ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2013 ஜனவரி

MTM முஜீபுதீன், இலங்கை

டிசம்பர் 2012 தொடர்ச்சி …
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஓர் தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார்; அவருக்கு செவி கொடுப்பீர்களாக! (உபாகமம்: 18:15)

உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப் பதையயல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். (உபாகமம் : 18:18)

பைபிள் புதிய ஏற்பாட்டில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. அவதானிக்கவும்.
“மேசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனா கிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதர்சியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார். அவர் எங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர் களாக. (அப்போஸ்தலர் : 3:22)

இந்துப் புராணங்களிலும், இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வருகை பற்றிய தீர்க்க தரிசனச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவதானியுங்கள்.

ஏதஸ் மின்னந்தரே மிலேச்ச, ஆச்சார்யண ஸமன்வித, மஹாமத் இதிக்கியாத, சிஷ்ய சாகா ஸமன்வித, நிரூபஸ்சேவ மஹாதேவ, மருஸ்தல நிவாஸினம். (பவிஷ்ய புராணம் : 3:3:5-8)

இதன் கருத்துச் சுருக்கம்: ஓர் அன்னிய (மிலேச்ச) நாட்டில் ஓர் முசாரியர் தம்முடைய சீடர்களுடன் வருவார். அவரது பெயர் (முஹம் மத்) மஹாமத், அவர் பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார். அவர்கள் “”கத்னா” (லிங்கசேதி) செய்வார்கள். குடுமி வைக்க மாட் டார்கள்; தாடி வைத்திருப்பார்கள்; மாமிசம் உண்பார்கள்; சப்தம் போட்டு (அதான்) அழைப் பார்கள் முஸலை(முஸல்மான்) என அழைக்கப் படுவார்கள். (பவிஷ்ய புராணம்:3:25:3)

மேலும் காண்க: ரிக் வேதம்: மந்திரம்:5, சூக்தம்:28
அறிவு நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களே! ஆதம் நபி(அலை) முதல் முஹம்மது நபி(ஸல்) வரை மனிதர்களை நேர்வழியின் பக் கம் கொண்டு செல்ல இறைத் தூதர்களை அல் லாஹ் அனுப்பிக் கொண்டே இருந்தான். ஆனால் முன்னைய இறைநெறி நூல்கள் அதன் தூய வடிவில் இல்லை. இதனால் மக்கள் மூடக் கொள் கையின் பக்கம் சென்றனர். இக்குறைகளை நீக்கி நம்மை நேர் வழிப்படுத்தவே இறுதி இறை நெறி நூல் அல்குர்ஆன் அல்லாஹ்வினால் இறக்கி அருளப்பட்டது. முன்னைய நெறிநூல் ஆதாரங்க ளின்படி இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன் என்றும் நிலைத் திருப்பவன்.
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண் டுள்ள இந்த நெறிநூலை (படிப்பீராக) அவன் தான் உம்மீது இறக்கி வைத்தான். இது இதற்கு முன்னுள்ள (இறைநெறி நூல்களை) உறுதிப் படுத்துகிறது. தவ்ராத்தையும், இன்ஜீலையும் இறக்கி வைத்தான்.

இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை தீமை இவற்றைப் பிரித் தறிவிக்கும்) ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு. அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும், இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:2-4)

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என ஆரம்பமாகும் இந்த அத்தியாயம், அந்தக் கொள்கையை எடுத்துரைத்து மனிதர் களை நல்வழிப்படுத்துவதற்காக இந்த இறுதி இறை நெறி நூலை இறக்குவதற்கு முன் தவ்ராத் மற்றும் இன்ஜீலையும் அல்லாஹ்வே அனுப்பி யதாகக் குறிப்பிடுகின்றான்.

இறைத் தூதர் மூசா(அலை) (Moses) அவர்க ளுக்கு இறைவன் “”ஹீப்ரு” அல்லது “”எபிரெயு” மொழியில் அருளிய நெறிநூலே “”தவ்ராத்” (தோரா) ஆகும். இதை இன்று கிறித்தவர்கள் விவிலியம் பழைய ஏற்பாடு (Old Testament) என்று அழைத்துக் கொள்வர். பழைய ஏற்பாட்டில் 39 ஆகமங்கள் காணப்படுகின்றன. இதில் ஆரம்ப ஐந்து ஆகமங்களை மட்டுமே தோரா என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அவற்றையும் மோசே என்னும் மூசா(அலை) அவர்கள் எழுதியதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் “”மோசே இந்த நியாயப் பிரமாணத் தின் வார்த்தைகள் முழுவதையும் ஒரு புத்தகத்தில் எழுதி முடித்த பின்பு” என்று கூறுகிறது பழைய ஏற்பாடு. (உபாகமம் : 31:24)

அப்படியானால், மோசேயின் மரணச் செய்தியும், அவரைப் பற்றிய பாராட்டுரையும் அவரே எழுதிய புத்தகத்தில் எப்படி இடம் பெற்றது? கிறித்தவர்களோ பழைய ஏற்பாட்டின் எல்லா ஆகமங்களையும் “”தவ்ராத்”-தோரா என்கின்றனர். அப்படியானால், மோசே இறப்பிற்குப் பிந்திய காலத்துக் கதைகள் அதில் எப்படி இடம் பெற் றன? ஆகவே, பழைய ஏற்பாடு என்பது, நபி மூசா (அலை) அவர்களுக்கு இறைவன் அருளிய தவ்ராத் நெறிநூலல்ல. மாறாக அது ஒரு வரலாற்றுத் தொகுப்பு என்றும், மூசா(அலை) அவர்களுக்குப் பின் வந்த பலர் எழுதி வைத்த கதைகள் என்றும் அறிய முடியும்.

அதுபோல் ஈசா(அலை) அவர்களுக்கு இறைவ னால் அருளப்பட்ட நெறிநூல் “”இன்ஜீல்” ஆகும். இதை இன்று பைபிள்-புதிய ஏற்பாடு என்று கிறித் தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பைபிள் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள மொத்தம் 27 ஆகமங் களில் ஆரம்ப நான்கை மட்டுமே விவிலியம் (இன்ஜீல்) என்பர். இவை நான்கும் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்போரால் எழுதப் பட்டவை ஆகும். இவையன்றி இயேசுவின் சீடர் எனச் சொல்லப்படுவோரால் எழுதப்பட்ட ஆக மங்களும் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. அனைத்தையும் “”பைபிள்” என்றே கிறித்தவர்கள் கூறுகிறார்கள். இயேசு வாழ்ந்த போது விவிலியம் எழுதப்பட வில்லை. அவர் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னரே விவிலியம் எழுதப்பட் டது. ஆகவே, இறைத் தூதர் ஈசா(அலை) அவர்களுக்கு இறைவன் வழங்கிய “”இன்ஜீல்” நெறிநூல் விவிலியம்-புதிய ஏற்பாடு எனக் கூற முடியாது. (தஃப்சீர் மனார்)

ஆகவே, யூதர்களும், கிறித்தவர்களும் கைவசம் வைத்துள்ள விவிலியம் பழைய ஏற்பாடும், பைபிள் புதிய ஏற்பாடும் அல்லாஹ்வினால் அருளப்பட்ட நெறிநூல்கள் என முழுமையாகக் கூறமுடியாது. அவற்றில் கூடியளவில் மடமைக் கொள்கைகளும், பல தெய்வ சிலை வணக்க வழிபாடுகளும் உள் நுழைந்ததால் அவை இறைவனால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகவே அல்லாஹ்வின் நேர்வழியை அறிந்து கொள்வதற்கு அல்லாஹ்வின் இறுதி நெறி நூலை விசுவாசம் கொள்வதே அவசியமாகும். மனிதர் களினதும், ஷைத்தான்களினதும் கோணல் வழி களைப் பின்பற்றுவது பாவமாகும். இவ்வாறு பின்பற்றும்போது மனிதர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து விடுவர். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள்.

யார் நேர்வழியின் பால் அழைக்கின்றாரோ, அவருக்கு அந்நேர்வழியைப் பின்பற்றுபவரு டைய நற்கூலிகளின் அளவு உண்டு; அவர்களின் நற்கூலிகளில் எதுவும் குறையாது. யார் தீய வழி யின்பால் அழைக்கின்றாரோ, அவருக்கு அத்தீய வழியைப் பின்பற்றுபவர்களின் பாவ அளவு உண்டு. அதனால் அவர்களின் பாவத்தில் எதுவும் குறைவதில்லை. (நூல்: முஸ்லிம்)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமது இந்த மார்க்கத்தில் அதில் இல்லாத ஒரு விஷயத்தை ஒருவன் புதிதாக உண்டாக்கு வானேயானால், அது மறுக்கப்பட வேண்டிய தாகும். (புகாரி, முஸ்லிம்)

அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம். (அல்குர்ஆன் : 33:31)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ் வுக்கு வழிபடுங்கள். இன்னும் இந்தத் தூதருக் கும் வழிப்படுங்கள். உங்கள்(உலகச்) செயல் களைப் பாழாக்கிவிடாதீர்கள். (அல்குர்ஆன்:47:33)

அன்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறைத் தூதுச் செய்தியை எந்த நிர்ப்பந்தமும் இல்லாது நளினமான முறையில் முன் வைத்தார்கள். அவர்கள் முன்வைத்த முறையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்கு வதை அவதானியுங்கள்.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை; வழிகேட்டிலிருந்து நேர் வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகி விட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிரா கரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கி றாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோ னாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:256)

அன்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் நிர்ப்பந் தம் இன்றி அல்லாஹ்வின் இறைச் செய்தியை நளினமான முறையில் முன் வைத்தார்கள். வேதக் காரர்களிடம் எவ்வாறு சத்திய இறைநெறிச் செய்திகளை முன்வைக்க வேண்டும் என அல்குர் ஆன் விளக்குவதை அவதானியுங்கள்.

மேலும், நீங்கள் வேதத்தையுடையவர்களு டன், அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலே யன்றித் தர்க்கம் செய்யாதீர்கள் “”எங்கள் மீது இறக் கப்பட்டதின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கின்றோம். எங் கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே, மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப் பட்டு நடப்போர் முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக.

இவ்விதமே, (அவர்களுக்கு நெறிநூல் இறங்கியது போன்றே நபியே!) உமக்கும் இந்நெறிநூலை இறக்கியிருக்கிறோம் ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு நெறிநூலை வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர் களில் இருக்கிறார்கள். காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கை யால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை. அவ்வாறு இருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப் படலாம்.

அப்படியல்ல! எவர்கள் கல்வி ஞானம் கொடுக் கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங் களில், தெளிவான வசனங்களாக இது இருக்கின் றது. அநியாயக்காரர்கள் தவிர(வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

“”அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என் றும் அவர்கள் கேட்கிறார்கள் “”அத்தாட்சிகளெல் லாம் அல்லாஹ்விடம் உள்ளன. ஏனெனில் நான் வெளிப்படையாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இந்நெறி நூலை நாம் உம்மீது இறக்கியிருக்கிறோம் என் பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அதில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 29: 46-51)

இந்த இறைவசனங்கள் அன்று இஸ்லாமிய பிரசாரம் செய்யப்பட்ட நளினமான முறையை விபரிக்கின்றன. அத்துடன் முன்பு இறை நெறி நூல்கள் வழங்கப்பட்டவர்களிடம் முன்னைய இறைநெறிநூல்களில் அவர்கள் ஓதிவந்த இறைச் செய்திகளும், வரலாறுகளும் அல்குர்ஆன் மூலம் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டது. இவை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் இறைத் தூதர்தான் என்பதற்கு அத்தாட்சி இல்லையா? என வேதக்காரர்களுக்கு நினைவூட்டப்படுகின்றது. அத்தோடு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறந்தது முதல் நபித்துவம் இறைவனி டம் இருந்து கிடைத்தது வரை நாற்பது வருடங் கள் ஆகும். இக்காலப் பகுதியில் நபி(ஸல்) அவர் கள் இதற்கு முன்னர் எந்த இறைநெறிநூல்களி லிருந்தும் படித்து வந்தவரல்லர். அதை எழுதிப் பார்த்தவரும் அல்லர். அப்படியிருக்க அல்குர் ஆனின் மீது எவ்வாறு சந்தேகப்பட முடியும்? அறிவுமிக்க சமுதாயமே அல்குர்ஆனை அவதானித்து நேர்வழியின் பக்கம் வரக்கூடாதா? மனித சமுதாயமே இறுதி இறைநெறிநூலின் இவ்வசனங்களை அவதானியுங்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காக, மறுமையில் கிடைக்கக் கூடிய சுவர்க்கம் கிடைப்பதற்கும், நரக நெருப்பிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற் கும் செய்த பிரசார முயற்சியில் அடைந்த துன்பங்களை அறிய முடியும். மேலும் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு மக்களுக்குப் போதனை செய்ய பணித்த முறையை அவதானியுங்கள்.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக் களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத் தைக் கொண்டும், நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க் கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்குர்ஆன்: 16:125)

சிலர் இன்று இஸ்லாம் வாளினால் பரவியதாக வரலாறு அறியாது குறிப்பிடுவர். ஆனால் அன்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சத்திய இறைநெறிநூலான அல்குர்ஆனைப் போதனை செய்தபோது அவர்களும், நபி தோழர் களும் அடைந்தத் துன்பங்கள் ஏராளம். நபி(ஸல்) அவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்லாம் மார்க்கத்தைப் போதிக்கவில்லை. அல்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.

அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாத வற்றை நீங்கள் திட்டாதீர்கள். (அப்படித் திட்டி னால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ் வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். பின்பு அவர்களின் மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கின்றது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (அல்குர்ஆன்:6:108)

இஸ்லாம் எப்போதும் அல்லாஹ்வின் இறை நெறி நூலை முன் வைத்தே மக்களுக்கு நேர்வழி யைக் காட்டியது. சத்திய அல்குர்ஆனின் போதனைகள் மக்களின் மனங்களிலிருந்து இருள் களைப் போக்கியது; மடமைகளை நீக்கியது; சத்திய ஒளியை ஏற்படுத்தியது. இதுவே உண்மை நிலையாகும்.

அன்று இறுதி நபிக்கும், நபி தோழர்களுக் கும் இழைக்கப்பட்ட துன்பங்களும் கொடுமைகளும்!
இஸ்லாம் வாளினால் பரப்பப்பட்ட மார்க்கம் எனத் தவறாகக் கூறுகின்றனர். இவை பிழையான செய்திகளாகும். இஸ்லாமிய உண்மை வர லாற்றை அறிந்த எந்த அறிவுடைய மனிதர்களும் இப்பிழையான செய்தியை ஏற்கமாட்டார்கள். இஸ்லாம் இறைநெறி நூலான அல்குர்ஆன் மூலமே முன்வைத்து விளக்கப்பட்டது. இஸ் லாத்தை ஏற்ற இறை அடியார்களான முஹம்மது (ஸல்) அவர்களும், நபி தோழர்களுமே குறை´ நிராகரிப்பாளர்களினாலும், பல தெய்வக்காரர் களினாலும், வாளினாலும் வேறு வழிகளினாலும் பல துன்பங்களுக்கு உட்பட்டவர்களாவர். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அமைய அல்லாஹ்வின் நேர் வழியை முன்வைத்தபோது பல எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுத்தார்கள். குறை´ தலைவர் கள் திட்டினார்கள், பைத்தியக்காரன், சூனியக் காரன், கவிஞன், மதம் மாறியவர்கள் என பல வாறு துன்பங்களை விளைவித்தார்கள். பொரு ளாதாரத் தடைகளை விதித்தார்கள். அல்குர் ஆனை மக்கள் கேட்காமல் தடுத்தார்கள். அடிமை கள், ஏழைகள் இஸ்லாத்தை ஏற்றபோது இவர் களுக்கு சொல்ல முடியாத அளவில் துன்பங்களை விளைவித்தார்கள். இவை பற்றிய வரலாறுகளை ஹதீஸ்கள் மூலம் அறிய முடியும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் இருக்கும்போது அவருக்குக் கொடுத்த தண்டனைகளைப் பாருங்கள்.

உர்வா பின் ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“”இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் தூத ருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமை யானது எது?” என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “”(ஒரு முறை மக்காவில்) உக்பா பின் அபீ முஐத் என்பவன், நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களுடைய கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சுத் திணரும் படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன். அப்போது அபூபக்கர்(ரழி) அவர்கள் வந்து, நபி(ஸல்) அவர்களை விட்டு உக்பாவை(தம் கையால்) தள்ளினார்கள். அப்போது, “”என் இறை வன் அல்லாஹ்தான்” என்று சொல்லும் காரணத் திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிட மிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். (புகாரி: 3678)

அன்று அரேபியாவில் வாழ்ந்த சத்திய மார்க்கத்தினை நிராகரித்த குறை´ பெரும்பான்மையான வர்கள் நபி(ஸல்) அவர்களுக்குத் துன்பங்களை விளைவித்தபடியே இருந்தனர். இறைத்தூதர் இறைவனைத் தொழும்போதும் துன்பங்களை விளைவிக்கக் கூடியவர்களாக இருந்தனர். பின் வரும் ஹதீஃதை அவதானியுங்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: