இனவாத புதை சேற்றில் கால் பதிக்கிறதா தமிழகம்?

in 2015 ஜுலை

ந.அப்துல் ரஹ்மான், ஹாங்காங்

தமிழகத்தில் இருந்து சென்ற கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸ் சுட்டுக் கொன்றதற்கு எதிர்வினையாக தமிழ்நாட்டில் ஆந்திர வங்கியின் கிளைகளும், ஆந்திராவைச் சேர்ந்த பல் பொருள் அங்காடிகளும் தாக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து முகநூலில் தமிழ் தேசியவாதிகள் என்ற பெயரில் எழுதுபவர்களின் பதிவுகளில் திராவிட அரசியல் கட்சிகள் மீதும், அதன் தலைவர்கள் மீதும் இனவாத முத்திரை குத்தி கீழ்த்தரமாக விமர்சிக்கும் போக்கை காண்கிறோம். திராவிடர் கழகத்தின் தாலி அகற்றும் போராட்டத்துக்கு எதிர் வினையாக பெரியார் படத்தை இழிவு செய்து அந்த ஒளிப்படத்தை பதிவேற்றியுள்ளனர். தமிழ் நாட்டின் அனைத்து சீர்கேடுகளுக்கும் திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதே காரணம் என்றும் திராவிட கட்சி அல்லாத ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் விடிவு பிறக்கும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். மதுவும், ஊழலும் இவர்கள் குறிப்பிடும் முக்கிய சீர்கேடுகள், புதுச்சேரியில் என்ன தி.மு.க. ஆட்சியா நடக்கிறது? அங்கு மது விலக்கு அமலில் உள்ளதா? பீகாரில் கால்நடைத் தீவண ஊழல் நடந்தபோது அ.தி.மு.க.வா அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தது?

தமிழகத்தில் பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயரை பெரியார் ஒழித்தார். கேரளாவில் ஆண் பெயருக்கு மட்டுமல்ல. பெண்களின் பெயருக்கும் பின்னாலும் சாதி உள்ளது. ஆந்திராவில் பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயரைக் கைவிடக் கோரி லோக் சக்தா கட்சியின் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளார். பெயருக்குப் பின்னால் உள்ள சாதியை விட்டொழித்து தமிழகம் 50 ஆண்டுகள் முற்போக்காயுள்ளதற்கு தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட லாம். சாதிப் பெயரைக் கைவிட்டதால் தமிழர்களுக்கும், பிற மொழியினருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியவில்லை.

அதனால் மீண்டும் சாதியைப் பெயருக்குப் பின்னால் போடுவதை ஓர் இயக்கமாக ஒரு தமிழ் தேசிய அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இதற்குப் பின்னால் இந்துத்துவவாதிகளின் ஆதரவு இருக்கலாமோ என்ற சந்தேகம் இருந்தாலும், அப்படி எளிமைப்படுத்தி விட முடியாது. ஒரு முஸ்லிமும், ஒரு கிறித்து வரும் தமிழ் தேசியத்தின் பெயரால் திராவிட இயக்கத் தலைவர்களை முகநூலில் வன்மத்துடன் விமர்சித்து வருகின்றனர். திராவிடர் கழகம் பார்ப் பன சதி எனக் குற்றம் சாட்டலாம். ஆனால் பிற்படுத் தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும், தாழ்த்தப் பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் மிக அதிக அள வில் திராவிட இயக்கத்தின் மீதும், பிற மொழியினர் மீதும் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மீதும் காழ்ப் புணர்வுடன் சமூக ஊடகங்களில் எழுதி வருகின்றனர். தெலுங்கர்கள் மீதான அவர்களின் வன்மமான விமர்சனங்கள் இங்கு மேற்கோளாகக் கூட எடுத் தெழுத இயலாத அளவில் உள்ளவை.

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீகுவான் யூ மறைவுக்குப் பல தமிழ் தேசிய அமைப்புகளும் இரங்கல் தெரிவித்தன. ஆனால் லீகுவான் யூ. பல இன மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்டியவர். பெரும்பான்மை இனவாதத்தை ஆதரித்தவர் அல்லர். வரலாற்றில் இன அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்பட்ட யூதர்கள் இரண்டாம் உலகப் போரின் முடிவில் மிகப் பெரும் அழிவைச் சந்தித்தனர். அரபியர்களும் இனவாதம் பேசுபவர்கள் தான். அரபி பேசத் தெரியாதவர்களை ஊமையர் என்று அழைக்கும் அளவிற்கு இனவெறியில் இருந்தனர். இறுதித் தூதர் முஹமது(ஸல்) அவர்களின் வருகைக்குப் பிறகே அவர்கள் இனங்களிடையேயான சமத்து வத்தை அறிந்து கொண்டனர். அபிசீனியாவைச் சேர்ந்த கருப்பினத்தவரான பிலால்(ரழி) அவர்களை தொழுகை அழைப்பாளராக இறைத் தூதர் நியமித்தார். பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் ஃபார்சி(ரழி) அவர்களின் யோசனையை ஏற்று அகழ்ப்போரின் யுக்தியை வகுத்தார். இன்று நாம் அரபிகளிடம் காணும் இனப் பாகுபாட்டிற்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மலேசியாவில் மலாய் இன மக்களிடம் இனவாத அரசியல் உள்ளதை நாம் மறுக்க முடியாது. அதன் எதிர் வினையை தமிழர்களி டமும் காண்கிறோம். திராவிட இயக்கத்தின் மீது சமூக ஊடகங்களில் தாக்குதல் தொடுப்பவர்களில் கனிசமானவர்கள் மலேசியாவில் இருந்து செயல்படு வதையும் பார்க்கிறோம்.

உலகமயமாதல் காலத்தில் இன்று யாரும் தனித்தீவாக வாழ்ந்துவிட முடியாது. ஈழத்தமிழர் கள் சிங்களர்களால் விரட்டப்பட்டபோது, அவர் களை மனித நேயத்துடன் அரவணைத்தவர்கள் ஐரோப்பியர்கள். இனவாதம் ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். தமிழ் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் திராவிட இயக்கம் தான் என்பது அபத்த மானது. அதுபோல தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளைத் தவிர்த்து வேறு ஆட்சி அமைந்தால் தமிழ் நாட்டின் பிரச்சினைகளெல்லாம் ஒரு நொடியில் தீர்ந்து விடும் என்பது கற்பனையானது. தமிழ் தேசியத்தின் பெயரால் திராவிட இயக்கத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை பெரியாரிய அமைப்புகள் கருத்தியல் ரீதியாக எதிர்கொண்டு வருகின்றன. இதன் விபரீதத்தை உணர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திராவிட கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தை ஒரு முறை பேசினார். ஆனால், தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளின் தலைமைகள் இப்படி ஒரு விவாதம் உள்ள தையே உணர்ந்ததாகத் தெரியவில்லை. மனித குலம் ஒரே தாய், தந்தையின் மக்கள் என்று குர்ஆன் 4:1 வசனம் கூறுவதை மனித குலத்தினர் ஏற்காதவரை இனவாதம் ஒழியப் போவதில்லை!

Previous post:

Next post: