுதான் மார்க்கம் என்று உறுதியாக நம்பித்தான் இருந்தோம். ஆனால் அல்லாஹ் அருள் புரிந்து அவனது இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனை பொருள் அறிந்து சுய சிந்தனையுடன் படிக்க ஆரம்பித்த பின்னரே பெரும் மனப்போராட்டத்திற்கு ஆளானோம்.

அப்போதும் இந்த மவ்லவிகள் மீது நாம் கொண்டிருந்த நம்பிக்கைத் தளரவில்லை. அவர்கள் மீது நல்லெண் ணம் கொண்டு, எம்மனதில் கருக்கொண்டிருந்த சந்தேகங்களை எழுத்தில் வடித்து எல்லா மதரஸாக்களுக்கும், பிரபல மான மவ்லவிகளுக்கும் அனுப்பி வைத்தோம். அந்த சமயத்தில் லெப்பைக்குடிகாட்டில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா மாநாட்டிலும் அதைப் பிரசுரமாக்கி விநியோகித் ததாக ஞாபகம். மவ்லவி களிடமிருந்து உரிய விளக்கத்துடன் பதில் வரவில்லை. அதற்கு மாறாக, உங்களுக்குத்தான் அழகியதொரு கைத் தொழில் இருக்கிறதே! எங்கள் பிழைப் பில் ஏன் கை வைக்கிறீர்கள்? என்ற கேள்வியையே முன் வைத்தனர்.

அதன் பின்னரே இன்னும் தீவிரமாகச் சிந்தித்தோம். அல்குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் மிக ஆழமாக ஆராய்ந்தோம். ஹதீஸ்களை யும் ஆராய்ந்தோம். அப்போதுதான் இந்த மவ்லவிகளுக்கு மார்க்கத்தில் விளக்கம் என்ற பெயரால் சுய கருத்துக்களை சொல்லும் அதிகாரம் இல்லை. குர்ஆன், ஹதீஸில் இருப்பதை அப்படியே மக்கள் முன் வைப்பது மட்டுமே அவர்களின் கடமை என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது. அது மட்டுமல்ல, மார்க்கத்தை எந்த நிலையிலும் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த மவ்லவிகள் தங்களின் பிழைப்புக்குரிய வழியாகக் கொள்ளக் கூடாது. அதையும் மீறி மார்க்கத்தைப் பிழைப்புக்குரிய வழியாக ஆக்கினால் நிச்சயமாக அவர்கள் மார்க்கத்தை உள்ளது உள்ளபடி சொல்ல முடியாது. பிழைப்புக்காகக் கோணல் வழிகளையே நேர்வழியாக, நரகிற்கு இட்டுச்செல்லும் வழிகளையே, சுவர்க் கத்திற்கு இட்டுச் செல்லும் வழி யாக தவறாகக் காட்ட நேரிடும் என்பதை யும் உள்ளங்கை நெல்லிக் கனியாக விளங்க முடிந்தது.

அதற்குச் சான்றாக இந்த மவ்லவிகள் அனைவரும் ஹராமான வழியில் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதையும், அதனால் வழி கேடுகளையே நேர்வழிபோல் காட்டி மக்களை வழி கெடுத்து நரகில் கொண்டு தள்ளுவதையும் உறுதியாக உணரும் நிலை ஏற்பட்டது. நாம் உணர்ந்து கொண்ட இந்த உண்மையை – சத்தியத்தை – நேர்வழியை மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பது எமது கட்டாயக் கடமை; கடமை தவறினால் நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் பெரும் குற்றவாளியாக நிற்க நேரிடும். அல்லாஹ் அல்குர்ஆன் 5:67-ல் நபிக்கு கட்டளையிட்டிருப்பது போல் அல்குர்ஆனில் உள்ளதை உள்ள படி எவ்வித சுயவிளக்கமும் இல்லாமல் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம். அல்லாஹ் வாக்களித் திருப்பதுபோல் மக்களின் தீங்குகளி லிருந்து அவனே காப்பாற்றப் போது மானவன் என்ற உறுதியுடன் செயல் படுகிறோம்.

சத்தியத்தை – நேர்வழியை நிலை நாட்டும் இந்த முயற்சி மிகமிகக் கடினமான முயற்சி, ஷைத்தானும், அவனது படை பட்டாளங்களும், மனிதர்களிலுள்ள ஷைத்தானின் பெருங் கொண்ட ஆதரவாளர்களும் மிகக் கடுமையாக எதிர்ப்பவர்கள், அவதுறுகள் பல கூறுவார்கள்; குர்ஆன் ஹதீஸ் கருத்தை மக்கள் கேட்க விடாமல் தடுப்பார்கள் என்பதையும் அறிந்தே இந்த சத்திய முயற்சியில் இறங்கி இருக்கிறோம். மிகவும் சொற்பத் தொகையினரே சத்தியத்தை உணர்ந்து நேர்வழிக்கு வருவார்கள். பெருங்கொண்ட கூட்டம் வழிகெடுக்கும் புரோகிதர்கள் பின்னால்தான் செல்வார் கள் என்பதையும் அல்குர்ஆன் அழகாக எடுத்துக் கூறுகிறது. (51:55, 32:13, 11:118,119) சத்தியத்தை-நேர்வழியைப் போதித்த நபிமார்களில் பலர் தனியாக சுவர்க்கம் செல்வார்கள், ஒருசிலர் சிலருடன் செல்வார்கள்; 950 வருடங்கள் உழைத்த நபி நூஹ்(அலை) அவர்களாலேயே விரல் விட்டு எண்ணும் அளவுக்கே ஒரு சிலரையே நேர்வழிக்குக் கொண்டு வர முடிந்தது என்ற குர்ஆன், ஹதீஸ் போதனையே எமது இந்த முயற்சியில் உறுதியாக இருக்கச் செய்கிறது.

எந்த அளவு கோணல் வழிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறோமோ அந்த அளவு கூட்டத்தைச் சேர்க்க முடியும் என்ற உண்மையை அறிந்து கொண்டோம். இயக்கங்கள், அமைப் புகள் என்று உண்டாக்கிக் கொண்டு, தலைவர், செயலாளர், பொருளர் என்றும் தொண்டரணி, இரகசியமாக குண்டரணி, மாணவரணி, இளைஞ ரணி, மகளிர் அணி என பல அணி களை உண்டாக்கிக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு பதவியைக் கொடுத்து பேர் புகழோடு, ஆர்ப்பாட்டம், பந்த், சாலை மறியல், பேரணி, கருப்புநாள், சிகப்புநாள், பலவிதப் போராட்டங்கள் என கம்யூனிஸ கொள்கை அடிப்படையில், வசூலில் கமிஷன், வருமானம் தரும் கட்டப் பஞ்சாயத்து என வாழ்வாதாரங் களை, ஹராமான வழியில் அமைத்துக் கொடுத்தால் பெருங்கூட்டத்தைச் சேர்க்க முடியும்; அவர்கள் இரவு பகல் பாராது பம்பரமாகச் சுழன்று பணி புரிவார்கள்; மறுமையில் கூலியை எதிர்பார்த்து இஃலாசுடன் அல்லாஹ் வுக்காக செயல் படத்தான் ஆட்கள் கிடைப்பது அரிது என்ற இரகசியத்தை நாம் நன்கு அறிந்த நிலையில்தான், அவற்றில் எல்லாம் நாட்டம் கொள்ளாமல், தப்லீக் பணியில் ஆரம்பத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். அதிலும் மத்ஹபு, மனிதனை தெய்வமாக்கும் அத்துவைத கொள்கை மறைமுகமாக ஊட்டப்படு வதை அறிந்து அதைவிட்டு வெளி யேறினோம்.

1983, 84களிலேயே இவை அனைத்தினதும் கெடுதிகளையும், மவ்லவி வர்க்கத்தின் அபாயகரமான தில்லுமுல்லுகளையும், இந்த புரோகித மவ்லவி வர்க்கத்தைக் கொண்டே முஸ்லிம் சமுதாயத்திலும் அனைத்து சீர்கேடுகளும், பிளவுகளும், பிரிவுகளும், மற்ற சமூகங்களிடையே மிகவும் கெட்ட பெயரும் ஏற்படுகிறது என்பதையும் உறுதியாக உணர்ந்த பின்னரே நாம் இந்த முயற்சியில் இறங்கினோம் என்பதற்கு 30.10.1984-ல் தூய சின்னப்பர் இறையியல் கல்லூரியில் ‘’மதங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்’’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையே சான்றாகும்.  அன்றிலிருந்து இன்று வரை கடந்த 25 வருடங்களாக நாம் குர்ஆன்,ஹதீஸைக் கொண்டு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றையே மீண்டும் மீண்டும் எழுதி மக்களை புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுவிக்க முயற்சிக்கிறோம்.

அந்நஜாத் ஆரம்பத்தில் நாம் செய்த மாபெரும் ஹிமாலயத் தவறு, 30.10.1984-ல் நாம் நிகழ்த்திய உரையின் வெளியீட்டைப் பார்த்த சில மவ்லவிகள், புரோகிதர்களுக்கு மார்க் கத்தில் இடமில்லை; மார்க்கப் பணிக்கு கூலி கூடாது, ஒன்றுபட்ட ஒரே சமுதாயம்; இஸ்லாம் அல்லாத இயக்கம் இல்லை போன்ற குர்ஆன், ஹதீஸ் கொள்கையை ஏற்று எம்மோடு இணைந்து பணி புரிவதாக, நயவஞ்ச கமாக கூறியதை நம்பி அவர்களை நம்மோடு இணைத்துக் கொண்டது தான். அது சத்திய முயற்சியில் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

 அந்நஜாத்தில் மீண்டும் மீண்டும் எழுதியதையே எழுதிக் கொண்டிருக்கி றீர்கள் என்று சிலர் அங்கலாய்க் கிறார்கள். அப்படிச் சொல்கிறவர்களில் எத்தனை பேர் இந்த மவ்லவிகளின் பிடியிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்-சுயமாக தன்னம் பிக்கையுடன் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பார்த்து விளங்கிச் செயல்படுகிறார்கள் என்று கணக்கெடுத்தால் வேதனைதான் மிஞ்சும். குறைந்த பட்சம் அந்நஜாத்தில் வசனங்களை எழுதாமல் வெறும் அத்தியாய எண், வசன எண் குறிப்பிடப்பட்டுள்ளதை அக்கறையோடு அல்குர் ஆனை எடுத்துப் பார்த்துப் படித்துச் சிந்திக்கிறார்கள் என்று பார்த்தால் அங்கும் வேதனைதான்தான் மிஞ்சுகிறது. குர்ஆனோடு மக்களுக்குத் தொடர்பு ஏற்பட வேண்டும் என பெரிதும் விரும்புகிறோம்: முயற்சிக் கிறோம். ஆனால் மக்களில் அதிகமானோர் புதுப்புது விசயங்களாக கேட்டு ரசிக்க மட்டுமே செய்யனும்: செயல்படக்கூடாது என எண்ணு கிறார்கள். இவர்கள் மட்டுமே புதுப்புது விசயங்களை அறிவதில் ஆர்வமாக இருப்பார்கள். தெரிந்தபடி நடக்க வேண்டும் என எண்ணமாட்டார்கள்.
   
 இறைவனின் இறுதிவழிகாட்டல் நூல் இன்று 1428 வருடங்களாக சொன்னதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதில் கட்டளைக்குரிய – செயல்பாட்டுக்குரிய “முஹக்கமாத்” வசனங்களுக்கு அதிலுள்ள நேரடிக்கருத்தை விட்டு   இரண்டாவது பொருளுக்கு இடமே இல்லை. ஆனால் வழிகேட்டில் செல்பவர்களின் புதிது புதிதாக கேட்க வேண்டும், அறிய வேண்டும் என்ற ஆவலின் காரணமாக, மவ்லவிகள் என்ற புரோகித வர்க்கம் தங்களின் வருமானத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, அந்த “முஹ்க்கமாத்” வசனங் களுக்கு விதவிதமான வெவ்வேறு பொருள்களைக் கொடுத்து மக்களை வழிகேட்டிலேயே நிலைக்கச் செய்கிறார்கள்.

அல்குர்ஆன் முஹ்க்க மாத் வசனங்களுக்கு, அ வ ற்றை நடைமுறை யில் செயல்படுத்திக் காட்ட உரிமை பெற்ற (16:44,64) நபி(ஸல்) அவர் களே அனைத்து ‘முஹ்க்கமாத்’ வசனங் களுக்கும் மேல் விளக்கம் கொடுத்ததைப் பார்க்க முடிய வில்லை. காரணம் அவை தெள்ளத் தெளிவாக மேலதிக விளக்கம் தேவை இல்லை என்ற நிலையிலேயே இருக்கின்றன. நபி(ஸல்) அவர்களைவிட நாங்கள் அதிபுத்திசாலிகள் என நினைக்கும் இந்த மவ்லவிகள் யாராக இருக்க முடியும்? ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகள் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா? ஆக எந்தக் கோணத்தில் ஆராய்ந்தாலும் இந்த மவ்லவிகளின் சுயநல – உலக ஆதாய வழி கேட்டு போதனைகளே வெளி வருகின்றன. எனவே அந்நஜாத் 1986-ல் கொண்ட கொள்கையில் நின்றும் மாறுபட வேண்டிய அவசியமே இல்லை. அப்படி எண்ணுகிறவர்கள் இந்த மவ்லவி வர்க்கத்திற்கு மார்க்கத்தில் சட்டபூர்வ இடமுண்டு என்பதற்கு ஒரேயொரு அல்குர்ஆன் வசனத்தைக் காட்டட்டும். குறைந்தது ஆதாரபூர்வ மான ஒரேயொரு ஹதீஸை காட்டட்டும். நாம் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம். அப்படி ஒரு ஆதாரமும் இல்லாத நிலையில் அவர்களின் பின்னால் செல்கிறவர்கள் அல்குர்ஆன் 33:36,66,67,68 இறைவாக்குகள் எச்சரிக் கிறபடி நாளை நரகை அடைந்து வேதனை தாங்காது ஒப்பாரி வைக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.

அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை முறையாக ஆராய்கிறவர்கள் நிச்சயமாக அந்நஜாத்தின் இந்த முயற்சியை வரவேற்கவே செய்வார்கள். ஆனால் அவர்கள் மிக சொற்பமாகவே இருப்பார்கள் அப்படிப்பட்ட சகோதர, சகோதரிகள் அந்நஜாத் தொய்வின்றித் தொடர தங்களால் இயன்ற பொருள், அறிவு, உடல் ஆற்றல்களை அளிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

.

Previous post:

Next post: