கிறித்தவ புரோகித தலைமையின்;(போப்) வழியில் ததஜ புரோகிதத் தலைமை!

in 2009 மே,ததஜ,பிறை

கிறித்தவ புரோகித தலைமையின்;(போப்) வழியில் ததஜ புரோகிதத் தலைமை! K.M.H

ஏகத்துவம் ஏப்ரல் 2009 இதழின் கேள்வி-பதில் பகுதியின் 30-ம் பக்கத்தில் ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29-ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, தனது வார்த்தை ஜாலம், லாஜிக், பாலிஸி இவை அனைத்தையும், அள்ளித் தெளித்துவிட்டு, அவர் களே ஒரு சந்தேகத்தைக் கிளப்பி அதற்கு விடையும் அளித்துள்ளனர். அது வருமாறு:

இது போல் பிறை பார்க்கச் சாத்தியமற்ற நாளில் பிறை பார்த்ததாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. காரணம், பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் கூறுவது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருப்பதால் அதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம். பிறை தோன்றிவிட்டது என்று அறிவியல் உலகம் கூறினாலும் புறக்கண்ணால் பார்க்காமல் நோன்பைத் தீர்மானிக்கக் கூடாது என்று சொல்லும் நாம் பிறை தோன்றாது என்று அறிவியல் கூறுவதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்பதே அந்தச் சந்தேகம்.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வானியல் கணிப்பை ஏற்று, முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.

பலநூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங் களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.

அவர்களது கணிப்பு சரியானதுதான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவு கோலாகக் கொள்ளக் கூடாது என்பதுதான் நமது வாதம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்குக் கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்துவிட்டனர்.

வானியல் கணிப்பின்படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக் கலாமே தவிர பாக்காமல் தலைப்பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது.

அதே சமயம், குறிப்பிட்ட நாளில் பிறை தென்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவியல் உலகம் கூறும்போது அதை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்கு கின்றன. (அல்குர்ஆன் 55:5)

இந்த வசனத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட இடத்தில் சந்திரன் தோன்றாது என்ற கணக்கிற்கு மாற்றமாக நம்பத் தகுந்த சாட்சிகள் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. (ஏகத்துவம் ஏப்ரல் 2008 பக். 30-32)

இந்த உளறலில் பொருள் ஏதும் இருக் கிறதா? “வரும் ஆனா! வராது” என்ற ஜோக் குக்கும் இவர்களின் உளறலுக்கும் வேறுபாடு உண்டா?

இதுபோல்தான் முன்பு ஒருமுறை ‘பள்ளி யில் முஸ்லிம்களை முஷ்ரிக், காஃபிராக்கி அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்பதும், அரசியலில் அவர்களையும் முஸ்லிமாக ஏற்று முஸ்லிம்களுக்குரிய உரிமைகளை பெற்றுத் தருவதும் வேறு வேறு. இந்த இரண்டுக்கு முள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று உளறி இருந்தது ததஜ தலைமைப் புரோகிதரின் பக்தர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஞாபகம் இருக்கும்.

சுமார் 300 வருடங்களுக்கு முன்னால் பூமி உருண்டை என்ற உண்மையை கண்டறிந்த அறிவியலாளரை, அவரது கூற்று பூமி தட்டை என்ற பைபிளின் கூற்றுக்கு முரணாக இருக்கிறது என்று கூறி சித்திரவதைச் செய்த கிறித்தவ புரோகிதத் தலைமையான போப்பின் மன நிலைக்கும், ததஜ தலைமைப் புரோகிதரின் மன நிலைக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரிய வில்லை. போப்பின் அடிச்சுவற்றை அப்படியே பின்பற்றி நடைபோடுகிறார் ததஜ தலைமைப் புரோகிதர்.

அதாவது “ஒரு காலம் நிகழும்; அப்போது யூத, கிறித்தவர்களை நீங்கள் சாணுக்கு சாண் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்” என்ற நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக் கையை உணமைப் படுத்துகிறார் ததஜ தலைமைப் புரோகிதர்.

பூமி தட்டை என்று பைபிளில் காணப்படுவது ஒரே இறைவனான அல்லாஹ் சொன்னதோ, தன்னை முஸ்லிம் என்றும் இறைவனது தூதர் என்றும் தெளிவாக (5:44,111) அறிவித்த ஈஸா (யேசு) (அலை) சொன்னதோ அல்ல. மாறாக கிறித்தவர்கள் வழிகாட்டிகளாக ஏற்றிருக்கும் – அவர்கள் நம்பி இருக்கும் புரோகித முன்னோர் களின் கற்பனையே பூமி தட்டை என்ற குருட்டு நம்பிக்கையாகும்.

அதேபோல்தான் தலைப்பிறையைப் புறக் கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்ற ததஜ தலைமைப் புரோகிதரின் கூற்றும், அல்லாஹ் சொன்னதோ, அவனது இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதோ இல்லவே இல்லை. மாறாக கிறித்தவ புரோகிதர்களைப் போல், முஸ்லிம் புரோகிதர்களின் முன்னோர் கள் எழுதி வைத்துள்ள கற்பனைச் சரக்கே அது. முஸ்லிம் மதப் புரோகிதர்களின் முன் னோர்கள் மூடத்தனமாக பூமி தட்டை என்று எழுதி வைத்திருப்பது போல், தலைப் பிறை யைப் புறக்கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்ற மூடத்தனமான குருட்டு நம்பிக் கையில் எழுதப்பட்டதுமாகும்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைப் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்று கூறும் ஆதாரபூர்வ மான ஹதீஸை எடுத்துக் காட்டுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு வக்கற்ற ததஜ தலைமைப் பூசாரி அப்படித்தான் விளங்க வேண்டும் என்று தனது சுயக் கருத்தையே சொல்லிக் கொண்டிருக் கிறார். அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார் வீம்பாக.

1430 ஆண்டுகளுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் தலைப் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தது ஆதாரமில்லையா? என பிதற்றுவார். “மேகமூட்டமாக இருந்தால் 30 ஆக்குங்கள்” என்பது கண்ணால் பார்ப்பதற்கு ஆதாரமில் லையா? எனப் பிதற்றுவார். ஆம்! பிறையைக் கண்ணால் பார்த்தது போல் சூரியனையும் கண்ணால் பார்த்தே தொழுதார்கள். இப்போது கடிகாரத்தைப் பார்த்து தொழுகிறீர்களா? சூரியனைப் பார்த்து தொழுகிறீர்களா? என்ற கேள்விக்கு முறையான பதில் இல்லை. அன்று இறப்புச்செய்தியை காலம் தாழ்ந்து நேரில் அறிந்தே “இத்தா” இருந்தார்கள்? இன்றும் அதுபோல் தொலைத்தொடர்பு தகவலை நிரா கரித்துவிட்டு, காலம் தாழ்ந்து நேரில் வந்து சொன்ன பின்னர் “இத்தா” இருக்கச் சொல்கிறீர் களா? என்ற கேள்விக்கு முறையான பதில் இல்லை. அன்று நபி(ஸல்) ஒட்டகத்தில் ஹஜ் ஜுக்குச் சென்றார்கள். அல்லாஹ்வும் 22:27ல் தொலை தூரத்திலிருந்து மெலிந்த ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்றே கூறுகிறான். இன்று அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒட்டகத் திலா ஹஜ்ஜுக்குச் செல்கிறீர்கள்? என்ற கேள் விக்கு முறையான பதில் இல்லை.

இவற்றிலெல்லாம் அல்லாஹ்வின் கட்டளை யையும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறை யையும் நிராகரித்து விட்டு இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளை ஏற்றுச் செயல் படுகிறவர்கள், பிறையில் மட்டும் நபி(ஸல்) அவர்களின் அன்றைய நடைமுறையின்படியே செயல்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிப் பது அவர்களின் புரோகிதப் புத்தியை வெளிப் படுத்தவில்லையா?

ஆம்! புதிய நவீன கண்டுபிடிப்புகள் வரும் போது அவற்றைக் கடுமையாக இப்புரோகிதர் கள் எதிர்ப்பார்கள். உண்மையை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். காலஞ் செல்லச் செல்ல வேறு வழியின்றி நிர்பந்த நிலையில் ஒப்புக் கொள்வதே அவர்களின் வாடிக்கை. சூரிய ஓட்டத்தைப் பார்த்து தொழுது கொண் டிருந்த நிலையிலிருந்து கடிகாரத்தைப் பார்த்து தொழ ஆரம்பித்தபோதும் இப்படித்தான் பிதற்றினார்கள். வானொலி, தொலைபேசி, ஒலிபெருக்கி, தொலைக்காட்சி என புதிது புதி தாக பல நவீனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அவற்றை மறுத்து பிதற்றவே செய்தார்கள். காலமே இப்புரோகிதர்களை மாற்றி யது. இன்னும் சில காலத்தில் கணினி கணக் கீட்டுப் பிறையை ஏற்கத் தான் போகிறார்கள். புதிய கண்டுபிடிப்புகள் தங்களின் புரோகிதத் தொழிலுக்கு சாவு மணி அடித்து விடுமோ என்ற அச்சமே அவர்களை இப்படி பிதற்ற வைக்கிறது. நடுங்க வைக்கிறது.

கணிப்பிற்கும், கணக்கீட்டுக்குமுள்ள வேறு பாட்டை நாம் பல முறை விளக்கி விட்டோம். அப்படியிருந்தும் கணிப்பிற்கும், கணக்கீட்டுக்கு முள்ள வேறுபாட்டை விளங்கிக் கொள்ளத் திராணியற்ற ததஜ தலைமைப் புரோகிதர்தான், மக்களுக்கு மார்க்கச் சட்டம் சொல்லத் துடிக்கிறார்.

இத்தனைக்கும் ருஃயத், அரா, தரா போன்ற அரபி பதங்கள் பொதுவாக கண்டு, பார்த்து என்ற பொருளையே தரும். இடத்திற்கு ஏற்றவாறு முடிவு செய்ய வேண்டும். அரபி அகராதியே இந்த “ருஃயத்” பதத்திற்கு கண் ணால், அறிவால், ஆய்வால் பார்ப்பது என்ற பொருளையே தருகிறது. அல்குர் ஆனிலும் இவை அனைத்திற்கும் ஆதாரங் களைப் பார்க்க முடியும். (105:1,103:1,37:102)

கணினி கணக்கீட்டின் மூலம் பார்ப்பதையும் இந்த ருஃயத், அரா, தரா பதங்;கள் உள்ளடக் கியவைதான். மற்றபடி புறக்கண்ணால் பார்த்தே தலைப்பிறையைத் தீர்மானிக்க வேண்டும் என நபி(ஸல்) கட்டளையிட்டிருப்பதாக ததஜ தலை மைப் பூசாரி சொல்வது பகிரங்கமான ஜமுக் காளத்தில் வடித்தெடுத்த பொய்யாகும். எமது இந்த பகிரங்க குற்றச்சாட்டை அவர் மறுப்பதாக இருந்தால் புறக்கண்ணை நேரடியாகக் குறிப் பிட்டுக் கூறும் ஒரேயொரு ஹதீஸையாவது எடுத்துக் காட்டி அவர் உண்மையாளர்தான் என்பதை நிரூபிக்கட்டும்.

“பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் கூறுவது நிரூபிக்கப்பட்ட உண்மை யாக இருப்பதால் அதை மறுக்க முடியாது” என்று கூறும் இவர்;, “பழைய மாதம் முடிந்து புதிய மாதம் ஆரம்பித்துவிட்டது” என்று அறிவியல் உலகம் கூறும் நிரூபிக்கப்பட்ட உண்மையை மட்டும் மனமுரணாக மறுப்பது ஏன்? குர்ஆன் அல்லாஹ்;வின் கலாம்-சொல்லாக இருப்பது போல் அறிவியல் (விஞ்ஞானம்) அல்லாஹ்வின் ஃபிஅல்- செயலாக இருக்கிறது என்ற உண்மையை நபி(ஸல்) அறியாமல், தலைப் பிறையைக் கண்ணால் மட்டுமே கண்டு தீர்மானிக்க வேண்டும் என்று கூறிவிட்டதாக ததஜ தலைமைப் புரோகிதர் சொல்லுகிறாரா? நபி(ஸல்) அவர்கள் மீது இதை விட கொடுமையான அபாண்டத்தை வேறு யாரும் சுமத்தத் துணிவார்களா? அவர் பின்னால் கண் மூடிச் செல்லும் பக்தர்கள் இப்போதாவது சிந்திக்கத் துணிய மாட்டார்களா?

அவர் பின்னால் கண்மூடிச் செல்பவர்களை நாம் அவரது பக்தர்கள், கைத்தடிகள் என்று கூறுவதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள். நேரடியாக குன்றிலிட்ட தீபமாக எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தெரியும் ததஜ தலைமைப் புரோகிதரின் முன்னுக்குப் பின் முரணான கூற்றுக்களையும், பொய்யான கூற்றுக்களையும் அப்படியே வேத வாக்காக(?) ஏற்றுக் கொள்ளும் அவர்களைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்? அவர்களை வேறு எப்படி அழைக்க முடியும்? சொல்லுங்கள், கேட்கிறோம்.

Previous post:

Next post: