ரமழான் உரத்த சிந்தனை… ஜமாஅத்துல் முஸ்லிமீன்

in 2015 ஜுலை

இப்னு ஹத்தாது

அல்குர்ஆன் பறைசாற்றுகிறது, கவனமாகப் படியுங்கள்!
“”நீங்கள் (என் உபதேசத்தை) புறக்கணித்தால் (எனக்கு இழப்பு ஒன்றுமில்லை) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் (சம்பளம்) கேட்கவில்லை. எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்!” (என்று நூஹ்(அலை) கூறினார். (10:72)

இப்ராஹீம்(அலை), யாஃகூப்(அலை) இரு வரும் தம் குமாரர்களுக்கு உபதேசித்தது, “”என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்காக இம் மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள் ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக் காதீர்கள். (பார்க்க : 2:131,132)

மூசா(தம் சமூகத்தாரிடம்) என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள் பவர்களாக இருந்து, நீங்கள் முல்லிம்களாகவும் இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்” என்று கூறினார். (10:84)

“”(எங்களை) முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!” என்று மூஸா(அலை) அவர் களை எதிர்த்த மாந்திரீகர்கள் தவ்பா செய்து மீண்டு சொன்னதாகும். (பாரக்க : 7:126)

“”முஸ்லிமாக என்னைக் கைப்பற்றுவாயாக” என்று யூசுஃப் (அலை) பிரார்த்தித்தார்கள்
(பார்க்க :12:101)

“”நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நிச்சய மாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று ஈசா(அலை) அவர் களின் சீடர்கள் கூறினார்கள். (5:111)

நபிமார்கள் செய்த மார்க்கப் பணியை முழு மையாகச் செய்து கொண்டு தானும் குர்ஆன், ஹதீஃத் கூறும் நற்செயல்களில் ஈடுபடுபவர் களும் தங்களை “”மினல் முஸ்லிமீன்” முஸ்லிம் களில் உள்ளவர்கள் என்று சொல்வதையே அல் லாஹ் விரும்பி வரவேற்கிறான். (41:33)

ஆக நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த நபிமார்கள் அனைவரும் தங்களை முஸ்லிம்க ளிலுள்ளவர்கள் என்று அறிவித்தது உண்மையில் அவர்கள் அனைவரும் பெயர் அளவில் மட்டுமல்ல, அவர்களின் செயல்பாட்டின் படியே முஸ்லிம்களில் உள்ளவர்களாக இருந் தார்கள். இது முன்னைய அனைத்து நபிமார்க ளின் உண்மையான நிலை. ஆம்! முஸ்லிமீன் அவர்களது பண்புப் பெயராகவே இருந்தது.

முன்னைய நபிமார்கள் அனைவருக்கும் பண்புப் பெயராக இருந்த “”முஸ்லிமீன்” இறுதி நபியின் இறுதி உம்மத்துக்கு இடுகுறி பெயராக அல்லாஹ்வால் சூட்டப்பட்டுவிட்டது. இதோ அல்குர்ஆன் கூறுகிறது. கவனமாகப் படியுங்கள்.

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காகப் போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள். அவன் உங்களைத் தேர்ந் தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இதுதான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன் தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்; இதிலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத் தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள்; எனவே நீங்கள் தொழு கையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள்; அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள்; அவன்தான் உங்கள் பாதுகாவலன், இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் மிகச் சிறந்த உதவியாளன். (22:78)

இந்த மிகமிக முக்கியமான வசனத்தை அதன் சாறும் சத்தும் உங்கள் உள்ளத்தில் இறங்க மீண்டும் மீண்டும் மீண்டும் படித்து உணருங் கள். 51:55 இறைவாக்குக் கூறும் ஓர் உண்மை யான முஃமினிடம் இருக்க வேண்டிய அனைத் துப் பண்புகளும் இந்த இறைவாக்கில் தெள்ளத் தெளிவாக நேரடியாக விளக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி உம்மத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு “”முஸ்லிமீன்” என பெயர் சூட்டியுள்ள தாகக் கூறுகிறான். முன்னைய அனைத்து நபிமார்களின் பண்புப் பெயராக இருந்த “”முஸ்லி மீன்”ஐ இந்த உம்மத்துக்கு இடுகுறி பெயராகச் சூட்டி விட்டதாகக் கூறுகிறான். அதுவும் இதற்கு முன்னரும், இதிலும் “”முஸ்லிமீன்” என்று இந்த உம்மத்திற்குப் பெயர் சூட்டியதாக உறுதிப் படுத்துகிறான். மனிதப் படைப்பின் ஆரம்பத் திலேயே இந்த இறுதி உம்மத்துக்கு “”முஸ்லி மீன்” எனப் பெயர் சூட்டப்பட்டது உறுதியாகத் தெரிகிறது.

அது மட்டுமா? “”முஸ்லிமீன்” என்ற இடுகுறி பெயரையுடைய இந்தச் சமுதாயத்தை இதர சமுதாயத்தினர் அனைவருக்கும் சாட்சியாக்கி வைத்திருப்பதாகக் கூறுகிறான். தொழுகையை நிலை நிறுத்தி ஜகாத்தைக் கொடுப்பதோடு, மனிதர்களில் கலீஃபா, நபிதோழர், தாபியி, தப அதாபியி, இமாம், அவுலியா, ஆலிம், மவ்லவி என எவரையும் நம்பாமல், அல்லாஹ்வையே முற்றிலும் முழுவதுமாக நம்பி, அவனையே பல மாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளக் கட்டளை யிடுகிறான். அல்லாஹ்வே உங்கள் பாதுகாவ லன், இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன் என்று மீண்டும் உறுதிப்படுத்துகிறான். இந்தத் தூய இஸ்லாமிய மார்க்கத்தில் அல் லாஹ் எவ்விதச் சிரமத்தையும் வைக்கவில்லை என்றும் உறுதிப்படுத்துகிறான். இறைவனின் இறுதித் தூதர் நமக்கு சாட்சியாக இருப்பதாக உறுதிப்படுத்துகிறான். எனவே 3:103 இறைவாக் குக் கூறுவது போல் பல பிரிவுகளாகப் பிரியா மல் ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து, இறுதித் தூதர் நடைமுறைப் படுத்தியதை மட்டுமே ஏற்று பெரும் முயற்சி யாக (ஜிஹாத்) (பார்க்க : 29:69) அல்லாஹ்வின் பாதையில் முயற்சித்து நேர்வழி (6:153) நடக்கக் கட்டளையிடுகிறான் அல்லாஹ்.

இந்த 22:78 இறைவாக்கைப் படித்து உள் வாங்கி அதன்படி நடப்பவர்கள் “”முஸ்லிமீன்” என்று தங்களை உலகிற்கு அறிமுகப்படுத்து வார்களே அல்லாமல் சுயமாகப் பிரிதொரு பெயரைத் தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்டு அதை விளம்பரப்படுத்த முற்பட மாட்டார்கள். மறுமையைவிட இவ்வுலகை அதிகமாக நேசித்து, உலகியல் அற்ப ஆதாயங்களை அடைய முற்படுபவர்களே தனித் தலைமைக்கு அசைப்படுகிறவர்களே அல்லாஹ் சூட்டிய “”முஸ்லிமீன்” அல்லாத பிரிதொரு பெயரைத் தேடுவார்கள்.

மேலும் 3:102 இறைவாக்கு “”நீங்கள் முஸ்லி மீன் அல்லாத நிலையில் மரணிக்காதீர்கள்” என்று கட்ட ளையிடுகிறது. நபி(ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, முஸ்லிம் சமுதாயம் இறைவனின் பல கட்டளைகளை நிராகரித்து வழிகெட்ட எண்ணற்றப் பிரிவுகளாகப் பிரிந்து சீரழியும் போது “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ மட்டுமே பற்றிப் பிடியுங்கள் என்று கட்டளையிடும் ஹதீஃத் புகாரீ(ஆ) மனாகிப் 4/803, ஃபிதன் 9/206, முஸ்லிம்(ஆ) இமாரா 3/4553,4554, திர்மிதி(அ) ஃபிதன் 57, இப்னு மாஜா (அ) ஃபிதன் 2/3979, தயாலிசி(அ) 1/443 எனப் பல நூல்களில் காணப்படுகிறது. இவை அல்லாமல் முஸ்லிமன் என்று 3:67, 12:101 இரண்டு இடங் களிலும் முஸ்லிமாத்தின் என்று 33:35, 66:5, முஸ்லிமத்தன் என்று 2:128, முஸல்லமத்தன் என்று 2:71, 4:92, முஸ்லிமூன் என்று 15 இடங் களிலும் முஸ்லிமீன் என்று 21 இடங்களிலும், முஸ்லிமைனி என்று 2:128 என சுமார் 45 இடங் களில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் பிரிவினைவாதிகளுக்கு தங் களை முஸ்லிம்கள்-முஸ்லிமீன், ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று அழைத்துக் கொள்ள 17:41, 45-47,89, 22:72, 25:60, 35:42 இறைவாக்குகள் கூறுவது போல் உண்மையிலிருந்து வெறுப் பையே அதிகப்படுத்துகிறது. குர்ஆன் போத னைகளை வெறுப்பவர்கள் யார்? இறை நிரா கரிப்பாளர்களே குர்ஆன் வசனங்களை வெறுத்து நிராகரிப்பவர்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா?

இன்று இந்த வழிகெட்ட, நாளை நரகை நிரப்ப இருக்கும் ஒவ்வொரு 1000-ல் 999 பேரில் ஒரு பகுதியைக் கொண்ட எந்தப் பிரிவினரையும் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஜாக் அல்லது ததஜவினரை எடுத்துக் கொள்ளுங்கள். ஜாக். ஜாக், ஜாக் என்றோ ததஜ, ததஜ, ததஜ என்றோ கோரஸ் பாடுபவர்களிடம் நீங்கள் முஸ்லிமா? இல்லையா? என்று கேட்டால் முஸ்லிம்கள் என்றுதான் சொல்வார்கள். முஸ்லிம்கள் இல்லை என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.

அதே சமயம் இந்த ஜாக், ததஜ பிரிவுகள் அல்லாத பிரிவினரிடம் நீங்கள் ஜாக்கா? இல்லை ததஜவா? என்று கேட்டால் இல்லை நாங்கள் இன்ன பிரிவு என்று தங்கள் பிரிவுப் பெயரையே சொல்வார்கள். அதே சமயம் நீங்கள் முஸ்லிம்களா? இல்லையா? என்று கேட்டால் உடனே முஸ்லிம்கள்தான் என்றே பதில் தருவார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? வழிகெட்ட அனைத்துப் பிரிவினரும் தங்களை முஸ்லிம்கள் என்பதைக் கண்டிப்பாக ஏற்பார்கள். அதே சமயம் தங்கள் பிரிவுப் பெயரை விட்டு இதர எப்பிரிவுப் பெயரைச் சொல்லிக் கேட்டாலும் நாங்கள் அதில் இல்லை என்றே கூறுவார்கள். இப்போது சொல்லுங்கள். ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், முஸ்லிம்கள்-முஸ்லிமீன்-ஜமாத் துல் முஸ்லிமீன் என்று 3:103 இறைக் கட்ட ளைக்கு அடிபணிந்து ஒன்று சேர்ப்பது சாத்தி யமா? இல்லை ஜாக், ததஜ போன்ற வழிகெட் டப் பிரிவுப் பெயரால் முஸ்லிம்களை ஒன்றி ணைப்பது சாத்தியமா? சிந்தியுங்கள்!

47:24 இறைவாக்குக் கூறுவது போல் தங்கள் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொள் ளாமல் குர்ஆனின் வசனங்களை நேரடியாக ஆராய்ந்து பார்ப்பவர்கள் நிச்சயம் 6:153 இறை வாக்குக் கூறும் நேர்வழியை ஏற்பார்கள். முஸ் லிம்கள்-முஸ்லிமீன்-ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று அல்லாஹ் பெயர் சூட்டி நபி(ஸல்) நடை முறைப்படுத்திக் காட்டியதை அப்படியே ஏற்று நேர்வழி நடப்பார்கள். அதற்கு மாறாக தங்கள் இதயங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு, வழிகெட்டப் பிரிவுப் பெயர்களைக் கற்பனை செய்த மவ்லவிகளை-தலைவர்களை 9:31 இறை வாக்குச் சொல்வது போல் தங்கள் ரப்பாகக் கொண்டு அவர்களின் வழிகெட்ட போதனை களை வேதவாக்காகக் கொண்டு கண்மூடி நடப்பவர்களுக்கு குர்ஆன் வசனங்களும், ஆதாரபூர்வ ஹதீஃத்களும் எட்டிக் காயாக கசக்கவே செய்யும்.
(பார்க்க : 17:41,45-47,89, 22:72, 25:60, 35:42)

முஸ்லிமீன், ஜமாஅத்துல் முஸ்லிமீன் இரண்டும் குர்ஆன், ஹதீஃதைக் கொண்டு இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்று தெளிவாக இருக்கும் நிலையில் அபூ ஜஹீலின் வாரிசுகளான இம்மவ்லவிகளும், தலைவர்களும் எப்படிப்பட்ட விதண்டாவாதங்களை எடுத்து வைக்கின்றனர் என்று பார்ப்போம்.

1987 ஜூனில் மவ்லவிகள் பீ.ஜை., எஸ்.கே,, செய்யது முஹ்மது, ஷம்ஷில்ளுஹா, முஹம்மது அலி, அப்துல் காதிர், அப்துல் ஜலீல், யூசுஃப், மொய்தீன் என அனைவரும் எம்மையும், அந்நஜாத்தையும் விட்டு வெளியேறி ஜாக் என்ற வழிகெட்ட அமைப்பைச் சுயமாகக் கற்பனை செய்து சுயநலத்துடன் செயல்பட ஆரம்பித்தனர். இந்த நிலையில் அவர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் “”ஜாக் உறுப்பினர்கள்” என்று தலைப்பிட்டு அனைவரிடமும் கையயழுத்து வேட்டையாடினர். அதில் கலந்து கொண்ட ஸிலுலு லெப்பைத் தம்பி, அந்த மினிட் புக்கிலேயே “”ஜாக் வழிகேடு” என்று எழுதி கையயழுத்தும் இட்டுவிட்டார். இது அவர்களுக்குப் பெருத்த அவமானமாகப் போய்விட்டது. எனவே அவரை வம்புக்கிழுத்து எங்களோடு வாதம் செய்து ஜாக் வழிகேடு என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். சகோதரர் லெப்பைத் தம்பியும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டு கையயழுத்து இட்டு விட்டு எம்மிடம் வந்து முறையிட்டார். நாமும் ஒப்புக்கொண்டோம்.

லெப்பைத் தம்பியை தனது 6:112 இறை வாக்குச் சொல்வது போல் மயக்கு மொழிகளால் வாயடைக்க வைக்கலாம் என்ற தைரியத்தில்தான் பீ.ஜை. விவாத ஏற்பாட்டைச் செய்தார். விவாதத்தில் எம்மைப் பார்த்ததும் பீ.ஜைக்கு கதிகலங்கியது. சம்பந்தமில்லாத விதண்டாவாதங்களை எடுத்து வைத்து நான்கு அமர்வுகளைச் சமாளித்தார். 22:78 இறைவாக்கில் அல்லாஹ் பெயர் சூட்டியதாகச் சொல்லவில்லை. முஸ்லிமீன் என்று கூறியுள்ளான், சொல்லியுள்ளான் என்று விதண்டாவாதம் செய்து நான்கு அமர்வுகள் வரை இழுத்தடித்தார். இப்படியும், அப்படியும் திசைமாறி ஏதேதோ சொல்லி அல்லாஹ் முஸ்லிமீன் என்று பெயரிட்டான், பெயர் சூட்டினான் என்பதை 2:159 இறைவாக்குக் கூறுவது போல் மறைக்க முற்பட்டார்.

அவரது விதண்டாவாத முயற்சி பலிக்க வில்லை. இறுதியில் வேறு வழியின்றி அல்லாஹ் “”முஸ்லிமீன்” என்று பெயர் சூட்டியுள்ளான். எனவே நாம் முஸ்லிம்கள்-முஸ்லிமீன் என்றே செயல்பட வேண்டும். ஜாக் தவறுதான், வழி கேடுதான் என்பதை ஒப்புக்கொண்டு, இனிமேல் ஜாக் என்ற பிரிவுப் பெயரில் செயல்பட மாட்டோம். ஆயினும் அமீர் எஸ்.கே.யிடம் இதைத் தெளிவுபடுத்திய பின்னர் அடுத்த அமர்வில் முடிவெடுப்போம் என்று தப்பிச் சென்றவர்தான் அடுத்த அமர்வுக்கு கடந்த 29 ஆண்டுகளாகியும் வரவே இல்லை. நாம் பலமுறை வற்புறுத்தி அழைத்தும் வரவே இல்லை. அந்த அமர்வில் மவ்லவி ஹாமித் பக்ரியும் அவர் கூட இருந்தார். இதற்கு லெப்பைத் தம்பியும், ஹாமித் பக்ரியும் சாட்சி.

அதேபோல் 1997ல் பிரிவுகள் கூடாது என்ற அடிப்படையில் பீ.ஜை அவரது பக்தர்களாலேயே எம்முடன் விவாதிக்கச் சிக்க வைக்கப் பட்டார். நான்கு நாட்கள் நடைபெற்றன. அதில் “”ஜமாஅத் துல் முஸ்லிமீன்” பற்றிய பல நூல்களில் இடம் பெற்ற ஹதீஃதை தன் மனோ இச்சைப்படி விதண்டாவாதங்கள் பல செய்து “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற ஒரே ஜமா அத்துதான் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இருக்க வேண்டிய ஜமாஅத் என்பதை மறுத்து அடிப்படையே இல்லாத வாதங்களை வைத்து, அவரது இந்த விதண்டாவாதங்களை மறுக்காமல் ஒப்புக் கொண்டால்தான் அடுத்தத் தலைப்புக்குப் போவேன் என அடம் பிடித்து நான்கு நாட்களையும் ஓட்டினார்.

பீ.ஜை இந்த ஜமாஅத்துல் முஸ்லிமீன் பற்றிய ஹதீஃதில் விளையாடிய விளையாட்டை, எடுத்து வைத்த தில்லுமுல்லுகளைப் பார்த்தே வெறுப்புற்று, அந்த நான்கு நாள் விவாதத்தை ஏற்பாடு செய்த சகோதரர்கள் ஹதீஃத்களை வெறுத்து குர்ஆன் மட்டும் போதும் என் வழி கேட்டில் சென்றனர். தமிழ்நாட்டில் அஹ்லுல் குர்ஆன் பிரிவினர் செல்வாக்குப் பெற பீ.ஜை. யின் நான்கு நாள் விதண்டாவாதப் பேச்சுக்களே காரணமாயிற்று. 16:25 இறைவாக்குச் சொல் வது போல் இந்தப் பாவச் சுமையையும் அவரே நாளை சுமக்கப் போகிறார்.

“”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தை எண்ணற்றப் பிரிவுகளாக்கி முஸ்லிம்களை வழிகேட்டில் இழுத்துச் சென்று நரகை நிரப்ப எஸ்.கே. பீ.ஜையின் விதண்டா வாதங்கள் கணக்கற்றவை. அதில் ஒன்றாக “”முஸ்லிமீன்” ஐயும், ஜமாஅத்துல் முஸ்லிமீன் ஐயும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற விதண்டா வாதத்தை வைத்தனர். அவர்களின் அறிவீனத்தின் ஆழத்தைப் பாருங்கள்.

சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் பிறந்தபோது இவர்களுக்கு “”கமாலுத்தீன், ஜைனுல் ஆபிதீன்” என்று இவர்களின் பெற்றோர்கள் சூட்டிய அரபி பெயரை தமிழில் மொழி பெயர்க்க மாட்டார்களாம். அரபியில் சொல்வார்களாம், கையெழுத்திடுவார்களாம். அதற்கு மாறாக 1450 வருடங்கள் அல்ல, மனித குலத்தின் ஆரம்பத்திலேயே அல்லாஹ் இந்த இறுதி உம்மத்துக்கு “”முஸ்லிமீன்” (22:78) என்று பெயரிட்டுள்ளதை தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமாம். எந்தளவு வக்கிரப் புத்தியும், வழி கெடுக்கும் எண்ணமும் (4:44) இருந்தால் தங்கள் பெற்றோர் இட்ட பெயரை தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லத் துணியாத இம்மூட மவ்லவிகள் அல்லாஹ் மனிதப் படைப்பின் ஆரம்பத்திலே இட்ட முஸ்லிமீன் என்ற பெயரை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று பிதற்ற முடியும்? வழிகேட்டின் உச்சம் இதுதானே!

அவர்கள் 1988லும் 2005லும் சுயமாகக் கற்பனை செய்து வைத்த பெயர் ஜமியத்து அஹ்லுல் குர்ஆன், வல் ஹதீஃத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரபி பெயர்களை தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லத் துணியாத இம்மவ்லவி கள் நபி(ஸல்) 1436 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் கட்டளைப்படி “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்று பெயரிட்டு நடை முறைப் படுத்திய பெயரை தமிழில் மொழி பெயர்க் கவேண்டும் என்று பிதற்றும் இவர்கள் எந்தளவு வழி கேட்டில் இருக்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். தங்களது பேச்சிலும், எழுத் திலும் முஸ்லிமீனை -அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்கள் என்றும், ஜமாஅத்துல் முஸ்லிமீனை-முற்றிலும் வழிப்படுபவர்களின் கூட்டமைப்பு என்றும் தமிழில் மொழி பெயர்த்து தங்களின் பக்தகோடிகளைத் திசைத் திருப்பி வஞ்சித்து நரகில் தள்ளும் பெரும் பாவிகளாக இருக்கிறார்கள்.

அடுத்து இன்னொரு விதண்டாவாதம் வருமாறு:
ஜமாஅத்துல் முஸ்லிமீனும் ஒரு பிரிவுதான். மற்றப் பிரிவுகள் வழிகேடு என்றால் இதுவும் வழி கேடுதான் என்று உளறுகிறார்கள். அல் லாஹ்வே அல்குர்ஆனில் இந்த உம்மத் பல பிரிவுகளாகப் பிரிவார்கள். அதில் ஒரே பிரிவினர் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள் அது அல்லாஹ் காட்டும் வழி மட்டுமே என்று 6:153 இறை வாக்கிலும் இன்னும் பல இறைவாக்குகளிலும் (2:38, 6:153, 7:178, 16:9, 17:84,97, 18:17, 20:123, 2:56, 39:37, 64:11) கூறியுள்ளான். நபி(ஸல்) அவர்களும் எனது உம்மத் 73 பிரிவினர்களாகப் பிரிவார்கள். அதில் 72 பிரிவினர் நரகத்திற்குரிய வர்கள் ஒரேயயாரு பிரிவு மட்டுமே சுவர்க்கம் செல்லும் அந்தப் பிரிவு நானும் எனது தோழர் களும்(இன்று) எப்படி இருக்கிறோமோ அப்படி நடப்பவர்கள் என்று தெளிவாகவே கூறி இருக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்களது காலத்தில் முஸ்லிமீன், ஜமாஅத்துல் முஸ்லிமீன் அல்லாத எந்தப் பிரிவுப் பெயரும் இருக்கவில்லை. அதே சமயம் அன்று, இன்றிருக்கும் முஸ்லிம்களை விட மிக மிகக் கேடு கெட்டவர்கள் முஸ்லிம்கள் என்று நடித்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களின் உம் மத்தில் இருந்தார்கள். உள்ளத்தால் முஸ்லிம் ஆகாமல், நாவினால் மட்டும் முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு காஃபிர்களுடன் சேர்ந்து சிலைகளை வணங்கிக் கொண்டும் இருந்தனர். அந்த நயவஞ்சகர்களால் நபி(ஸல்) அவர்கள் பெருந்துன்பங்களை அனுபவித்தனர். அவர்களின் மனைவி ஆயிஷா(ரழி)மீது பெரும் அவதூறு கூறி நபி(ஸல்) அவர்களை சுமார் 50 நாட் கள் கவலையால் துடிக்க வைத்தார்கள். அந்த நயவஞ்சகர்கள் ஒருபோதும் ஈமான் கொள்ள மாட்டார்கள். நாளை நரகின் அடித்தட்டில் கிடந்து வெந்து கரியாவார்கள் என்று 4:145 இறைவாக்கிலும், அவர்களின் உண்மை நிலையை 2:8 முதல் 20 வரையுள்ள வசனங்க ளிலும் அறிவித்தும் விட்டான்.

இந்த நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு முஷ்ரிக், காஃபிர் ஃபத்வா கொடுத்தார்களா? அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுத்தார்களா? முஸ் லிமீன் ஜமாஅத்தில் இப்படிப்பட்ட முஷ்ரிக் கள், காஃபிர்கள் இருக்கிறார்கள் என்று பிரிதொரு பெயரைத் தேர்ந்தெடுத்து வழிகாட்டி னார்களா? அப்படியயாரு ஆதாரத்தை இவர்க ளால் காட்டமுடியுமா? ஒருபோதும் காட்ட முடியாது. முஸ்லிம் என்று நாவினால் மட்டும் கூறியதோடு, இஸ்லாத்திற்கு விரோதமான செயல்கள் அனைத்தையும் செய்தவர்களையும் முஸ்லிமாகவே ஏற்று 21:92, 23:52 இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைக் கட்டிக் காத்து அழகிய நடை முறையை இந்த உம்மத்துக்கு முன்மாதிரியாகத் தந்துள்ளார்கள். 28:56 அல்லாஹ்வின் கடும் கண்டனத்தை அப்படியே ஏற்று நடந்து வழிகாட்டியிருக்கிறார்கள்.

நரகை அடையும் அனைத்துப் பிரிவுகளும் ஒருவருக்கொருவர் குஃப்ர், ´ர்க் ஃபத்வா கொடுப்பார்கள், ஒருவர் பின்னால் மற்றவர் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுப்பார் கள். 4:49, 53:32 இறை வாக்குகளை நிராகரித்து-குஃப்ரிலாகி நாங்கள் மட்டும்தான் நேர்வழியில் இருக்கிறோம் என்று வாய் கிழிய பிதற்றுவார்க ள். ஒரே சமுதாயத்தைப் பல பிரிவுகளாக்கி உலகியல் ஆதாயங்களையும், பேர் புகழையும் குறிக்கோளாக்கி கொண்டு செயல்படுவார்கள்.

அதற்கு மாறாக நேர்வழி நடக்கும் அந்த ஒரே யயாரு பிரிவினர் நாங்கள்தான் நேர்வழி நடந்து சொர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் என்று அர்த்த மில்லாமல் பிதற்றமாட்டார்கள். அல்லாஹ் காட்டுவது மட்டுமே நேர்வழி என்று கூறுவதோடு குர்ஆன் வசனங்களை மட்டுமே மக்கள் முன் எடுத்து வைப்பார்கள். 2:159 இறை வாக்கை நிராகரித்து, சுயவிளக்கம் கொடுக்க முற்படமாட்டார்கள். 42:21, 49:16 கூறுவது போல் அல்லாஹ்வுக்கு இணையாளர்களாகி, அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்பட மாட்டார்கள். “”முஸ்லிமீன்” ஜமாஅத்துல் முஸ்லிமீன் அல்லாத பிரிதொரு பெயரைக் கற்பனை செய்து தங்களுக்குச் சூட்டிக் கொள்ள மட்டார்கள்.

தன்னை முஸ்லிம் என்று சொல்லும் எவரை யும் முஸ்லிம் இல்லை என்று சொல்லத் துணிய மாட்டார்கள். ஒருவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு, முஸ்லிம் மஹல்லாவிலேயே வாழ்ந்து மடிந்து முஸ்லிம் மையவாடி யிலேயே அடக்கப்படும் நிலையில் இருப்பவன், இஸ்லாம், ஈமான் என்ன என்பதை அறியாமல் தர்கா வழிபாடு செய்கிறான், ஏன் அதையும் தாண்டி கிறித்தவ சர்ச்சுகளுக்கும், இந்து கோவில்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்கிறான் என்றாலும், அவன் செய்யும் குர்ஆனுக்கும், ஹதீஃத்களுக்கு முரண்பட்ட செயல்களை, குர்ஆன், ஹதீஃத் கொண்டு தொடர்ந்து கடுமையாக எச்ச ரித்து வருவது மட்டுமே தனது கடமை, அவன் வீம்பாக அச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் அவனுக்கு குஃப்ர், ´ஷிர்க் ஃபத்வா கொடுக்க முற்பட மாட்டான். அப்படி ஃபத்வா கொடுத்து நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை. அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதைத் தெளிவாக அறிந்து அதன்படி செயல்படுவார் கள். அந்த ஒரேயொரு பிரிவே நேர்வழி செல்லும் பிரிவு. சுயமாகப் பெயரிட்டுக் கொண்டு செயல்படும் அனைத்துப் பிரிவுகளும் நாளை நரகை அடைபவர்கள் என்பதையே பல குர்ஆன் வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன.

அடுத்து நபி(ஸல்) அவர்கள் காலத்தில் முஹாஜிர், அன்சாரி, அஸ்ஹாஃபுஸ்ஸுஃப்பா திண்ணைத் தோழர்கள் போன்ற பெயர்களை ஆதாரமாகக் காட்டி தங்களின் வழிகெட்ட பிரிவுகளை நியாயப்படுத்துகின்றனர். அதே போல் இன்று நடைமுறையிலிருக்கும் வியாபாரிகளின் சங்கங்கள், தொழிலாளர்களின் சங் கங்கள், இன்னும் இவைபோல் பல அமைப்பு களின் சங்கங்கள் இவை போன்ற அமைப்பு களுக்கு மார்க்கத்தில் தடை இருக்கிறதா? இல் லையே! அபூ அப்தில்லாஹ் கூட வீசிசிசிவீபு என்ற வியாபார சங்கத்தில் தலைவர், செயலர், பொருளாளர் என பல பொறுப்புகளில் இருந் துள்ளார் என்ற வாதங்களை வைத்து தங்களின் வழிகெட்டப் பிரிவுகளை நியாயப்படுத்துகின்ற னர். ஏன் அல்லாஹ்வே 49:13ல் “”மனிதர்களே ! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண் ணிலிருந்து படைத்தோம். பின்னர் நீங்கள் ஒரு வரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாக வும் ஆக்கினோம். உங்களில் எவர் அல்லாஹ் விடம் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ அவர்தான் அல்லாஹ்விடம் நிச்சயமாக மிக்கக் கண்ணியமானவர்…” (49:13) என்று தெளிவாகக் கூறி இருக்கிறானே!

இவை எல்லாம் மார்க்க அடிப்படையிலான பிரிவுகள் அல்ல. ஒருவரையயாருவர் அறிந்து கொள்ளவும், உலகியல் காரியங்களில் தங்கள் உரிமைகளை அடையவுமான அமைப்புகள். அல்லாஹ் சொல்லும் கிளைகள், கோத்திரங்களிலும், மேற்சொன்ன சங்கங்களிலும் முஸ்லிம் கள் மட்டுமா இருப்பார்கள்? முஸ்லிம்கள் மற்றும் பல மதத்தினர், நாத்திகர் என பலரும் இருப்பார்கள். நபி(ஸல்) காலத்தில் அழைக் கப்பட்ட முஹாஜிர்கள், அன்சார்கள், அஸ்ஹா ஃபுஸ் ஸுப்பாக்கள், இந்தக் கிளைகள் கோத் திரங்கள், சங்கங்கள் நாங்கள்தான் நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கத்து ஜமாஅத்து எனப் பீற்றிக் கொண்டார்களா? இல்லையே!
இந்த உலகியல் பிரிவுகளை ஆதாரமாகக் காட்டி, நாங்கள்தான் நேர்வழி நடக்கும் ஜமா அத், சுவர்க்கத்து ஜமாஅத், அல்லாஹ்வின் பொருத்தம் பெற்ற ஜமாஅத் என 4:49, 53:32 இறைவாக்குகளை நிராகரித்து, குஃப்ரிலாகிப் பிதற்றும் வழிகெட்டப் பிரிவுகள் மேலே சொன்ன பிரிவுகள் போல் ஆகுமா? அப்படியா னால் 3:103,105, 6:153,159, 21:92,93, 23:52-56, 30:32, 42:13, 14 போன்ற குர்ஆன் வசனங்களின் பொருள்தான் என்ன? இந்த மவ்லவிகள் எப் படிப்பட்ட மாபெரும் வழிகேட்டில் இருக்கி றார்கள்? புரிகிறதா? அந்தோ பரிதாபம்!

இந்த விதண்டாவாதங்கள் அனைத்தும் நொறுங்கி தரைமட்டமானவுடன் இறுதியாக இப்பிரவினை வாதிகள் எடுத்து வைக்கும் அடுத்த விதண்டாவாதம் என்ன தெரியுமா?
ஜமாஅத்துல் முஸ்லிமீன் அபூ அப்தில்லாஹ் வின் ஜமாஅத் என்று தார்ப்பாயில் வடித்தெடுத் தப் பொய்யைக் கூறி, தங்கள் பக்தர்கள் தங்க ளின் வழிகெட்ட நரகை அடையச் செய்யும் பிரிவில் நிலைத் திருக்கச் செய்து விடுகின்றனர். அவர்களது பக்தர்களும் முறைப்படிச் சிந்திக்கத் தெரியாதவர்கள் தானே! எஸ்.கே.க்கு ஜாக் இருப்பது போல் பீ.ஜைக்கு ததஜ இருப்பது போல், அபூ அப்தில்லாஹ்வுக்கு ஜமாஅத்துல் முஸ்லிமீன் இருக்கிறது என்று குருட்டுத்தன மாக நம்பி, எஸ்.கே. பீ.ஜை. அரபி மொழி கற்ற மவ்லவிகள், அபூ அப்தில்லாஹ் அரபி மொழி கற்காத மவ்லவி அல்லாதவர். எனவே பீ.ஜை. எஸ்.கே, சொல்வதுதான் சரி என்று குருட்டு நம்பிக்கையில் அவர்களின் வழிகெட்டப் பிரிவுகளான ஜாக், ததஜ இவற்றில் நிரந்தரமாக நிலைத்து விடுகிறார்கள். பாவம் பரிதாபத்திற் குரியவர்கள். நாளை மறுமையில் நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு அவர்கள் குருட்டுத் தனமாக நம்பிப் பின்பற்றிய மவ்லவி ஆலிம் என்று பெருமை பேசிய இம் மவ்லவிகளைச் சபித்து ஒப்பாரி வைப்பதைப் படம் பிடித்துக் காட்டும் 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45, குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அறிந்தால் அல்லவா விளங்கப் போகிறார்கள். அவற்றில் 34:31,32,33, 40:47,48 வசனங்கள் சாட்சாத் பெருமையடிக்கும் இம்மவ்லவிகளையே குறிக் கின்றன என்பதையும் உணர முடியும். அவர்கள்தான் எங்கள் அண்ணன் சொன்னால் போதும், நாங்கள் குர்ஆனைப் பார்க்க வேண்டி யதில்லை என்று ஆணவம் பேசுகிறவர்களாக இருக்கிறார்களே! அவர்களுக்கு எங்கே நேர் வழி கிடைக்கப் போகிறது? 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தான் அவர்களுக்கு வழிகேடுகளையே அழகாக நேர்வழியாகக் காட்டுகிறான்; முடிவு நாளை நரகம். எச்சரிக்கை!

இவர்கள் 47:14 இறைவாக்கைப் படித்துப் பார்க்கட்டும். அதில் “”எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர், எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழ காகக் காண்பிக்கப்பட்டுள்ளதோ இன்னும் (எவர்கள்) தம் மனோ இச்சைகளைப் பின்பற்று கிறார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா! (47:14)

உள்ளத்தில் ஈமான் இருந்தால் நேர்வழிக்கு வரு வார்கள். அதற்கு மாறாக 47:24 இறைவாக் குக் கூறுவது போல் தங்கள் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு ஏமாற்றி வஞ்சிக் கும் இந்த மவ்லவிகளுக்குப் பின்னால் செல்கி றவர்களே. நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு அந்த மவ்லவிகளையே சபிக் கப் போகிறார்கள். ஆயினும் நரகிலிருந்து விடு தலை கிடைக்க வாய்ப்பில்லை. இவ்வுலகி லேயே இம்மவ்லவிகளின் வசீகர சுயநலப் புத் தியை விளங்கி அவர்களைப் புறக்கணித்து நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடித்து அவற்றின் வழிகாட்டல்படி நடந்தால் தப்பினார்கள்.

இப்போது ஜாக், ததஜ வழிகெட்ட அமைப்புகளில் கட்டுண்டுக் கிடப்பவர்கள். சிறிதாவது சிந்திக்க முன்வரட்டும். 1988ல் JAQH கற்பனை செய்யப்பட்டு பைலா தயாரித்து அரசில் பதிவு செய்யப்பட்டது. தலைவர், செயலர், பொருளா ளர், அந்த அணி, இந்த அணி என்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுச் செயல்படுகின்றனர். JAQH விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். சந்தா வசூலிக்கின்றனர். இப்படி உரிமை கொண்டாடுவதோடு, ஓர் அரசியல் கட்சிபோல் செயல்படும் JAQH கமாலுத்தீன் ஜமாஅத் இல்லையாம். குர்ஆன், ஹதீஃத்படி நேர்வழி நடக்கும் இஸ்லாமிய ஜமாஅத்தாம்.

அதே போல் 2005ல் கற்பனை செய்யப்பட்டு பைலா தயாரித்து அரசில் பதிவு செய்து உரிமை கொண்டாடிச் செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(?) தலைவர், செயலர், பொருளாளர், இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, குண்டர் அணி, தறுதலை அணி என ஆளுக்கொரு பதவியைக் கொடுத்து அப்பதவி மயக்கத்தில் சுய சிந்தனையை இழந்து செயல்படும் இளைஞர், இளம் பெண்கள் கணிசமா னோர். விதிகளும் கட்டுப்பாடுகளும் ஏராளம். ததஜ உறுப்பினர்கள் மறந்தும் எமது கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது. அப்படிக் கலந்து கொண்டால் ததஜவிலிருந்து நீக்கப்படுவார்கள்.
சென்ற வாரம் நடந்த ஒரு சம்பவம். 3ம் பிறையை முதல் பிறையாகக் கொள்ளும் மூட நம்பிக்கையிலிருந்து ஓர் இளைஞர் விடுபட்டு முதல் பிறை அன்றே நோன்பை ஆரம்பித்து விட்டார். அந்த இளைஞரை முற்றுகை இட்டு ததஜ இளைஞர்கள் பெரும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

 வாக்குவாதம் முற்றி, அந்த சகோதரர் பக்கத்தில் தானே அபூ அப்தில்லாஹ் இருக்கிறார். நேரடியாகப் போய் பேசுவோமே என அந்த இளைஞர்களுக்கு அழைப்பு விட்டிருக்கிறார். ஆரம்பத்தில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டு வரச் சம்மதித்துள்ளனர். ஆயினும் தலைமை ஆட்சேபிக்குமோ என்ற அச்சத்தில் தலைமைக்குத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். தலைமையின் உத்தரவு, எக்காரணம் கொண்டும் நீங்கள் அபூ அப்தில்லாஹ்விடம் சென்று பேசக்கூடாது என்பது தான். ஆம்! பீ.ஜைக்கு நன்கு தெரியும் தான் பெரும் வழி கேட்டில் இருப்பதும், தன்னை நம்பியுள்ள இளைஞர், இளம்பெண்களை வழிகெடுத்து நர கில் தள்ளுவதோடு, அவர்களைக் கொண்டு உலகியல் ஆதாயங்களை அடைந்து வருவதும். அத னால் தனது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிடக் கூடாது என்ற தொடை நடுக்கத்தில் குர் ஆன், ஹதீஃத் நேரடிப் போதனையைத் தனது பக்தர்கள் தப்பித் தவறியும் கேட்டுவிடக் கூடாது, அந்நஜாத்தைப் பார்த்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

சங்கரன் பந்தலில் கிணற்றுத் தவளையாக புரோகித மதரஸாவில் பிக்ஹ் நூல்களை படிப்பித்துக் கொண்டு, மவ்லூது ஓதிக் கொண்டு, இன்னும் பல மூடச் சடங்குகளில் ஈடுபட்டிருந்தவரை அந்நஜாத்தான் உலகிற்கு அறிமுகப் படுத்தியது. அந்த அந்நஜாத் இவரைக் கொண்டு பிரபல்யமாக முற்படுகிறதாம். வேடிக்கையாக இல்லை. பீ.ஜை. 1987க்குப் பின்னர் எத்த னையோ அவதாரங்கள் எடுத்து வழிகெட்ட எத்தனையோ பிரிவுகளைக் கற்பனை செய்து விட்டார். ஆனால் மக்கள் அவர்களை நஜாத்காரன் என்றும் அவர்களின் பிரிவுப் பள்ளிகளை நஜாத் பள்ளிகள் என்றுமே கூறுகின்றனர். இந்த நிலையில் அந்நஜாத்தும், அபூ அப்தில்லாஹ்வும் இவருடன் விவாதம் நடத்திப் பிரபல்யம் ஆகப் பார்க்கிறதாம். என்னே வேடிக்கை! கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போயிற்று? என்று சொல்வார்கள். அந்த நிலையில் தான் பீ.ஜை.யும் அவரது பக்தர் களும் இருக்கிறார்கள். இப்படி அறிவீனமாகச் செயல்படும் ததஜ. பீ.ஜையின் ஜமாஅத் இல்லையாம். குர்ஆன், ஹதீஃத்படி நேர்வழி நடக்கும் இஸ்லாமிய ஜமாஅத்தாம்.
அதற்கு மாறாக நாம் என்ன சொல்கிறோம்? மனிதப் படைப்பின் ஆரம்பத்திலேயும், குர் ஆனிலும் அல்லாஹ் இறுதி உம்மத்துக்கு முஸ்லிமீன் என்று பெயரிட்டு (22:78) நபி(ஸல்) அவர் கள் நடைமுறைப்படுத்திய ஜமாஅத்துல் முஸ்லிமீன் இம்மூட முல்லாக்களால் 2:159 இறைவாக்குக் கூறுவது போல் மறைக்கப்பட்டு, தங்களின் அற்ப உலக ஆதாயத்திற்காகவும், தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டும் ஆளுக்கொரு வழிகெட்டப் பிரிவுகளைக் கற்பனை செய்து அவற்றிற்கு சுயமாகப் பெயரிட்டு அவற்றை விளம்பரப்படுத்தி உலகைத் தேடி வருகிறார்கள். இவர்கள் கற்பனை செய்துள்ள அனைத்துப் பிரிவுகளும் எண்ணற்ற குர்ஆன் வசனங்கள்படி பகிரங்க வழிகேடுகளே, நாளை நரகில் சேர்ப்பவையே! அவற்றிலிருந்து விடு பட்டு, நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி நமக்காக விட்டுச் சென்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனில் போய் அனைவரும் இணைவோம். தகுதியான ஒருவரை நமக்குத் தலைவராகத் தேர்வு செய் வோம். அப்பதவிக்கு ஒருபோதும் நாம் போட் டியிடமாட்டோம் என்று ஆரம்பத்திலிருந்தே பகிரங்கமாகக் கூறி வருகிறோம். பீ.ஜையைப் போல் நாம்தான் ஆயுட்கால தலைவர் என்று உரிமை கொண்டாடவும் இல்லை. அப்படி வாதாடி அவரைப் போல் பிறருக்குச் சொந்தமா னதை அபகரிக்கவும் இல்லை. பலர் பலவிதமாக வற்புறுத்தியும் அதை அரசில் பதிவு செய்யவும் இல்லை! இந்த நிலையில் ஜமாஅத்துல் முஸ்லி மீன் அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என்று அவதூறு பரப்புகிறவர்கள் எந்தளவு மூளை வரண்டவர்களாக, வக்கிரப் புத்தி கொண்டவர் களாக, அடிமுட்டாள்களாக இருப்பார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்! அல் லாஹ் மனிதப் படைப்பின் ஆரம்பித்திலும் இறுதி இறை நூல் அல்குர்ஆனிலும் இறுதி நபி (ஸல்) அவர்களின் இறுதி உம்மத்துக்கு “”முஸ்லி மீன்” என்று பெயரிட் டுள்ளதாக திட்டமாக 22:78ல் அறிவித்துள்ளான். 3:103 இறைவாக்கில் பிரியாமல் ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற் றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்கக் கட்டளையிடுகிறான். ஆக முஸ்லிம்களுக்குரிய ஒரே ஜமாஅத் வேறு ஜமாஅத்தே இல்லை, அது ஜமாஅத்துல் முஸ்லிமீன் மட்டுமே. இது அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் அல்லவே அல்ல. அல்லாஹ் பெயரிட்டு இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய ஜமாஅத். அல் லாஹ்வின் தூதர் விட்டுச் சென்ற ஜமாஅத்துல் முஸ்லிமீனைப் புறக்கணித்து வேறு எந்த ஜமா அத்தில் இருந்தாலும் அவர்கள் 33:36 குர்ஆன் வசன எச்சரிக்கைப்படி பகிரங்கமான வழிகேட் டில் இருக்கிறார்கள். நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக்கொண்டு யாருடைய துர் உப தேசத்தைக் கேட்டு பிரிவுப் பெயரைத் தேர்ந் தெடுத்தார்களோ அவர்களைச் சபித்து ஒப்பாரி வைப்பதை 33:66-68 இன்னும் பல குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அறியலாம்.

பிரியக் கூடாது என்று கூறும் ஹதீஃத்களில் ஜமாஅத், ஜமாஅத் என்றுதான் இருக்கிறதே அல்லாமல் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று இல்லை, அதனால் வெவ்வேறு பெயர்களில் ஜமாஅத்தாகச் செயல்படலாம் என்று இந்த மவ்லவிகள் கூறுவதை 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தான் பகிரங்கமான வழிகேடு களை அழகாகக் காட்டி அவர்கள் பின்னால் அணி வகுப்பவர்களை நரகை நோக்கி நடை போட வைக்கிறான். ஜமாஅத், ஜமாஅத் என்று மட்டுமே ஹதீஃதில் சொல்லப்பட்டிருப்பதே முஸ்லிம்களுக்கு ஒரேயொரு ஜமாஅத் மட்டும் தான்; இரண்டாவது ஜமாஅத் இல்லவே இல்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது. எப்படி என்று பாருங்கள்.

ஒருவருக்கு ஒரேயொரு மகன்தான். இரண் டாவது மகன் இல்லை. இந்த நிலையில் நடை முறையில் அவருடைய மகன் என்று சொல்வார் களே அல்லாமல் பையனின் பெயரைச் சொல் லும் பழக்கம் நடைமுறையில் இல்லை. ஒரு மகனுக்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களின் இன்ன பெயரையுடைய மகன் என்று சொல் லும் கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் முக்கிய மான இடங்களில் மட்டும் பெயர் இன்ன பெயரையுடையவரின் மகன் என்று சொல்லும் பழக்கமே இருக்கிறது. அதேபோல் ஒரு திரு மண மண்டபம்; ஒரேயயாரு ஜோடிக்குத் தான் திருமணம்; மாப்பிள்ளை இன்னும் வரவில்லை. மாப்பிள்ளை இன்னும் வரவில்லை; இன்னும் வரக்காணோம் என்றுதான் பேசிக் கொள்வார் களே அல்லாமல், மாப்பிள்ளையின் பெயரைச் சொல்லிச் சொல்ல மாட்டார்கள். இரண்டு மாப்பிள்ளைகள், அல்லது இரண்டுக்கு மேல் மாப்பிள்ளைகள் இருக்கும் போதே பெயர் சொல்லிச் சொல்லும் கட்டாயம் ஏற்படுகி றது. இது நம் அனைவரும் ஒப்புக் கொள்ளும் நிலை.

இதிலிருந்து என்ன தெரிகிறது? பிரியக் கூடாது, பிரிகிறவன் ஜாஹிலியா கால மரணத் தையே தழுவுவான் போன்று காணப்படும் ஹதீஃத்கள் அனைத்திலும் ஜமாஅத், ஜமாஅத் என்று காணப்படுவதே, “”ஜமாஅத்துல் முஸ்லி மீன்” அல்லாத ஜமாஅத் முஸ்லிம்களுக்கு இல் லவே இல்லை என்பதையே உறுதிப்படுத்து கிறது. ஒவ்வொரு ஹதீஃதிலும் ஜமாஅத்துல் முஸ்லிமீன், ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று இருந்தால் மட்டுமே, ஜமாஅத்துல் முஸ்லிமீன் அல்லாத வேறு ஜமாஅத்துகளும் முஸ்லிம்க ளுக்கு இருக்கிறது போலும் என்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த வழி ஏற்படும் என் பதை மேலே எடுத்துக் காட்டிய இரண்டு உதார ணங்கள் மூலம் விளங்கலாம்.

முடிவுரை : அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரி களே நீங்கள் நேர்வழி நடந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் நாளை சுவர்க்கம் அடைய விரும் பினால், தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். உலகியல் காரணங்களுக்காக அடையாளம் தெரிய வைத்துக் கொள்ளும் தனி நபர் பெயர்கள், சங்கங் கள், அமைப்புகள் போன்ற பெயர்கள் வைத்துக் கொள்ள இஸ்லாமிய மார்க்கம் தடை செய்ய வில்லை. மார்க்கம் எதைத் தடை செய்கிறது தெரி யுமா? மறுமையில் அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் அடையச் செய்யும் எக்காரியமாக இருந்தாலும் அதாவது நபிமார்கள் செய்து காட் டிய மார்க்கப் பணியைச் செய்ய அல்லாஹ் பெயரிட்டு நபி(ஸல்) அவர் நடைமுறைப்படுத்திய “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அல்லாத பிரிவுப் பெயர்கள் இல்லவே இல்லை என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளுங்கள்.

கடந்த ஆயிரம் வருடங்களாக முஸ்லிம்களின் நடைமுறையில் இருந்து வரும் ஹனஃபி, ஷாஃபி, மாலிக்கி, ஹன்பலி போன்ற மத்ஹபுகளாக இருந் தாலும், காதிரியா, ஷாதுலியா போன்ற தரீக்காக்க ளாக இருந்தாலும், ஷிஆ, சுன்னத் வல் ஜமாஅத், இன்னும் இவைபோல் பல பிரிவுகளாக இருந்தா லும் 1988ல் கற்பனை செய்யப்பட்ட JAQH 1995ல் கற்பனை செய்யப்பட்ட TMMK, 2005ல் கற்பனை செய்யப்பட்ட TNTJ, 2009ல் கற்பனை செய்யப்பட்ட INTJ, பீ.ஜையின் வழிகாட்டலில் புற்றீசல் போல் தோன்றியுள்ள லெட்டர் பேட் இயக்கங்கள், ஊர் ஊருக்குக் கற்பனை செய்யப்பட்டுள்ள தவ்ஹீத் ஜமாஅத் , மார்க்கப்பணி அடிப்படையில் கற்பனை செய்யப்பட்டுள்ள பலபல அமைப்புகள், கமிட்டி கள், டிரஸ்ட்கள் இவை அனைத்தும் 33:36 குர்ஆன் வசன வழிகாட்டல்படி பகிரங்கமான வழிகேடுகள், நாளை நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை 33:66-68 வசனங்களை நீங்களே நேரடியாகப் படித்து விளங்கி இந்த இயக்கங்கள், பிரிவுகள், தவ்ஹீத் ஜமாஅத்து கள் அனைத்தையும் விட்டு தவ்பா செய்து மீண்டும் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனில் போய் இணைய முன்வாருங்கள். இதுவே மறுமையில் உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தரும்.

இந்த எமது உபதேசம் 51:55 இறைவாக்குச் சொல்வது போல் உள்ளத்தில் ஈமானுடையவர்க ளுக்குப் பலன் தரும். 49:14 இறைவாக்கு சொல்வது போல் உள்ளத்தில் ஈமான் நுழையாத பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு பலனளிக்காது. புகாரீ 3348, 4741, முஸ்லிம் 379 ஹதீஃதுகள் கூறுவது போல் ஒவ் வொரு ஆயிரத்திலும் ஒரேயயாரு நபரே குர்ஆன், ஹதீஃத் போதனையை ஏற்பார்கள். எஞ்சிய 1000ல் 999 பேரும் நரகை நோக்கி இட்டுச் செல்லும் இம் மவ்லவிகளுக்கு, தலைவர்களுக்குப் பின்னால் தான் அணிவகுப்பார்கள் என்பதை நன்கு அறிந்த நிலை யில் 5:67 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து மக்க ளின் ஆதரவையோ, எதிர்ப்பையோ பொருட்படுத் தாமல் குர்ஆன், ஹதீஃதில் உள்ளபடி எடுத்து வைத்துள்ளோம். நேர்வழி காட்ட எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன், அவனே பாதுகாவலன், உதவியாளன், நேர்வழி காட்டக் கூடியவன்.

Previous post:

Next post: