முஸ்லிம்களே சுயமாகச் சிந்தியுங்கள்! வெற்றி பெறுங்கள்!!

in 2011 ஜுலை,பிறை

அபூ ஃபத்திமா

15.06.2011 (14.7.1432) புதன்கிழமை இரவு முழுச் சந்திர கிரகணம் ஏற்படும் என்பதை பல வருடங்களுக்கு முன்னரே கணக்கிட்டு அறிவிக்கப்பட்டது. ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்ட சந்திர நாள் காட்டியிலும் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்டபடி 15.6.2011 இரவு கணக்கிட்டபடி முழுச் சந்திர கிரகணம் இடம் பெற்றதை உலகின் பல பகுதியினர், குறிப்பாகத் தமிழ் நாட்டில் தங்கள் கண்களால் கண்டு உறுதிப்படுத்தினர். அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.

அதேபோல் 01.07.2011 (30.07.1432) வெள்ளியன்று இடம் பெறும் பகுதி சூரிய கிரகணத்தையும் உலகின் சில பகுதிகளில் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். ஊடகங்களும் செய்தி வெளியிடத்தான் போகின்றன. இதையும் மேற்படி சந்திர நாள்காட்டியில் முன்கூட்டியே கணக்கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன், பூமி, சந்திரன் இந்த மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போதுதான் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன என்பதையும், சந்திர மாதம் முடிவில் சூரிய கிரகணமும், சந்திர மாத நடுப்பகுதியில் சந்திர கிரகணமும் ஏற்படும் என்பதை நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானமும், விஞ்ஞானிகளும், அறிவுள்ள மக்களும் சந்தேகமற அறிவார்கள். இந்த நிலையில் பெரும்பான்மை முஸ்லிம்கள் சரியான பிறைக் கணக்கு என நம்பிப் பின்பற்றும் சிவகாசி நாள்காட்டியில் சந்திர கிரகணம் இடம் பெற்ற 15.06.2011 புதன் அன்று ரஜபு பிறை 12 என்றும், சூரிய கிரகணம் இடம் பெறும் 01.07.2011 வெள்ளியன்று ரஜபு பிறை 28 என்றும் இருப்பது சரியா? பகுத்தறிவு ஏற்கும் சரியான நம்பிக்கையா?

அதே போல் உலகத்தின் கீழ்க்கோடியிலிருந்து மேல்க் கோடி வரை உலக முஸ்லிம்கள் அனைவரும் வெள்ளிக்கிழமையன்று அதாவது 24 மணி நேரத்திற்குள் ஜும்ஆ தொழுது முடித்து விடுவார்கள். கீழ்க்கோடியில் ஜும்ஆ தொழும்போது மேல்க் கோடியில் வியாழனில் இருப்பார்கள். ஆயினும் 24 மணி நேரத்திற்குள் வெள்ளியை அடைந்து ஜும்ஆ தொழுது விடுவார்கள் என்பதிலும் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகம் இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை ஜும்ஆ இரண்டு நாள் 48 மணி நேரம் அல்லது மூன்று நாள் 72 மணி நேரம் வர முடியும் என்று எந்த முஸ்லிமும் அவன் ஆக அறிவீனனாக இருந்தாலும் சொல்ல மாட்டான்.

ஆம்! வெள்ளி என்ற ஒரு கிழமை 24 மணி நேரம் மட்டுமே இருப்பது போல், ஆகஸ்ட் 1 என்ற ஆங்கில தேதி 24 மணி நேரம் மட்டுமே இருப்பது போல், ஆடி 1 என்ற இந்து தேதி 24 மணி நேரம் மட்டுமே இருப்பது போல், ஹிஜ்ரி ரமழான் முதல் தேதி, முதல் பிறை 24 மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் சுயபுத்தி உடையவர்களில் மாற்றுக் கருத்து உள்ளவன் ஒருவன் கூட இருக்க முடியாது. புத்தியை மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்களான மவ்லவிகளிடம்(?) அடகு வைத்துவிட்டு அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு(?) எனக் குருட்டுத் தனமாக-மூடத்தனமாக நம்புகிறவர்வர்கள் மட்டுமே ரமழான் முதல் பிறை, தலைப் பிறை இரண்டு நாள் 48 மணிநேரமும் வரலாம், மூன்று நாள் 72 மணி நேரமும் வரலாம் என்று புத்தி பேதலித்து உளறலாம். அதனால்தான் ஈ.வே.ரா. போன்ற நாத்திகர்கள் பக்தி என்று வந்துவிட்டால் புத்தி பேதலித்து விடும் என்று கூறுகிறார்கள் போலும். ஆம்! மதகுருமார்கள் சொல்வதை நம்பிச் செயல்படுவது பக்தியே அல்ல; அது மூடப் பக்தியேயாகும். 33:36, 66, 67,68 இறைவாக்குகள்படி இந்த மூடப் பக்தி நரகில் கொண்டு சேர்க்கும்.

இந்தச் சுயநல மூட முல்லாக்கள் நபி(ஸல்) அவர்கள் தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் கட்டளையிட்டிருக்கிறார்கள். அதற்கு மாறாக நவீன கணினி கணக்கீட்டை ஏற்கக் கூடாது; அது ஹராம் என புரட்டு வாதம் செய்வதைக் கண்மூடி ஏற்பதால் ஏற்படும் விபரீதம் இது; பெரும் நட்டம்; முடிவு நரகமாகும். நபி(ஸல்) அவர்கள் புறக்கண்ணால் பார்க்கச் சொன்ன (ரஃயல்ஐன்) ஒரேயயாரு ஹதீசும் இல்லவே இல்லை. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அன்று, பெரும் சிர மங்களுக்கிடையே ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் நீண்ட நாட்கள் பயணம் செய்தது போல், தூர இடங்களிலிருந்து இறப்புச் செய்தியை காலம் தாழ்ந்து ஆள் மூலம் அறிந்து கொண்டது போல், ஐங்காலத் தொழுகை நேரங்களை சூரிய ஓட்டத்தைப் புறக்கண்ணால் பார்த்துத் தொழுதது போல், மேகமூட்டமான நாட்க ளில் சூரியனை பார்க்க முடியாமல் அனுமானத்தில் தொழுகை நேரங்களையும், நோன்பு ஆரம்பத்தையும், முடிவையும் முடிவு செய்து செயல்பட்டது போல், மாத ஆரம்பத்தைப் பிறையைக் கண்ணால் பார்த்து முடிவு செய்யும் கட்டாயத்தில் இருந்தனர்.

இதற்கு புகாரீ (ர.அ) 1959வது ஹதீஸில் காணப்படும், ஆயிஷா(ரழி) அவர்களின் சகோதரி அஸ்மா(ரழி) கூறும் நிகழ்வு போதிய ஆதார மாகும். ஒரு ரமழானில் மேகமூட்டமான நாளில் நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்து விட்டதாக நம்பி நோன்பு துறந்து விட்டார்கள். நோன்பு துறந்த பின் சூரிய வெளிச்சம் தெரிந்து சூரியன் மறையவில்லை என்பது உறுதியாயிற்று. அந்த நோன்பை நபி(ஸல்) அவர்கள் “”கழா” செய்ததாக ஆதாரம் இல்லை. பின்னால் வந்தவர்கள் அப்படிக் கற்பனை செய்துள்ளனர். எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சோதிப்பதில்லை என பல அல்குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன.

இந்தச் சம்பவத்திலிருந்து என்ன தெரிகிறது? பிரயாணத்திற்கு ஒட்டகம், தொலைத் தொடர்புக்கு காலம் தாழ்ந்து ஆள் நேரில் வந்து சொல்வது, நேரம் அறிய சூரியனைப் பார்ப்பது என அன்று இருந்தது போல் மாதத்தை அறிய சந்திரனை-பிறையைப் பார்க்கும் கட்டாய நிர்பந்த நிலை இருந்ததே அல்லாமல், அன் றிருந்த கருவிகள் அல்லாமல், மார்க்கத்திற்கு உட்பட்டவை அல்ல. மார்க்கத்திற்கு உட்பட்ட செயலாக இருந்தால் அன்று நபி(ஸல்) அவர்களும் மாதாமாதம் பிறை யைப் பார்த்திருப்பார்கள்; நபி தோழர்களையும் அப்படியே மாதாமாதம் பார்க்கக் கட்டளையிட்டிருப்பார்கள். அல்குர்ஆன் 22:27ல் “”வெகு தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்கு மெலிந்த ஒட்டகங்களில் வருவார்கள்” என்று கூறியிருந்தும், நபி(ஸல்) அவர்களே அன்று மதீனாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ்ஜுக்காக ஒட்டகத்திலேயே வந்திருந்தும், இந்த மதகுருமார்கள் இன்று ஹஜ்ஜுக்கு ஒட்ட கத்தில் போவது மார்க்கத்திற்கு உட்பட்டது; ஹஜ் ஜுக்கு ஒட்டகத்தில்தான் போக வேண்டும் என்று சொல்வதில்லை. அவர்களே விமானத்தில்தான் செல்கிறார்கள். காரணம் தொலைப் பிரயாணத்திற்கு அன்றிருந்த ஒரே வாகனம் ஒட்டகம் மட்டும் தான். மேலும் ஒட்டகத்தில் போய் மக்காவை அடைந்த பின்னர் அங்கு செய்யும் செயல்கள்தான் ஹஜ்ஜுக்கு உட்பட்டச் செயல்கள் ஆகும்.

ஆயினும் முதன்முதலாக ஒட்டகம் அல்லாத வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றில் மக்கள் ஹஜ்ஜுக்கு முதன் முதலாகச் செல்ல ஆரம்பித்தபோது இந்த மதகுருமார்கள் கடுமையாக அதை எதிர்த்தவர்கள்தான்; மத குருமார்கள் இறுதிவரை தங்கள் மூடக் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை. காலப் போக்கில் ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஒட்டகத்தில் செல்வதைத் தவிர்த்து நவீன வாகனங்களில் செல்வதால் ஏற்பட்ட அனு கூலங்களை அனுபவத்தில் கண்டு மதகுருமார்களின் புரட்டு வாதத்தைப் புறந்தள்ளினார்கள்.

சூரியனின் ஓட்டத்தைப் பார்த்து தொழுது கொண்டிருந்த மக்கள் நேரம் அறியும் கடிகாரத்தைப் பார்த்து தொழ ஆரம்பித்த போதும் இம்மத குருமார்கள் இப்படித்தான் ஓலமிட்டார்கள். அவர்கள் திருந்தவில்லை. மக்கள் கடிகாரம் பார்த்து தொழுவதில் ஏற்பட்ட அனுகூலங்களை, அனுபவத்தில் கண்டு இம்மத குருமார்களின் புரட்டு வாதத்தைப் புறந்தள்ளினார்கள். அதேபோல் தொலைத் தொடர்பு வசதி ஏற்பட்டபோது, மின் வசதி ஏற்பட்டபோது, ஒலி பெருக்கி வசதி ஏற்பட்டபோது, இப்படி நவீன கருவிகளின் கண்டுபிடிப்பால், மக்கள் அந்த நவீன கருவிகளை அவற்றின் அனுகூலங்களை அனுபவத்தில் கண்டு மட்டுமே இந்த மூட முல்லாக்களின் புரட்டு வாதங்களைப் புறந்தள்ளினார்கள். அதே வரிசையில்தான் இன்று கணினி கணக்கீட்டின்படி மிகமிகத் துல்லியமாகக் கிடைக்கும் சந்திர மாதத்தின் முதல் நாளை ஏற்று அதன்படி செயல்படுவது ஹராம் என்ற மூடத்தனமான ஃபத்வாவை இந்த மூட முல்லாக்கள் கடந்த சில வருடங்களாக ஓயாது வெளியிட்டு வருகிறார்கள். அதனால் மக்கள் படும் அவதிகள் பற்றி இந்த மதகுருமார்களுக்குக் கவலை இல்லை.

மாதாமாதம் பிறையைக் கண்ணால் பார்த்து மாத ஆரம்பத்தைத் தீர்மானிக்கும் நிலையால் முஸ்லிம்கள் தங்களுக்கென ஒரு நாள் காட்டியை உண்டாக்க முடியாமல், மாற்று மதத்தினர் வடி வமைத்த சிவகாசி நாள்காட்டியிலுள்ள தவ றான பிறைக் கணக்கைப் பின்பற்றி பிறை 12ல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது; பிறை 28ல் சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்ற மவ்ட்டீக கொள்கையை ஏற்கும் மண்டூகங்களாக முஸ்லிம்கள் இருக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

3ம்பிறையைத் தலைப் பிறையாக மூடத்தனமாக எண்ணிக் கொண்டு அன்று மாலை மஃறிபிற்குப் பிறகு மறையும் பிறையைப் பிறக்கும் பிறை என மூடத்தனமாக நம்பி பிறை பிறந்தாச்சு என ஓலமிடும் பரிதாப நிலை. அந்த மறையும் பிறையைக் கண்டறிய பெரும் முயற்சிகள். ஹிலால் கமிட்டிகள்; வெளியூர் செய்திக்காக இரவு 10,11 மணி வரை காத்திருத்தல். மக்கள் தூங்கிய பின்னர் நடு நிசியில் தலைப்பிறை பிறந்து விட்டதாக மூடத்தனமான அறிவிப்பு. நேரங்கெட்ட நேரத்தில் பிறை பிறந்த பொய்த் தகவல் கிடைப்பதால், நோன்பு நோற்பதாக இருந்தாலும் சரி, பெருநாள் கொண்டாடுவதாக இருந்தாலும் சரி பெரும் ஹரிபரிக்கிடையில் மக்களைப் படாத பாடு பட வைக்கும் பரிதாப நிலை. மக்கள் அறைகுறையாக தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பரிதாப நிலை. இவை அனைத்தும் இந்த சுயநல மூட முல்லாக்க ளின் அதிமூட முரட்டு ஃபத்வாவை வேதவாக் காக(?) நம்பிப் பெரும்பான்மை மக்கள் செயல்படுவதால் ஏற்படும் விபரீதங்கள், வீண் சுமைகள். தூய மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட இந்த மத குருமார்களான மவ்லவிகள்(?) நேர்வழியில் இல்லை என 36:21 இறைவாக்கு நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறுகிறது. இந்த மதகுருமார்களான மவ்லவிகள் மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாக ஆக்குவார்கள்; மார்க்கம் அல்லாததை மார்க்கம் ஆக்குவார்கள் என்பதை நாம் ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வருகிறோம்.

மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வது மார்க்கமாகுமா? அதற்காக முஸ்லிம்களை ஆலிம்-அவாம் என்றும் மத்ஹபுகளாக, தரீக்காக்களாக, மஸ்லக்களாக, இயக்கங்களாக, கழகங்களாக, இப்படி எண்ணற்ற பிரிவுகளாகப் பிரிப்பது மார்க்கமா? உலகிலேயே நாங்கள் தான் நேர்வழியில் இருக்கிறோம் என்று அல்லாஹ்வின் கடும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிப் பீற்றுவது மார்க்கமா?

இப்படி இந்த மதகுருமார்களின் எண்ணற்ற மார்க்கப் புறம்பான, 33:36,66,67,68 இறைக் கட்டளைகளின் கடுமையான எச்சரிக்கைகளைப் புறக்கணித்து நிராகரிக்கும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். முஸ்லிம்களே உஷார். இறைக் கட்டளைகளான 2:186, 7:3, 33:21,36,66,67,68, 50:16, 56:85, 59:7 நேரடி எச்சரிக்கையை 25:30 சொல்வது போல் நிராகரித்து காஃபிராகி மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மேதைகள், அரபியைக் கரைத்துக் குடித்த பண்டிதர்கள் என பெருமை பேசும், ஆணவம் கொள்ளும், தற்பெருமை கொண்ட இம்மத குருமார்களை அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாகக் கொண்டால், நாளை மறுமையில், உங்கள் இருப்பிடத்தை நரகத்தில் பதிவு செய்து கொள்கிறீர்கள் என்பதை உணர்ந்து இம்மூட முல்லாக்களைப் புறக்கணித்து அல்குர் ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஸையும் பற்றிப் பிடித்து, முஹ்க்கமாத் வசனங்களின் நேரடிக் கருத்துக்களை அப்படியே எடுத்து நடந்து சுவர்க்கம் புக முன் வாருங்கள்!

Previous post:

Next post: