ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2015 ஆகஸ்ட்

MTM முஜீபுதீன், இலங்கை

ஜூன் 2015 தொடர்ச்சி……
இப்ராஹீம் (அலை)
நிச்சயமாக இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தான்.
(அல்குர்ஆன் : 37:83)

 அன்றியும், திடமாக நாமே “நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவத்தை (நபித்துவத்தை)யும் இறைநெறி நூல் களையும் ஏற்படுத்தினோம். (அவர்களில்) நேர் வழி பெற்றவர்களும் உண்டு. எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக பாவிகளாக இருந்தனர். (அல்குர்ஆன் : 57:26)

 ஆகவே நாம் பாவிகளாக அல்லாது முஸ்லிம்களாக வாழ வேண்டும். மேலும் அல்லாஹ் கூறுவதை அவதானியுங்கள்.

 இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர் களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. தம் சமூகத்தாரிடம் அவர்கள், “”உங்களை விட்டும் இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றை விட்டும். நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம். உங்களையும் நாங்கள் நிராகரித்து விட் டோம். அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி “”அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது. ஆயினும் உங் களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன் னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன்மாதிரி இருக்கின்றது. அன்றியும், அவர் கூறினார்) “”எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக் கின்றோம் (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம். மேலும் உன்னிடமே எங்களது மீளுதலும் இருக்கிறது” (அல்குர்ஆன் : 60:4)

இப்ராஹீம்(அலை) அவர்கள் எப்போதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத ஒரு முஸ்லிம் ஆகவே வாழ்ந்தார். இதனால் அவர் பல துன் புறுத்தல்களுக்கும் ஆளானார். அவரை நிராகரிப்பாளர்கள் நெருப்புக் குண்டத்திலும் போட் டனர். ஆனால் அல்லாஹ் நெருப்பைக் குளிர வைத்து இப்ராஹீம்(அலை) அவர்களைப் பாதுகாத்தான். அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர் மைந்தர்களான இஸ்மாயீல்(அலை), அவர்களின் சகோதரர் இஸ்ஹாக்(அலை) அவர்களையும் நபிமார்களாகத் தேர்ந்தெடுத் தான். அவர்களுக்கு நேர்வழியும் காட்டினான். அவர் சந்ததிகளிலும் அநேக நபிமார்களைத் தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டினான்.

இஸ்மாயீல் (அலை)
இவர் இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் ஆவார். இவரின் வழித் தோன்றலிலேயே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள். இவர் ஓர் இறைத் தூதராக இருந்தார்.

இப்ராஹீமும், இஸ்மாயீலும்(கஅபா என் னும்) இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “”எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக. நிச்சய மாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்.)

“”எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்கு வாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தி னரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப் பாயாக. நாங்கள் உன்னை வழிபடும் வழிகளை யும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கரு ணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன் னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப் போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்”.

“”எங்கள் இறைவனே! அவர்களிடையே உன் னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு இறைநெறி நூலையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மைப் படுத் தக்கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாகா நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோ னாகவும் இருக்கின்றாய்” (அல்குர்ஆன்: 2:127-129)

இஸ்மாயீல் (அலை) அவர்களும் ஓர் இறை வனை மட்டுமே வணங்க வேண்டும். என்றே போதித்தார்கள். ஆனால் மக்காவில் வாழ்ந்த குறைஷ் சிலை வணங்குவோர் கஅஃபாவில் இப்ராஹீம்(அலை) இஸ்மாயீல் (அலை) ஆகி யோர்களுக்கே சிலை வைத்து வணங்கினார்கள். இதனை இஸ்மாயீல்(அலை) அவர்களின் வம்சத்தில் வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனை படித்துப் போதனை செய்தார்கள். கஅஃபாவில் இருந்த எல்லாச் சிலைகளையும் அகற்றி தூய்மைப் படுத்தினார்கள்.

இஸ்ஹாக்(அலை) யாக்கூப்(அலை)
இஸ்ஹாக்(அலை) அவர்கள் இறைத் தூதராகவும், இப்ராஹீம்(அலை) அவர்களின் மைந்தனாகவும், இஸ்மாயீல்(அலை) அவர்களின் சகோதரனாகவும் இருந்தார். இவருடைய வம்சத்தில் அனேக இறைத்தூதர்கள் தோன்றி னர். இவர் சந்ததியிலேயே யாக்கூப், யூஸுஃப், இஸ்ராயீலின் சந்ததியினர். மூசா, ஈசா போன்றோர் தோன்றினர். அவதானியுங்கள்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே (இப்ராஹீமாகிய என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கை யும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்ச யமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன். (என்றார்) (அல்குர்ஆன் : 14:39)

யூதர்களும், கிறித்தவர்களும் இப்ராஹீம், இஸ்மாயீல், யாக்கூப் மற்றும் அவர் சந்ததிகளும் யூதர்கள் எனவும், கிறித்தவர்கள் எனவும் அவர வர்கள் கற்பனை செய்து கூறுகின்றனர். அதனை அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் மறுப்பதை அவதானியுங்கள்.

வேதமுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறித்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே (இதைக் கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?

உங்களுக்கு சிறிது ஞானம் இருந்த வி­யங் களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள் (அப்படியிருக்க) உங்க ளுக்கு சிறிது கூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான் நீங்கள் அறியமாட் டீர்கள்.

இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறித்த வராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர் மையான முஸ்லிமாக இருந்தார். அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. (அல்குர்ஆன் : 3:65-67)

அன்று மக்காவில் வாழ்ந்த யூதர்களும், கிறித்தவர்களும் வரலாற்றுக் காலங்களையும், ஆதாரங்களையும் கருத்தில் கொள்ளாது இப்ராஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை), இஸ்ஹாக்(அலை), யாக்கூப்(அலை) போன்ற இறைத்தூதர்களை, அவர்கள் யூதர்களாக, கிறித் தவர்களாக இருந்ததாக கூறி வந்தனர். இதற்கு அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் மேலும் விளக்குவதைப் பாருங்கள்.

“”இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக் கும், யாஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறித்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக!

“”(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரி யுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விட மிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனை விட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பாராமுகமாக இல்லை” (அல்குர்ஆன் : 2:140)

ஒவ்வொரு இறைத் தூதரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபடக்கூடிய முஸ்லிமா கவே வாழவேண்டும் என்றே வலியுறுத்தினர். இப்ராஹீம்(அலை) அவர்களும், யாஃகூப் (அலை) அவர்களும் தமது குமாரர்களுக்கு உபதேசம் செய்தது யாது? என அவதானியுங்கள்.

இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து(உபதேசம்) செய்தார்; யாஃகூபும் (இவ்வாறே செய்தார்) அவர் கூறினார். “”என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன் மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்”.

யாஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங் கள் சாட்சிகளாக இருந்தீர்களா? அப்போது அவர் நம் குமாரர்களிடம் “”எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்ட தற்கு, “”உங்கள் இறைவனை, உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனை, ஒரே இறைவனையே வணங் குவோம். அவனுக்கே (முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
(அல்குர்ஆன் : 2: 132-133)

யூஸுஃப்(அலை)
யூஸுஃப்(அலை) அவர்கள் பற்றிய அழகிய வரலாறு அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ் அவருக்கு கனவுகளின் விளக்கங்கள் அளிக்க கற்றுக் கொடுத்தான். அவர் மிக அழகுடையவராக இருந்தார். சில பெண்களின் சதியினால் அவர் சில காலம் சிறையிலும் வாழ்ந் தார். அப்போது அவர் இரு கைதிகளுக்கு கூறிய உபதேசத்தினை அவதானியுங்கள்.
(யூஸுஃப் நபி கூறினார்) “”நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யாஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்று கிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணை வைப்பது எங்களுக்குத் தகுமானதல்ல. இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும்; எனினும் மனிதர்க ளில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை”.

“”சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளு கின்ற ஒருவனான அல்லாஹ்வா?”
“”அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவருக்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளை யிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்க மாகும். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை”
(அல்குர்ஆன் 12:38-40)

யூஸுஃப்(அலை) அவர்களின் வரலாறு மிக அழகாக அல்குர்ஆனில் விபரிக்கப்படுகின்றது. அவதானியுங்கள். அவரும் ஓர் இறைத்தூதராக இருந்தார். அவர் தனது போதனைகளில் ஓர் இறைவனையே வணங்க வேண்டும் எனப் போதனை செய்தார்.

லூத்(அலை)
லூத்(அலை) அவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு அண்மைக் காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர் ஆவார். அவர் காலத் தில் வாழ்ந்த சமுதாயத்தினர் முதல் முதல் பெண்களை விடுத்து ஆண்களிடம் தமது இச்சையைத் தீர்ப்பதற்கு நாடிச் சென்றனர். இப்பாவமான மானக்கேடான செயற்பாட்டை லூத்(அலை) அவர்கள் கண்டித்தனர். ஆனால் மக்கள் லூத்(அலை) அவர்களின் எச்சரிக்கை யைப் புறம் தள்ளினர். அதனால் லூத் (அலை) அவர்களையும், அவர்களை விசுவாசித்தவர்கள் தவிர்த்த நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் வின் தண்டனை விதியாக்கப்பட்டது. அவரது குடும்பத்தில் அவர் (மனைவி) கிழவி தவிர்ந்த மற்ற குடும்பத்தினர் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்த சமுதாயத்தின் மீது அல்லாஹ் கல்மாரி பொழியச் செய்து அழித்தான். குற்றம் செய்த சமுதாயத்திடம் லூத்(அலை) அவர்கள் சொல்வதை அவதானியுங்கள்.

லூத்துடைய சமூகத்தாரும்(இறை) தூதர் களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத். “”நீங்கள் (இறைவனை) அஞ்சமாட்டீர்களா?” என்று கூறியபோது, “”நிச் சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதராவேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், எனக்கும் வழிப்படுங்கள். மேலும் இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. நிச்சய மாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கின்றது”.

“”உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா? இன்னும், உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டுவிடுகிறீர்கள். இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்”.

அதற்கவர்கள் : லூத்தே (இப்பேச்சையயல் லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படு வீர்” எனக் கூறினர். அவர் கூறினார். “”நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன். என் இறைவனே! என்னையும் என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கின்ற(தீயவற்றிலிருந்து காப்பாயாக! (எனப் பிரார்த்தித்தார்).”

அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும் பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம். (அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின்தங்கி விட்ட கிழவியைத் தவிர,
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம். (அல்குர்ஆன் : 26:160-172)

இவ்வாறு அல்குர்ஆன் வசனங்களை படித் துக்காட்டி, முன்சென்ற இறைத்தூதர்களின் ஓர் இறைக் கொள்கையை முன் வைத்து, அல்லாஹ் வின் கட்டளையின்படி போதனை செய்ததினா லேயே இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் துன்புறுத்தப் பட்டனர். அவர்களைக் கொலை செய்ய முற் பட்டனர். மக்காவிலிருந்து மதீனாவுக்குத் துரத் தப்பட்டனர். அவர்களுக்கு எதிராக வாளேந்தி யுத்தம் செய்ய வந்தனர். ஆகவே, அன்று வாழ்ந்து சென்ற இறைத்தூதர்கள் அசத்திய பல தெய்வக் கொள்கைகளுக்கு எதிராக மேற் கொண்ட போதனைகளை அவதானியுங்கள்.

ஹூத் (அலை)
ஆது கூட்டத்தினருக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஹூத்(அலை) அவர்கள் ஆவர். ஹூத்(அலை) அவர்களின் சமூகத்தினர் உயர மான இடங்களில் வீணாக சின்னங்களை நிர்மானித்தனர். நிரந்தரமாக வாழ்வதற்கு வந்த இடம் போல் பெரிய மாளிகைகளை அமைத்து வாழ்ந் தனர். அவர்களுக்கு அல்லாஹ் கால்நடைகளை யும், பிள்ளைகளையும் வழங்கி உதவியதுடன், அவர்களுக்கு தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் வழங்கி உதவினான். ஆனால், அவர்கள் அல்லாஹ்வை மறந்தவர்களாக வாழ்ந்தனர். அவர்கள் இறை தூதரைப் பொய்ப்பித்தார்கள். ஆகவே அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை இறங்கியது. அவதானியுங்கள்.

இன்னும், அது கூட்டத்தாரிடம் அவர்களு டைய சகோதரர் ஹூதை(நபியாக அனுப்பி வைத்தோம்) அவர், “”என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள், அவனை யன்றி உங்களுக்கு வேறு நாயன் இல்லை. நீங் கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா? என்று கேட்டார்.

அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர் களின் தலைவர்கள், (அவரை நோக்கி) “”நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக் கிடப்பவராகவே) காண்கின்றோம். மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒரு வராகக் கருதுகிறோம்” என்று கூறினர்.

“‘நான் என் இறைவனுடைய தூதையே உங் களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கிறேன்” (என்றும் கூறினர்)

“”உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய் வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள் ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவுகூறுங்கள். எனவே அல் லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர் கள்” (என்றும் கூறினார்.)

அதற்கு அவர்கள் “”எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டுவிட்டு, அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என் பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்து வதை எம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.

அதற்கு அவர், “”உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டு விட்டன. அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்தப் பெயர்கள் விசயத்திலேயா என்னிடத்திலேயே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள் (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். நிச்சயமாக நானும் உங்க ளோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்த வர்களையும், நம்முடைய அருளைக் கொண்டு காப்பாற்றினோம். நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்த வர்களை நாம் வேரறுத்து விட்டோம்.

Previous post:

Next post: