ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2015 அக்டோபர்

MTM. முஜீபுதீன், இலங்கை
செப்டும்பர் 2015 தொடுர்ச்சி……
துல்கிப்லு(அலை)
இவர் ஓர் அல்லாஹ்வின் அடியானும், நபியாக வும் இருந்தார். இன்னும், நபியே! நினைவு கூர்வீராக! இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல் கிஃப்லை யும் இவர்கள் எல்லோரும் நல்லோர்களில் உள்ளவரா கவே இருந்தனர். (அல்குர்ஆன்: 38:48)
யூனுஸ்(அலை)
இவர் அல்லாஹ்வின் நல்ல அடியானும், இறைத் தூதருமாவார். அவர் பற்றி அல்குர்ஆனில் 37:139-149, 21:87-88.
இல்யாஸ் (அலை)
இவர் அல்லாஹ்வின் நல்ல அடியானும், இறைத் தூதரும் ஆவார். இல்யாஸ்(அலை) அவர்கள் சிலை வணக்கம் புரிந்த மக்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் அவர் பற்றி விளக்குவ தைப் பாருங்கள்.
மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல் (தூத ராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம். அவர் தம் சமூகத்தாரிடம்; “நீங்கள் (இறைவனை) அஞ்சமாட் டீர்களா?’ என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக)
நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு’ (என்னும் சிலையை) வணங்குகி றீர்களா? அல்லாஹ் தான் உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறை வனும் ஆவான்.
ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள். ஆகையால், அவர்கள் (மறுமையில்) இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாகக் கொண்டு வரப்படு வார்கள். அல்லாஹ்வின் தூய அடியார்களைத் தவிர (இவர்களுக்கு நற்கூலியுண்டு)
(அல்குர்ஆன் : 37:123-128)

அல்லாஹ் மக்களுக்கு நேர்வழி காட்ட அனுப்பிய எந்த இறைத் தூதர்களும் தம்மையோ அல்லது சிலை களையோ, அல்லாஹ்வுக்கு நிகராக வைத்து வணங்கும் படி பணிக்கவில்லை. இவை யாவும் çத்தானின் தூண்டுதலினால் அறிவில்லாத மூதாதையரினால் உரு வாக்கப்பட்ட பாவச் செயல்களாகும். அல்லாஹ் இறுதி இறைத் தூதர் மூலமாக அல்குர்ஆனை ஓதிக் காட்டவைத்து விளக்குகிறான். பூமியில் வாழ்ந்த எல்லா இறைத் தூதர்களினதும் வரலாறுகள் ஓர் இறை வனையே வணங்க வேண்டும் என்றே வலியுறுத்து கின்றன. அறிவுமிக்க மக்களே அல்லாஹ்வுக்கு இணை, துணை இல்லை என்பதை நினைவில் கொண்டு வாழ, அல்குர்ஆனை அவதானித்து நேர்வழி அடையுங்கள். சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் வணங்கும் இறந்து போன அல்லாஹ்வின் படைப்புகளுக்கு பார்க்க முடியுமா? கொசுவைக் கூட படைக்கும் ஆற்றல் அவற் றுக்கு இருக்கின்றனவா? கொசு அச்சிலைகள் மீது இருப்பின் அதனை விரட்டத்தான் அதனால் முடி யுமா? நரகில் வீழ்ந்து விடாது சிந்தியுங்கள்.

அல்யஸவு(அலை)
அவர் அல்லாஹ்வின் நல்ல அடியாரும், இறைத் தூதரும் ஆவார்கள்.
ஸகரிய்யா(அலை)
இவர் அல்லாஹ்வின் நல்அடியாரும், நபியும் ஆவார். இவர் மர்யம்(அலை) அவர்கள் வாழ்ந்த காலத் தில் வாழ்ந்தார்கள். தனது வயது முதிர்ந்த காலத்திலும் தமக்குப் பிள்ளை கிடைக்கவேண்டும் என்பதற்காக அல்லாஹ்வைப் பிரார்த்திப்பவராக இருந்தார்.
யஹ்யா(அலை)
ஸகரிய்யா(அலை) அவர்களின் தள்ளாத வயதில் அவருக்குக் கிடைத்த மகன் ஆவார். இவரும் அல் லாஹ்வின் அடியாரும் நபியும் ஆவார்கள். அவர் அல் லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்ப வராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணியவராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருந்தார்.

ஈசா(அலை)
ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், ஓர் இறைத் தூதரும் ஆவார்கள். அவர் தாய் பெயர் மரியம்(அலை) ஆகும். அல்லாஹ் ஆதம் (அலை) அவர் களை தாயும், தந்தையும் இன்றிப் படைத்தான். ஆனால் அவரை யாரும் அல்லாஹ்வின் மகன் எனக் குறிப்பிடுவதில்லை. எல்லோரும் மனிதர்களின் ஆதி பிதா ஆதம் என்றே கூறுகின்றனர். அல்குர்ஆனும் அவ்வாறே கூறுகின்றது. அதேபோல் ஈசா(அலை) அவர்கள் தந்தை இன்றிப் படைக்கப்பட்டார்கள். அவர் குழந்தையாக இருக்கும்போது தான் ஒரு நபி என மக்களுக்குக் கூறினார். பல அற்புதங்களை அல்லாஹ் வின் ஆணையினால் செய்து காட்டினார். இதனால் கிறித்தவர்கள் இவரை அல்லாஹ்வின் குமாரன் எனக் கூறுகின்றனர். அல்லாஹ் தனித்தவன் என்ற அவன் பண்புக்கு இக் கருத்து மாற்றமானதாகும். ஆனால் யூதர்கள் அவரைத் தப்பாக பிறந்தவர் என அவர் தாய் மீது தவறாக அவதூறு சுமத்துகின்றனர். கிறித்தவர் களும், யூதர்களும் சொல்லுகின்ற இந்தக் கூற்றை அல்குர்ஆன் மறுப்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். ஈசா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் சங்கையான ஓர் இறைத் தூதராகவே வாழ்ந்தார். அல்லாஹ்வை மட் டுமே வணங்கி வழிபடவேண்டும் என்றே கூறினார்.

முஹம்மது (ஸல்)
முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் நல் அடி யாரும், இறுதி இறைத் தூதரும் ஆவார்கள். அவருக்குப் பின் எந்த இறைத் தூதரும் புதிதாக பிறந்து வரமாட் டார்கள். இதனால் அவர்களுக்கு இறக்கி அருளப் பட்ட அல்லாஹ்வின் இறுதி இறைநெறி நூலான அல் குர்ஆன் மீது நம்பிக்கை கொள்வது அவசியமாகின்றது. இதனால் மக்கள் நேர்வழி பெறும் பொருட்டு, மனி தர்களின் எந்தக் கூட்டல் குறைவும் இடம் பெறாத முறையில் அல்லாஹ்வினால் இறுதி நெறிநூலான அல்குர்ஆன் பாதுகாக்கப்படுகின்றது. அல்லாஹ் நாடும்  காலம் வரை அது பாதுகாக்கப்பட்டதாக இருக்கும்.

அத்துடன் அல்குர்ஆனுக்கு முன், முன்னைய கால மக்களுக்கு காலத்திற்குக் காலம் பல இறைநெறி நூல்கள் இறக்கி அருளப்பட்டன. அதனால் அந்தந்த கால இறைத் தூதர்களின் வழிகாட்டலின்படி அக்கால விசுவாசிகளுக்கு, அந்த இறைநெறி நூல்களைக் கொண்டு நன்மையையும், தீமையையும் பிரித்தறிந்து சுவர்க்கம் அடையக்கூடிய நேர்வழியில் செல்ல முடிந் தது. ஆனால் அந்த இறைத்தூதர்களுக்குப் பின் வந்த மக்கள், குருமார்கள், அரசர்கள், தலைவர்கள் çத்தா னின் தூண்டுதலினால் பல இணை வைக்கும் செயற் பாடுகளையும், மூடச் சடங்குச் சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கைகளையும் அந்த இறைநெறி நூல்களில் உள் நுழைத்து விட்டனர். இதனால் அந்த இறைநெறி நூல்களில் தப்பும், தவறுகளும், முரண்பாடுகளும் நிறைந்து நரகிற்கு வழிகாட்டும் அசத்திய வேதமாக மாற்றப்பட்டு விட்டன. இதனால் பழைய அசத்தியம் கலந்த வேதங்கள் ரத்துச் செய்யப்பட்டு விட்டன. தற் போது அல்லாஹ்வினால் மக்களுக்கு நேர்வழி காட்ட இறுதியாக அனுப்பப்பட்ட அல்குர்ஆன் மட்டுமே அதன் தூய வடிவில் அதன் இயற்கைத் தன்மை மாறா மல் இருக்கிறது. இதன் மூலமே அல்லாஹ்வின் வழி காட்டலுக்கமைய இறுதி இறைத் தூதர் மக்களை நேர் வழி பெற வழிகாட்டினார். அல்குர்ஆன் என்னும் சத் திய இறைநெறி வஹி(இறைச் செய்தி) மூலம் ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் அல்லாஹ்வினால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கி அருளப்பட்டது. இதை விசுவாசிப்பது முஸ்லிம் ஆக வாழ்வதற்கு பிரதான அடிப்படையாகும். இதனை மறுப்பது இறை நிரா கரிப்பாகும். இந்நிராகரிப்பு çத்தானின் துணை யோடு நரகை அடையவே வழிகாட்டும். மனிதர் களைப் படைத்த அல்லாஹ்தான் சகல மக்களையும் நரகிலிருந்து பாதுகாக்க நேர்வழி அடைய வழிகாட்ட வேண்டும்.

அன்று அல்குர்ஆன் முஹம்மது(ஸல்) அவர்க ளுக்கு அருளப்படுவதற்கு முன் மக்களிடம் இறை நம் பிக்கை இருந்தது. ஆனால், அன்று அல்லாஹ்வுடன் அல்லது தேவனுடன் அல்லது பகவானுடன் அல்லது இறைவனுடன் வேறு கற்பனைக் கடவுள்கள் இணைக் கப்பட்டு வணங்கப்பட்டது. பல மனிதர்கள் கடவு ளாக கற்பனை செய்யப்பட்டனர். இவர்களிடம் தமது தேவைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்டது. பல சிலைகளுக்கு அல்லது நபிமாரின் அல்லது நல்லடியார் களின் அடக்கத் தளங்களுக்கு முன் அவர்களின் பெய ரில் நேர்ச்சை செய்து பலியிடல், பூஜித்தல், வணங்கு தல், பிரார்த்தித்தல், இணை வைக்கும் அடிப்படையில் உடலை வதைத்துக் கொள்கின்ற மடமையான சடங்கு கள், சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அல்லாஹ் அனுமதிக்காத இடங்களை புண் ணிய இடங்களாகத் தாங்களே, ஒவ்வொரு ஊர் மக்க ளும் உருவாக்கிக் கொள்ளுதல், அவ்விடங்களை விழா எடுத்து இணைவைத்து வணங்கி வழிபடும் இடங் களாக பல வடிவங்களில் மாற்றிக் கொண்டனர்.

இவ்வாறான சகல நம்பிக்கைகளையும் çத் தானிய இணைவைக்கும் செயற்பாடுகளையும் தடுக் கவே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். சகல இறைத்தூதர்களும், அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் பெரும் பாவம் என்றே கூறியுள்ளனர்.அல்குர்ஆன்
இதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இறைத் தூதர்களுக்குப் பின் வந்த குருமார்க ளும் அரசர்களுமே அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மனித தெய்வங்களை உருவாக்கியவர்களாவர். இதனை சத்திய உண்மைகளை வெளிப்படுத்தக் கூடிய வரலாற்று ஆசிரியர்களினால் உண்மைப்படுத்த முடியும். அல்குர்ஆன் இந்த உண்மைகளை அப்படியே வெளிப்படுத்தியுள்ளது. அவதானிப்போர் உண்டா? சிந்தியுங்கள்.
அன்று உலகில் பல மதங்கள் காணப்பட்டன. இறை நம்பிக்கை அம்மக்களிடம் இருந்தது. ஆனால் பல தெய்வ வழிபாடும் கலந்திருந்தது. உதாரணமாக இந்தியாவில் மதநம்பிக்கையுடைய மக்கள் வாழ்ந்த னர். வேதத் தொகுப்புகளும் அவர்களின் கைவசம் இருந்தன. அதில் ஓர் இறைவனையே வணங்க வேண்டும் என்ற வாசகமும் இருந்தது. இந்து மதத்தின் பிரம்ம சூத்திரம் கூறுவதை அவதானியுங்கள்.
ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்னே நாஸ்தே கின்ஜன்
பொருள் : இறைவன் ஒருவனே, வேறு இல்லை. இல்லவே இல்லை.
மேலும் (ரிக்வேதம் : 8:1:8) சொல்வதைப் பாருங்கள்.

நண்பர்களே! தெய்வீகத் தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டுமே வணங்குங்கள்.
மேலும் அவதானியுங்கள், எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகின்றார்களோ, அவர்கள் இரு ளில் பிரவேசிக்கிறார்கள். இன்னும் எவர்கள் மனித னால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்கு கிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்கு கின்றார்கள். (யசூர்வேதம் : 40:9)
இவ்வாறு இந்திய ஆதி வேதத் தொகுப்புகளில் காணப்படுகின்ற போது, எவ்வாறு அவர்களின் வேதத் தொகுப்புகளில் இதற்கு முரணான பல தெய்வ உருவ வழிபாடுகள் உட்புகுந்தன? இது çத்தானினதும், குருமார்களினதும் திருவிளையாடல் அல்லவா? இதன் காரணமாக, அல்லாஹ் இந்த வேதங்களை ரத்துச் செய்து, மனித சமுதாயத்தை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்க தொடர்ந்து இறை நெறிநூல்களை இறக்க வேண்டி இருந்தது அல்லவா? இவ்வாறு இறுதியாக இறக்கப்பட்டது. அல்குர்ஆன் அல்லவா? சிந்தித்து, ஓர் இறைவனை மட்டும் வணங்கி வழிபடக் கூடாதா? உங் கள் கைவசம் வைத்துள்ள வேதங்களில் இறைத்தூதர் கள் யார்? எங்கே தொலைத்தீர்கள்? அவர்களின் பெயர்களை மக்களின் மனங்களிலிருந்தும் மறைத்த வர்கள் யார்? பல தெய்வக் கொள்கையை உட்புகுத்தி யவர்களா? உங்கள் வேதங்களில் அன்று நிகழ்ந்த பிரள யம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றதல்லவா? “”நூஹ்’’ என்ற பெயர் உங்கள் பழைய வேதங்களில், பல இடங்களில் காணப்படுகின்றது அல்லவா? அவர் யார்? இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆனில் தேடுங்கள் அறிந்து கொள்ளலாம். பார்ப்போர் உண்டா? சிந்தியுங்கள்.

இதே போல் யூதர்களும், கிறித்தவர்களும் வாழ்ந் தார்கள். அவர்கள் இந்திய ஆதிவேதங்களை வைத்துள் ளவர்களைப் போல் அல்ல. அவர்கள் பைபிள் என அழைக்கும் பழைய, புதிய வேதத் தொகுப்புகளை வைத்திருப்பதுடன், சில இறைத் தூதர்களை அறிந்து
வைத்துள்ளனர். ஆனால் அந்த இறைத் தூதர்கள் பேசிய மொழிகளில் அந்த வேதத் தொகுப்புகள் இல்லை. இந்த பைபிள்கள் இறைத் தூதர்களை சந்தித்து விசுவாசித்தவர்களால் எழுதப்படவில்லை. பைபிள்களில் கிரேக்க மத நம்பிக்கைகளின் சாயல் அதிகமாகக் காணப்படுகின்றது. ஒவ்வொரு காலத்தி லும் எழுதப்பட்ட பைபிள் தொகுப்புகளில் பல முரண் பாடுகள் காணப்படுகின்றன.
யூதர்களும், கிறித்தவர்களும், அல்லாஹ்வை தேவன்(கர்த்தர்) அல்லது அல்லேலூயா அல்லது ஆங்கி லத்தில் றூலிd எனவும் அழைப்பர். ஆனால் யூதர்களும், கிறித்தவர்களும் தேவனுக்கு சிலை வைத்து வணங்கு வதில்லை. வானம் பூமி உயிரினங்கள் யாவற்றையும் படைத்துப் பரிபாலிப்பவன் தேவன் என்றே நம்புகின்ற னர். இப்படி ஏக இறைவனை மட்டுமே வணங்கவேண் டும். எனவே அவர்கள் விசுவாசிக்கும் இறைத் தூதர்களும் போதனை செய்துள்ளனர். பைபிள் பழைய, புதிய தொகுப்புகளிலிருந்து சில வசனங்கள் அவதானியுங்கள்.
“”இஸ்ரவேல் கேள். நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (பைபிள் உபாகமம் : 6:4)
நானே தேவன், வேறொருவரும் இல்லை. நானே தேவன் எனக்கு சமானமில்லை. (பைபிள் ஏசாயா : 46:9)
புதிய ஏற்பாடு என்ன சொல்கிறது அவதானியுங்கள்.
இஸ்ரவேல் கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (பைபிள் : மார்க்கு12:29)
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. (யோவான் : 1:18)

இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள் இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் யூதர்கள் ஈசா (அலை) அவர்களையும், இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் விசுவாசிப்ப தில்லை. மூஸா(அலை) அவர்களை விசுவாசிக்கின் றனர். ஆனால் அவர்களின் வேதத்தில் ஈசா(அலை) அவர்கள் பற்றியும், முஹம்மது(ஸல்) அவர்களின் வருகை பற்றி குறிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்வதில்லை. அத்துடன் உஸைர்(அலை) அவர் களை அல்லாஹ்வின் மகன் என கூறி வணங்குகின் றனர். அதே போல் ஈசா(அலை) அவர்கள் அல் லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் என வலியுறுத் தியுள்ளார்கள். ஆனால் கிறித்தவர்கள் ஈசா(அலை) அவர்களை அல்லாஹ்வின் மகனாகவும், அவர் தாயை அல்லாஹ்வின் மனைவியாகவும் கற்பனை செய்து அவர்களுக்கு சிலைகள் வைத்து வணங்குகின்றனர். அந்த அடிப்படையில் யூதர்களும், கிறித்தவர்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து வணங்குகின்றனர். இது பெரும் பாவமாகும். இத்துடன் யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் வேதங்களுக்கு மாற்ற மாக அவர்களின் குருமாரும், பாதிரியார்களும் மூஸா (அலை), ஈசா(அலை) சொன்னதற்கு மாற்றமாக சடங்கு சம்பிரதாயங்களை அறிமுகப்படுத்தும்போது, அல்லது இறைநெறி நூல்களை மாற்றும் போது, இறை தூதர்களை புறந்தள்ளி பாதிரிமார்களையும், சந்நியாசி களையும் பின்பற்றுகிறார்கள். இதனை அல்குர்ஆன் இணை கற்பிக்கும் வணக்கமாக குறிப்பிடுகின்றது.

(9:31) ஆகவே இவ்வாறான தவறான வழிபாடுகளை நீக்கி மக்களுக்கு நேர்வழியைக் காட்டவே இறுதி இறை நெறியாக அல்குர்ஆனும், இதை விளக்கும் இறைத் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களும் அனுப் பப்பட்டார்கள். இறுதி நபி(ஸல்) பற்றி முன்னைய வேதங்களில் இருப்பதை அல்குர்ஆன் சுட்டிக் காட்டுவதை அவதானியுங்கள்.

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக் கின்றார். அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்க வர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்ப வர்களாகவும் அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளை யும் (அவனுடைய) திருப் பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும், அவர்களை நீர் காண்பீர். அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாள மிருக்கும். இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதார ணமாகும். இன்ஜீலிலுள்ள அவர்களின் உதாரணமா னது. ஒரு பயிரைப் போன்றது. அது தன் முளையைக் கிளப்பி(யபின்) அதை பலப்படுத்துகிறது. பின்னர் அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கி றது. இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோபமூட்டுகிறான். ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான(நல்ல) அமல்கள் செய்கி றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 49:29)

இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் பற்றிய முன் அறிவிப்புகள், செய்திகள் யூதர்கள், கிறித் தவர்கள் வைத்திருக்கும் வேதத் தொகுப்புகளிலும், இந்தியாவிலுள்ள வேதத் தொகுப்புகளிலும் காணப் படுகின்றன. இதனை நாம் முன்னமே அவதானித்தோம்.
அன்று வாழ்ந்த குறை´ நிராகரிப்பாளர்கள் அல் லாஹ்வைப் பற்றி அறிந்தே இருந்தனர். அல்லாஹ் வுக்கு யாரும் சிலை அமைக்கவில்லை. இந்த வானம் பூமியைப் படைத்தவன் யார் எனக் கேட்பின் அவர்கள் அல்லாஹ் என்றே கூறுவர். மழை பெய்விப்பவன், உணவளிப்பவன், நம்மை இரட்சித்துப் பாதுகாப்ப வன் அல்லாஹ் என்றே கூறினர். ஆனால் அவர்கள் எங்கு எல்லாம் மக்கள் சிலை வைத்து வணங்குவதைக் கண்டார்களோ அவற்றையயல்லாம். அல்லாஹ்விடம் தம்மை நெருக்கமாக்கும் வக்கீல்களாக கருதி குட்டி தெய்வங்களாக வைத்து வணங்கி வந்தனர். அந்த மக்களுக்கு வேத அறிவு இருக்கவில்லை. வேதங்களும் அவர்களிடையே காணப்படவில்லை. அவர்களின் மதங்களிலும் çத்தான் உருவாக்கியிருந்த மெளட் டீக நம்பிக்கைகள் காணப்பட்டனர். இந்த மெளட்டீக இருளை நீக்கி அல்லாஹ் நேர்வழியை அகில உலகுக் கும் ஏற்படுத்தவே இறுதி இறைத்தூதராக முஹம்மது (ஸல்) அவர்களையும், அவர் மூலமாக நன்மை தீமை யையும் பிரித்தறிய அல்குர்ஆனையும் இறக்கி வைத்து நேர்வழி காட்டினான். அல்குர்ஆனைப் பார்த்துச் சிந் திப்போர் உண்டா? அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து, அவனின் பண்புகளை அறிந்து, உண்மை இறைவனை அறிந்து கொள்வோர் உண்டா? சிந்தியுங்கள்!
(இன்V அல்லாஹ் தொடுரும்…)

ரிக்வேதம் : புத்தகம் :1, வேதவரி:13 மந்திரம்:3 ரிகவேதம் : புத்தகம் :1, வேதவரி :18
மந்திரம் : 9 ரிக்வேதம் : புத்தகம்:1 வேதவரி : 106 மந்திரம், 4 ரிக் வேதம் : புத்தகம் : 1, வேதவரி : 142 மந்திரம், 3: ரிக்வேதம் : புத்தகம் : 2, வேதவரி :3 மந்திரம் : 2, ரிக் வேதம், புத்தகம் : 5 வேதவரி : 5 மந்திரம் : 2 ரிக்வேதம்: புத்தகம் : 7, வேதவரி : 2 மந்திரம் :2 ரிக் வேதம் : புத்தகம் 10, வேதவரி: 64 மந்திரம் :3 ரிக் வேதம், புத்தகம் : 10, வேதவரி : 182 மந்திரம் :2, யஜுர் வேதம் : அத்தியாயம் : 21 வசனம் : 31 யஜுர் வேதம் : அத்தியாயம் : 21, வசனம் : 55 யஜுர் வேதம்: அத்தியாயம் : 20 வசனம் : 37 யஜுர் வேதம், அத்தியாயம் : 20, வசனம் : 57, யஜுர் வேதம் : அத்தி யாயம் : 28, வசனம் :2 யஜுர் வேதம் : அத்தியாயம் :28 வசனம் : 19, யஜுர் வேதம் : அத்தியாயம் : 28, வசனம் :42 இன்னும் நரங்கா ஒட்டகத்தில் பயணிப்பார் என்று அதர்வன வேதம் புத்தகம் 20, வேதவரி : 127இல் சொல்லப்பட்டு உள்ளது.
முஹம்மத் (நரங்கா) நபிகளார்தான் ஒட்டகத்தில் பயணிப்பவராக இருந்தார். எந்த ஒரு இந்திய ரி´யும் ஒட்டகத்தில் பயணிக்க வில்லை. ஏன் என்றால் மனுதர்மம் அத்தியாயம் 11 வசனம் 202 ஒரு பிராமணன் கழுதையிலோ, ஒட்டகத்திலோ பயணிக்கக் கூடாது என்கிறது அதர்வன வேதம் புத்தகம் 20 வேதவரி 24ல் புகழுக்கு உரியவர் எதிரிகளை சண்டை இடா மல் வீழ்த்துவார் என்று சொல்லப்பட்டு உள் ளது. முஹம்மத் நபிகளார் மக்கா வெற்றியின் போது எதிரிகளை சண்டையே போடாது வீழ்த் தினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சாம வேதம் உத்தர்சிக் மந்திரம் 1,500இல் அஹ்மதிற்கு நிரந்தர சட்டம் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. நிரந்தர சட்டம் என்பது குர்ஆனின் ரியா சட்டமாகும். இதுவே இறுதியான சட்டம். அந்தச் சட்டத்தை மாற்ற வேறு சட்டங்கள் வராது. அஹ்மத் என் பது நபிகளாரின் இன்னொரு பெயர் ஆகும்.

இங்கு அஹ்மத் என்று ஒன்றும் இல்லை. ஆனால் “அக்மடி’ என்றால் “என்னுடைய தந்தை’ என்று பொருள்படும். மொழிபெயர்ப் பாளர்கள் “”அஹ்மத்’’ என்ற வசனத்தையும் “”என் னுடைய தந்தை’’ என்று மொழிபெயர்த்துள்ள னர். “”அஹ்மத்’’ என்கிற வசனம் பின்வரும் இடங்களிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. சாம வேதம், இந்ரா, அத்தியாயம் 2, வசனம் 152, யஜுர் வேதம் : அத்தியாயம் : 31, வசனம் : 18, ரிக்வேதம், புத்தகம் : 8, வேதவரி : 6, மந்திரம் : 10, அதர்வன வேதம் : புத்தகம்:8, வேதவரி : 5, மந்திரம் : 16, அதர்வன வேதம் : புத்தகம் : 20, வேதவரி : 126.

Previous post:

Next post: