இயக்க நிலைப்பாடும்! இஸ்லாமிய நிலைப்பாடும்!

in 2012 ஜூலை

ராசிக் அலீ, திருச்சி

குறுகிய வட்டம்:
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்து வோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயங்களில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர் உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கின்றான். அவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (60:8,9)

இந்த வசனம் போர் மேகம் சூழ்ந்திருந்த காலத்தில் இறக்கப்பட்டது.
இந்த வசனத்தில் அல்லாஹ் மூன்று சாராரை பற்றிக் குறிப்பிடுகிறான்.
உங்களை என்று குறிப்பிடுவது ஈமான் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தை அவர்கள் முதல் சாரார்.
இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராகக் செயல்படாத காஃபிர்கள் இரண்டாம் சாரார்.
இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பகைமை கொண்டுச் செயல்படும் காஃபிர்கள் மூன்றாம் சாரார்.

முஸ்லிம்களாகிய நாம் காஃபிர்களான அந்த இரு சாராரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையே இந்த இறை வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(?) என்ற அமைப்பு இந்த வசனத்துக்கு தவறான ஒரு விளக்கத்தைத் தருகிறார்கள்.

TNTJ அமைப்பிலிருந்து வெளியிடப்படும் அபகரிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கையில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.
கேள்வி: த.த.ஜவை சேர்ந்தவர்கள் மற்ற இயக்கத்தை சார்ந்தவர்களிடம் உதாரணம் (அஹ்லே குரான், த.மு.மு.க. ஜாக்) வியாபாரத்தில் கூட்டணி வைக்கலாமா?
ஃபாரூக், பேட் மாநகரம் தூத்துக்குடி உணர்வு (16:17)

த.த.ஜ. தலைமையின் பதில்: இஸ்லாமிய பார்வையில் ஒரு முஸ்லிம் ஒரு முஸ்லிம் அல்லாத வருடன் கூட கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்யலாம். ஆனால் நமக்கு எதிராக (த.த.ஜக்கு) செயல்படுவோருடன் கூட்டு சேர அனுமதியில்லை. இதை (60:8,9) வசனங்கள் தெளிவுபடுத்து கின்றன.

ஆகவே நமது கொள்கையில் (TNTJ) இல்லாதவர்களையும் நமக்கு மாற்றமான கொள்கையில் இருப்பவர்களையும் நண்பர்களாக ஆக்கி கொள்ளலாம். அவர்களுடன் கூட்டு சேரலாம். ஆனால் நமது (த.த.ஜ.) கொள்கையையும் நம்மையும் (உறுப்பினர்களையும்) ஒழித்துக் கட்டுவது யாருக்குக் கொள்கையாக உள்ளதோ அவர்களுடன் நட்பு கொள்ளவோ கூட்டு சேரவோ கூடாது என்பதை இவ்வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

60:8,9 வசனத்துக்கு TNTJ தவறான விளக்கம் கொடுத்துத் தங்களை மட்டுமே பரிசுத்த முஸ்லிமாகவும் TNTJயை எதிர்க்காத முஸ்லிம்கள், எதிர்க்காத காஃபிர்களைப் போன்றும் TNTJயை எதிர்க்கும் முஸ்லிம்கள் எதிர்க்கின்ற காஃபிரை போன்றும் சித்தரிக்க முயலும் இவர்களின் ஆணவப் போக்கை அப்பட்டமாக அனைவரும் உணர முடியும்.

இணை வைக்கும் TNTJயை எதிர்க்காத காஃபிர் களிடம் நட்பு வைக்கலாம், கூட்டு வியாபாரம் செய்யலாமாம். ஓர் இறைக் கொள்கையை ஏற்று ஆனால் TNTJயின் கொள்கையை எதிர்க்கும் முஸ்லிம்களிடத்தில் நட்போ, கூட்டு வியாபாரமோ செய்யக் கூடாதாம்.

இவர்களுடைய இந்த விளக்கம் முஸ்லிம் சமுதாயத்தில் தங்களைப் பரிசுத்தவான்களாகக் காட்டி ஆணவம் கொண்டு குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கும் குறுமதியுடையவர்கள் என்பதைத் தெளிவாக்குகிறது. (பார்க்க: 4:49,53:32)

உற்ற நண்பர்கள் யார்?
தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும் அல்லது நாவால் தடுக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. தீமையை தடுப்பது ஈமானின் செயல். TNTJயின் மார்க்கத்துக்கு முரணான செயல்பாடுகளைச் சுட்டிகாட்டி அதைத் தடுக்க முயற்சிப்பதும் அந்த தவறிலிருந்து விடுபட விமர்சிப்பதும் அந்த இயக்கத்திற்கு எதிரான செயல்பாடே தவிர இஸ்லாத்துக்கு எதிரான செயல்பாடாகக் கருதக்கூடாது. அதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்ற இயக்கங்களின் தவறுகளை விமர்சிப்பதை இயக்கத்துக்கு எதிரான விமர்சனமாகக் கருத வேண்டுமே தவிர அது இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனம் என்று கருதக் கூடாது. ஆனால் த.த.ஜ.வை விமர்சிப்பதை இஸ்லாத்தை விமர்சிப்பது போலவும் த.த.ஜவுக்கு எதிராகச் செயல்படுவதை முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுவது போலவும் 60:8,9 வசனத்துக்கு தவறான விளக்கம் கொடுத்து அவர்களை தக்லீத் செய்பவர்களிடம் ஒரு மாயையை உருவாக்கப் பார்க்கிறார்கள்.

இஸ்லாம் அல்லாஹ் உருவாக்கியது
இயக்கங்கள் மனிதர்கள் உருவாக்கியவை.
இஸ்லாத்தில் தவறு இருக்காது.
இயக்கங்களில் தவறு இருக்கும்.

ஒரு முஸ்லிம் வேறு ஊருக்கோ, நாட்டிற்கோ பயணம் செய்கிறார். அங்குள்ள பள்ளி வாசலின் அழைப்பொலி கேட்டு தொழச் செல்கிறார். அந்தப் பள்ளி இமாம் குர்ஆன் ஆயத்தை ஓதும்போது தவறாக ஓதுகிறார். அதை வேறு ஊரிலிருந்தோ, நாட்டிலிருந்தோ வந்த முஸ்லிம் தவறைச் சுட்டி காட்டி திருத்துகிறார். தொழுகை முடிந்த பின் முன்பின் அறிமுகமில்லாத அவரைப் பார்த்து யாரும் கோபப்படுவ தில்லை; எதிரியாகப் பார்ப்பதில்லை; இதுதான் இஸ்லாம் உருவாக்கிய ஜமாஅத், இஸ்லாம் உருவாக்கிய பண்பு. ஆனால் இயக்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சித்தால் நண்பர்களாகப் பார்ப்பதில்லை. எதிரியாகப் பார்க்கிறார்கள். ஒரு நண்பன் தவறு செய்யும்போது தவறைச் சுட்டி காட்டி திருத்த முயலுபவன் தான் உற்ற நண்பன். ஜால்ரா அடிப்பவன் உற்ற நண்பனல்ல, ஆனால் அதற்கு முரணாக ஜால்ரா அடிப்பவர்களை உற்ற நண்பர்களாகவும், விமர்சிப்பவர்களை எதிரியாகப் பார்ப்பதும் இயக்தத்தின் விதியாக உள்ளது. இயக்கங்கள் வழிகேடு என்பதற்கு இது வலுவான ஆதாரமாகும்.

ஒரு முஸ்லிம் நன்மையான காரியம் செய்யும் போதும் ஒரு மார்க்க அறிஞன் அருமையாக பயான் செய்யும் போதும் அவரைப் பாராட்டவோ, புக ழவோ இஸ்லாம் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் நிய்யத்திற்கேற்ப கூலி மறுமையில் இருக்கிறது.
ஆனால் அவர்கள் மார்க்கத்துக்கு முரணான தவறு செய்யும்போது நாவாலும், கையாலும் தடுக்க வேண்டும். அது ஈமானின் செயல் என்று இஸ்லாம் சொல்கிறது.

உள்ளங்களை உடைக்க வேண்டாம்:
TNTJயை எதிர்க்கும் விமர்சிக்கும் கூட்டத்துடன் நட்பும், வியாபார கூட்டும் வைத்தால் பணத்தை சுருட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே அவர்க ளுடன் கூட்டு வியாபாரமும் நட்பும் வைக்காதீர்கள் என்று சொல்லும் TNTJ தலைமைக்கு ஒரு கேள்வி.

தமுமுகவை அழிக்காமல் விடமாட்டேன் என்று சொன்ன PJயும் அவருடைய ஜமாஅத்தையும் JAQHக்கு பள்ளிவாசல் கட்ட வெளி நாட்டிலிருந்து ஹவாலா பணம் வருகிறது என்று ஜாக்கை அழிக்க நினைத்த TNTJயையும் நஜாத் ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் மீது அபாண்டமாக அமானித மோசடி அவதூறு பரப்பி அவரை ஒழிக்க நினைத்த TNTJயையும் நமது கொள்கையை ஒழித்துக் கட்டுவது யாருக்குக் கொள்கையாக உள்ளதோ அவர்களுடன் நட்பு கொள்ளவோ வியாபார கூட்டு சேரவோ கூடாது என்று சுன்னத் வல்ஜமாஅத்தி னரும் முடிவு செய்து TNTJயினரிடம் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்தால் அவர்கள் பணத்தை சுருட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று முடிவு செய்து ரியல் எஸ்டேட் செய்யும் TNTJ யினரை நம்பி நிலம் வாங்காதீர்கள் அவர்கள் மோசடி செய்ய வாய்ப்புள்ளது. TNTJயை சேர்ந்தவர்களின் கடைகளில் பொருள் வாங்காதீர்கள் ஏனெனில் நம்மை ஏமாற்ற வாய்ப்பு இருக்கிறது. TNTJ இன்ஜினியர்களை நம்பி வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைக்காதீர்கள். நமது பொருளா தாரத்துக்கு ஆபத்து வரலாம். இப்படி ஒவ்வொரு ஜமாஅத்தும் குறுகிய மனப்பான்மையுடன் சிந்தித்து TNTJயை போல் செயல்படுத்த ஆரம்பித் தால் TNTJ அதை வரவேற்குமா?

முஸ்லிம்களுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வியாபாரம், ரியல் எஸ்டேட், கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்கள் சகோதரத்துவ உறவுக்குப் பாலமாக விளங்குகின்றன. அந்தப் பாலத்துக்கும் வேட்டு வைத்து உடைப்பு வேலையில் TNTJ இறங்கியிருக்கிறது. சமுதாயத்தைப் பிரிக்கும் இது போன்ற நாசவேலையில் இறங்க வேண்டாம் என்று TNTJயை கேட்டு கொள்கிறோம்.

யார் நமது தொழுகையைத் தொழுகிறாரோ, நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோ, நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். அத்தகையவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும், அவனுடைய தூதரின் பொறுப்பும் உண்டு. அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பைப் (பாழாக்கி) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வஞ்சனை செய்து விடாதீர்கள்.
(அனஸ்(ரழி) புகாரீ : 391,392,393)

காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களும் செய்து சத்தி யத்தை கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையை கொண்டும் ஒரு வருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களை தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை.) (103: 1,2,3)

Previous post:

Next post: