மனம் திறந்த மடல்!

in 2015 பிப்ரவரி

  குறிப்பு : இந்த ஆக்கம் நஜாத் முதல் இதழி லேயே பீ.ஜையின் கூடப் பிறந்த சகோதரர் காலம் சென்ற பி.எஸ்.அலாவுதீன் அவர்கள் எழுதியது. அவர் அளித்த வாக்குறுதிப்படி கடந்த 29 வருடங்களாக அந்நஜாத் தனது கடமையைப் பெரும் சிரமத்துடன் தொடர் கிறது. தனது சகோதரர் அளித்த வாக்குறுதியை தம்பி பீ.ஜை. நிறைவேற்றுகிறாரா? நீங்களே முடிவு செய்யுங்கள்!

மவ்லவி அலாவுத்தீன், தொண்டி

“ஏகத்துவத்தை நம்பியிருப்பவர்களே! நீங்கள் அல்லாஹ்விற்க்காக சத்தியத்தை நிலை நிலை நிறுத்துவோராய், நீதிக்கு சான்று சொல்வோராய் ஆகிவிடுங்கள். (மக்களில்) ஒரு சாரார் மீதுள்ள கோபம் (அவர்களுக்கு) வேண்டாம். (யாராயிருந்தாலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் (உங்கள்) இறையச்சத்திற்கு மிக நெருங்கிய ஒன்றாகும். (நீதியைச் சொல்வதில்) அலலாஹ்வுக்கு அஞசுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்றறிபவனாயிருக்கிறான்”. (அல்குர்ஆன் 5:8)

தங்கத் தமிழகத்தின் எங்கள் அன்பு உடன் பிறப்புக்களே!

இந்த இறைவசனத்தை இன்னொரு முறை, மீண்டும் ஒரு முறை, என்று, உங்களுக்குள் இதன் சாரமும் சத்தும் இறங்கிடும் வரை, படித்துக்கொண்டேயிருங்கள். இதனைத் தனது தாரகமந்திரமாய், கொள்கைப் பிரகடனமாய்ப் கொண்டு தான் “நஜாத்” (வெற்றி) என்ற நேரான வழியில், நடை பயில மறந்துவிட்டு நாம் பல்வேறு குறுக்கு வழிகளையும் வலம் வரம் துவங்கியிருப்பதால், இன்று ஏற்பட்டு விட்டுருக்கின்ற விபரிதங்களை உணர்ந்துதான் “நஜாத் மாத இதழாய் மாறி நம்மை வலம் வரப்போகிறது. சத்தியப்பாதையில் இது மேற்கொணடுவிட்ட இலட்சியப் பயணத்தில் அல்லாஹ்வுக்காக சத்தியத்தை நிலை நிறுத்தும். நீதிக்கு மடடும் சாட்சி சொல்லும்: அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அஞ்சும்: இதுதான் “நஜாத்” ஆயிற்றே!

தன் வழியின் பெயரால் நடத்தப்படும் தில்லுமுல்லுகள், திருகுதாளங்கள் உருட்டல் புரட்டல்கள், மாய மந்திரங்கள், சித்து விளையாட்டுகள் ஆகியவற்றை இது தம் நெடும் பயணத்தினூடே தக்க ஆதாரங்களுடன் தோலுரித்துக்காட்டும். அப்போது அதனால் பாதிக்கப்படுபவர்கள் நண்பனா, பகைவனா? உறவா,அயலா? பெற்றவரா?மற்றவரா? ஆசிரியரா,மாணவனா? சமுதாயத்தில் செல்வாக்குப் படைத்தவனா? தனது செல்வாக்கு அம்பலம் ஏறாத சாமானியக் குடிமகனா? என்றெல்லாம் இதுதரம் பார்த்துக்கொண்டிருக்காதது.

அதே நேரத்தில் தன்னையுமறியாமல் நிகழ்நது விடும் தவறுகள் தக்க ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டப்பட்டாலோ, கண்ணியமான வார்த்தைகளால் விமரிசிக்கப்பட்டாலோ அவற்றை வெளியிட்டுத் தன் தவறுக்கு வருத்தம் தெரிவிக்கத் தயங்காது. அநேகமாக உககள் கைகளில் தவழும் இந்த முதல் இதழே தன்னை உங்களுக்கு இனம் காட்டியிருக்கும். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும்,காழ்ப்புணர்ச்சி, அழுக்காறு, இன்னாச்சொற்களுக்கும் அறவே இடம் கொடுத்து விடாமல், கொண்ட கொள்

கையிலும் குறிக்கோளிலும் தளர்ந்துவிடாமல் அனாச்சாரங்களையும் அட்டூழியங்களையும் இனங்காட்டி அவற்றைப் புறங்காட்டி ஓட்டிட நெடும்பயணம் மேற்கொண்டு விட்ட “நஜாத்” நீ வாழி!

எல்லாம் வல்வ அல்லாஹ்வே! “இஸ்லாம் அனாதரவாகத்தான் தோன்றியது. அனாதரவான நிலையைத்தான் (ஒருகாலத்தில்)

மீண்டும் அது அடையும்.(அதற்கு ஆதரவு தந்து அரவணைத்து வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அதனை நிலை நிறுத்திடப் புறப்பட்டிருக்கும் அணாதரவாளர்களுக்கே என்றும் (எனது) வாழ்த்துக்கள்!” என்றுரைத்த உன்னரும் திருத்துாதர் எம் நம் நாதர் ஆசியுடன் இஸலாத்தை நிலைநிறுத்திடப் புறப்பட்டிருக்கும் அணாதாராவாளர்ககள் “நஜாத்”மூலம் தம் இலட்சியத்தை அடைந்திடவும் எல்லாவற்றுக்கும் மேலாக உன் திருப்பொருத்ததைப் பெற்றிடவும் அருள்புரிவாய் ரஹ்மானே நின் கருணை மழை பொழிந்திடுவாய் என உன்னிடம் இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்.

Previous post:

Next post: