அல்குர்ஆன், ஹதீஃத் பயிற்சி வகுப்புகள்!

in 2014 டிசம்பர்,தலையங்கம்,பொதுவானவை

எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் தனிப் பெரும் கிருபையால் 32 ஆண்டுகளுக்கு முன்னர் 1983ல் திருச்சி, பாபு ரோடு குமந்தான் பள்ளிவாசல் மாடியில் குர்ஆன், ஹதீஃத் பயிற்சி வகுப்பை ஆரம்பித்தோம். அதன் மூலம் மூடநம்பிக்கைகளிலும், மூடச் சடங்குச் சம்பிரதாயங்களிலும், அநாச்சாரங்களிலும், மத்ஹப்களிலும், தரீக்காக்களிலும், 6:153 இறைவாக்குச் சொல்லும் ஒரே நேர்வழி விட்டு, பல கோணல் வழிகளில் மூழ்கிக் கிடந்த முஸ்லிம்களில் அல்லாஹ் நாடியவர்கள் 3:103 இறைக் கட்டளைப்படி குர்ஆன், ஹதீஃ தைப் பற்றிப் பிடித்து நேர்வழிக்கு வந்தார்கள். தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக ஒட்டு மொத்தப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ் வுக்கு மட்டுமே சொந்தமான புகழில் ஆதத்தின் சந்ததிகளோ, ஜின் இனமோ, மலக்குகளோ ஒருபோதும் பங்கு போட முடியாது. பங்குபோட முற்படுபவர் நரகில் நுழைவார்! இதுதான் எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறும் உண்மை!

அல்லாஹ் நேர்வழி காட்டியவர்களை எவரும் வழிகெடுக்க முடியாது; வழிகேட்டில் சென்று கொண்டிருப்பவர்களை அல்லாஹ் நாடாமல் எவரது உபதேசமும் நேர்வழிப்படுத்தாது. மேலும் 32:13, 11:118,119 குர்ஆன் வசனங்களும், அக்ஃதர்ஹும்-அதிகமானோர் என்று கூறும் சுமார் 80 குர்ஆன் வசனங்களும் மக்களில் மிகப் பெரும்பாலோர் நேர்வழிக்கு வரவேமாட்டார்கள் என்றே கூறுகின்றன. கடலிலிருந்து முத்துக் குளித்து எடுக்கப்படும் கோடிக் கணக்கான சிப்பிகளில் ஒரு சிலவற்றில் மட்டுமே முத்துக்கள் இருப்பது போல், கோடிக்கணக்கான மக்களில் வெகு சிலரே ஷைத்தானின், மதகுருமார்களான தாஃகூத் களின் பிடியிலிருந்து விடுபட்டு, நேர்வழிக்கு வருவார்கள். முன்னோர்கள், மதகுருமார்களின் வசீகரப் பிடியிலிருந்து விடுபட்டு, தாஃகூத்களான மனித ஷைத்தான்களை வணங்குவதை விட்டும் விடுபட்டு, யார் சொன்னாலும் கேட்டு அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள்; அவர்களே நேர்வழி பெற்றவர்கள், அறிவுடைய வர்கள், அல்லாஹ்வின் நன்மாராயம் பெற்றவர்கள் என்று 39:17,18 இறைவாக்குகள் கூறுவதைப் படித்து விளங்கி அதன்படி நடப்பார்கள். நரகத்தை நிரப்பும் பெருங் கூட்டத்துடன் இணைவதா? சுவர்க்கம் செல்லும் சிறு கூட்டத்துடன் இணைவதா? நீங்களே முடிவு செய்யுங்கள்! மிகமிகச் சொற்பமான கூட்டத் தைச் சேர்ந்தோரே வெற்றியாளர்கள்!

அப்படிப்பட்ட ஒரு சில மக்களுக்கே குர்ஆன், ஹதீஃத் போதனை பலனளிக்கும். 5:100, 6:116, 17:73-75 இறைவாக்குகள் கூறுவது போல் இறைத் தூதருக்கே பெரும்பான்மை பற்றிய மயக்கம் ஏற்பட்டபோது அல்லாஹ் கண்டித்துத் திருத்தியதை மனித சமுதாயத் திற்குப் பாடமாக்கித் தந்துள்ளான். 6:153 குர்ஆன் வசனம் கூறும் ஒரே நேர்வழி அல்லாஹ் காட்டியது மட்டுமே. மனிதர்கள், மதகுருமார்களான மவ்லவிகள் காட்டுவது அனைத்தும் கோணல் வழிகளே. நரகில் கொண்டு சேர்ப்பவையே. 2:186, 7:3, 33:36, 50:16, 56:85, 59:7 போன்ற இறைவாக்குகள் அல்லாஹ்வுக் கும், அடியானுக்கும் இடையில் எந்த மனிதரும், மத குருவும் இடைத்தரகராக வரவே முடியாது. அல்லாஹ், ரசூல் அல்லாத வேறு யாரையும் வழிகாட்டியாக நம்பி ஏற்று அவர்கள் சொல்படி நடந்தால் நாளை நரகம் போவது உறுதி என்றும், அங்கு உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய் என்று ஒரு வரை ஒருவர் குற்றம் சுமத்திப் பிதற்றுவதையும் 18:102-106, 33:66-68, 7:35-41, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 ஆகிய எண்ணற்ற இறைவாக்குகள் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன.

இவற்றில் 34:31,32, 33, 40:47,48 இறை வாக்குகள் குறிப்பிடும் பெருமை தேடிக் கொண்டோர் சாட்சாத் மதகுருமார்களே. மவ்லவிகளின் பெருமையே அவர்களை நாளை மறுமையில் நரகில் சேர்க்கிறது! நபி(ஸல்) அவர்களை வளர்த்து ஆளாக்கியது மட்டு மில்லாமல் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்குப் பேருதவிகள் புரிந்து, அதனால் பெருங் கஷ்டங் களை அனுபவித்த அபூதாலிபுக்கே நேர்வழி பெறும் பாக்கியம் கிடைக்காமல் போனதற்கு அவர் முன்னோர்களை, அன்றைய மதகுரு மார்களை நம்பி கடை பிடித்து வந்த பழைய மதமே சிறந்தது என்ற மூட நம்பிக்கையே. முன்னோர்களை, மதகுருமார்களை நம்பிப் பின்பற்றும் அதே மூட நம்பிக்கையில் தான் இன்றும் பெரும்பாலான முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.

2:186-ல் அல்லாஹ் மனிதனுக்கு மிகச் சமீபமாக இருப்பதாகவும், 50:16-ல் மனிதனின் பிடறி நரம்பை விடச் சமீபமாக இருப்பதாகவும், 56:85-ல் மனிதன், ஜின் அனைவரையும் விட மிகமிக நெருக்கமாக இருப் பதாகச் சொல்லும் நிலையில், அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகர்களாக மனிதர்களில் யாரையும் புகுத்த முடியுமா? எண்ணற்ற இறைக் கட்டளைகளை 2:39 குர்ஆன் வசனம் சொல்வது போல் நிராகரித்து, குஃப்ரிலாகி அப்படிப் புகுத்தி அவர்களின் வழிகாட்டல்படி நடந்தால் இறுதி முடிவு நரகமே என்பதையே மேலே கண்ட குர்ஆன் வசனங்கள் கடுமையாகக் கூறி எச்சரிக்கின்றன.

அல்குர்ஆனைத் தெள்ளத் தெளிவாக நேரடியாக, எவ்வித முரண்பாடும் இல்லாத நிலையில், இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்று அல்லாஹ் விளக்கி விட்ட பின்னர், குர்ஆன் வசனங்களுக்கு மேல் விளக்கம் கூற மனிதர்களில் யாரும் முற்பட்டால் அவர்கள் தங்களை அல்லாஹ்வை விட விளக்கும் ஆற்றல் மிக்கவர்களாகப் பெருமைப்படுகிறார்கள் என்பது தானே அதன் பொருள். அதே போல், நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தைத் தெள்ளத் தெளிவாக இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்று விளக்கிய பின்னர், மனிதர்களில் யாரும் அதற்கு மேலும் விளக்கம் கொடுக்க முற்பட்டால், அவர்கள் தங்களை நபி(ஸல்) அவர்களை விட மக்களுக்கு விளக்குவதில் ஆற்றல் மிக்கவர்களாகப் பெருமைப்படுகிறார்கள் என்பதுதானே அதன் பொருள். அப்படியானால் அப்படிப் பெருமைப்படுகிறவர்கள் மனித ஷைத் தான்களான தாஃகூத்கள் என்பதில் சந்தேகமுண்டா? இவர்களையே 2:159-162, 42:21, 49:16 இறைவாக்குகள் அடையாளம் காட்டி மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன. ஹராமான வழியில் கூலிக்கு மாரடிக்கும் இம்மவ்லவி கள் நேர்வழியில் இல்லை என்று 36:21 குர்ஆன் வசனம் கட்டியம் கூறுகிறது. மீண்டும் மீண்டும் படித்துப் படிப்பினை பெறுங்கள்!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களும் தெள்ளத் தெளிவானவை. எழுதப் படிக்கத் தெரியாதப் பாமரனும் காதால் கேட்ட மாத்திரத்தில் தெளிவாக விளங்கும் நிலையில்தான் குர்ஆனும், ஹதீஃத்களும் இருக்கின்றன என்பதை 62:2 குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது. எனவே குர்ஆனையும், ஹதீஃத்களையும் நேரடியாகப் படித்து, அல்லது பிறர் படிப்பதைக் காதால் கேட்டு விளங்கி அதன்படி நடக்க முன் வாருங்கள். நீங்கள் அப்படி முயற்சி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்து, நேர்வழியை எளிதாக்கித் தருவதாக 29:69 இறைவாக்கில் உறுதி அளிக்கிறான். இது நிச்சயம்!

அல்லாஹ்வின் இக்கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து 1983-ல் குமந்தான் பள்ளி மாடியில் ஆரம்பித்த குர்ஆன், ஹதீஃத் பயிற்சி வகுப்பை இப்போது 2014-ல் 16, பாபு ரோடு, திருச்சி-2 வீட்டு மாடியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை தொடர்ந்து நடத்தி வருகிறோம். பிரதி புதன் மாலை மஃறிபுக்குப் பின் இஷா வரை நடத்தி வந்தோம். நேரம் குறைவாக இருப்பதாலும், வார நாளாக இருப்பதாலும் கலந்து கொள்வது சிரமமாக இருக்கிறது. ஞாயிறு காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தினால் வசதியாக இருக்கும்; வெளியூர்களிலிருந்தும் விரும்புவோர் வந்து கலந்து கொள்ள முடியும் என்றும், பெண்களும் வந்து தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்றும் சில சகோதர, சகோதரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. எப்படிப்பட்ட கொள்கையுடையோரும், எப்படிப்பட்டச் சந்தேகமுடையவர்களாக இருந்தாலும், முஸ்லிம் அல்லாதவர்கள், நாத்திகர்கள் உட்பட அனைவரும் தாராளமாகக் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். சந்தேகங்களுக்கு எங்களது சுயவிளக்கத்தைக் கற்பனைகளைக் கொடுக்காமல் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களை மட்டுமே எடுத்துத் தருவோம். இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் நாடுவோர் மட்டுமே நேர்வழி பெறுவர்!

நீங்களே குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்துப் பார்த்து, ஹதீஃத்களைப் படித்துப் பார்த்து, நேர்வழி இதுதான் என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளலாம். எங்களது இந்த முயற்சி அல்லாஹ் அல்குர்ஆன் 51:55-ல் கூறுவது போல் 49:14 கூறும் பெயர் அளவில் முஸ்லிமாக இல்லாமல், உள்ளத்தில் ஈமான்-இறைநம்பிக்கை உடையவர்களுக்கே பலன் அளிக்கும். அப்படிப்பட்ட இறை நம்பிக்கையாளர்கள் நேர் வழியை அறிந்து அதன்படி நடந்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற சுவர்க்கம் நுழைய அல் லாஹ் அருள் புரிவானாக. ஆமீன். மீண்டும் இவ்வுலகில் தீனின் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவானாக!

அல்குர்ஆன் 2:186, 3:31, 7:3, 18:102-106, 33:21, 36,66-68, 59:7 வசனங்களும் இன்னும் இவை போல் எண்ணற்ற குர்ஆன் வசனங்களும் ஒரே நேர்வழி மார்க்கம் அல்குர்ஆனிலும், அல்லாஹ்வின் முழுக் கண்காணிப்பில் இருந்த (பார்க்க : 52:48) இறுதித் தூதரின் நடைமுறையிலும் காணப்படுபவை மட்டுமே. நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர், கலீஃபாக்களோ, நபி தோழர்களோ, தாபியீன்களோ, தபஅதாபியீன்களோ, இமாம்களோ, பின்னால் வந்த எந்த மவ்லவியோ, ததஜ நவீன இமாம்(?) போன்றவர் களோ மார்க்கத்தில் புதிதாக ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ அணுவளவும் அனுமதி இல்லை என்ப தையே 5:3, 3:19,85 இறைவாக்குகள் உறுதிப்படுத்து கின்றன. இந்த இறைக் கட்டளைகளை மீறி பித்அத், குஃப்ர், ´ர்க் போன்றவற்றைக் கற்பனை செய்கிற வர்கள் 42:21, 49:16 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி, அல் லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்கும் மேதாவி யாகி, (நவூது பில்லாஹ்) 33:36 இறைவாக்குக் கூறுவது போல் பகிரங்கமான வழிகேட்டில் செல்கிறார்கள் என்பதை அறியவும். இவர்களும், இவர்கள் பின்னால் செல்பவர்களும் நரகமே புகுவார்கள். எச்சரிக்கை! (33:36,66-68)

7:146 குர்ஆன் வசனம் கூறுவது போல் இந்த மவ்லவிகள் ஆலிம் எனப் பெருமை பேசுவதால், அல்லாஹ்வாலேயே குர்ஆனை விட்டும் திருப்பப் படுகிறார்கள். குர்ஆன் வசனங்களை நம்பமாட் டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார் கள். வழிகேடுகளையே ஏற்று அவற்றையே மக்களுக்குப் போதிப்பார்கள். எனவே பெருமை பேசும் இம் மவ்லவிகளின் வசீகர, உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு 3:102 இறைவாக்குக் கூறுவது போல் முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்ற நிலையில் 3:103 வசனம் சொல்வது போல் குர்ஆனை ஒரே ஜமாஅத் தாகப் பிரியாமல் பற்றிப் பிடித்து ஈருலகிலும் வெற்றி பெற முன்வாருங்கள்.

அனைத்து மஹல்லாக்களிலும் இம்முயற்சியை ஆரம்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம். குர்ஆன், ஹதீஃதை மட்டுமே எடுத்து வைக்கும் இப் பயிற்சிக்கு வரவிடாமல் தடுக்கும் 2:256,257, 4:51,60, 76, 5:60, 16:36, 39:17 வசனங்கள் கூறும் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களை 9:31, 39:17 வசனங்கள் கூறு வது போல் வணங்கிக் கொடிய ´ஷிர்க்குக்கு ஆளாகாமல், அவர்கள் தடுப்பதைக் கண்டு கொள்ளாமல் 39:17,18 வசனங்களுக்கு முற்றிலும் அடிபணிந்து பயிற்சி வகுப்புகளில் கலந்து குர்ஆன், ஹதீஃத் போதனையை நேர்வழியை அறிந்து அதன்படி நடந்து ஈருலகிலும் வெற்றி வாகை சூட முன்வாருங்கள்; அல்லாஹ் அருள் புறிவானாக! இன்ஷா அல்லாஹ்! ஃதும்ம இன்ஷா அல்லாஹ்!!

Previous post:

Next post: