பார்த்தலா? தகவலா? பூர்த்தி செய்தலா? கணக்கிடுதலா?

in 2014 செப்டம்பர்,பிறை

ஜாபர் சித்திக், கம்பம், 9944283637

ஜூன் 2014 அல்ஜன்னத்தில் சகோதரர் இஸ்மாயில் ஸலஃபி அவர்களால் கணிப்பீட்டுச் சகோதரர்களின் கவனத்திற்கு என்ற தலைப்பில் பக். 30 முதல் 34 வரை கட்டுரை ஒன்று எழுதப்பட்டு இருந்தது. பிறை விஷயத்தில் சுஜ மவ்லவிகள் குழம்பி இருப்பது போல் மதனிகளும், ஃபிர்தெளஸிகளும், உண்மையை அறியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

பிறை விஷயம் ஸலஃபிகளையும் தடுமாற வைத்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நீர் அறிந்து கொள்ளும். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. (அல்குர்ஆன் : 47:19)

சத்திய மார்க்கத்தை எடுத்துச் சொல்வதிலும், எழுதுவதிலும், ஒரு அழகான நடுநிலையாக, கண்ணியமான முறையில் ஒரு வழியைக் கடைப்பிடிப்பவர் சகோதரர் இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்.

ஸலஃபி அவர்கள் ஹதீஃத்களின் வாசகங்களின் சரியான புரிந்துணர்தல் இல்லாத காரணத்தினாலேயே அவரையும் தடுமாற்றம் அடையச் செய்துள்ளது. மேலும் மதனிகளும், ஃபிர்தெளசிகளும், உலவிகளும் மூர்க்கத்தனமாக கணக்கீட்டு முறையை எதிர்ப்பதால் ஸலஃபி அவர்களும் நிர்ப்பந்த சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

இறைவாக்கு 47:19ல் அல்லாஹ் கூறியபடி ஒரு விஷயத்தை சொல்வதற்கு முன்னால் அறிந்து கொள்ளச் சொல்கிறான். கட்டுரையில் ஸலஃபி அவர்கள் புகாரீயில் வரக்கூடிய 1906, 1909, 1913 ஆகிய ஹதீஃதுகளை மட்டும் மேற்கோள்காட்டி யுள்ளார். பிறகு எச்சரிக்கை செய்யக்கூடிய ஹதீஃது களை (ஹாகிம் 329, முஸ்லிமில் இடம் பெறும் செய்தி) ஆகியவற்றையும், அல்குர்ஆன் வசனங்கள் 33:36, 24:63, 49:1,2, 4:115, 5:3, 7:157 ஆகியவற்றை யும் தனது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்.

பார்த்தலுக்கும், தகவலுக்கும், பூர்த்தி செய்தலுக்கும் முக்கியமான ஆதாரங்கள் :
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பை விடுங்கள். (முஸ்லிம் 1974)

நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள். மறைக்கப்படுமானால் 30 நாட்களாக பூர்த்தி செய்யுங்கள். (புகாரீ 1909)
இரண்டு முஸ்லிம்கள் சாட்சி சொன்னால் அதை அடிப்படையாகக் கொண்டு நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். நோன்பைத் துறந்தும் விடுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத் 18137)

மேற்கண்ட ஹதீஃதுகளை மட்டும் பிறை விஷயத்தில் ஆதாரமாக காட்டும் மவ்லவிகள் அதைப் பற்றி கடுகளவு கூட சிந்திக்கவில்லை என்பதே யதார்த்த நிலை. அரபியை மொழி பெயர்ப்புச் செய்யும் மவ்லவிகளுக்கு தவறே ஏற்படாது என்ற எண்ணமோ தெரியவில்லை. பிறை சம்பந்தப்பட்ட அனைத்து ஹதீஃதுகளையும் நடுநிலையோடு, திறந்த மனதோடு ஆய்வு செய்து பாருங்கள். ஒரு ஹிமாலயத் தவறை உணர்வீர்கள்.
இன்ஷா அல்லாஹ் அந்தத் தவறைச் சரி செய்து மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
அவதூறுகள் ஆதாரமாகாது!

பிறை விஷயத்தில் கணக்கிடுதலே, (தங்கள் கூறுவது போல் கணித்தல் அல்ல) குழப்பமில்லாத நிலையாகும். (Calculation Not Assumption). இதுவரை மவ்லவிகள் எடுத்து வைக்கும் வாதம் கணித்தலே.

பிறை எங்கே உதயமாகிறது என்ற அடிப்படை விஷயமும், கணித்தலுக்கும், கணக்கீடுக்கும் வேறுபாடு தெரியாத மவ்லவிகள்தான் இன்று கண்மூடித் தனமாக எதிர்க்கின்றனர்.

ஒவ்வொரு கருத்தைச் சொல்பவர்களும் தங்க ளது கருத்துக்குச் சாதகமான ஆதாரங்கள் போல் தோன்றுபவற்றை முன் வைக்கிறார்கள். தங்களது கருத்துக்கு எதிரான ஆதாரங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றார்கள்.

“”அலக்” என்பதற்கு அன்றைய விரிவுரை யாளர்கள் இரத்தக்கட்டி என்று பொருள் செய்தனர். ஆனால் கருவளர்ச்சியின் போது இரத்தக் கட்டி என்ற நிலை ஏற்படுவதில்லை. இந்நிலையில் “அலக்’ என்பதற்கு எல்லா விரிவுரையாளர்களும் தந்துள்ள விளக்கவுரையை ஒதுக்கி வைத்து விட்டு அதன் நேரடிப் பொருளைக் கொடுத்தால் இன்றைய அறிவியல் ஆய்வுடன் ஒத்துப் போகிறது. நாம் புதிய கருத்தைக் கூறிவிட்டதாக விமர்சிப்பவர்களும், “அலக்’ என்பதற்கு பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட பொருள் தான் சரி என்று பல சந்தர்ப்பங்களில் சரிகண்டதை இங்கு நினைவுபடுத்துவது முக்கிய மாகும். ஸலஃபி அவர்களும் அவருடைய தர்ஜமா வில் “அலக்’ என்ற வார்த்தைக்கு கருவறைச் சுவரில் ஒட்டிக் கொள்ளக்கூடியது என்றும், பி.ஜே.வுடைய தர்ஜமாவில் கருவுற்ற சினை முட்டை என்றும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கணக்கீடு 100% துல்லியமானது, அல்லாஹ் வுடைய கணக்கீட்டில் எந்த குளறுபடிகளும், குழப்பங்களும், சந்தேகங்களும் அறவே வராது. அவன் தீர்க்க ஞானமுடையவன். அதேபோல் பிறை சம்பந்தப்பட்ட ஹதீஃத்களில் தற்கால அறிஞர்கள் மொழி பெயர்ப்பில் தவறு இருப்ப தால்தான் பிரச்சனையே! சந்திரனின் சுழற்சி ஓட்டத்திற்கும், மேகமூட்டத்திற்கும் தொடர்பு உள்ளதா? சிந்தியுங்கள்.

ஹதீஃதுகளில் கும்ம, கும்மிய, உஃமிய, ஹஃபிய்ய, குப்பிய, கபிய்ய என்ற வார்த்தை களையே நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மேற்கண்ட வார்த்தைகளுக்கு மேகமூட்டம் தான் என்று அர்த்தம் என்று பிரச்சாரம் செய்கிறவர்கள் குர்ஆன், ஹதீஃதிலிருந்து ஆதாரம் காட்ட முடியுமா? மாறாக மேகமூட்டத்திற்கு ஸய்யிப், ஸஹாப் போன்ற வார்த்தைகளையே காண முடிகிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியாமல் அரபி பண்டிதர்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டது எனக் கூறிய நபி(ஸல்) அவர்களின் கூற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டு ஒவ்வொரு மாதத்தினையும் மேகமூட்டம் காரணமாக 30 நாட்களாக பூர்த்தி செய்கின்றனர்.

ஒரு மாதம் என்பது 29 நாட்களா(கவும் இருக்)கும் என்ற ஹதீஃதின் (முஸ்லிம் 1966) நிலை என்ன? “”நான் நபி(ஸல்) அவர்களுடன் முப்பது நாட்கள் நோன்பு நோற்றதை விட 29 நாட்கள் நோன்பு நோற்றதே அதிகமாகும்”.
இப்னு மஸ்ஊத்(ரழி), திர்மிதி : 625

இதே ஹதீஃத் பல்வேறு அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படும் செய்தி புகாரீயில் 9 ஹதீஃத்களும், முஸ்லிமில் 10 ஹதீஃத்களும் உள்ளன. மேலும் ஜிப்ரில்(அலை) அவர்கள் சொன்ன செய்தியும், ஈலா சம்பவம் பற்றிய ஹதீஃத்கள் (முஸ்லிம் 1977-1980, திர்மிதி : 626) ஆகியவை மாதம் 29 நாட்களாகவும் இருக்கும் என தெரிவிக்கின்றன.

“”தொடர்ந்து செல்லுமாறு (தாஇபய்னீ) சூரியனையும், சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:33)

சூரியனும், சந்திரனும் கணக்கின்படியே இயங்குகின்றன. (10:5) ஆகிய இரு வசனங்களிலும் தொடர்ச்சியாக இயங்கும்படியும், கணக்கின்படியும் இயங்கக்கூடிய சூரியனையும், சந்திரனையும் நமக்கு வசப்படுத்திக் கொடுத்த ரப்புல் ஆலமீன் அதன் மூலம் காலக் கணக்கையும், ஆண்டுகளின் எண்ணிக்கையும் அறிந்து கொள்ள முடியும் என்று 17:12, 10:5 ஆகிய வசனங்களில் கூறுகின்றான். இந்தக் கணக்கைக் கொண்டு (கணிப்பு அல்ல!) 2:189ல் பிறையின் படித்தரங்கள் மூலம் மக்களுக்கு காலங் காட்டியாகவும், ஹஜ்ஜை அறிவிக்கவும் முடியும் என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறான்.

மாறாக டவுன் ஃகாஜியோ, இயக்கத் தலைவரோ, அறிவிப்பதற்கு அதிகாரம் இருக் கின்றதா? இவர்கள் கூற்றை நம்பி இபாதத்தை கடைப்பிடிக்க அனுமதி இருக்கிறதா? மக்களே! நடுநிலையோடு சிந்தியுங்கள்!

மேகமூட்ட ஜமாஅத்தினர், தகவலை ஏற்கும் மதனி ஜமாஅத்தினர், புறக்கண்ணால் பார்க்கும் ஜமாஅத்தினரின் நிலை :

மார்க்கத்தில் கண்மூடிப் பின்பற்றலுக்கு அணுவளவும் இடமில்லை. ததஜவினர் மாதத்தை மேகமூட்டத்தின் காரணமாக பூர்த்தி செய்தும், ஜாக்கினர் தகவலை ஏற்றும், சுஜவினர் ஃகாஜியின் அறிவிப்பை ஏற்றும் செயல்படுவது குர்ஆன், சுன்னாவிற்கு ஏற்புடையதாக உள்ளதா?

வருடத்திற்கு 1 முறையோ அல்லது 2 முறையோ பிறையைப் பார்த்து மாதத்தை ஆரம்பிப்பது தவறாகவே அமையும். தகவலைக் கேட்டுப் பெறு பவர்களும், பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பவர் களும் 2 நாட்கள் கழித்தே மாதத்தை ஆரம்பம் செய்கிறார்கள்.

ரப்புல் ஆலமீன், 17:12, 10:5ல் உங்களால் கணக்கிடமுடியும் என்றே கூறுகிறான். ஆக மஃரிபில் பிறை பார்த்து மாதத்தை ஆரம்பிப்பது 100% யூதர்களின் கலாச்சாரமே!
தவறில் நிலைத்திருப்பவர்கள் உண்மையாளர்களா?

“”தாம் செய்தவற்றில் அறிந்துகொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள்”
(அல்குர்ஆன் : 3:135)

குர்ஆன், ஹதீஃத் அடிப்படையிலான எந்த விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்வோம். நமது கருத்து குர்ஆன், ஹதீஃதுக்கு மாற்றமானது என்பதை அறிந்தால் அதை நாம் ஒப்புக் கொள்ளத் தயங்கியதில்லை என்று கூறும் தவ்ஹீது மவ்லவிகள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?

மனிதர்களின் பார்வைக்கு தவறு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. அல்லாஹ்வுடைய கணக்கீட்டில் அணுவளவு பிழையோ, தவறோ, குழப்பங் களோ, ஏமாற்றங்களோ நிச்சயம் வராது.

மேகமூட்டமும், சந்திரனின் ஓட்டமும் :
பல ஆண்டுகளாகவே சுஜ மவ்லவிகளும், தவ்ஹீது மவ்லவிகளும் ஃப இன்ன கும்ம அலைக்கும் என்று ஹதீஃதில் வருகின்ற வார்த்தைக்கு மேகமூட்டம் தென்பட்டால் என்றே மொழி பெயர்த்து மக்களுடைய மூளையில் ஆழமாகப் பதிவு செய்துவிட்டார்கள்.

ஸலஃபி அவர்களும் நபி வழிக்கு முரணாக பி.ஜே.யின் ஸ்டைலில் காற்று காரணமாக பிறை தென்படாவிட்டால் கூட உதித்து விட்டது என் பதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டிய தில்லை. மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்வது தான் நமக்கிடப்பட்டுள்ள கட்டளை. இதுதான் சுன் னாவை நேசிப்பதற்கான அடையாளமாகும். (பார்க்க : அல்ஜன்னத் ஜுன் 2014 பக். 31) ஸலஃபி அவர்களும் இப்படிக் கூறுவது வருந்தத்தக்கதே!
அல்லாஹ்வால் படைக்கப்பட்ட பலவீனமான மனிதனுக்கு காலத்தை அறிய அவனுடைய கணக் கீட்டுப் பக்கம் கவனம் செலுத்துவதே சாலச் சிறந்தது. தினமும் பிறைகளைக் காண்பதென்பது பழக்கத் திற்கு கொண்டு வரமுடியாத செயல். ஒருசில மாதங்கள் பார்க்க முடியும். மற்ற மாதங்கள் பார்ப்பதற்கு மனிதர்கள் தவற விட்டு விடுவார்கள்.

இந்தச் சிரமத்தைப் போக்கவே உங்களால் கணக் கிட முடியும் என்று கூறுகிறான். கணக்கீடு குர் ஆனுக்கோ, ஹதீஃதுக்கோ எதிரானது கிடையாது.

அல்லாஹ்வுடைய பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை 12 என்று நிர்ணயம் செய்து விட்டான். மாதம் 29 நாட்கள் எனில் 28 படித்தரங்களும்+1 நாள் (கும்மாவுடைய நாள்) ஒளி கண்களுக்கு தெரியாத நாளாகும்.

மாதம் 30 நாட்கள் எனில் 29 படித்தரங்களும் + 1 நாள் கும்மாவுடைய நாள் ஆகும்.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் நேர்க்கோட் டில் வரும் நிகழ்வு ஒவ்வொரு மாதமும், மாதத்தின் இறுதி நாளில் ஏற்படுகிறது. (Geocentric-Conjuction) இவ்வாறு 12 மாதங்களுக்கும் 12 முறை ஏற்படுகிறது.

இவ்வாறு 29 நாட்கள் கொண்ட மாதத்தில் 29வது நாளும், 30 நாட்கள் கொண்ட மாதத்தில் 30வது நாளும் நடைபெறும். இந்த ஒளி தெரியாத கும்மாவுடைய நாளைத்தான் இந்த மவ்லவிமார்கள் மேக மூட்டம் என்று தவறாக மொழி பெயர்த்து தங்களுடைய அரபுப் புலமையை நிலை நாட்டு கின்றனர். மாறாக அல்குர்ஆனில் மேகத்திற்கு ஸய்யிப் ஸஹாப், கொமாம, என்றே குறிப்பிடப் பட்டிருக்கின்றது. 2:19,57,210, 7:57,160 13:12, 15:22, 24:40,43, 25:25, 27:88, 30:48, 26:189, 32:27, 35:9, 46:24, 52:44, 56:69, 78:14 புகாரி 5011வது ஹதீஃதிலும் உஸைத் பின் ஹுளைர்(ரழி) அவர்கள் அல்கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதியபோது மேகம் சூழ்ந்ததை ஸஹாப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரீ 4581வது ஹதீஃதிலும் மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனை பார்ப்பது போல மற்றும் மேகமே இல்லாத பெளர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பது போல் மறுமை நாளில் அல்லாஹ்வைக் காண முடியும் என்ற வாசகத்தில் மேகத்திற்கு ஸஹாப் என்றே பயன்படுத்தப் பட்டுள்ளது.
அல்குர்ஆன் 10:71ல் றூகும்மத்தன் என்ற வார்த்தையும், 11:28ல் ஃபஉம்மியத் அலைக்கும் என்ற வார்த்தையும் காணப்படுகிறது. இதற்கு மறைமுகமாகவோ, உங்களுக்கு மறைக்கப்படு மானால் என்றே மொழி பெயர்த்துள்ளனர். இந்த 10:71, 11:28ற்கு மேகம் மறைக்கப்படுமானால் என்று மொழி பெயர்த்தால் அர்த்தமே மாறிவிடாதா? என்பதை மவ்லவிகள் அறிய மாட்டார்களா?

மேலும் பிறை பற்றிய ஹதீஃதுகளின் வாசக அமைப்பில் :
1. ஃபஇன் றூகும்ம அலைக்கும் ஃபக்திருலஹூ
2. ஃப இன் உறூமிய ஃபக்திருலஹூ ஸலாஸீன்
3. யு றூகம்ம அலைக்கும் ஃபக்திருலஹூ
4. ஃபக்மிலு இத்தத ­ஃபான ஸலாமீன்
5. ஃப இன் றூகபிய அலைக்கும் ஃப உத்துஸலாஸீன்
6. ஃபன் றூகுப்பிய அலைக்கும் ஃபக்மிலு இத்தத ­ஃபான ஸலாஸீன்
7. ஃப இன் றூகும்மிய அலைக்கும் ஃபக்மிலு அதத
8. ஃப இன் ஹஃபிய்ய அலைக்கும் ஃபஅதிம்மு ஸலாஸீன்

போன்ற வார்த்தைகளே காணப்படுகின்றன. மேற்கண்ட அனைத்து வார்த்தைகளுக்குமே மேகம் ஒன்றுதான் நேரடி அர்த்தமா?

இதேபோல்தான் நாள் மஃறிபில் ஆரம்பமாகி றது என்ற யூதர்களின் மூடக் கலாச்சாரத்தை முஸ்லிம் சமுதாயத்தில் புகுத்தியும், மூன்றாம் நாள் மறையக்கூடிய பிறையைப் பார்த்து மாதம் ஆரம் பித்து விட்டது என்று கூவக்கூடிய தவ்ஹீதுவாதிகள் நாங்கள்தான் நபிவழியைக் கடைப்பிடிக்கும் உண்மையாளர்கள் என்று தம்பட்டம் அடிப்பதை என்னவென்று சொல்ல? இவர்கள் அறியாமலேயே செய்யக் கூடிய இந்த செயல் சுன்னத்து தான் என்று கூறிக் கொண்டு உண்மையிலேயே பித்அத்தைத் தான் செய்கின்றனர்.

அஹ்மதில் 9883, 1964, அபூதாவூத் 1992, 1171 புகாரி 2027 ஆகிய ஹதீஃதுகளை தவறான மொழிபெயர்ப்பு செய்து தங்களுடைய வாதங் களை நிலைநாட்டுகின்றனர்.
யவ்ம் + லைலஹ் = பகல்+இரவு
லைலஹ் தனியாக வந்தால் நாள்
யவ்ம் தனியாக வந்தால் (பகல் + இரவு)
பகலை மட்டும் குறிப்பிட நஹார்
இப்படிச் சொற்களை மேற்கண்ட ஹதீது களுக்கு மொழி பெயர்த்துப் பாருங்கள். சரியான அர்த்தத்தைப் பெற முடியும்.

கணக்கிடுவது ஹராமா?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“”நிச்சயமாக அல்லாஹ் ரோ­ம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோ­ம் என்பது அவன் தடை விதித்துள்ள ஒன்றை இறை நம்பிக்கை யாளர் செய் வதுதான்” அபூஹுரைரா(ரழி) புகாரி : 5223,  vol 5

அல்குர்ஆன் 6:96, 17:12, 10:5ல் கணக்கிட முடியும் என்று கூறி அது எதற்காக என்பதை 2:189ல் கூறுகிறானே! மவ்லவிமார்கள் அல்குர்ஆனின் வார்த்தைகள் ஆதாரமில்லாதவை ஸஹீஹ் அல்ல (நவூதுபில்லாஹ்) என்று கூற வருகிறார்களா?

நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்த குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே நல்லுணர்வு பெறுவோர் உண்டா? என்று 54:17, 22,32,40 ஆகிய நான்கு இடங்களில் கூறுகிறான்.

மேலும் 38:19ல் இதன் வசனங்களை ஆழ்ந்து சிந்திப்பதற்காகவும், சிந்தனையுடையோர் நல்லுபதேசம் பெறும் பொருட்டும் (நாம் இறக்கி வைத்தோம்) என்றும் கூறுகிறான்.
பிறைகளின் படித்தரங்களை கணக்கிடுவது ஹராம், பித்அத்தான செயல் என்று கூறுவோர் நேரடியாக குர்ஆன், ஹதீஃதிலிருந்து ஆதாரம் தருமாறு கேட்கின்றோம். கணக்கிட்டு அறிய முடியும் என்று அல்லாஹ் கூறியிருக்க, கணக்கிட்டு பின்பற்றுதலை மார்க்கம் தடுக்கவில்லை என்பதே யதார்த்த நிலை. அல்லாஹ்வின் வசனங்களை கேலிக் குரியதாக ஆக்கி விடாதீர்கள் என்று குர்ஆனில் எச்சரிக்கின்றான்.

உம்மீ சமூகம் :
இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் புகாரியில் இடம் பெற்ற 1913வது ஹதீஃதில் லாநக்துபு வலாநஹ்ஸுபு என்ற வார்த்தைக்கு எழுதுவதை அறியமாட்டோம், விண்கலையையும் அறிய மாட்டோம் என்றே மொழி பெயத்துள்ளார். அதாவது மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள் என்பதை எழுதி கணக்கிட்டு பதிவு செய்ய முடியாது என்பதைத்தான் சகோதரர் ஸலஃபி அவர்கள் மேற்கண்டவாறு மொழியாக்கம் செய்துள்ளார்.

1913வது ஹதீஃதில் இடம் பெற்ற லாநக்துபு என்ற வார்த்தை அல்குர்ஆனில் 3:181ல் ஸநக்துபு (நாம் பதிவு செய்வோம்) என்று உள்ளது. அதாவது.. அவர்கள் கூறியவற்றையும், நியாயமின்றி கொலை செய்ததையும் நாம் பதிவு செய்வோம்… என்று அல்லாஹ் கூறுகிறான். ஆக நக்துபு என்பது சாதாரண மாக எழுதுவதைத்தான் குறிக்கிறது என்று அர்த்தம் கொடுத்தால் அது மிகப் பெரிய பின்விளைவுகளை உண்டாக்கும் என்பதை ஸலஃபி அவர்கள் அறிய வில்லையா?
அல்ஜன்னத் பக்.33ல் பிறை பார்ப்பது ஒரு மார்க்கக் கட்டளை; கணிப்பீட்டு முறை பின்பற்றப்பட்டால் இந்த மார்க்கக் கட்டளை புறக்கணிக்கப்படுகிறது என்று எழுதியுள்ளார்.

பிறை பார்ப்பது மாதத்தை அறிவதற்கா? அல்லது பிறை பார்ப்பது இபாதத்தா? ஸலஃபி அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

கணிப்பீடுதான் சரியானது என்றால் கணிப் பீட்டைக் கற்குமாறு அன்றிருந்த நபித் தோழர் களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஏவியிருப்பார்கள். பிற மொழிகளைக் கற்கச் சொன்ன நபியவர்கள் அம்பெறிதல், குதிரை ஏற்றம் என்பவற்றைக் கற்கச் சொன்ன நபியவர்களே விண்கலையைக் கற்று அதன்படி செயற்படச் சொல்லி இருப்பார்கள். அப்படிச் சொல்லவில்லையே! இதுவும் ஸலஃபி அவர்களின் வாதம்!
(பார்க்க : அல்ஜன்னத் ஜுலை 2014 பக். 33)

பிற மொழிகளைக் கற்கச் சொன்னது எதற்கு? இஸ்லாத்தை பிற மொழி பேசக் கூடிய மக்களுக்கும் எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காகவே. 23 ஆண்டுகள் ஏகத்துவப் பிரச்சாரத்தை இஸ்லாமிய சட்ட திட்டங்களை வழிகாட்டல்களை சொன்ன போது இறை நிராகரிப்பாளர்களால் ஏற்படும் இன்னல்களைச் சமாளிக்க அம்பெறிதல், குதிரை ஏற்றம் மற்றும் உடல் பலம் பெற வேண்டும் ஆகிய இவையயல்லாம் தற்காப்பிற்காகவே!
நாம் உம்மி சமுதாயமாவோம் என்று சொன்ன நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு நீங்கள் விண் கலையை கற்றுத்தான் ஆக வேண்டும் சொல்லி இருப்பார்களா? சற்று நிதானமாக சிந்தியுங்கள்.

குர்ஆனை விளங்க பல கலைகள் கற்றிருக்க வேண்டும் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாதிருக்க இந்த மவ்லவி வர்க்கம் கற்றுத்தான் ஆகவேண்டும், அப்படி கலைகளை கற்றால்தான் குர்ஆன் விளங்கும் என்று சரடு விடுகிறார்களே! அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையிடலாமா? (பார்க்க : 6:57, 6:62, 12:40,67, 18:26, 28:70)
வானமும், பூமியும் படைக்கப்பட்டது, இரவு பகல் மாறி வருவது நெருப்பைப் பற்றி, கடலில் செல்லும் கப்பலைப் பற்றி, மழையைப் பற்றி, பயிர்கள் முளைப்பதைப் பற்றி, பறவைகளைப் பற்றி, ஈஸா நபி தந்தை இல்லாமல் பிறந்தது பற்றி, தேனீயைப் பற்றி, சூரியன் உள்ளிட்ட கோள்கள் ஓடிக் கொண்டிருப்பதைப் பற்றி, தாவரங்களில் ஜோடிகள் பற்றி, மேகம், நட்சத்திரங்கள், பல்வேறு மொழிகள், தூக்கம், மின்னல், தான் படைக்கப்பட் டது பற்றி அல்லாஹ் குர்ஆனில் சிந்திக்கச் சொல் கின்றான். ஆனால் பிறையின் படித்தரங்கள் தான் காலத்தைக் காட்டும் என்று சொல்கின்றான்.

பிறைகளைப் பற்றிய ஹதீஃதுகளின் மொழி பெயர்ப்புக் குளறுபடிகளாலேயே 6:96, 10:5, 17:12, 2:189 ஆகிய குர்ஆன் வசனங்களை கண்டு கொள் ளாமல் இருந்து வருடத்திற்கு 2 முறை மட்டும் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்ற கணக்கீட்டு முறையை ஹராம் என்று கூறு எப்படி இதே மவ்லவிகளுக்கு துணிவு வருகிறதோ?

ஹராமாக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. (பார்க்க அல்குர்ஆன் : 5:87, 6:140-144, 150, 7:32, 9:29,37, 10:59, 16:116, 66:1)

கணக்கிட முடியும் என்று அல்லாஹ் கூறுவதை மறுத்து, நிராகரித்து உலகில் பிறையினுடைய படித் தரங்களை யாராலும் கணக்கிட முடியாது என்று கூற வருகிறார்களா?

அறிவை வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம் ஆகும். (பார்க்க : அல்குர்ஆன் 2:32,251,269, 282, 4:113, 16:78, 17:85, 20:114, 46:23, 49:16, 55:4, 67:26, 96:4,5)

மேற்கண்ட வசனங்களையயல்லாம் மதனி களும், ஃபிர்தெளஸிகளும், ஸலஃபிகளும், உலவி களும் மறுக்க முடியுமா? அப்படியயன்றால் உங்கள் அகீதாவே ஆட்டம் கண்டு விடுமே!

அடுத்ததாக அதே பக்கம் 33ல் 7:157ஐ ஆதார மாக காட்டி தனக்குத்தானே முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார். இந்த வசனம் உம்மி நபியைப் பின்பற்றச் சொல்கின்றது. நபியவர்களும் எம்மை உம்மி சமூகம் என்றார்கள். எனவே நபியவர்களைப் பின்பற்றும் வி­யத்தில் (இத்திபா உர்ரஹூல்) உம்மி சமூகமாக இருப்பதுதான் எமக்கு ஏற்ற மானதுமாகும் என்றும் எழுதியுள்ளார்.

ஸலஃபி அவர்களே, உம்மி நபி எதைப் போதித் தார்கள்? அந்த வசனத்தின் இறுதியிலேயே…. அவரு டன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளி யையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள் என்று உள்ளதே. எனவே பிறை யின் படித்தரங்களின் வி­யத்தில் அல்குர்ஆனில் உள்ள 6:96, 17:12, 10:5, 36:39, 2:189 ஆகிய வசனங் களைத்தானே பின்பற்றுகின்றோம். மாறாக பிறை கள் வி­யத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா?

(நவூதுபில்லாஹ்) நிராகரிக்கலாம் என்று சொல்ல வருகிறீர்களா?
பக். 34ல் பிறை பார்த்தல் என்பது எனக்கு நபி தந் தது; கணிப்பீடு என்பது பின்னால் வந்தது. நாம் நபி தந்ததையே எடுத்துக் கொள்ள ஏவப்பட்டுள் ளோம். ஸலஃபி அவர்களே உண்மையிலேயே நபி (ஸல்) அவர்கள் தந்ததைதான் எடுத்து பின்பற்றுகிறீர் கள் என்றால் கீழ்க்கண்ட ஹதீஃதுகளை எப்படி செயல்படுத்துவது?

இப்னு உமர்(ஸல்) அவர்கள் அறிவிப்பதாவது:
சூரியன் உதயமாகும் போதும், சூரியன் மறைகின்ற போதும் (தொழுகை) நிறைவேற்றப் படுவதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார் கள். நஸாயீ: 561, புகாரீ : 1629.

அல்லாஹ்வின் தூதர்(ஸல் அவர்கள் மூன்று நேரங்களில் நாங்கள் தொழுவதையும், எங்களுள் இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் தடுத் தார்கள்.
1. சூரியன் உதயமாகி அது உயரும் வரை
2. சூரியன் உச்சியை அடைந்து அது சாயும் வரை
3. சூரியன் மறையத் தொடங்கி அது (முழுமை யாக) மறையும் வரை
நஸாயீ : 557, முஸ்லிம் : 1511, திர்மிதீ : 951

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் :
சூரியன் சாயும்போது (நடு வானிலிருந்து மேற்கு நோக்கி) தமது இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்து மக்களுக்கு லுஹ்ர் தொழுகையைத் தொழுவித்தார் கள். அனஸ் பின்மாலிக்(ரழி) நஸாயி : 492, புகாரீ : 540, 72 94

நுஉமான் பின் பUர்(ரழி) அவர்கள் அறிவிப்ப தாவது :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (மாதத் தின்) மூன்றாம் (நாள்) பிறை மறையும் பொழுது இஷா தொழுபவர்களாக இருந்தார்கள்.
நஸாயீ : 525, திர்மிதீ : 151, அபூதாவூது :355

இஸ்லத்தின் முக்கிய கடமையான 5 நேரத் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரியனைப் பார்த்துதான் நிறைவேற்ற முடிந்தது. நபி(ஸல்) அவர்களின் கட்டளை இல்லாமலேயே சூரிய உதயம், உச்சம், அஸ்தமிக்கும் நேரங்களை 10:5ன்படி கணக்கிட்டு அட்டவணை போட்டு இபாதத்துகளை கடைப்பிடிப்பவர்கள் சந்திரக் கணக்கீட்டை மட்டும் எதிர்க்கும் மர்மம் என்னவோ? அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன். (2:85)

இன்னும் நஸாயீ 525வது ஹதீஃதை பாருங்கள். மாதத்தின் மூன்றாம் பிறை மறையும் பொழுது இஷாவை நபி(ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். மாதம் ஆரம்பம் மற்றும் முடிவை மூன்றாம் பிறையை பார்த்து ஆரம்பிப்பவர்கள். மேற்கண்ட ஹதீஃதை சற்று நிதானமாக சிந்திக்கவும்.

பக்.34ல் கணிப்பீட்டின் அடிப்படையில் நோன் பையும், பெருநாளையும் தீர்மானிக்கும் சகோதரர் களே! உங்கள் முடிவைக் கைவிட்டு ஸுன்னாவின் பக்கம் மீளுங்கள். இருக்கும் பிரச்சினைக்குள் இன்னும் ஒரு பிரச்சினையை உருவாக்கி விடாதீர்கள். நீங்கள் செய்யக்கூடிய வாதங்கள் பாமர மக்களை மட்டுமின்றி படித்தவர்களைக் கூட குழப்ப மடையச் செய்யக் கூடும் என்று எழுதியிருக்கிறார்.

தொழுகைக்கான கணக்கீட்டை பார்த்து எத் தனை முஸ்லிம்கள் குழம்பியுள்ளனர் என்று ஸலஃபி அவர்களால் கூற முடியுமா? பாமரர்களும், படித்த வர்களும் அவரவர் தொழிலைப் பார்த்துக் கொண்டு மார்க்கத்தைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வ மின்மையைப் பயன்படுத்திக் கொண்டுதானே அரபி மொழி பண்டிதர்கள் புலமையைக் காட்டி குழப்பத்திற்கு மேல் குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்களா? இல்லையா? 29:69ல் அல்லாஹ் கூறியிருப்பது போல் அவனையே முற்றிலும் சார்ந்து முயற்சி செய்தால் நிச்சயமாக, உறுதியாக நேர்வழி காட்டுவான்.

ஆக ஸலஃபி அவர்களே! பிறை வி­யத்தில் ஒன்றிணைந்து தெளிவாக மக்களுக்கு எடுத்துச் சொல்லிட எதிர்தரப்பு கருத்துக்களையும் அறிந்து தீர்க்கமான முடிவை எடுத்து உம்மத்தன் வாஹிதா வாக செயல்பட்டு பெருநாள் தினங்களை சந்தோஷமாக மூன்று நாட்கள் இல்லாமல் 24 மணி நேரத்திற் குள் கொண்டாட அல்லாஹ்வின் கணக்கீட்டின் பக்கம் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Previous post:

Next post: