விமர்சனம் : கூட்டு குர்பானி தொகையாக இதர இயக்கங்கள், அமைப்புகள் எல்லாம் பங்குக்கு நிர்ணயிக்கும் தொகையில் நீங்கள் மிகக் குறைவாக ⅔ பங்குத்தொகை மட்டுமே அறிவிக் கிறீர்களே, உங்களுக்கு எப்படிக் கட்டுப்படியாகிறது. குறிப்பிட்டு வரும் பங்குகளைச் சரியா கக் கணக்கிட்டு குர்பானி மாடுகள் வாங்கி குர்பானி கொடுக்கிறீர்களா? நொண்டி, கூன் குருடு, கன்று, கிழடு எனத் தகுதியற்ற பிராணிகளைக் கொடுக்கிறீர்களா?
பல சகோதரர்களின் தொலைபேசி விமர்சனம்.
விளக்கம்: பல சகோதரர்களிடம் இப்படிக் கேள்வி கேட்கப்பட்டு மக்களைக் குழப்பி வருவ தால், இதற்கு விளக்கம் தரும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். உண்மை இதுதான்! இயக்கங்கள், அமைப்புகள் தங்கள் அமைப்புகள், இயக்கத்திற் கென்று பெரும்பாலும் ⅓தொகையை ஒதுக்கிக் கொண்டு ⅔ தொகைக்கு மட்டுமே மாடுகள் வாங்கி குர்பானி கொடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் அமைப்புகள், இயக்கங்களுக்குப் பெய ரிட்டு அரசில் பதிவு செய்து சொந்தம் கொண் டாடி வருவதால், அந்த இயக்கங்களைக் கட்டிக் காக்க அவற்றிற்காகச் செலவிடும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். எனவே ⅓பங்கை இயக்கத்திற்கு, அமைப்புக்கு ஒதுக்குகிறார்கள். இது குற்றம் என் பதை அவர்கள் உணர்வதில்லை, இயக்க மயக்கம் அவர்கள் கண்களை மறைக்கிறது.
நாமோ அல்லாஹ் பெயரிட்டு (22:78) நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி, ஒன்றுபட்ட உம்மத்திற்காக (21:92, 23:52) விட்டுச் சென்றுள்ள “”ஜமாஅத்அல் முஸ்லிமீன்” பேரியக் கத்தில் இருக்கிறோமே அல்லாமல் எமக்கென்று எந்த ஒரு பிரிவு இயக்கத்திற்கும் பெயரிட்டு, அரசில் பதிவு செய்து உரிமை கொண்டாட வில்லை; அதை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாய மும் எமக்கு இல்லை. எனவே இயக்கச் செலவிற் காக குர்பானி தொகையில் ⅓பங்கை ஒதுக்கும் நிலையில் – கட்டாயத்தில் நாம் இல்லை. இயக்க மயக்கமில்லை. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
எனவே குர்பானிக்காக பெறப்படும் தொகையை முழுமையாக குர்பானிக்கு பயன்படுத்துகிறோம். மேலும் நீண்ட காலமாக தமிழகத்தின் பல பகுதி களுக்கும் குர்பானி கறி கொடுக்கும் அனுபவ மிருப்பதால், எந்தெந்தப் பகுதிகளில் குர்பானி மாடுகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறோம். நொண்டி, கூன், குருடு, கன்று, கிழடு போன்ற தகுதியற்ற மாடுகளை குர்பானிக்காக வாங்கும் கட்டாயத்தில் நாம் இல்லை. அப்படிச் செயல்படு கிறவர்களே 4:112 கூறுவது போல் அப்பழியை எம்மீது சத்தியத்தை மூடி மறைக்கும் நோக்கோடு போடுகிறார்கள். இது மதகுருமார்களுக்குக் கைவந்த கலை. தோல் விற்று வரும் பணத்தை ஏழை எளியவர்களின் படிப்பு, தொழில், மருத்துவம், திருமணம் போன்றவற்றிற்குக் கொடுக்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
———————————————–
விமர்சனம்: 2012 பிப்ரவரி இதழில் குனூத்தை ஃபஜ்ரில் ஓதுவதற்கோ, வித்ரில் ஓதுவதற்கோ ஏற்கத்தக்க எந்த ஹதீஃதும் இல்லை என்று எழுதி இருக்கிறீர்கள். அப்படியானால் குனூத்து ஓது வது சரியா? சரி இல்லையா? நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் குனூத் ஓதினார்களா? இல் லையா? (ஓதினார்கள் என்ற வரிசையில் உமர் (ரழி) ஆயிஷா(ரழி) போன்ற அறிவிப்பாளர்கள் வருகிறார்களே? இவர்களும் ஏற்கத் தகுந்தவர்கள் இல்லையா? விபரம் தரவும்.
னி.நெய்னா முகம்மது, மஞ்சக்கொல்லை, நாகை மாவட்டம்.
விளக்கம்: வித்ரில் குனூத் ஓதுவது பற்றிய ஹதீஃத் களில் நபி(ஸல்) அவர்கள் தமது பேரர் ஹஸன் (ரழி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த “”அல்லாஹ் ஹும் மஃதினீ….” என்ற துஆவே தரமானதாகக் கருதப்பட்டு பெரும்பாலோரால் வித்ரில் ஓதப் பட்டு வருகிறது. நாமும் அதைச் சரிகண்டே முன்னர் அந்நஜாத்தில் எழுதியும் உள்ளோம். இலங்கையிலிருந்து வெளிவரும் “”நேர்வழி” மே-ஜூன் 2011 இதழில் இந்த ஹதீஃதை தீர ஆய்வு செய்து இது ஒரு பொதுவான துஆவே அல்லாமல் வித்ரில் ஓதுவதற்குரிய துஆ என்ற அறிவிப்பில் கோளாறு இருப்பதை விளக்கி இருக்கிறார்கள். அதி நம்பகமானவர்கள் மூலம் இதுவே உறுதிப் படுகிறது.
இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் புரைத் என்பவரிடமிருந்து கேட்ட அதிநம்பகமானவர் ஷிஃபா நபி(ஸல்) தம் பேர ருக்கு இதை ஒரு துஆவாகக் கற்றுக் கொடுத்தார் கள் என அறிவிக்கிறார். அதற்கு மாறாக நம்பகத் தன்மையில் குறையுள்ள யூனூஸ் என்பவரே வித்ரில் இந்த துஆவை ஓத நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததாக அறிவிக்கிறார். அதே போல் ஷிஃபாவிடம் கேட்ட யஹ்யா இப்னு ஸயீத், அப்துல்லாஹ் இப்னு இத்ரீஸ், யசீத் இப்னு சுரைஹ், முஹம்மது இப்னு ஜஃபர் ஆகிய நான்கு அறிவிப்பாளர்கள், நபி(ஸல்) அவர்கள் இதை ஒரு துஆவாகக் கற்றுக் கொடுத்தார்கள் என்று அறிவிப் பதற்கு முரணாக அதே ஷிஃபாவிடம் கேட்ட நம்பகத் தன்மையில் குறையுள்ள அம்ருப்னு மர்சூக் என்பவர் மட்டுமே நபி(ஸல்) அவர்கள் இந்த துஆவை வித்ரில் ஓதக் கற்றுக் கொடுத்தார் கள் என அறிவிக்கிறார்.
ஒருவரிடமே கேட்ட ஐவரில் நம்பகத் தன்மை யில் மிக உறுதியான நால்வர் அறிவிப்பதற்கு முர ணாக, நம்பகத் தன்மையில் குறையுடைய தனி ஒரு நபர் அறிவிப்பதை ஆதாரமாகக் கொள்ள லாமா என்பது ஆய்வுக்குரியது. இப்னு ஹுசைமா, இப்னு ஹிப்பான் போன்றோர் குனூத்தில் ஓதக் கற்றுக் கொடுத்ததாகக் கூறும் இந்த ஹதீஃதை ஆதாரபூர்வமாக ஏற்கவில்லை.
மேலும் தெளிவாக, நேரடியாக “”என்னை எவ் வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்க ளும் தொழுங்கள்” என்று கட்டளையிட்டுள்ள நபி(ஸல்) அவர்கள் இந்த அல்லாஹும் மஹ் தினீ… என்ற துஆவை தாமே வித்ரு தொழுகையில் ஓதி தமது உம்மத்துக்கு வழிகாட்டாமல், தமது பேரர் ஹஸன்(ரழி) அவர்களுக்கு வித்ரில் ஓதக் கற்றுக் கொடுத்திருப்பார்களா? அதுவும் தொழக் கடமைப்பட்ட பெரியவர்களுக்குக் கற்றக் கொடுக்க வேண்டிய இந்த துஆவை சிறுவருக்குக் கற்றுக் கொடுத்திருப்பார்களா? என்பது கூர்ந்து அவதானிக்க வேண்டிய ஒன்றாகும். மேலும் வித்ரில் இந்த துஆவை எப்போது, ருகூக்குப் பின் னரா? முன்னரா? கையேந்தியா? கையேந்தா மலா? இப்படிப்பட்ட ஐயங்கள், நபி(ஸல்) அவர் கள் வித்ரில் குனூத் ஓதி வழிகாட்டவில்லை என்ப தையே உறுதிப்படுத்துகின்றன. ஆக வித்ரில் ஓது வதற்குக் குறிப்பாக எந்த ஒரு துஆவையும் ஓதி நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை என்பதை ஏற் றுச் செயல்படுவதே அல்குர்ஆன் 33:21,36 இறைக் கட்டளைகளுக்கும், “”என்னை எவ்வாறுத் தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்ற நபி(ஸல்) அவர்களின் நேர டிக் கட்டளைக்கும் அடிபணிவதாக அமையும்.
இந்த துஆ நம் வீட்டுச் சிறார், சிறுமியருக்குக் கற்றுக் கொடுத்து ஓதிவரத் தூண்ட மிகுந்த ஏற்றமும், கருத்துச் செறிவும் நிறைந்த பிரார்த் தனையாகும் என்பதில் ஐயமில்லை. மேலும் தொழுகைக்கு வெளியே இந்த துஆவை ஓதி வருவதில் எந்தவித மறுப்பும் இல்லை.
வித்ரில் நபி(ஸல்) அவர்கள் குனூத் ஓதினார்கள் என்ற வரிசையில் உமர்(ரழி), ஆயிஷா(ரழி) போன்ற அறிவிப்பாளர்கள் வருகிறார்களே. இவர்களும் ஏற்கத் தகுந்தவர்கள் இல்லையா? என்று கேட்டிருக்கிறீர்கள். ஒன்றை முஸ்லிம் சகோதர, சகோதரிகள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றி, வஞ்சித்து வயிறு வளர்க்கும் மதகுருமார்களும், அவர்களின் முன்னோர்களும் இட்டுக்கட்டி நடைமுறைப்படுத்தும் லட்சக்கணக்கான ஹதீஃத்களின் அறிவிப்பாளர்களாக பிரபல் யமான, மக்களுக்கு நன்கு அறிமுகமான நபி தோழர்கள், நபி தோழியர்களின் பெயர்களையே பொய்யாக நுழைத்துள்ளனர். அறிவு குறைந்த மக்களும் அப்படிப்பட்ட நன்கு அறிமுகமான நபிதோழர், தோழியர் பெயரால் அறிவிக்கப் படுவதை நம்பி அப்படிப்பட்ட பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களையும் ஆதாரப் பூர்வமான ஹதீஃத்களாக ஏற்றுச் செயல்படுத்தி நரகிற்குப் பாதை அமைத்துக் கொள்கின்றனர்.
ஒரு ஹதீஃதின் நம்பகத்தன்மையை அறிவ தற்கு அந்த ஹதீஃதை அறிவிக்கும் நபி தோழர், நபி தோழியர், தாபியீ, தபவுதாபியீ இவர்களை மட்டும் பார்க்கக் கூடாது. அவர்களிலிருந்து கேட்டு அறிவிப்பவர்களின் வரிசையில் இடம் பெறும் அனைத்து அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தே அந்த ஹதீஃதின் தரத்தை முடிவு செய்ய வேண்டும். அந்த அறி விப்பு வரிசையில்(இஸ்னாத்) இடம் பெறுகிறவர் கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந் தால் மட்டுமே அந்த ஹதீஃதை ஆதாரபூர்வ மானதாக ஏற்க முடியும். அவர்களில் ஒருவர் பற்றிய நம்பகத்தன்மை ஐயத்திற்குரியதாக இருந் தாலும் 17:36 இறைக் கட்டளைப்படியும் சந்தேக மானதை விட்டு சந்தேகமற்றதின்பால் சென்று விடு என்ற நபி(ஸல்) அவர்களின் புகாரீ 2051, 2052, ஹதீஃத்கள் படியும் அந்த ஹதீஃதை நடைமுறைப் படுத்தாமல் விட்டுவிடுவதே நேர் வழியாகும். அல்லாஹ்வுக்கு அடிமையான நாம், நம் எஜமானனுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோமே அல்லாமல் வேறு யாருக்கும் இல்லை!
—————————————————
விமர்சனம்: தொப்பி முஸ்லிம்களின் பிரதான அடையாளம் என்று சுன்னத் ஜமாஅத் மவ்லவி கள் ஏகோபித்துக் கூறிவருகின்றனரே! தொப்பி யின் உண்மையான நிலை என்ன?
அப்துல்லாஹ், திருச்சி.
விளக்கம்: தொப்பி அணிவது சுன்னத்தும் அல்ல; பித்அத்தும் அல்ல. ஆதத்தில் உள்ளது. அதாவது பழக்க வழக்கத்தில் உள்ளது. அரபு நாட்டில் வசிக்கும் யூத, கிறித்தவ, நாத்திக, குறைஷ் காஃபிர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் தொப் பியுடனோ, தொப்பி தலைப்பாகையுடனோ தான் காட்சி அளித்தனர். காரணம் அரேபியா பாலைவனம்; காற்று மணலை அள்ளி வீசும். அம்மணலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள உடலின் அனைத்துப் பகுதிகளையும் குறிப்பாகத் தலையை மறைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் இருந்தார்கள். மற்ற படி தொப்பிப் போட்டுத் தான் தொழ வேண்டும் என்பவர்களும், தொப்பி அணியாமல்தான் தொழ வேண்டும் என்பவர் களும் வரம்பு மீறுகிறவர்களே. வரம்பு மீறுபவர் களை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை. (பார்க்க: 2:190, 5:87, 6:119, 7:55, 10:74)
தொப்பி அணிவதைப் பழக்கமாக ஆதத்தாகக் கொண்டவர் கள் எங்கு சென்றாலும் தொப்பியுடன் தான் செல்வார்கள். தொப்பி அணிந்து கொண்டு மக்களிடையே பழகுவதை கேவலமாக நினைக்க மாட்டார்கள். தொப்பியுடன் திரிவதற்கு வெட் கப்படவோ, கூச்சப்படவோ மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் தொப்பியுடன் தொழு வது சிறப்புத் தான். தொப்பியுடன் வெளியில் திரிவதற்கு வெட்கப்பட்டு, கூச்சப்பட்டு பள்ளி யில் இருந்து வெளியே வருமுன் தொப்பியைக் கழற்றி பாக்கெட்டில் போடுகிறவர்கள், அல்லது பள்ளியில் ரெடி மேடாக உள்ள பொடுகு, பேன் நிறைந்த ஓலைத் தொப்பிகளை கழற்றி எறிந்து விட்டு வெளியே வருகிறவர்கள், ஏன் தொழு கையில் தொப்பி அணிகிறார்கள் தெரியுமா? பள்ளிகளின் இமாம்களும், நிர்வாகிகளும் அதை ஃபர்ழைப் போல் வற்புறுத்துவதால் வேண்டா வெறுப்பாக தொழுகையில் வேம் போட்டு நடிக்கிறார்கள். தொழவில்லை. வேம் போட்டு நடிக்கும் நடிகர்களே அந்த வேத்துடன் வெளி யில் நடமாட வெட்கப்படுகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை தானே! இவர்களும் நிர்பந்த நிலையில் வேம் போட்டு தொழுவதற்குப் பதிலாக நடிப்பதால் அந்த வேத்துடன் வெளியில் வர வெட்கப்படுகிறார்கள். ஓலைத் தொப்பியை கழற்றி எறிகிறார்கள். சொந்தத் தொப்பிக்காரர்கள் கழற்றி பாக்கெட்டிற்குள் திணிக்கிறார்கள். தொழுகையில் இவர்களை நடிக்க வைத்தப் பெருமை அதாவது பெரும் பாவம் பள்ளி இமாம்களையும், நிர்வாகி களையுமே சாரும்.
இமாம்களின் உணவு, குடிப்பு, உடை, இருப்பி டம் அனைத்தும் மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் என்ற அனைத்து ஹராம்களிலும் மிகமிகக் கொடிய ஹராம் மூலம் இருப்பதால் அவர்களது உள்ளங்கள் கற்பாறையை விடக் கடினமாக இறுகிவிட்டன. எனவே அவர்களுக்கு ஹராம் ஹலாலாகவும், ஹலால் ஹராமாகவும் தெரிவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் பள்ளி நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட கேடு என்ன?
முக்ததிகளுக்குத் தொப்பியையும், இமாம் களுக்குத் தொப்பித் தலைப்பாகையையும் இந்த அளவு ஃபர்ழைப் போல் வற்புறுத்துகிறவர்கள், “”எனது எஜமானன் மீசையைக் கத்தரிக்கும்படி யும், தாடியை விடும்படியும் கட்டளையிட்டுள் ளான்” என்ற ஆதாரபூர்வமான ஹதீஃத்படி வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான தாடி விஷயத்தில் அணுவளவாவது அக்கறைக் காட்டுகிறார் களா? இல்லையே! பெரும்பாலான இமாம்கள் கசகசா தாடியுடனும், பெரும்பாலான பள்ளி நிர்வாகிகள் கிலீன் ஷேவுடனும் காட்சி தருவ தைக் கண்டு கொள்கிறார்களா? இல்லையே! தாடி வியத்தில் தங்கள் சுண்டு விரலையாவது அசைக்கிறார்களா? இல்லையே! பெரும்பாலான பள்ளி நிர்வாகிகளும் வயிற்றை ஹராமான வழிகளில் நிரப்புவதால் அவர்களின் உள்ளங் களும் கற்பாறைகளாக இறுகிவிட்டனவோ என்னவோ? ஆம்! இமாம்களும், நிர்வாகிகளும் ஹராமை ஹலாலாக்குவார்கள், ஹலாலை ஹரா மாக்குவார்கள், மார்க்கத்தை மார்க்கம் அல்லாத தாக்குவார்கள், மார்க்கம் அல்லாததை மார்க்கம் ஆக்குவார்கள் என்ற எமது குற்றச்சாட்டு இந்தத் தாடி, தொப்பித் தலைப்பாகை வியங்களில் நிரூபிக்கப்படுகிறதா? இல்லையா! நூறு சதவிகி தம் நிரூபிக்கப்படுகிறது.
இன்னொரு பேருண்மையையும் உறக்கக் கூறி இந்த மவ்லவிகளின் மார்க்க விரோதப் போக்கை அம்பலப்படுத்தி விடுகிறோம். கொயபல்ஸ் தத்து வம் என்று கூறுவார்களே அதாவது பொய் யையே மீண்டும் மீண்டும் கூறினால் அந்தப் பொய் பொதுமக்களின் உள்ளங்களில் உண்மை போல் பதிந்து விடும். ஆழ வேரூன்றிவிடும். கொயபல்ஸின் அந்தத் தத்துவப்படி “”தொப்பி முஸ்லிம்களின் பிரதான அடையாளம்-சுன்னத்” என்று இந்த மவ்லவிகள் மீண்டும், மீண்டும் தொடர்ந்து பொய்யாகக் கூறி அதை உண்மை போல் மக்களை நம்பவைத்துவிட்டார்கள். அது மார்க்கத்தில் ஓர் அங்கம் என மக்களின் உள்ளங் களில் புரையோடச் செய்து விட்டார்கள். அது வும் தொழுகையில் கட்டாயம் தொப்பி அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி 99% முஸ்லிம்களை தொழுகையற்றவர்களாக ஆக்கிவிட்டார்கள்.
அப்போதுதானே தர்கா சடங்குகள், கந்தூரி, கூடு, கொடி, கம்பம், நாள் தவறாமல் ஃபாத்தி ஹாக்கள், மவ்லூதுகள், மீலாது ஊர்வலம் இத்யாதி இத்யாதி ´ர்க், குஃப்ர், பித்அத் இவற்றை மார்க்கமாக்கி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க முடியும். பெரும்பாலும் தொழுகை யற்றவர்கள்தானே இந்த மவ்லவிகள் இப்படிப் பட்டச் சடங்குகள் மூலம் தங்களைச் சுவர்க்கத்தில் கொண்டு சேர்த்து விடுவார்கள் என குருட்டுத் தனமாக நம்பி இந்த மவ்லவிகள் பின்னால் அணிவகுக்கிறார்கள். ஐங்காலமும் தவறாது நபிவழிப்படித் தொழுகைகளை நிலைநிறுத்து கிறவர்கள், 2:186 இறைக்கட்டளைப்படி அல்லாஹ்வையே முற்றிலுமாக நம்பி அவனி டமே கேட்க ஆரம்பித்து விடுவார்களே. இந்த மவ்லவிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்ல மாட்டார்களே. அதனால்தான் இந்த மவ்லவிகள் முஸ்லிம்களைத் தொழுகை அற்றவர்களாக ஆக்க தொழுகையில் அல்லாஹ்வோ, அவனது ரசூலோ விதிக்காத எண்ணற்ற விதிகளைக் கற்பனையாக உருவாக்கி, தொழுகை என்பது பள்ளியிலேயே இருந்து அதற்காகக் கூலி-சம்பளம் (ஹராமாக) வாங்கும் மவ்லவிகளுக்கு மட்டுமே சாத்தியம். வெளியில் ஓடியாடி பொருளீட்டிக் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புள்ள தங்களுக்கு ஒரு போதும் சாத்தியமில்லை என்ற குருட்டு நம்பிக் கையை முஸ்லிம்களில் உள்ளங்களில் புரையோ டச் செய்து விட்டார்கள். அதில் ஒன்றுதான் இந்தத் தொப்பிப் போடுவதும். அதனால்தான் மக்களை ஏமாற்றுவதற்கும் “”தொப்பிப் போடு வது” என்ற சொல் வழக்கு ஏற்பட்டிருக்கிறது.
உண்மையில் தொப்பிப் போடுவது முஸ்லிம் களின் பிரதான அடையாளம் அல்ல; இறை வனின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி-வஞ்சித்து வயிறு வளர்க்கும் மதகுருமார்களின் பிரதான அடையாளமே தொப்பி ஆகும். சிறிது புத்தியைச் செலுத்தி நோட்டமிட்டுப் பாருங்கள். யூத மத ரிப்பிகள், கிறித்தவ பிப்கள், ஆர்ச் பிப்கள், கார்டினல்கள், போப் போன்றோர் தொப்பியுடன் தானே காட்சி தருகின்றனர். ஹிந்து முன்னணித் தலைவர் தொப்பியுடனேயே காட்சி அளிக்கிறார். ஷாகாக்களில் பயிற்சி பெறும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், தலைவர் கள் தொப்பியுடன் காட்சி அளிக்கிறார்கள். பெரும்பாலான மதத் தலைவர்கள், தொப்பியு டன் காட்சியளிப்பதை நீங்கள் அன்றாடம் பார்த்து வரத்தானே செய்கிறீர்கள். இதிலிருந்து என்ன உறுதியாகத் தெரிகிறது? தொப்பிப் போடுவது இறைவனின் பெயரால் மக்களை ஏமாற்றி, வஞ்சித்து வயிறு வளர்க்கும் அனைத்து மத குருமார்களின் பிரதான அடையாளமே அல்லாமல் முஸ்லிம்களின் அடையாளமல்ல.
தொழுகையில் இந்த மவ்லவிகள் பஃபூன்கள் அதாவது கோமாளிகள் போல் இகாமத்துச் சொல் லும் போது தலைப்பாகையை அணிவதும், தொழுகை முடிந்ததோ இல்லையோ அந்தத் தலைப்பாகையை உடனடியாகக் கழற்றி முசல்லாவில் எறிவதும் எதை உணர்த்துகிறது? இமாம்களின் இந்தச் செயலும், தொழுகை யாளிகள் வெளியே வரும்போது தொப்பியை கழற்றி எறிவதும் அவர்கள் வேமிட்டு நடித் ததைத்தானே உறுதிப்படுத்துகிறது. அதனால் தானே ஏமாற்றுவதற்கும் தொப்பிப் போடுவது என்ற சொல்லாடல் ஏற்பட்டுள்ளது.
ஆயினும் தொழச் செல்லும் ஈமானுள்ள முஸ்லிம்கள் தொப்பியில்லாமல் தொழுவதால் அங்கு குழப்பம் ஏற்படும்; தொழுகை வீணாகும் என்ற அச்சத்தில் விருப்பமில்லாவிட்டாலும் தங்களிடமுள்ள தொப்பியைக் கொண்டோ, கைக்குட்டையைக் கொண்டோ தலையை மறைத்துத் தொழுங்கள். பள்ளியில் குழப்பம் ஏற் படுவதைத் தவிர்ப்பதற்கே இச்செயல். இதன் பாவச் சுமையை தொப்பியை வலியுறுத்தும் மவ்லவிகளும், பள்ளி நிர்வாகிகளுமே சுமப்பார் கள் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள் ளுங்கள். மேலும், தொப்பி அணிவது முஸ்லிம் களின் பிரதான அடையாளச் சின்னம் அல்ல. ஆதத்தின் சந்ததியினரான மனித குலத்தை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்ப்பதோடு, அவர்களை ஈவு இரக்கம் கடுகளவும் இல்லாமல் நரகில் தள்ளும் ஷைத்தானின் நேரடி ஏஜண்டு களான, தாஃகூத்களான மதகுருமார்களின் பிரதான அடையாளச் சின்னம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.