யார் இந்த மதகுருமார்கள்?

in 2011 ஏப்ரல்,புரோகிதம்

  மார்ச் இதழ் தொடர்: 3
மதகுருமார்களின் பித்தலாட்டம்!
அல்குர்ஆன் 39:9, 58:11, 35:19,20,21,22,28 இறைவாக்குகளை ஓதிக்காட்டி (படித்துக் காட்டி அல்ல) தங்களுக்கு உயர் அந்தஸ்து இருப்பதாகப் பிதற்றுவார்கள் மதகுருமார்கள். ஆனால் இந்த இறைவாக்குகள் அனைத்தும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மார்க்க அறிஞர்களாக ஆகவேண்டும் என ஆர்வமூட்டுகின்றனவே அல்லாமல் ஒன்றுபட்ட சமுதாயத்தை ஆலிம் அவாம் எனக் கூறுபோட்டு, இந்த மதகுருமார்கள் அது கொண்டு வயிறு வளர்க்க அனுமதிக்கவில்லை. 59:20 நரகவாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள் என்ற இறைவாக்கைக் காட்டி இவ்வுலகிலேயே நாங்கள் சுவர்க்கவாசிகள்; நீங்கள் நரகவாசிகள் என சமுதாயத்தை ஒருவன் பிளவுபடுத்தினால் அவனை ஆலிமாக-அறிஞனாக மதிப்போமா? அல்லது மூடனாக-ஜாஹிலாக மதிப்போமா? சொல்லுங்கள். அப்படிப்பட்ட ஜாஹில்கள்-மூடர்கள் பட்டியலிலேயே ஆணவமுடைய இந்த மதகுருமார்கள் இருக்கிறார்கள்.

மதகுருமார்களின் உண்மை நிலை!
2:34, 28:39 இறைவாக்குகள் கூறும், ஷைத்தான், ஃபிர்அவ்ன், ஹாமான், அபூஜஹீல் போன்றோரிடம் காணப்பட்ட ஆணவம், பெருமை, வரம்பு மீறல், நிராகரிப்பு இவை அனைத்தும் இந்த மத குருமார்களிடம் காணப்படுகின்றன. 7:175-179 கடுமையாக எச்சரிக்கும் கண்டனங்கள் அனைத்தும் இந்த மதகுருமார்களுக்கே பொருந்தும். தங்களுக்கு மார்க்கத்தில் அதிகாரம் உண்டு என்று நிலைநாட்ட அவர்கள் எடுத்து வைக்கும் குர்ஆன் வசனங்கள் அக்கருத்தைக் கூறவில்லை என்று தெளிவு படுத்தியவுடன், “உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்; அவர்கள் தீனாருக்கோ திர்ஹத்திற்கோ வாரிசாக மாட்டார்கள்” என்ற ஹதீஸின் முற்பகுதியை மட்டும் கூறுவார்கள்; பிற்பகுதியை மறைத்து விடுவார்கள். காரணம் பிற்பகுதியைக் கூறினால், அவர்களின் வயிற்றுப் பிழைப்பிற்கு ஆபத்து வந்து விடும்.

நபிமார்களின் வாரிசு யார்!
உண்மைதான்! நபிமார்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட மார்க்கப்பணியை மக்களிடம் கூலி-சம்பளத்தைக் கேட்காமல், எதிர்பாராமல், அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்த்து செய்தது போல், அதைச் சுமார் 14 இறைவாக் குகளில் பிரகடனப் படுத்தியது போல், இந்த மதகுருமார்களும் கூலி-சம்பளத்தை மக்களிடம் கேட்காமல், எதிர்பாராமல், அதற்குரிய கூலி-சம்பளத்தை அல்லாஹ்விடம் எதிர் பார்த்து, அல்லாஹ்வின் பொருத்தம் மட்டுமே நாடி மார்க்கப்பணி புரிந்தால் அவர்களை நபிமார்களின் வாரிசாக ஏற்க நமக்கு எவ்வித மறுப்பும் இல்லை. ஆனால் இம் மதகுருமார்கள் கூலி-சம்பளத்தை மக்களிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டல்லவா மார்க்கப்பணி செய்கிறார்கள். அப்படியானால் இம்மதகுருமார்கள் நபிமார்களின் வாரிசுகளா? ஷைத்தானின் வாரிசுகளா? நபிமார்களின் வாரிசுகளா? அபூ ஜஹீலின் வாரிசுகளா? சொல்லுங்கள்.

ஹராம்களில் மிகக் கொடிய ஹராம் எது?
இந்த மதகுருமார்கள் தங்களுக்குச் சமுதாயத்தில் தனி அந்தஸ்து இருப்பதாகக் கூறி அதற்கு ஆதாரமாக எடுத்துரைத்த அனைத்து விவரங்களும் புஸ்வாணமாகப் போனதைப் பார்த்தீர்கள். இதற்குப் பின்னரும் அவர்கள் திருந்துவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? அது தான் இல்லை. காரணம் ஹராம்களிலேயே மிக மிகக் கொடிய ஹராமான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் வாங்கி அது கொண்டு அவர்களின் உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் பூர்த்தி செய்து வருவதால் 2:74, 5:13, 6:125 இறைவாக்குகள் கூறுவது போல் அவர்களது நெஞ்சங்கள் கற்பாறைகள் போல் இல்லை அதைவிட மிகமிகக் கடினமாகிவிட்டன. எனவே அவர்கள் இறைவாக்குகளை ஏற்று மனம் திருந்தப் போவதில்லை.

மதகுருமார்கள் திருந்த மாட்டார்கள்!
மதகுருமார்களின் உண்மையான நிலை, அவர்களுக்கு அறிவுரை கூறுவதும் ஒன்றுதான்; கூறாமல் இருப்பதும் ஒன்றுதான். அவர்கள் மதகுருமார்கள் என்ற நிலையில் ஒருபோதும் திருந்தப் போவதில்லை. (பார்க்க 2:7, 26:136, 36:10, 42:23)

காரணம் என்ன? பாவிகளிலேயே பெரும் பாவிகள், அநியாயக்காரர்களிலேயே பெரும் அநியாயக்காரர்கள், வரம்பு மீறுகிறவர்களிலேயே பெரும் வரம்பு மீறுகிறவர்கள், நிராகரிப்பவர்களிலேயே பெரும் நிராகரிப்பாளர்கள் இந்த மதகுருமார்கள்தான்.
மார்க்கத்தைப் பிழைப்பாக்குவதைத் தவிர எஞ்சிய ஹராம்கள் அனைத்தையும் ஒருவன் செய்கிறான். அவனைப் பெரும் பாவி என்றே சொல்வோம். அவனைவிட மெகா மெகா பாவிகள் இந்த மதகுருமார்கள். எப்படி என்று பாருங்கள். அந்தப் பெரும்பாவி தனது இவ்வுலக வாழ்க்கையையும் பாழாக்குவதோடு மறு உலக வாழ்க்கையையும் பாழாக்குகிறான். இவ்வுலகில் சிலருக்கு சில நட்டங்களை ஏற்படுத்தலாம். ஆனால் அந்தப் பெரும் பாவி மற்ற யாருடைய மறுமை வாழ்க்கையைப் பாழாக்கவில்லை. இது யாரும் மறுக்க முடியாத உண்மை.

அதற்கு மாறாக இந்த மதகுருமார்கள் தங்களின் அற்பமான இவ்வுலக வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்காக, அவர்களை முற்றிலும் நம்பியுள்ள அப்பாவி மக்களின் இவ்வுலக வாழ்க்கையில் நட்டத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களின் மறு உலக வாழ்க்கையிலும் மெகா மெகா நட்டத்தை உண்டாக்கி அவர்களை நிரந்தர நரகில் தள்ளுகிறார்கள். அவர் களும் நரகிற்குரியவர்கள் ஆகிறார்கள். அப்படியானால் இந்த மதகுருமார்களை விட மாபெரும் பாவிகள் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியுமா? சொல்லுங்கள்!

இதோ ஆதாரம்!
இந்த மதகுருமார்கள் எப்படிப்பட்ட கொடிய பாவிகள் என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒரேயயாரு உதாரணம்.

அல்லாஹ் அல்குர்ஆன் அத்தலாக் 65ம் அத்தியாயத்தில் பெண்களை விவாகரத்து செய்வது எப்படி என ஏழு(7) இறைவாக்குகளில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளான். மேலும் பகரா 2:226 முதல் 233 வரை தெளிவாக தலாக் மூன்று தவணைகளில் சொல்லப்பட வேண்டும் என தெளிவாகக் கூறி இருக்கிறான் அல்லாஹ். மூன்று முறை அதாவது தலாக், தலாக், தலாக் என ஒரே தவணையில் மூன்று முறை சொல்வதற்கும், இடைவெளிவிட்டு மூன்று தவணை களில் சொல்வதற்குமுள்ள வேறுபாடு தெரியாதவர்களா? இந்த மதகுருமார்கள்.

இவர்களது மூடத்தனமான சட்டத்தைப் பாருங்கள். ஒருவன் விளையாட்டாக, வேடிக்கையாக, கோபமாக, போதையில் தலாக், தலாக், தலாக் என மூன்று முறை ஒரே தவணையில் சொன்னாலும் கணவன் மனைவி உறவு முறிந்து விடும். அதற்கு மேல் அவர்கள் கணவன் மனைவியாக நீடிக்க முடியாது. பிரிந்தே ஆகவேண்டும் என்பது வடக்கே தேவ்பந்த் முதல் தெற்கேயுள்ள அனைத்து மத்ஹபு மதரஸாக்களின் தீர்ப்பாகும் (ஃபத்வா).

இந்த மூடத்தனமான ஃபத்வா மேலே நாம் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்களுக்கு ஒத்திருக்கிறதா? இல்லையே. அப்படியானால் இந்த மதகுருமார்கள் அல்குர்ஆனை யூத மத குருமார்கள் தவ்றாத்தை நிராகரித்தது போல் நிராகரிக்கிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா?(பார்க்க : 2:85)

ஆண்கள் தலாக், தலாக், தலாக் என ஒரே மூச்சில் சொல்லிவிட்டால் கணவன் மனைவி உறவு முறிந்து விடும். அதே சமயம் அல்குர்ஆன் பக்கரா 2:228 “”கணவர்களுக்கு மனைவிகளிடம் இருக்கும் உரிமை போல், முறைப்படி மனைவிகளுக்கும் கணவர்களிடம் உரிமையுண்டு; ஆண்களுக்கு அவர்கள் மீது ஒருபடி உயர்வுண்டு” என்று கூறுவதுபோல் மனைவிக்கு கணவ னோடு வாழப் பிடிக்கவில்லை; அவளால் நேர டியாக தலாக் சொல்ல முடியாது. என்னை எனது கணவனிடமிருந்து பிரித்து விடுங்கள் என இந்த மதகுருமார்களிடம் முறையிட்டால் இவர்களின் தீர்ப்பு என்ன தெரியுமா? கணவனிடமிருந்து உன்னைப் பிரித்துத் தீர்ப்பு (ஃபத்வா) கொடுக்க முடியாது. தலாக் சொல்லப்பட்டால் அல்லாஹ்வின் அர்ஷே நடுங்குகிறது. கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்; நீ அவனுடன் தான் வாழ வேண்டும். கணவன் இன்னொருத்தியை மனைவியாக்கிக் கொண்டு இவளை வாழா வெட்டியாக வைத்திருந்தாலும் அவனிடமிருந்து பிரிக்க முடியாது என்பதுதான் இந்த மூட முல்லாக்களின் முரட்டு ஃபத்வா. இதிலிருந்தே இந்த மதகுருமார்களின் அறிவீனமும் மக்களை குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு முரணாக வழி கேடுகளில் இட்டுச் செல்வதும் புரியவில்லையா?

மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வதால் ஏற்படும் விபரீதங்கள்!
இப்போது இந்த மதகுருமார்கள் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதால், எற்படும் விபரீதங்களை அடுக்கடுக்காத் தருகிறோம் பாருங்கள். வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு இந்த மதகுருமார்கள் மனிதக் குலத்திற்கே இழைத்த மாபெரும் கொடுமை-மெகா மெகா குற்றம் அகில உலக மக்களுக்கே, மனித குலத்தினர் அனைவருக்குமாக இறைவனால் இறக்கியருளப்பட்ட இறுதி வாழ்க்கை நெறி கூறும் அல்குர்ஆன் முஸ்லிம் களுக்கு மட்டுமே சொந்தம்; மாற்று மதத்தினருக்கு இந்த குர்ஆனில் உரிமை இல்லை; மாற்று மதத்தினருக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது எனச் சட்டம் சொல்வதாகும். மாற்று மதத்தின ரும் முஸ்லிம் மதத்தில்(?) முஸ்லிம் மதகுருமார்களுக்குத்தான் அதிகாரம் உண்டு என நம்பி அவர்கள் கூறுவதை வேதவாக்காக ஏற்று அல்குர்ஆன் முஸ்லிம்களின் வேதம்(?); அதற்கும் நமக்கும் எவ்வித ஒட்டும் உறவும் இல்லை என ஒதுங்கிச் செல்கின்றனர். இந்த முஸ்லிம் மதகுருமார்களின் தவறான போதனைகளால் முஸ்லிம்கள் இன உணர்வுக்கு அடிமையாகிச் செயல்படுத்தும் மனித நேயத்தைக் கொலை செய்யும் தீய செயல்களைத்தான் முஸ்லிம் களின் வேதம்(?) போதிப்பதாக தவறாக நம்பி அல்குர்ஆனையே விமர்சித்து வருகின்றனர்.

இன்னும் கொடுமை பாருங்கள்!
கேவலம் ஒரு சாண் வயிற்றை ஹராமான வழிகளில் நிரப்ப இந்த மதகுருமார்கள் மனித குலத்திற்கே செய்யும் மாபெரும் கொடுமை இது. அத்தோடு விட்டார்களா? இல்லையே! அடுத்து முஸ்லிம்களுக்கே இந்த மதகுருமார்கள் செய்து வரும் பெரும் கொடுமையைப் பாருங்கள். வயிற்றுப் பிழைப்பையே நோக்கமாகக் கொண்டு குருகுல மதரஸாக்களில் இலவசமாகத் தங்கி இலவச உடை, உணவு பெற்று சில வருடங்கள் காலத்தை ஓட்டி மவ்லவி பட் டத்துடன்(?) வரும் ஆலிம்களுக்கு(?) மட்டுமே குர்ஆன் விளங்கும். அக்குருகுல மதரஸாக்களில் ஓசியில் தங்கி தண்டச்சோறு சாப்பிடாதவர்கள் என்ன தான் உயர் கல்வி கற்று கைநிறைய சம்பாதித்து வாழ்வாங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அவாம்கள்; அந்த அறிஞர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்துத் தேறினாலும் அவர்கள் குர்ஆனை விளங்க முடியாது எனக் கூறி பெரும்பாலான முஸ்லிம் சமுதாயத்தினரை அல்குர்ஆனை விட்டும் அப்புறப் படுத்தியதாகும்.

அதன் விளைவு, பெரும்பாலான முஸ்லிம்களும் இம்மதகுருமார்களின் வஞ்சகப் புத்தியை அறியாமல், அவர்களின் இத்தவறான கூற்றை வேதவாக்காகக் கொண்டு குர்ஆனைப் படித்து விளங்குவதைக் கைவிட்டார்கள். குர்ஆனை ஒளூ இல்லாமல் தொடக் கூடாது என்ற இன்னொரு மூடச் சட்டம் காரணமாக முஸ்லிம்கள் அல்குர்ஆனைத் தொடுவதற்குக் கூட அஞ்சுகிறார்கள்.

ஆரம்ப அற்புத நிலை!
நபி(ஸல்) அவர்களது காலத்திலிருந்து இம் மதகுருமார்கள் திருட்டுத்தனமாக, கொல்லைப்புற இடுக்கு வழியாக முஸ்லிம் சமுதாயத்தினுள் நுழையும் வரை, முஸ்லிம்கள் அல்குர்ஆனைப் படித்து விளங்கினார்கள். பெரும் ஞானம் பெற்றார்கள். அல்குர்ஆனில் புதைத்து கிடக்கும் விஞ்ஞான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார்கள். அனைத்து விஞ்ஞான தொழில் நுட்பத் துறைகளிலும் பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து மனித குலத்திற்கு அறிவித்தார்கள். முழு உலகையும் வழி நடத்திச் செல்லும் ஆற்றலையும், திறமையையும், அறிவு நுட்பத்தையும் முஸ்லிம்கள் கொண்டிருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களது காலத்திலிருந்து இந்த மதகுருமார்கள் திருட்டுத்தனமாக இந்த முஸ்லிம் சமுதாயத்தில் நுழையும் வரை ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நேரடியாக அல்குர் ஆனைப் படித்தார்கள்; சிந்தித்தார்கள், விளங்கினார்கள்; பல அரிய கண்டு பிடிப்புகளைக் கண்டுபிடித்தார்கள்.

மிக அரிய கண்டுபிடிப்புகள்!
மருத்துவம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், கணக்கியல், வானவியல் என உலகின் அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்கள் முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள். பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அளித்தார்கள். இன்றைய உலகின் அனைத்து வகை முன்னேற்றங்களுக்கும் அவையே அடித்தளமாக அமைந்துள்ளன.
ஆனால் கைசேதம்! என்று இந்த மதகுருமார்கள் திருட்டுத்தனமாக சமுதாயத்தினுள் நுழைந்தார்களோ, பொதுமக்களாகிய உங்களுக்கு குர்ஆன் விளங்காது என்ற பசப்பு மொழியை ஷைத்தானின் உறுதுணையுடன் முஸ்லிம்களின் நெஞ்சங்களில் புரையோடச் செய்தார்களோ, அன்றிலிருந்தே முஸ்லிம் பெரும் மக்கள் குர்ஆனைப் படிப்பதையும், சிந்திப்பதையும், விளங்குவதையும் கை விட்டார்கள்.

இந்த மதகுருமார்கள் பொதுமக்களைத் தான் குர்ஆனைப் படித்துச் சிந்தித்து விளங்குவதை விட்டும் அப்புறப்படுத்தினார்கள். அவர்களாவது நேரடியாக குர்ஆனைப் படித்துச் சிந்தித்து விளங்கி அதிலுள்ள விஞ்ஞான உண்மைகளை வெளிக்கொணர முற்பட்டார்களா? அதுதான் இல்லை; அவர்களின் முதல் குறிக்கோள் வயிற்றுப் பிழைப்பு.

வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாக நடத்த அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பெரும்பான்மை மக்களை ஈர்க்கும் வகையில் கிராஅத், குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் முர ணானவற்றை வாதத் திறமையால் மயக்க மன்திக் என்ற விவாதக் கலை, பொய்த் தத்துவங்கள் கொண்டு மக்களை மயக்க ஃபவ்ஸபா என்ற தத்துவம் இவையே இந்த குருகுல மடங்களில் அதிமுக்கியத்துவம் கொடுத்து போதிக்கப்படுகின்றன.

ஆக வயிற்றுப் பிழைப்புக்குத் தேவையான குருகுல புரோகிதக் கல்வி மட்டுமே. மற்றபடி அரபி மொழியில் போதிய ஞானமோ, ஆய்வுத் திறனோ, பயிற்சியோ குருகுலக் கல்வித் திட்டத்தில் இல்லை. பின் எப்படி அப்படிப்பட்ட ஆய்வுகளில் அவர்களால் ஈடுபட முடியும்? அதற்கு மாறாக யூதர்கள் குர்ஆனில் குறை கண்டுபிடித்து இஸ்லாத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற தீய நோக்குடன் வரிவரியாக, எழுத்து எழுத்தாக ஆய்வு செய்தும், குர்ஆனில் குறை காண முடியவில்லை. ஆனால் குர்ஆனிலுள்ள விஞ்ஞான நுட்பங்களைக் கண்டறிந்து பல அரிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து நோபல் பரிசுகளைக் குவிக்கிறார்கள். இத்தனைக்கும் யூதர்களின் மொத்த ஜனத் தொகை ஒன்றரை கோடிதான். 150 கோடி முஸ்லிம்களில் புதிய கண்டுபிடிப்பு வகையில் யாரும் ஒரேயயாரு நோபல் பரிசையும் பெறவில்லை என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.

விளைவு அகில உலக மக்களுக்கும் சிறந்த முன் மாதிரியாக இருந்த முஸ்லிம்கள், உலகை வழி நடத்திச் சென்ற முஸ்லிம்கள் அதலபாதாளத்தில் விழுந்து, அல்லாஹ் 1:7ல் கூறுவது போல் அவனின் கோபத்திற்கு ஆளாகி, வழி தவறியவர்களான யூத, கிறித்தவ, பல தெய்வ வழிபாடுடைய, நாத்திக மக்கள் பின்னால் செல்ல ஆரம்பித்தனர்.

முஸ்லிம்களின் கேடுகெட்ட நிலை!
இன்று இழந்ததை மீட்க, இருப்பதைக் காக்க, வாழ்வுரிமை பெற, இட ஒதுக்கீடு பெற, பாபரி மஸ்ஜிதை மீட்க என்றெல்லாம் முழக்கமிட்டுக் கொண்டு 3:186, 7:86, 29:29, 13:22, 41:34 இறைக் கட்டளைகளுக்கு முரணாக, அவற்றை நிராகரித்துவிட்டு, ஐங்கால தொழுகைகளைப் பாழ் படுத்தி (அன்றைய தினம் அவர்களின் ததஜ பள்ளிகளில் பாங்கோ, தொழுகையோ நடை பெறவில்லை என அறிகிறோம்) முஸ்லிமான ஆண்களையும், பெண்களையும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய, போராட்டம் நடத்த முற்படுவதெல்லாம், மாற்றாரைப் பின்பற்றிக் குறிப்பாக நாத்திகர்களைப் பின்பற்றி அரங்கேற்றும் நாடகங்களாகும். இதனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. மாறாக இந்த மதகுருமார்கள் முஸ்லிம்களின் இன உணர்வை தூண்டிவிட்டு அவர்களின் பொருளை கோடி கோடியாக கொள்ளை அடிக்க மட்டுமே இவை உதவும்.

இவர்களும் நாத்திகர்களா?
நாத்திகர்களுக்கு இறைவனைப் பற்றியோ, மறுமையைப் பற்றியோ நம்பிக்கை இல்லை. தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையில் தங்கள் உரிமைகளை இப்படிப் போராடியே பெற முடியும் என்ற மூட நம்பிக்கையில் மூழ்கியவர்கள், அல்லாஹ்வையும், மறுமையையும் உறுதியாக நம்புபவர்களில் நம்பர் 1 எனப் பீற்று பவர்கள், “”அல்லாஹ் கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது; அல்லாஹ் தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது” என்ற அடிப்படை உண்மையை மறந்து விட்டு எப்படி இப்படிப்பட்ட ஈனச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்குப் பெருந் துன்பங்களைக் கொடுக்க முடியும்?

ஜனவரி 27 அன்று பிரசவ வேதனையில் மருத்துவமனை செல்ல முடியாமல் துடித்தவர்கள் எத்தனை பேர்? பெரு நோயாளிகள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெறமுடியாமல் மரணித்தவர்கள் எத்தனை பேர்? உரிய சிகிச்சை பெற முடியாமல் தவித்தவர்கள் எத்தனை பேர்? நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் துடித்தவர்கள் எத்தனை பேர்? அவசரத் தேவைகளுக்குப் போக முடியாமல் தவித்தவர்கள் எத்தனை பேர்? இப்படி இவர்களின் ஆர்ப்பாட்டம் போராட்டங்களால் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகியவர்கள் எத்தனை பேர்?

பாதையில் நின்று இருவர் பேசுவதையே தடை செய்த மார்க்கம்!
போக்குவரத்திற்கு இடையூராகப் பாதையில் நின்று பேசிக் கொண்டிருந்த இருவரைக் கூட கண்டித்த இஸ்லாமிய மார்க்கத்தில் இப்படிப் பட்ட காட்டுமிராண்டிச் செயல்களுக்கு அனுமதி இருக்க முடியுமா? இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்புகிறவர்கள் இப்படிப்பட்ட ஈனச் செயல்களில் ஈடுபட முடியுமா? சிந்தியுங்கள். பொது மக்களுக்கு இடையூராக பாதையைத் தடுக்கக் கூடாது எனக் கூறும் 7:86, 29:29 இறைவாக்குகளை நிராகரித்தும், 2:212, 3:37, 17:30, 24:38, 28:82, 29:62, 30:37, 34:36,39, 39:52, 42:12,19 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளில் ரிஸ்க் அளிப்பவன் அல்லாஹ் தான், ரிஸ்க்கை அதிகரிப்பதும், குறைப்பதும் அவன் கையிலேயே இருக்கிறது என்று கூறும் இறைவாக்குகளை மறுத்து, புறக்கணித்து நிராகரிப்பவர்களே இப்படிப்பட்ட நாடகங்களை அரங்கேற்றி அற்ப உலக ஆதாயம் அடைய முடியும். இதற்கு முன்னணியில் நிற்பவர்கள் மதகுருமார்கள்.

மீலாது மவ்லூதைக் கண்டித்து “”நமது உத்தரவின்றி யாரேனும் ஓர் அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்” என நபி(ஸல்) கூறினார்கள். ஆயிஷா(ரழி) முஸ்லிம் 3541. “”யார் பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என அறிவுரை கூறும் இவர்கள் யாரைப் பின்பற்றி இப்படிப் பட்ட இழி செயல்களில் ஈடுபடுகிறார்கள்? நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றியா? நாத்திகர்களைப் பின்பற்றியா?

தங்களின் வயிற்றுப் பிழைப்பையும், அற்ப உலக ஆதாயங்களையும் குறியாகக் கொண்டு மாற்றாரை அகில உலக மக்களுக்கும் வழிகாட்டியான அல்குர்ஆனை நெருங்கவிடாமல் தடுத்து விட்டார்கள். அடுத்து முஸ்லிம்களையும் அல்குர்ஆனைத் தொடவிடாமல் ஆக்கிவிட்டார்கள். அத்துடனாவது இம்மத குருமார்கள் திருப்தி அடைந்தார்களா? இல்லையே?

போட்டி, பொறாமை… பிளவு!
அடுத்து என்ன? மதகுருமார்கள் தங்களுக் குள்ளேயே உலகில் கிடைக்கும் பெயர், புகழ், பொருளாதாரம், பட்டம், பதவி இவை காரண மாகப் போட்டி பொறாமை ஏற்பட்டு பல பிரிவினர்களாகப் பிரிந்து சமுதாயத்தைச் சின்னா பின்னமாக்கிச் சிதறடிக்கிறார்கள். உண்மையில் இந்த மதகுருமார்களுக்கு அல்லாஹ்வின் அச்சமும், மறுமைச் சிந்தனையும் இருந்தால் நிச்சயம் இப்படிப்பட்ட போட்டி பொறாமை ஏற்பட வாய்ப்பே இல்லை. பிரிவினைக்கு இந்த மத குருமார்கள் கூறும் காரணம் கருத்து வேறுபாடுகள் என்று கூறிப் பிரிவினையை நியாயப்படுத்துகிறார்கள்.

இறையச்சம் இருந்தால் பிளவு இல்லை!
ஆனால் உண்மையில் இறையச்சத்துடன் கூடிய கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் பிரிவினையைத் தோற்றுவிக்காது. உலகியல் ஆதாயக் குறிக்கோளே போட்டி பொறாமையையும், அதனால் பிரிவினைகளையும் தோற்றுவிக்கின்றது. நபி தோழர்களிடம் பல கருத்து வேறுபாடுகள் தோன்றின. ஆனால் அவை பிரிவினைக்கு வழி வகுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்து அஸர் தொழ நபி (ஸல்) சொல்லிய நிலையில் ஒரு சாரார் அஸர் நேரம் வந்தவுடன் தொழுதார்கள். ஒரு சாரார் அங்கு சென்று தொழுதார்கள். அது கொண்டு பிரிவினை ஏற்படுத்தி இரண்டு மத்ஹபுகளை கற்பனை செய்தார்களா? இல்லையே.

உலகக் குறிக்கோளே பிளவுகள்!
நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு உலகியல் ஆதாயமான ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணம் ஏற்பட்ட பின்னரே போட்டி, பொறாமை ஏற்பட்டுப் பிரிவினைகள் ஏற்பட்டன. ஆம்! மறுமையைக் குறிக்கோளாகக் கொண்டு தூய்மையான எண்ணத்துடன் (இஃக்லாஸ்) செயல்படும்போது போட்டி பொறாமை அதனால் பிரிவினைகள் ஏற்படவே செய்யாது. உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு மார்க்கப் பணி செய்ய முற்பட்டால் நிச்சயம் போட்டி பொறாமையும் அதனால் பிரிவினைகளும் ஏற்படவே செய்யும். (பார்க்க : 2:90,213, 3:19, 10:90, 42:14, 45:17)

நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே இந்த மதகுருமார்கள் திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்தில் புகுந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆரம்ப காலத்தில் அல்குர்ஆன் இதர மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை. ஏன்? அல்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு சுமார் 62 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிஜ்ரி 1370லேயே நமக்குக் கிடைத்தது. இம்மதகுருமார்கள் மிக நீண்டகாலமாக பல்வேறு மொழிகளில் குர்ஆன் மொழி பெயர்க்கப்படுவதை மிகக் கடுமையாகத் தடுத்துக் கொண்டிருந்தனர். எனவே மிக நீண்டகாலமாக முஸ்லிம்கள் இந்த மதகுருமார்கள் குர்ஆனில் இருப்பதாகச் சொன்னவற்றை அப்படியே நம்பிச் செயல்படும் கட்டாயத்தில் இருந்தார்கள். குர்ஆனிலோ, ஹதீஸிலோ இல்லாத பித்அத்தான பிரிவுப் பெயர்களான “”ஷிஆ”, “”சுன்னத் வல்ஜமாஅத்” என இவர்களாகக் கற்பனை செய்து சூட்டிக் கொண்டு ´ஷிர்க், குஃப்ர், பித்அத்கள் நிறைந்த சமாதிச் சடங்குகள், கூடு, கொடி, கத்தம், ஃபாத்திஹா, மீலாது, மவ்லூது, இத்தியாதி, இந்தியாதி அனாச்சாரங்களை, மூட நம்பிக்கைகளை மார்க்கமாக முஸ்லிம்களுக்குப் போதித்து இந்த மதகுருமார்கள் வயிறு வளர்த்து வந்தார்கள்.

பல பிரிவுகளுக்குக் காரணம்!
ஒரே பிரிவாக இருந்தால் ஒரே தலைமைதானே இருக்க முடியும். தலைமைக்கு ஆசைப்பட்டுப் பல சில்லரைப் பிரிவுகள் ஆனார்கள். ஹனஃபி, மாலிக்கி, ஷாஃபி, ஹன்பலி, காதிரியா, ஷாதுலியா, நக்­பந்தியா, சிஷ்தியா போன்ற பிரிவுகள் அப்படி ஏற்பட்டவைதான்.
பின்னர் கபுரு சடங்குகளை முழுமையாக ஆதரிக்கும் பரேல்வி அகீதா என்றும், கபுரு சடங்குகளை மறுத்தாலும் தரீக்கா, மத்ஹபு, வசீலா இவற்றைச் சரிகாணும் தேவ்பந் அகீதா என பிரிவுகள் தோன்றின. பின்னர் தரீக்காக்களை எதிர்த்தும் மத்ஹபை ஆதரிக்கும் பிரிவு, முகல்லிது, கைர முகல்லிது பிரிவுகள், காதியானி பிரிவு, அஹ்லகுர்ஆன் பிரிவு, முஜாஹித், அஹ்லஹதீஸ், ஜாக், ததஜ, இதஜ என எண்ணற்றப் பிரிவுகள் தோன்றி ஒவ்வொரு பிரிவும் “”நாங்கள்தான் நேர்வழியில் இருக்கிறோம். நம்பர் 1 தவ்ஹீத்வாதிகள் என 4:49, 53:32 இறைக் கட்டளைகளை நிராகரித்துத் தங்களைத் தாங்களே பரிசுத்தவான்கள் எனப் பீற்றிக் கொள்கிறார்கள்.

பிரிவுகள் அனைத்தும் மதகுருமார்கள் பின்னே!
இந்தப் பிரிவுகள் அனைத்தையும் உற்று நோக்குங்கள். இந்த அனைத்துப் பிரிவுகளிலும் ஒரு சிறு கூட்டம் மதகுருமார்கள் என்ற பெயரில் பெருங்கூட்டத்தை வழிநடத்திச் செல்வார்கள். ஒவ்வொரு பிரிவும் அவரவர் நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்களின் கூற்றை வேதவாக்காகக் கொண்டு செயல்படுவார்கள். இப்படிச் செயல்படுவது பகிரங்கமான வழிகேடு என்பதை அல்குர்ஆன் 2:186, 7:3, 33:36, 50:16, 56:85, 59:7 இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும்.

அல்லாஹ், ரசூல் மூன்றாவது வழிகாட்டி இல்லை!
அல்லாஹ், அவனது இறுதித் தூதரின் வழிகாட்டுதலை விட்டு, மூன்றாவதாக இந்த மதகுருமார்களை நம்பி அவர்களின் வழிகாட்டுதல்படி நடப்பவர்கள், நாளை மறுமையில் நரகில் கிடந்து வெந்து வேதனைப்பட்டுக் கொண்டு கதறுவதைப் படம் பிடித்துக் காட்டுகின்றன அல்குர்ஆனின் 33:66, 67,68 இறை வாக்குகள்.

ஆம்! மதகுருமார்கள் என்றாலே தங்களின் அற்ப இவ்வுலக வாழ்க்கைக்காகத் தங்களை நம்பி தங்கள் பின்னால் வரும் அப்பாவி மக்களை வழிகெடுத்து நரகில் சேர்ப்பவர்கள். ஷைத்தானின் நேரடி முகவர்கள், வானத்தின் கீழ் இருக்கும் படைப்புகளில் ஆகக் கேடுகெட்டப் படைப்பு என்பதை அல்குர்ஆன் 7:175-179 இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயமாக அறிய முடியும். மேலும் அல்குர்ஆனில் மிகமிகக் கடுமையாக, இழிவாக விமர்சிக்கப்பட்டிருப்பவர்கள் இந்த மதகுருமார்களே என்பதை அல்குர்ஆனைத் தினசரி படித்து வருகிறவர்கள் அறியமுடியும்.

நாளை நரகில் ஒப்பாரி!
இந்த பெருமை பேசும் மதகுருமார்களை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் சென்று நரகை அடைந்தவர்கள் அங்கு ஒப்பாரி வைத்து அலறிப் பிதற்றிக் கொண்டு உளறுவதை அல்குர்ஆன் படம் பிடித்துக் காட்டுகிறது. அல்குர்ஆன் 43:36லிருந்து 45 வரையும், 34:31-33, 37:27-33, 40:47-49, 41:29 இந்த இறைவாக்குகளைப் படித்து அறிகிறவர்கள் இதை நிச்சயம் விளங்க முடியும். இந்த மதகுருமார்களின் பேச்சை நம்பாமல், அல்லாஹ்வின் கட்டளைப்படி மதகுருமார்களைப் புறக்கணித்துவிட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஸை படித்து விளங்கி அதன்படி நடப்பவர்களை வழிகேடர்கள், தவறான வழியில் செல்பவர்கள் எனத் தூற்றிக் கொண்டிருந்தவர்கள், அதாவது இந்த மதகுருமார்கள் பின்னால் சென்றவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு கதறுவதை 38:55-64 வரை 10 இறைவாக்குகளைப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும். அவற்றில்

இன்னும், அவர்கள்: “”நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் நினைத்தோமே, அவர்களை (நரகில்) ஏன் காண முடியவில்லை? (38:62)

நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமே? (அவர்களைக் காணமுடியாத வாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகிவிட்டனவா? என்பர்! நிச்சயமாக இது தான் உண்மை. நரகவாசிகள் (இவ்வாறு தான்) ஒருவரோடொருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள். (38:63,64)

34:31-33 இறைவாக்குகளில் பெருமை அடித்தவர்கள், பெருமையடித்தவர்கள் என மீண்டும், மீண்டும் குறிப்பிடப்பட்டிருப்பது இந்த மத குருமார்களைத்தான். அவர்கள்தான் “”நாங்கள் அறிஞர்கள்; குர்ஆன், ஹதீஸை கற்றவர்கள்; மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள்; நீங்கள் கால்நடைகளைப் போன்றவர்கள்; உங்களால் மார்க்கத்தை விளங்க முடியாது” என பெருமை பேசுகின்ற னர்; ஆணவம் கொள்கின்றனர்.

ஆணவம், பெருமை நரகில் சேர்க்கும்!
இந்த ஆணவமே அவர்களை நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை மதகுருமார்கள் அறியமாட்டார்கள். அந்த அளவு அவர்களின் உள்ளங்கள் சுருங்கி, இறுகிக் கல்லாய்ப் போய் விட்டன. “”கடவுள் ஏன் கல்லானான்? மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே” என்று ஒரு கவிஞன் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மையே! (பார்க்க: 2:74, 5:13, 6:125)

இன்று உலகில் காணப்படும் அனைத்து அநியாயங்கள், அட்டூழியங்கள், பஞ்சமா பாவங்கள், இறைவனுக்கு இணை வைப்பு, இறை மறுப்பு, நாத்திகம், ஜாதி, இன, நாடு, மொழிப் பாகுபாடு இவை அனைத்திற்கும் முழுமுதல் காரணமாக இருப்பவர்கள் ஆன்மீக வழிகாட்டிகள் என மார் தட்டும் இந்த மதகுருமார்களும், அவர்களின் கூட்டுக் கள்ளன்களான அரசியல் வழிகாட்டிகள்-தலைவர்கள் எனக் கூறிக் கொண்டு, மக்கள் சொத்தை அநியாய வழிகளில் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளுமேயாவர். ஆக வானத்தின் கீழ் வாழும் படைப்புகளில் மிகமிக கேடுகெட்டவர்கள் இந்த மதகுருமார்களே என்பது நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு நிச்சயம் விளங்கும்?

மதகுருமார்கள் எப்படி முஸ்லிம் சமுதாயத்திலும் நுழைந்தார்கள்?
அடுத்து, நபி(ஸல்) இந்த மதகுருமார்கள் விஷயத்தில் மிகமிக எச்சரிக்கையாக இருந்தும், இவர்கள் எப்படித் திருட்டுத்தனமாக முஸ்லிம்களிடையே புகுந்தார்கள் என்பதை வரலாறு மூலம் அறிவோம்.

மதகுருமார்களை உற்பத்தி செய்யும் குரு குல புரோகிதக் கல்வி, கல்வி கற்பிக்கும் குருகுல மடங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னரே அனைத்து மதங்களிலும் இருந்தன; இருந்து வருகின்றன என்பதைப் பார்த்தோம். அரபு நாட்டிலும் கஃபாவுக்கு மிகச் சமீபமாக நபி(ஸல்) அவர்களின் முப்பாட்டனாரின் முப்பாட்டனார் குசை கி.பி.440ல் நிறுவிய “”தாருந் நத்வா” என்ற குருகுல மடம் இருந்து அதை நபி (ஸல்) இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். வேரோடு வேரடி மண்ணோடு இல்லாமலாக்கினார்கள் என்ற விபரங்களைப் பார்த்தோம்.

5% மதகுருமார்கள் 95% மக்களை ஆட்டிப் படைக்கும் நிலையை மாற்றி 100% மக்களும் மிகமிக எளிதாக மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும் மிகச் சிறந்த நடைமுறையை நபி(ஸல்) நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள். இந்த அழகிய நடை முறை சொற்ப காலமே நீடித்தது. அதன் பின்னர் யூதக் கைக்கூலிகளான இந்த மத குருமார்கள் முஸ்லிம்களிடையே புகுந்து மீண்டும் குருகுல மடங்களான மதரஸாக்களை உருவாக்கிவிட்டார்கள்.

அந்த வரலாறு இதுதான்:
ஆரம்பக் கல்விக் கூடம் பள்ளி வாயில்களாகவே இருந்தன. அன்று பள்ளிகளில் தீன் கல்வி, உலகக்(துன்யா) கல்வி என்ற பேதமில்லாமல் அனைத்துக் கல்வியும் மிக எளிதாகப் போதிக்கப்பட்டது. மத்ஹபுகள் இந்த மதகுருமார்களால் கற்பனை செய்யப்பட்ட பின்னரே பள்ளிவாயில்களில் தூய மார்க்கக் கல்வி கற்பிக்கும் நிலைக்கு ஆபத்து வந்தது. மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஹிஜ்ரி 361-ல் கெய்ரோவில் அல்அஸ்ஹர் குருகுல மடம் நிறுவப்பட்டது. ஹிஜ்ரி 449ல் மத்ரஸா நிஜாமிய்யா குருகுல மடம் நிறுவப்பட்டது. சுல்தான் சலாஹுத்தீன் பைத்துல் முகத்திசில் முதலில் மதரஸாவைப் புகுத்தினார். பின்னர் ஹனஃபி, மாலிக்கி, ஷாஃபி, ஹன்பலி மதரஸா பேரில் குருகுல மடங்கள் நிறுவப்பட்டன.

மதீனாவிலும் மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் அரபு நாடுகள் அனைத்திலும் இந்த குருகுல மடங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் குருகுல மடங்கள் ஆரம்பிக்கப்பட்டு இலவச உணவும், உறையுளும் அளிக்கப்பட்டன.

இந்தியாவில் குருகுல மடம்!
வட இந்தியாவில் தேவ்பந்தில் ஹிஜ்ரி 1283 (ஈ1866) தென் இந்தியாவில் வேலூரில் ஹிஜ்ரி 1302(ஈ1885) குருகுல மதரஸாக்கள் ஆரம்பிக் கப்பட்டன. பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் (இப்போதைய தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்) உள்ள சில ஊர்களில் பித்அத்தான, ´ஷிர்க் நிறைந்த மவ்லூதுகள் ஓதுவதற்கு மாணவர்கள் தேவை என்ற தவறான எண்ணத்துடன் பெரும்பாலான குருகுல மதர ஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இல்யாஸ் சாஹிபின் தப்லீக் சேவைக்குப்பின் புற்றீசல் போல் பல மதரஸாக்கள் தோன்றின. இவற்றில் சில, மதகுருமார்களிடையே ஏற்பட்ட போட்டி பொறாமை நானா, நீயா என்ற ஆணவம் காரணமாகவே ஆரம்பிக்கப்பட்டன. இந்த மதரஸாக்கள் வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த நிய்யத்-எண்ணத்தின் அடிப்படையில் இந்த குருகுல மதரஸாக்களில் படித்துப் பட்டம் பெற்று வெளிவரும் மதகுருமார்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பிலேயே குறியாக இருப்பதால், மார்க்கம் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.

வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு புரோகிதக் கல்வி கற்று வெளிவரும் இந்த மதகுருமார்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஆப்பு வைத்து ஆபத்தை ஏற்படுத்தும் தூய மார்க்கத்தை-நேர்வழியை-சத்தியத்தை எடுத்துச் சொல்ல முன்வர முடியுமா?
அதனால் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே உள்ள தூய மார்க்கக் கல்வியைப் புறக்கணித்தார்கள். குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என பித்அத் தான “”பிக்ஹு” கல்வியை கற்பனை செய்து அதை மார்க்கக் கல்வி என போதிக்க ஆரம்பித்தனர். மக்கள் உலகியல் துறைகளில் கல்வி கற்றுத் தேர்ந்தால், தங்களின் ஏமாற்று வித்தை அம்பலத்திற்கு வந்துவிடும் என அஞ்சி கல்வியை, தீன் கல்வி, துன்யா கல்வி எனப் பிரித்து, தங்களின் குருகுல கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து துன்யா கல்வியை இழிவுபடுத்திக் கூறி மக்கள் அதைப் புறக்கணிக்கச் செய்தார்கள். பழைய மத்ஹபு பிரிவினர் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் எனக் கூறுவதை மாற்றிப் புதிய மத்ஹபினர் குர்ஆன், ஹதீஸ், லாஜிக், பாலிஸி எனக் கூறி தங்களின் சுயக் கருத்துக்களைப் புகுத்தி வருகின்றனர். வழிகேட்டையே மார்க்கமாகப் போதிக்கின்றனர்.

மதகுருமார்கள் வழிகேட்டைப் போதிக்க அடிப்படைக் காரணம்!
மக்களில் மிகமிகப் பெரும்பான்மையினர் நரகத்திற்குரியவர்; அவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்ப ஷைத்தானுக்கு அல்லாஹ் வாக்களித்து விட்டதை 4:118-121, 7:13-18, 14:22, 17:61-65, 32:13, 11:118,119 போன்ற பல இறைவாக்குகளைப் படித்து விளங்குகிறவர்கள் உணர முடியும்.

இந்த நிலையில் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டவர்களுக்கு இப்பெருங்கொண்ட மக்களின் ஆதரவே அவசியம். அவர்களே இம் மதகுருமார்களுக்குக்கை நிறைய காசு கொடுப்பார்கள். நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பல கடுமையான எச்சரிக்கைகளுக்கு முரணாக இம் மத குருமார்களுக்கு கூலி-சம்பளம் கொடுக்க ஒரு போதும் முன்வர மாட்டார்கள். எனவே சத்தியத்தை நேர்வழியை மக்களுக்கு எடுத்துச் சொல்லி இம்மதகுருமார்கள் உலக ஆதாயம் அடைய முடியாது. கோணல் வழிகளை நேர் வழியாகக் காட்டும்போதே நரகை அடையும் பெருங்கொண்ட மக்கள் அதனால் ஈர்க்கப்பட்டு இம்மதகுருமார்களின் சூனியப் பேச்சில் மயங்கி அவர்களுக்கு கைநிறைய காசு கொடுப்பார்கள். (பார்க்க. 5:100, 63:4, 6:116)

இந்த மதகுருமார்கள் கோணல் வழிகளை நேர்வழியாகக் காட்டுவதின் மர்மம் புரிகிறதா? மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டால் நிச்சயமாக வழிகேட்டில் சென்று நரகை நிரப்பும் பெருங்கொண்ட மக்களின் ஆதரவை யும், அவர்கள் கொடுக்கும் கூலி-சம்பளம்- அன்பளிப்புகள் இவற்றையும் நோக்கமாகக் கொண்டே! இதையும் அல்லாஹ் 2:41,79,174, 3:187,188, 5:62,63, 9:9,10,34, 11:18,19 போன்ற இறைவாக்குகளில் தெளிவாக அடையாளம் காட்டி எச்சரிக்கிறான்.

இந்த மதகுருமார்கள் நன்கு அறிந்த நிலையில்தான் அற்ப உலக ஆதாயம் கருதி சத்தியத்தை-நேர்வழியை மறுக்கிறார்கள் என்று 2:75,78,109,146, 6:20 போன்ற இறைவாக்குகளில் சுட்டிக்காட்டி அல்லாஹ் எச்சரிக்கிறான்.

சகோதர, சகோதரிகளே மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இந்த மதகுருமார்களைப் பற்றி ஓரளவாவது நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். முஸ்லிம்களில் ஆக அடி மட்டத்தில் இருக்கும் கபுரு வணங்கி மதகுருமார்களிலிருந்து, சுன்னத் ஜமாஅத், அஹ்ல ஹதீஸ், முஜாஹித், இஹ்வானுல் முஸ்லிமீன் மஸ்லக் மதகுருமார்களிலிருந்து, ஜாக், ததஜ, இதஜ, காதியானி மத குருமார்களிலிருந்து, ஸலஃபி மதகுருமார்களிலிருந்து, அஹ்ல குர்ஆன் மதகுருமார்களிலிருந்து, ஷிஆ மதகுருமார்களிலிருந்து, இன்னும் எத்தனைப் பிரிவுகள் உண்டோ அத்தனைப் பிரிவுகளிலும் இருக்கும் மதகுருமார்களிலிருந்து அனைத்து வகை மதகுருமார்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. கழுதை விட்டைகளில் முன் விட்டை, பின் விட்டை என எவ்வித வேறுபாடும் இல்லையோ அதேபோல் இந்த மதகுருமார்களுக்கிடையிலும் எவ்வித பெரிய வேறுபாடும் இல்லை.

ஆக அடிமட்ட மதகுருமார்களான கபுரு வணங்கிகளிலிருந்து சிலர் கபுரு வணக்கத்தை மட்டும் ´ஷிர்க், மற்ற அனைத்தும் ஆகும் என்று ஒரு பிரிவு மதகுருமார்களும், கபுரு வணக்கம், தரீக்கா இரண்டும் ´ஷிர்க் மற்றவை ஆகும் என அடுத்த பிரிவு மத குருமார்களும், கபுரு வணக்கம், தரீக்கா, மத்ஹபு மூன்றும் தவிர மற்றவை ஆகும் என இன்னொரு பிரிவு மதகுருமார்களும், கலஃபிகளை தக்லீது செய்வது கூடாது. ஆனால் ஸலஃபிகளை தக்லீது செய்வது கூடும் என்றும் இப்படி சில சில வேறுபாடுகளைக் கூறினாலும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட அனைத்துப் பிரிவு மதகுருமார்களும் அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் இடையில் சட்டவிரோதமாக, எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாகப் புகுந்து செயல்படும் குற்ற வாளிகளே. இந்த மதகுருமார்களை வழிகாட்டி களாகக் கொண்டு செயல்படுகிறவர்களும் குற்றவாளிகளே. வழிகேடர்களே! (7:3, 33:36,66,67,68)
இன்ஷா அல்லாஹ் தொடரும்…..

Previous post:

Next post: