இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? – PJ யின்-உளறல்

in 2010 மார்ச்,எதிர் வாதம்,ததஜ,புரோகிதம்,பொதுவானவை,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

 ஏகத்துவம் மாத இதழ் பிப்ரவரி 2010 பக்கம் 41-ல் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தி 16 பக்கங்களை நிரப்பி இருக்கிறார்களே? சரியா?

விமர்சனம் : ஏகத்துவம் மாத இதழ் பிப்ரவரி 2010 பக்கம் 41-ல் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தி 16 பக்கங்களை நிரப்பி இருக்கிறார்களே? சரியா? தொலைபேசிக் கேள்வி.

விளக்கம் : இதற்கு 1990லிலேயே தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது. மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் அரைத்த மாவையே அரைப்பது என்று சொல்வார்களே அது போல் கடந்த இருபது(20) வருடங்களாக அவர்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி தங்கள் குருட்டுப் பக்தர்களை தக்கவைத்துக் கொளள பெரும் முயற்சி எடுக்கிறார்கள். அல்லாஹ் அல்லாதவர்களை “இஸ்திஆனத்’ என்ற காரண காரியம் அறிய முடியாத உதவி தேடி அழைப்பது ஷிர்க் என்பதற்கு 18:102-106, 10:18. 39:3 போன்ற அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளைக் கூறித் தெளிவுபடுத்திய பின்னரும் தர்கா புரோகிதர்கள் கூறுவதையே கூறிக் கொண்டிருக்கவில்லையா?

அத்வைதத்தை அதாவது மனிதன் இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் என்ற நச்சுக் கருத்தைப் போதிக்கும் தரீக்காக்கள் நேர்வழி அல்ல என்பதற்குப் பல இறைக் கட்டளைகளைக் கொடுத்த பின்னரும் அவர்கள் கூறுவதையே கூறிக் கொண்டிருக்கவில்லையா?

அதே போல் மத்ஹபுகளைப் பின்பற்றுவது நேர்வழி அல்ல என்பதற்கு 7:3, 2:134,141, 33:36,66, 67,68, 59:7 போன்ற இறைக் கட்டளைகளையே நேரடியாக எடுத்துக் காட்டிய பின்னரும் அவர்கள் கூறுவதையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டி ருக்கவில்லையா?

முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களைப் பின்பற்றுவது நேர்வழி இல்லை என்பதற்கு 2:134,141 மற்றும் பல இறைக் கட்டளை எடுத்துக் கொடுத்தும் ஸலஃபிகள் அவர்கள் சொல்லுவதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கவில்லையா?

அல்லாஹ் கட்டளையிட்டு நபி(ஸல்) நடைமுறைப்படுத்திய ஜமாஅத்துல் முஸ்லிமீன் பேரியக்கம் அல்லாத மனிதர்கள் கற்பனை செய்த குட்டி குட்டி இயக்கப் பிரிவுகள் கூடாது என்பதற்கு 3:102, 103,105, 6:153,159, 30:32, 42:13,14 போன்ற நேரடியாகக் கூறும் இறைக் கட்டளைகளை எடுத்துக் காட்டிய பின்னரும் அவர்களின் கற்பனை குட்டி இயக்கப் பிரிவுகளை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா?

ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் அவர்களின் வயிற்றுப் பாட்டைத் தக்கவைக்க அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அதேபோல் ஈஸா(அலை) வானத்தில் இல்லை. அவர்களை அல்லாஹ் தன் அளவில் உயர்த்திக் கொண்டான். உலக அழிவின் சமீபமாக அல்லாஹ் அவர்களை பூமியில் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒருவராக இறக்குவான். இங்கு இறந்து அடக்கம் செய்யப்படுவார்கள். மரணமே இல்லாத வாழ்க்கை அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. மலக்குகளுக்கும், இப்லீஸ் என்ற ஜின்னுக்கும் நீண்ட வாழ்க்கைக் கொடுக்கப்பட்டிருப்பது போல், ஈஸா (அலை) அவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக 4:157,158, குர்ஆன் இறங்கும் போது உயிருடன் இருந்த நபி(ஸல்) அவர்களைப் பற்றி 3:144ல் கூறி இருப்பது போலவே 5:75ல் அல்லாஹ் ஈஸா(அலை) பற்றி கூறி இருப்பதால் குர்ஆன் இறங்கும்போது ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை உயிருடன் இருக்கிறார்கள். ஆனால் பின்னர் இறப்பார்கள் என்பதற்கு 43:61ஐயும் மேலும் பல ஆதாரங்களைக் கொடுத்த பின்னரும் காதியானிகள் அவர்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கவில்லையா?

மேலும் முஹம்மது(ஸல்) இறுதி நபி, அல்குர்ஆன் இறுதி வழிகாட்டு நூல் பதிந்து பாதுகாக்கப்பட்டுவிட்டது. எனவே நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் நபியோ, ரசூலோ வரவேண்டிய தேவையே இல்லை. நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஷரீஅத்துடைய நபியோ, ஷரீஅத் இல்லாத நபியோ வரமாட்டார்கள் என்பதற்கு 33:40, மற்றும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் எடுத்துக் கொடுத்த பின்னரும் காதியானிகள் மிர்ஸாகுலாமை நபி என்று தொடர்ந்து வாதித்துக் கொண்டிருக்கவில்லையா?

இறுதி நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதற்கு 2:213, 16:44, 64, 59:7, 7:157, அதீவுல்லாஹ வ அதீவுர்ர சூல என்று 19 இடங்களிலும் ஃபத்தகுல்லாஹ வ அதீவூன் என்று 11 இடங்களிலும் எடுத்துக் காட்டிய பின்னரும் சில பிரிவினர் குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவை இல்லை என்று அவர்கள் கூறியதையே மீண்டும் மீண்டும் கூறவில்லையா? இன்றைய நிலையை விடுங்கள். ஆதம்(அலை) அவர்களிலிருந்து காலத்திற்குக் காலம் இறைவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும் என்ற இறைக் கட்டளையோடு வந்த நபிமார்களின் அந்த நேர்வழி போதனையை அக்காலத்துப் புரோகிதர்கள் ஏற்றார்களா? அதற்கு மாறாக அவர்கள் கூறிக்கொண்டிருந்த கோணல் வழிகளையே நேர்வழியாகக் கூறிக் கொண்டிருக்க வில்லையா?

ஈஸா(அலை) அவர்களின் நேர்வழி போதனையை மறுத்து யூதப் புரோகிதர்கள் தங்கள் கோணல் வழிகளையே நேர்வழியாக கூறிக்கொண்டிருக்கவில்லையா? இன்று வரை அதையே சொல்லிக் கொண்டிருக்கவில்லையா? இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களின் நேர்வழி போதனையை மறுத்து கிறித்தவப் புரோகிதர்கள் தங்கள் முக்கடவுள் கோணல் வழிகளையே நேர்வழியாகக் கூறிக் கொண்டிருக்கவில்லையா? இன்று வரை அதையே சொல்லிக் கொண்டிருக்கவில்லையா? இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆனை கடுமையாக அன்றிலிருந்து இன்றுவரைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கவில்லையா? இவை அனைத்திற்கும் காரணம் என்ன? அவர்கள் மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதுதானே? புரோகிதர்கள் நரகத்திற்கு உரியவர்களாக இருக்கும் நிலையில் அவர்கள் சத்தியத்தை ஏற்பார்களா? (36:21, 2:41,42,9:9, 10,34, 31:6)
அதே போல்தான் முஸ்லிம்களிடையே சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்ட இப்புரோகிதர்களும் அல்குர்ஆனின் நேரடி இறைக் கட்டளைகள் எடுத்துக் காட்டப்பட்டாலும் அவற்றிற்கு சுயவிளக்கம் கொடுத்து 2:159,161,162 கூறுவதுபோல் நேர்வழியை கோணல் வழிகளாக்கி மக்களை நரகில் தள்ளுவார்கள். இதற்குக் காரணம் மார்க்கப் பணியை அவர்கள் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதே!

வட்டி வாங்குபவரின் வீட்டின் நிழலில் கூட நிற்கக் கூடாது; வட்டி வாங்குவது பெற்ற தாயுடன் 70 முறை விபச்சாரம் செய்வது போலாகும்.

ஆல்கஹால் கலந்த மருந்து வகைகளை உட்கொள்ளக் கூடாது, வாசனைப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது;

நபிவழிக்கு முரணாக வரதட்சணை வாங்கும் திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது,

திருமணத்தில் பெண் வீட்டார் கொடுக்கும் விருந்து ஹராம்;

மாற்று மத மாற்றுக் கொள்கை சம்பந்தப்பட்டவைகளை முஸ்லிம்கள் அச்சடித்துக் கொடுக்கக் கூடாது,

மாற்றுமத திருவிழாக்களில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யக் கூடாது.

மாற்று மதத்தவரின் இறுதித் சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது. ஹராம்;

யூத கிறிஸ்தவர்களின் பொருள்களை வாங்குவது ஹராம்

என குர்ஆன், ஹதீஸ் கூறாத விதவிதமான சட்டங்களைக் கூறி வரும் இப்புரோகிதர்களுக்கு சுமார் 50 இறைவாக்குகள் கூறும் மார்க்கப் பணியைத் தொழிலாகக் கொள்ளக் கூடாது, மார்க்கப் பிரசாரத்திற்குக் கூலி வாங்குவது ஹராம் என்பது மட்டும் எப்படி விளங்காமல் போனது?

ஆம்! 2:74, 5:13, 6:125 இறைவாக்குகள் கூறுவது போல் மார்க்கப் பணிக்கு கூலி வாங்குவதால் இப்புரோகிதர்களின் உணவு, உடை, உறைவிடம் அனைத்தும் ஹராமான வழியில் இருப்பதால், புரோகிதர்களின் உள்ளம் சுருங்கி ஹலால் எல்லாம் ஹராமாகவும், ஹராம் எல்லாம் ஹலாலாகவும் தெரிகிறது. அதன் விளைவு அல்குர்ஆனின் நேரடி போதனைகளை அவர்களின் உள்ளங்கள் ஏற்காது. 2:159,161,162 கூறுவது போல் அவற்றை திரித்து வளைத்து மறைத்து நேர்வழியை கோணல் வழிகளாக்கி அவர்களும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுத்து நாளை நரகத்தை நிரப்ப ஷைத்தானுக்கு உறுதுணையாகவே இருப்பார்கள்.

இதன் காணமாகவே மார்க்கப் பணி புரிவதற்கென்றே தெரிவு செய்யப்பட்ட அனைத்து நபிமார்களையும், “நாங்கள் செய்யும் இந்த மார்க்கப் பணியை எங்களுடைய வயிற்றுப் பிழைப்பாக ஆக்க மாட்டோம். இதற்காக மக்களாகிய உங்களிடம் எவ்விதக் கூலியையும் கேட்கமாட்டோம். எங்களுக்குரிய கூலி எங்களைப் படைத்து உணவளித்து, நிர்வகித்து, கண்காணித்து வரும் அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கிறது” என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்ய வைத்துள்ளான் அல்லாஹ் (பார்க்க 6:90, 10:72, 11:29, 51, 25:57, 26:109, 127, 145,164, 180, 34:47, 38:86, 42:23)

கூலி வாங்காமல் மார்க்கப் பணி புரிகிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்க முடியும் என 36:21 இறைவாக்கு கூறுகிறது. மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குகிறவர்கள் கோணல் வழிகளையே நேர்வழியாக மக்களுக்குக் காட்டுவார்கள் என்று 2:41, 79, 3:78,187,188, 4:44,46, 5:41,62,63, 6:21,25,26, 9:910,34, 11:18,19, 31:6 போன்ற எண்ணற்ற இறை வாக்குகள் கூறுகின்றன.

அந்நஹ்ல் 16:116 கூறுவது போல் தங்கள் விருப்பப்படி இது ஹராம் இது ஹலால் என அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டும் புரோகிதர்களுக்கு இப்படிப்பட்ட எண்ணற்ற அல்குர்ஆன் வசனங்கள் கண்ணில் படாமல் போனது ஏனோ? ஆம்! அவர்களின் வயிற்றுப் பிழைப்பு அவர்களின் கண்ணை மறைக்கிறது. எனவே இப்புரோகிதர்கள் கோணல் வழிகளையே நேர்வழியாகத் தொடர்ந்து அரைத்த மாவையே அரைப்பது போல் வலியுறுத்திக் கொண்டிருப்பார்கள்.

அப்புரோகிதர்களின் வரிசையில்தான் பொய்யனும் புரோகிதனுமாகிய பீ.ஜை. இணை வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்றும், முத்தஷா பிஹாத் வசனங்களை அல்லாஹ்வும் மனிதனைப் போல் விளங்க வேண்டிய கீழ் நிலையிலேயே இருக்கிறான் என்றும், அந்த விளங்கும் ஆற்றல் அறிவிற் சிறந்தவர்களுக்கும் இருக்கிறதென்று மனிதனை அல்லாஹ்வின் அந்தஸ்திற்கு உயர்த்தியும் 1988-லிருந்து அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார். அவர் எடுத்து வைக்கும் அனைத்து குருட்டு வாதங்களுக்கும் அதாவது அவரது சுய கருத்துக்கள் அனைத்திற்கும் 90களிலேயே விளக்கம் கொடுத்து விட்டோம். 1992ல் “குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?” என்று தனி நூலே வெளியிட்டுள்ளோம். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் சத்தியத்தை நேர்வழியை ஏற்றுக் கொண்ட வரலாறே உலகச் சரித்திரத்தில் இல்லவே இல்லையே. அல்லாஹ்வின் நேரடி தொடர்பிலிருந்த, கண்காணிப்பிலிருந்த நபிமார்கள் வஹீ மூலம் பெற்ற இறைக் கட்டளைகளையே நிராகரித்த புரோகித வகையறாக்கள், நாம் எடுத்துக் கொடுக்கும் அல்குர்ஆன் இறைக் கட்டளைகளையா ஏற்கப் போகிறார்கள்? ஆயினும் அவர் பின்னால் கண்மூடிச் செல்லும் அப்பாவிகளில் ஒரு சிலராவது சத்தியத்தை உணர்ந்து நேர்வழி பெறமாட்டார்களா என்ற ஆதங்கத்தில் அல்குர்ஆனைக் கொண்டே மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறோம்.

பொய்யன் எழுதுகிறார் பாருங்கள்:
“இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத, சந்திக்க முடியாத பிரச்சனையாகும்”.

அவர் சொல்வது புரிகிறதா? நபி(ஸல்) காலத்தில் இணை வைக்கும் நிலை முஸ்லிம்களிடையே இல்லை. பின்னால் ஏற்பட்டது. அதனால் புரோகிதர்களாகிய நாங்கள்தான் அது பற்றிய தீர்ப்பைக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகக் கூறுகிறார். எந்த அளவு ஆணவமும் அகம்பாவமும் இருந்தால் இப்படித் துணிந்து பொய் கூற முடியும்?

இஜ்மா, கியஸை ஏற்றுள்ள முகல்லிதுகள் “நாயகம்”, “பெருமானார்” என்று கூறுவதை மறுப்பதற்கில்லை; குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் எனக் கூறும் பொய்யர் “நாயகம்”, “பெருமானார்” என்பதை எந்த குர்ஆன் வசனத்திலிருந்து அல்லது ஹதீஸிலிருந்து எடுத்தார்? காட்டுவாரா?

நபி(ஸல்) அவர்களது காலத்தில் மார்க்கம் நிறைவு பெறவில்லை. நபி(ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பிறகு புரோகிதர்களாகிய நாங்கள் மார்க்கத்தை நிறைவுபடுத்தும் நிலையிலேயே மார்க்கம் இருக்கிறது என்கிறார். அரை குறையாக இருந்த மார்க்கத்தைப் புரோகிதர்ளாகிய நாங்கள் தான் நிறைவு படுத்துகிறோம் எனப் பீற்றுகிறார். அதாவது இதுவரை காலங்காலமாக முகல்லிதுகள் கூறி வந்ததை இந்த நவீன முகல்லிது கூறுகிறார். முன்னவர்கள் அதற்கு இஜ்மா, கியாஸ் என்றார்கள். நவீன முகல்லிது லாஜிக், பாலிசி என்கிறார். இதுதான் வித்தியாசம்.

நபி(ஸல்) அவர்களது மறைவுக்கு முன்னரே மார்க்கம் நிறைவு பெற்றுவிட்டது என்று அல்லாஹ் 5:3ல் சொல்வதும், அதுவே தீனுல் இஸ்லாம் என்பதும், அந்த தீனுல் இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டது என்று 3:19 கூறுவதும், நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் இப்புரோகிதர்களால் கற்பனை செய்யப்படும் மதங்கள் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறா என்று 3:85 இறைவாக்கு கூறுவதும் ஏற்கத்தக்கதல்ல என்பதுதான் பொய்யனின் வாக்குமூலமாக இருக்கிறது.

இது எந்த அளவு ஆணவமிக்க, திமிரான, அல்லாஹ்வை மறந்த பேச்சு; தங்கள் புரோகித இனத்திற்கு நிறைவு பெற்ற இஸ்லாம் மார்க்கத்தில் ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள இப் புரோகிதனின் வஞ்சகப் பேச்சு என்பதை விளங்க முடியாதவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே.

நம்பிக்கைக் கொண்ட பின்னர் ஒரு முஸ்லிமின் தலையாய, கட்டாயக் கடமையான ஐங்காலத் தொழுகையில் இமாமத் செய்ய யாருக்கெல்லாம் உரிமையுண்டு என்ற அதிமுக்கியமான சட்டத்தைக் கூட நபி(ஸல்) அவர்கள் தெளிவு படுத்தாமல் சென்றுவிட்டார்கள். அதனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்களாகிய நாங்களே மார்க்கச் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறோம் என்கிறார் இப்பொய்யர்.

நபி(ஸல்) அவர்கள், மார்க்கத்தை அதிலும் குறிப்பாக தொழுகையில் இமாமத் செய்வது பற்றி தெளிவுபடுத்தாமல் விட்டுச் சென்றார்களா என பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்களது காலத்தில் முஸ்லிம்களில் இணை வைப்போர் யாருமே இல்லை என்பது பொய்யனின் கூற்று. இது பகிரங்கமான, அல்குர்ஆன் கூறுவதை மறுக்கும் பொய் என்பதை 49:14, 2:8-20, 12:106 இறை வாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும்.

நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் முஸ்லிம்கள் என நாவினால் மட்டும் கூறி நடித்த நயவஞ்சகர்கள் உண்மையில் நம்பிக்கை கொள்ளவில்லை என 2:8 இறைவாக்கு கூறுகிறது. உண்மை முஸ்லிம்கள் முறையாக நம்பிக்கை கொண்டதுபோல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லும்போது, “மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?” என்று அந்த நயவஞ்சகர்கள் கேட்டதாக 2:13 இறைவாக்கு கூறுகிறது.

மேலும் இந்த நயவஞ்சகர்கள், முஸ்லிம்களிடம் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்றும் அவர்களின் தலைவர்களும், காஃபிர்களும் முஷ்ரிக்குகளுமான குறைஷ் ஷைத்தான்களுடன் இருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம். நாங்கள் உண்மை முஸ்லிம்களை பரிகாசம் செய்கிறோம்” என்று கூறியதாக 2:14 இறைவாக்கு கூறுகிறது. 2:16 இறைவாக்கு அவர்கள் நேர்வழி பெறுகிறவர்கள் அல்லர் என்கிறது. 2:19 இறைவாக்கு அவர்கள் காஃபிர்களே என உறுதிப்படுத்துகிறது. 4:145 இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித்தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காணமாட்டீர் எனக் கூறுகிறது.

நபி(ஸல்) காலத்திலிருந்த நயவஞ்சக முஸ்லிம்களைப் போல் உள்ளத்தால் நம்பிக்கை கொள்ளாமல் வெறும் உதட்டளவில் நம்பிக்கை கொண்ட ஒரேயொரு முஸ்லிமையாவது இன்று இந்தப் பொய்யனால் காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது. இன்றைய முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அல்குர்ஆனையும் மனப்பூர்வமாக ஏற்றவர்கள்தான். இந்தப் பொய்யன் அல்குர்ஆனுக்குக் கொடுக்கும் தவறான விளக்கங்களை நம்பி தங்களை தவ்ஹீத்வாதி-நேர்வழி நடந்து சுவர்க்கம் செல்பவர்கள், எங்களது ஜமாஅத் தவ்ஹீத் ஜமாஅத் என குஃப்ரான, ஷிர்க்கான செயல்களில் ஈடுபட்டு தவறான வழிகளில் செல்வது போல், தர்கா சடங்குகளைச் செய்யும் முஸ்லிம்கள், அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள இப்பொய்யனின் பங்காளிகளான முகல்லிது புரோகிதர்களைக் கண்மூடி நம்பி அவர்கள் அல்குர்ஆனுக்குக் கூறும் சுய விளக்கங்களை ஏற்று இறந்து போன இமாம்களையும், அவுலியாக்களையும் வசீலாவாகக் கொண்டே சுவர்க்கம் போக முடியும். அதுவே நேர்வழி எனக் குருட்டுத்தனமாக நம்பிச் செயல்படுகின்றனர்.

ஆயினும் இன்று இந்தப் பொய்யன் யாரை எல்லாம் காஃபிர், முஷ்ரிக் என்கிறாரோ இவர்களை விட பன்மடங்கு கேடுகெட்ட வெறும் உதட்டளவில் நம்பிக்கை கொண்ட காஃபிர்கள், முஷ்ரிக்குகள் தங்களை முஸ்லிம்கள் என்று நாவினால் மட்டும் சொல்லிக் கொண்டு நபி(ஸல்) அவர்களோடு அன்று முஸ்லிம்களாவே இருந்தனர். நபியுடைய காலத்தில் முஸ்லிம்களில் முஷ்ரிக்கள் என யாருமே இருக்கவில்லை என்று பொய்யன் பீ.ஜை. கூறுவது தார்ப்பாயில் வடிகட்டிய பொய் என்பது உறுதியாகத் தெரிகிறது இல்லையா?

அப்படியானால் அன்று நாவில் முஸ்லிம் என்றும் உள்ளத்தில் குஃப்ரும், ஷிர்க்கும் நிறைந்திருந்த முஸ்லிம்கள் பின்னால் தொழுவது கூடாது என்று சட்டம் இயற்ற கடமைப்பட்ட நபி(ஸல்) தமது கடமையைச் செய்யவில்லை என்று இப்பொய்யன் குற்றம் சுமத்துகிறாரா?

கபுரு சடங்குகளைச் செய்து குஃப்ர், ஷிர்க்கில் திளைத்திருக்கும் முஸ்லிம்கள் பின்னால் தொழக் கூடாது என்று சட்டம் சொல்லும் பொய்யன் தனது ததஜவினர் பின்னால் தொழலாம் என்று எப்படிக் கூறுகிறார்? ததஜவினர் பின்னால் தொழுவது கபுரு சடங்குகளைச் செய்பவர்கள் பின்னால் தொழுவதை விட பெரிய கொடூர குற்றம் என்றே அவரது தீர்ப்புப்படி சொல்ல முடியும்.

எப்படி என்று பாருங்கள்: கபுரு சடங்குகளைச் செய்வோர் இறந்து போன முன் சென்ற இமாம்கள், அவுலியாக்களை அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் வஸீலாவாகத்தான் ஆக்குகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான நல்லடியார்கள்; தங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள்; அல்லாஹ்வின்பால் நெருங்கச் செய்வார்கள், அல்லாஹ்விடம் பெற்றுத் தருவார்கள் (பார்க்க 10:18, 39:3)என்ற மூட நம்பிக்கையில் செயல்படுகிறார்கள். 18:102-106 இறைக் கட்டளைகள்படி அவர்களது செயல்கள் கடுமையான ஷிர்க்கை உண்டாக்கும் செயல்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆயினும் வஸீலாவாக ஆக்கப்பட்ட யாரையும் இறைவனுடைய நிலைக்கு உயர்த்தவில்லை. அந்த அடிப்படையில்தான் ஜமாலி போன்றோர் அது ஷிர்க்-இணை இல்லை என வாதிடுகின்றனர். இறைவனுக்கும் தங்களுக்கு மிடையில் இடைத்தரகர்களாக்குகிறார்கள் அவ்வளவுதான்.

அதற்கு மாறாகப் பொய்யன் பீ.ஜை. என்ன சொல்கிறார்? 4:49,53:32 இறைக் கட்டளைக்கு முரணாக தானும், தன்னுடைய ததஜ ஜமாஅத்தும் தான் பரிசுத்தவான்கள், நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கத்திற்குச் செல்பவர்கள், மற்றவர்கள் எல்லாம் வழிகேட்டில் சென்று நரகில் நுழைபவர்கள் என இவ்வுலகிலேயே தீர்ப்பு அளிக்கிறார்.

அந்த அடிப்படையிலேயே அவர்கள் பின்னால் நின்று தொழுவது ஹராம் என ஃபத்வா கொடுக்கிறார். மூஸா(அலை) அவர்களுக்கில்லாத (20:51,52), இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களுக்கில்லாத(3:128) அல்லாஹ்வுக்கு மட்டுமேயுள்ள தீர்ப்பளிக்கும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என்று இறுமாப்புக் கொள்கிறார். 42:21ல் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே இணையாளராகி அல்லாஹ் விதிக்காததை விதிக்கிறார். அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே தீர்ப்பளிப்பதை நாளை மறுமைக் கென்று ஒத்தி வைத்திருக்கும் நிலையில் (2:210, 6:58, 10:11,19,54, 11:110, 14:22, 19:39, 39:69,75, 41:45, 42:14,21)
அல்லாஹ்வின் அந்தத் தனி அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு தர்கா வழிபாட்டுக்காரர்கள் இணை வைப்பவர்கள், அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று இவ்வுலகிலேயே தீர்ப்பளித்துள்ளார். 42:21ல் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கு இணையாளராக அவரே ஆகிவிட்டார். அல்லாஹ் மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கும் தீர்ப்பை இவ்வுலகிலேயே அளித்து விடுவதே மேலானது என 49:16ல் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்பட்டு விட்டார். இறந்தவர்களைப் பற்றிக் கேட்டதால் மூஸா (அலை) தீர்ப்பு அளிக்கவில்லை. நபி(ஸல்) அல்லாஹ்விடம் பிரார்த்தித்ததால்தான் அல்லாஹ் கண்டித்தான். தீர்ப்பளித்திருந்தால் கண்டித்திருக்க மாட்டான். 5:44,45,47 இறைவாக்குகள் தீர்ப்பளிப்பதை வலியுறுத்துகின்றன என ஒரு மூடன் சுய விளக்கம் கொடுத்ததாகவும் செய்தி வருகிறது.

அப்படியானால் அவரது தீர்ப்புப்படியே கபுரு சடங்குகள் செய்து ஷிர்க்கிலிருக்கும் அவர்கள் பின்னால் நின்று தொழுவது கூடாது என்று கூறுவதை விட இப்பொய்யன் பின்னாலும், அவரது ததஜவினர் பின்னாலும் நின்று தொழுவது ஆயிரம் மடங்கு கூடாது என்று சொல்ல முடியும்.
பொய்யன் பீ.ஜை. தனது தவறான ஃபத்வாவை நிலைநாட்ட 9:17-ல் அல்லாஹ் பள்ளி வாயில்களை நிர்வகிப்பவர்கள் என்று கூற, அதை இமாமத் செய்கிறவர்கள் என்று திரித்துக் கூறுகிறார். அல்லாஹ்வுக்கு 9:17-ல் இமாமத் செய்கிறவர்கள் என்று கூறத் தெரியவில்லை. கீற்றுக் கூரைகளைக் கொண்ட அக்கால பள்ளிகளை நிர்வகிக்கத் தேவையே இல்லாத நிலையில் நிர்வகிக்க எனத் தவறாகக் கூறிவிட்டான். அந்த இடத்தில் இமாமத் செய்ய என்றுதான் வர வேண்டும் என்கிறார் ஆணவம் பிடித்த பொய்யன் பீ.ஜை. 2:159படி சுய விளக்கம் கொடுத்து 49:16படி அல்லாஹ்வுக்கு தீனை கற்றுக் கொடுக்கிறார். இதே பொய்யன் ஒரு காலத்தில் அல்குர்ஆனில் ஒரு எழுத்து, ஒரு வார்த்தை கூட தேவையில்லாமல் இடம் பெற்றிருக்க முடியாது எனக் கூறித் திரிந்தவர்தான். இப்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.

ஒருவரது சுமையை பிரிதொருவர் சுமக்க மாட்டார் என அல்லாஹ் பல இடங்களில் கூறி இருக்க, அதற்கு முரணாக இணை வைப்பவர்களின் அமல்கள் அழிந்து விடுவதால், அதன்படி அவரது தொழுகை கூடாது போவதால், பின்னால் தொழுபவர்களின் தொழுகைகளும் கூடாது போய்விடும் என ரீல் விடுகிறார்.
மேலும் 3:28, 9:23,113, 4:139,144, போன்ற, நாங்கள் நம்பிக்கை கொள்மாட்டோம், முஸ்லிமாக மாட்டோம்; எங்கள் மூதாதையரின் மதத்திலேயே இருப்போம் என்று தங்களைத் தாங்களே இஸ்லாத்தை ஏற்காத காஃபிர்கள் என்று கூறிய இப்றாஹீம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர், நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப், மற்றும் பல உறவினர்கள் பற்றி அல்லாஹ் எச்சரித்த இவ்வசனங்களை அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரையும், இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனையும் மனப்பூர்வமாக ஏற்றவர்கள், இவரின் புரோகித பங்காளிகளான தர்கா, தரீக்கா, மத்ஹபு புரோகிதர்களின் தவறான வழி காட்டலில் ஷிர்க்கை-தவ்ஹீதாக-நேர்வழியாக நம்பிச் செயல்படும் முஸ்லிம்கள் குறித்து எடுத்து எழுதி இருக்கும் பொய்யனுக்கு எந்த அளவு நெஞ்சழுத்தமும், அல்லாஹ்வின் அச்சமற்ற நிலையும் இருக்கும் என்பது புரியவில்லையா?

மேற்கண்ட இறை வாக்குகள் இஸ்லாத்தை ஏற்று 12:106ல் அல்லாஹ் கூறுவது போல் ஷிர்க்கில் ஈடுபடும் முஸ்லிம்கள் பற்றியவை அல்ல; முஸ்லிம்கள் என்று உதட்டளவிலாவது சொல்ல மறுத்த நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) பற்றியவை என்பதை அறியாத மூடன் என்று பொய்யன் பீ.ஜை.யை சொல்வதா? அல்லது தனது பிள்ளைகளை அறிவது போல் உண்மையை நன்கு அறிந்த நிலையில் பொய் கூறி தனது ஆதரவாளர்களை ஏமாற்றி நரகில் தள்ள முற்படுகிறார் என்று சொல்வதா? முடிவு செய்யுங்கள்.

பொய்யன் பீ.ஜை. கூறுவதைப் பாருங்கள்:
“ஒருவர் அல்லாஹ்வின் பதிவேட்டில் முஸ்லிமாக இருப்பது வேறு; உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கப்படுவது வேறு. ஒருவர் உலகில் முஸ்லிம்கள் கணக்கில் சேர்க்கப்பட்டால் முஸ்லிம் என்ற உலக நன்மையை அவரும் பெற்றுக்கொள்வார் என்பதும் இஸ்லாத்தின் நிலைபாடுதான்”. ஏகத்துவம் பிப்.2010பக்.44

பொய்யன் பீ.ஜையின் உளறல் புரிகிறதா? தொழுகை இவ்வுலகில் நடக்கிறதா? நாளை மறுமையில் நடக்கும் ஒன்றா? இதைவிட அறிவீனம் உண்டா? அல்லாஹ்வின் பதிவேட்டில் இருப்பது இவருக்குத் தெரியுமாம். இதைவிட அகம்பாவமும் ஆணவமும் ஒருவனுக்கு இருக்க முடியுமா? இணை வைத்த நிலையில் இறந்து போன தனது முன்னோர்களின் நிலை என்ன? என்று பிர்அவ்ன் கேட்கிறான். அதற்கு பதிலாக மூஸா(அலை) என்ன கூறினார்கள் என்று பாருங்கள்.
“”அப்படியானால் முன்சென்ற தலை முறையினரின் நிலைமை என்ன?” என்று (பிர்அவ்ன்) கேட்டான்.

“இதுபற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதும் இல்லை” என்று (மூஸா பதில்) கூறினார். (20:51,52)

தவ்பா செய்து மீள வாய்ப்பை இழந்த இறந்து போனவர்கள் முஷ்ரிக் எனக் கூற மூஸா(அலை) அவர்களுக்குத் துணிவில்லை. அதற்கு மாறாக தவ்பா செய்து மீள வாய்ப்பைப் பெற்ற கபுரு சடங்குகள் செய்யும் உயிருடன் இருக்கும் முஸ்லிம்களை முஷ்ரிக்குகள், அவர்கள் பின்னால் தொழக் கூடாது என்று அல்லாஹ்வை மறந்து தீர்ப்புக் கூறும் பொய்யன் பீ.ஜை.யின் நெஞ்சுரத்தையும், அகம்பாவத்தையும், ஆணவத்தையும் பார்த்தீர்களா? பொய்யன் பீ.ஜையே முன்னர் கபுரு சடங்குகளில் மூழ்கி இருந்து பின்னர் மீண்டவர் தானே! கபுரு சடங்குகளில் மூழ்கி இருக்கும் முஸ்லிம்களில் சிலரோ, பலரோ தவ்பா செய்து மீள வாய்ப்பு ஏற்பட்டாலும், பொய்யன் பீ.ஜை.க்கு 9:31, 42:21, 49:16படி தன்னையே ரப்பாக எண்ணும் கொடிய ஷிர்க்கிலிருந்து தவ்பா செய்து மீளும் வாய்ப்புக் கிடைக்குமா? என்பது சந்தேகமே!

காரணம் என்ன? சிறப்புக்குரிய தூதர்களில் ஒருவரான மூஸா(அலை) அவர்களுக்கு இல்லாத துணிச்சல், இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் அப்போது முஷ்ரிக்காக உயிரோடிருந்த சில குறைஷ் தலைவர்களை அல்லாஹ்வின் கருணையிலிருந்து அகற்றுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்த போது, இறுதித் தூதரை மிகக் கடுமையாக “இதில் உமக்கு எவ்வித அதிகாரமும் இல்லை; அல்லாஹ் அவர்களை மன்னிக்கவும் செய்யலாம், அல்லது தண்டிக்கவும் செய்யலாம்; ஆயினும் அவர்கள் அநியாயக்காரர்களே” என்று எச்சரித்து அல்குர்ஆன் 3:128ல் இடம் பெற்றிருப்பதைப் பார்த்த பின்னரும், அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இல்லாத அதிகாரம் தனக்கிருப்பதாக அகம்பாவம் கொள்ளும், திமிருடைய பொய்யன் பீ.ஜை.யின் நிலை எதுவாக இருக்கும் என்பதை சுய சிந்தனையாளர்கள் மட்டுமே உணர முடியும். “அல்லாஹ்வின் பதிவேட்டில் இருப்பதை நான் அறிவேன்” என்று கூறுவது ஷைத்தானை விட கொடிய ஷைத்தானுடைய சொல்லாக மட்டுமே இருக்க முடியும்.

49:14ன் தமிழாக்கத்தை மட்டும் பார்த்தால் புரிந்து கொள்ள முடியாது என்று ரீல் விடுகிறார். அபூ ஜஹீலுக்கிருந்த அரபி திமிர்தான் இவரை 49:14ன் உண்மை விளக்கத்தை அறிய முடியாமல் அவரது கண்ணை மறைக்கிறது. நபி(ஸல்), அந்த நாட்டுப்புற அரபிகளை முஸ்லிமாக ஏற்று இவ்வுலகில் முஸ்லிம் என்ற நிலையில் அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கினார்கள். அதன்படி தொழுவதற்கும், மற்றவர்களுக்குத் தொழ வைப்பதற்கும் உரிமை இருந்தது என்பது தான் வெட்ட வெளிச்சம். தொழ வைக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை என்றால் அதை அல்லாஹ்வின் தூதர்தான் சொல்லி இருக்க வேண்டும். மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட இப்பொய்யன் போன்ற புரோகிதர்கள் அல்ல.

அதே போல் பொய்யன் எடுத்து எழுதியுள்ள 49:14 இறைவாக்கையும் புகாரீ 27, 391, 392, 393 எண்களுடைய ஹதீஸ்களையும் இப்பொய்யனின் சுய விளக்கத்தைப் புறக்கணித்துவிட்டு நேரடியாகப் படித்து விளங்கினால், தங்களை முஸ்லிம்கள் எனக் கூறி முஸ்லிம் உம்மத்தில் இணைத்துக் கொண்ட அனைவரையும் முஸ்லிமாக ஏற்று முஸ்லிம்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் முழுமையாகக் கொடுத்து விட வேண்டும். அதில் எதையும் குறைக்கக் கூடாது. மறுக்கக் கூடாது. மறுப்பது கொடிய குற்றம் என்பதை தெள்ளத் தெளிவாக விளங்க முடியும்.

கடமையாக்கப்பட்ட ஜமாஅத் தொழுகை மூலம் 21:92, 23:52 இறைக் கட்டளைப்படி சமுதாய ஒற்றுமையை நிலை நாட்டுவது இவ்வுலகிற்குத் தேவையா? அல்லது சுவர்க்க வாழ்க்கைக்குத் தேவையா? இந்த சாதாரண அறிவும் இல்லாத பொய்யன் தன்னை பெரும் மேதை, நபிதோழர்களைவிட அறிவு மிக்கவர் எனப் பீற்றிக் கொள்வதுதான் வேடிக்கையாகும்.

“ஒருவர் அல்லாஹ்வின் பதிவேட்டில் முஸ்லிமாக இருப்பது வேறு” என்று எழுதி அல்லாஹ்வின் பதிவேட்டை இவர் பார்ப்பது போலும், அல்லது பதிவேட்டில் இருப்பதை அல்லாஹ் இவருக்கு வஹி மூலம் அறிவித்து விட்டது போலும் பள்ளியில் மட்டும் கபுரு சடங்கினர் காஃபிர்கள் என்றும், உலக விவகாரங்களில் முஸ்லிம்கள் என்றும் மூளையின்றி பிதற்றுவதும், நயவஞ்சக இரட்டை வேடமிடுவதும் அற்ப இவ்வுலக சுயநல நோக்கத்துடன்தான். பள்ளியில் அவர்கள் பின்னால் தொழக் கூடாது என ஃபத்வா கொடுத்தால்தான் ஊரை இரண்டாக்கி, தனிப்பள்ளி கட்டி, தனி அதிகாரம், தனி வருவாய் என மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க முடியும்.

அரசியலில் காஃபிர், முஷ்ரிக், தனிப் பள்ளி, தனி அதிகாரம் என்ற பருப்பு வேகாது. அரசியலில் பள்ளியில் முஷ்ரிக்கானவர்களையும், முஸ்லிமாக்கி தன்னுடன் இணைத்துக் கொண்டால்தான் அரசியல் அற்ப ஆதாயங்களை அடைந்து உலக சுகம் காண முடியும். இரட்டை வேடமிடும் நயவஞ்கர்களுக்கு மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பொய்யன் அறியமாட்டார் போலும்.

மனித உள்ளத்திலிருப்பதை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறிய முடியாது என்பதற்கு எண்ணற்ற குர்ஆன் வாக்குகளும் (17:84, 31:23,34) நபி மொழிகளும் ஆதாரமாக இருக்க அவற்றை ஏற்ற நிலையில் பொய்யனின் பிதற்றலைப் பாருங்கள்.

உள்ளத்திலிருப்பதை அறிய முடியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் இணை வைக்கும் செயல்களைக் கண்ணால் பார்ப்பதால் அவர்கள் முஷ்ரிக்குகள் என முடிவு செய்ய முடியுமாம். அந்த அடிப்படையில் சமாதிச் சடங்கினர் முஷ்ரிக்குகள் என உளறுகிறார். ஃபத்வா கொடுக்கிறார். எந்தளவு நெஞ்சழுத்தம் இருந்தால், ஆணவமிருந்தால் இப்படி தைரியமாகப் பிதற்ற முடியும்.

இன்றைய பெயரளவு முஸ்லிம்கள் கபுரு சடங்குகளைச் செய்வதைத்தான் இவர் பார்க்கிறார். ஆனால் நபிகாலத்து நயவஞ்சக முஸ்லிம்கள் 2:14 கூறுவது போல் குறைஷ் ஷைத்தான்களாகிய முஷ்ரிக்களுடன் சேர்ந்து சிலைவணக்கம் செய்வது முதல் அனைத்து ஷிர்க், குஃப்ர், பித்அத் செய்வதை நபி(ஸல்) அவர்களும் நபிதோழர்களும் தங்கள் கண்களால் பார்த்தனர். அதனால் 2:13 கூறுவது போல் உண்மை முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்கள் நம்பிக்கைக் கொள்ளுங்கள் என்ற போது, உண்மை முஸ்லிம்களை மூடர்கள் என்று இழித்துப் பேசியதையும் தங்கள் காதுகளால் கேட்டனர். அதற்கு மேலும் அந்த நயவஞ்சகர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். நரகில் அடித்தளத்தில் கிடந்து வெந்து வேதனைப்படுவார்கள் என்று அவர்களின் இறுதி முடிவையும் அல்லாஹ் அல்குர்ஆனில் திட்டமாக அறிவித்துவிட்ட(4:145, 63:1-8) நிலையில் கூட கடுமையான ஷிர்க்கில் மூழ்கிக் கொண்டு தங்களை முஸ்லிம்கள் என உதட்டளவில் சொன்ன முஸ்லிம்களுக்கு குஃப்ர், ஷிர்க், ஃபத்வா கொடுக்க நபி(ஸல்) ஏன் துணியவில்லை?

ஆம்! அந்த அதிகாரம் தனக்கில்லை. அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனி அதிகாரம். அல்லாஹ்வே அந்த அதிகாரத்தை நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்துள்ளான். இறைக் கட்டளையான 21:92, 23:52க்கு முற்றிலும் கட்டுப்பட்டு முஸ்லிம் என உதட்டளவில் கூறி குஃப்ர், ஷிர்க்கில் மூழ்கி இருப்பதைத் தம் கண்களால் கண்டாலும் அவர்களுக்கு குஃப்ர், ஷிர்க், ஃபத்வா கொடுக்கக் கூடாது என்பதில் நபி(ஸல்) மிக மிக உறுதியாக இருந்தார்கள்.

“உலகில் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு என்று உளறுகிறாரே, அல்லாஹ் கருதுவதும் முடிவு செய்வதும் பொய்யன் பீ.ஜை.க்குத் தெரியுமா? வஹீ மூலமாகவா? அல்லது முகல்லிதுகள் சொல்வது போல் இல்ஹாம் மூலமாகவா? எதன் மூலம்?

இன்னும் கேளுங்கள் பொய்யன் பீ.ஜை.யின் உளறலை. 90களில் கருணாநிதி, என்.டீ.ராமராவ் போன்றோர் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லி விட்டால் அவர்கள் பின்னால் நின்று தொழுவார்களா? என்று கேட்டுக் கொண்டிருந்தார். இப்போது ராமகோபாலனும், அத்வானியும் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லி தொழ வைத்தால் அவர்கள் பின்னால் தொழுவார்களா? என்று நையாண்டி செய்துள்ளார். இவர்கள் எப்போது கலிமா சொல்லி, எந்த ஊர் முஸ்லிம் ஜமாஅத்தில் இணைந்து, எந்தப் பள்ளியில் இமாமாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்று அப்போதே கேட்டோம். அதற்கு பதில் கூற வக்கற்ற அறிவீனர்தான் மீண்டும், மீண்டும் இப்படி உளறி வருகிறார். எந்த அளவு கல்நெஞ்சம் கொண்ட மூடனாக இருந்தால் தன்னை நம்பி தன் பின்னால் கண் மூடி வரும் பக்தர்களை இப்படி ஏமாற்றி நரகில் தள்ளுவார்.

நம்முடைய ஆதங்கமெல்லாம் கலிமா சொல்லி முஸ்லிமாகி பரம்பரை முஸ்லிம்களாக இருந்து கொண்டு, இப்பொய்யனின் பங்காளிப் புரோகிதர்களின் தவறான உபதேசங்களை நம்பி கபுரு சடங்குகளும் வழிபாடுகள்தான்-நேர்வழிதான் என்று செயல்படுகிறவர்கள், பூர்வீகப் பள்ளிகளில் இமாம்களாக நியமிக்கப்பட்டவர்கள் பின்னால் நின்று தொழுவது கூடும். அவர்கள் தொழுகை அவர்களுக்கு; நமது தொழுகை நமக்கு, ஒரு ஆத்மாவின் சுமையை பிரிதொரு ஆத்மா சுமக்காது என்பது அல்குர்ஆனின் அறிவுரை. அவர்களின் தொழுகை அவர்களின் முகங்களில் தூக்கி எறியப் பட்டாலும் நாம் இணை வைக்காது தொழுதால் நமது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும்; அல்லாஹ் நமது தொழுகைய நிராகரிக்க மாட்டான். அவர்கள் பின்னால் தொழக் கூடாது என ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்தாதீர்கள், மஸ்ஜிதுல் ழிரார் என்னும் தனிப் போட்டிப் பள்ளி கட்டி சமுதாயத்தைப் பிளவுபடுத்தி அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் என்பதுதான். இதற்கு கருணாநிதி, ராமராவ், ராமகோபாலன், அத்வானி பின்னால் நின்று தொழுவீர்களா? எனக் கேட்டுத் தன் பின்னால் தன்னை நம்பி வரும் சுய சிந்தனையற்ற அப்பாவிகளை ஏமாற்றத் துணிகிறாரே பொய்யன் பீ.ஜை. இவர் எந்த அளவு ஷைத்தானின் வலையில் வசமாகச் சிக்குண்டுள்ளார் என்பதை மக்களே முடிவு செய்யுங்கள்.

இப்படி ஏகத்துவம் பிப்ரவரி 2010 இதழில் 16 பக்கங்களில் அவர் வடித்திருப்பது அவரது பிதற்றல்களும், உளறல்களும், குர்ஆன் வாக்குகளுக்கும், நபி மொழிகளுக்கும் அவர் கொடுத்துள்ள சுயநல சொந்த விளக்கங்களும் மட்டுமே. அவரது சுய சிந்தனையற்ற கண்மூடி பக்தர்களுக்கு இந்த எழுத்துக்கள் வேதவாக்காக(?) தென்படலாம். ஆனால் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக்கியுள்ள இப்படிப்பட்ட புரேகிதர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு பொய்யன் பீ.ஜை. எடுத்து எழுதியுள்ள குர்ஆன் வாக்குகளையும், நபி மொழிகளையும் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்களிடம் இவரின் சுயவிளக்கங்களும், இணை வைக்கும் இமாம்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்ற குருட்டு ஃபத்வாவும் கால் காசு பெறாது. மூளையற்றவரின் கவைக்குதவாத வீண் பிதற்றல்கள், வெற்று உளறல்கள் என்பதை திட்டமாக அறிவார்கள்.

அந்நஜாத் 1990 ஜனவரி முதல் செப். & அக். வரை ஜமாஅத்தின் முக்கியத்துவம், விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தையும் விரிவாக விளக்கி இருந்தோம். குறிப்பாக ஜூன் 1990 இதழில் இமாமின் தொழுகை கூடாமல் போனாலும், அதன் காரணமாக பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகை கூடும் என்பதற்குரிய ஹதீஸ், அஃதர் ஆதாரங்களைக் கொடுத்திருந்தோம்.

1991 பிப்ரவரி இதழில் “பின்பற்றக் கூடாத இமாமுண்டா?” என்ற தலைப்பில் பக்கம் 33 முதல் 42 வரை விளக்கி இருந்தோம்.

மீண்டும் நவம்பர் 1994ல் அதே “பின்பற்றக் கூடாத இமாமுண்டா?” என்ற தலைப்பில் மறு ஆய்வாக 16 பக்கங்களில் விளக்கி இருந்தோம்.

அப்போது முதல் இன்று வரை பொய்யன் பீ.ஜை. எடுத்து வைத்த பிதற்றல்களையே அதாவது அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார். புரோகித இனத்தைச் சேர்ந்த அவர் உண்மையை உணர்ந்து சத்தியத்தை ஏற்பார் என்பது குதிரைக் கொம்பே! அவரை நம்பி அவர் பின்னால் செல்பவர்கள் அவரது சூன்யப் பேச்சில் மயங்காமல் அவரே எடுத்து எழுதியுள்ள குர்ஆன், ஹதீஸை அவரது சுய விளக்கத்தை தவிர்த்து நேரடியாகப் படித்து விளங்கினால் உண்மையை அறிந்து சமுதாய ஒற்றுமை காக்க முன் வர முடியும். சமுதாய ஒற்றுமையின் அவசியம் கருதி இது விஷயமாகவும், குஃப்ர் ஃபத்வா பற்றியும், தனி நூல் வெளியிட விரும்புகிறோம். சகோதர, சகோதரிகளின் ஆலோசனைகளையும், கருத்தையும், உதவியையும் எதிர்பார்க்கிறோம்.  

Previous post:

Next post: