நேர்வழி எது?

in 2015 நவம்பர்

 

A.மெஹருன்னிசா,
தஞ்சை

முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும், கலிமாவை ஏற்று இஸ்லாத்தில் அடியயடுத்து வைத்த நாம் ஒரு கையில் இறைபோதமும் மறு கையில் நபி போத மும் கொண்டு நாம் செல்ல வேண்டிய இடம் எது என்று தெரியுமா? எந்தக் கண்ணும் பார்த்திடாத எந்த காதும் கேட்டிடாத அழகிய சுவனத்தை அல்லவா! ஆனால் நாம் செய்கின்ற ஒவ்வொன்றும் நேர்வழிதானா? என்ற சிந்தனை யில் சில வி­யங்களை நாம் சிந்திப்போம் நேர் வழி எது? இந்த கேள்விக்கு பதிலை தேடுவோமா முதலில்?
மீலாது நபி (நபிகளின் பிறப்பு)

மீலாது நபியை செய்யக்கூடிய சுன்னத் ஜமா அத் கூட்டத்தினர் நியாயப்படுத்தும் வாதம் என்ன தெரியுமா? பிறந்த நாளில் செய்யாமல் பிறகு ஒரு நாளில் பிறப்பு என்ற தலைப்பில் பேசுவது மற்ற தலைவர்களை அவர் அவர்கள் புகழ்வது போல் நாமும் நம் தலைவரான நபி யின் பிறப்பை புகழ வேண்டும் என்கிறார்கள். ஆனால் நாம் அவர்களின் முன்னே இந்த வாதத்தை வைப்போம். அதாவது, மற்றவர்க ளைப் போல் நாமும் செய்கிறோம் என்று சொன்னால் இது எப்படி நேர் வழியாகும்? நபி என்ன சொல்லியிருக்கிறார்கள்? யார் பிற மத கலாச்சாரங்களைப் பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவர்களே என்ற இந்த ஹதீஃதை எடுத்துக் கொண்டால் பிற தலைவர் களின் பிறப்பை பேசுவது போல் நாமும் ஏன் பிறப்பு என்ற தலைப்பில் பேச வேண்டும்? அல் லாஹ் தனது திருகுர்ஆனில் அழகாக சொல்லி காட்டுகிறான். தூதர் உங்களுக்கு எதனை கட் டளை இடுகிறார்களோ அதன்படி செய்யுங் கள், எதை தடுக்கிறார்களோ அதை விட்டும் தடுத்து கொள்ளுங்கள். (59:7)

இந்த வசனத்தை எடுத்துக் கொண்டால் நபி யவர்கள் அவர்களுக்கு முன்னால் வந்த எத்த னையோ நபிமார்கள் இருக்கிறார்கள். அவர்க ளில் யாருக்காவது விழா செய்து இருக்கிறார் களா? அல்லது கலீஃபாவாக இருந்த காலத்தில் எந்த நபி தோழராவது நபிக்கு பிறந்த நாளை கொண்டு விழா செய்தார்களா? இப்படி யாரும் செய்யாத ஒன்றை நீங்கள் நல்லதைத்தானே செய்கிறோம் என்று வரம்பு மீறுகிறீர்கள். இதற் கான ஹதீஃத் இதோ நன்மையாக இருப்பினும் நான் சொல்லாத ஒன்றை நீங்கள் செய்யாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் அல் லாஹ் குர்ஆனில் சொல்கிறான். நபி பிறந்த அந்த நாளை விட நபித்துவம் பெற்ற அந்த லைலத்துல் ஃகத்ர் அந்த நாளே மிக கண்ணியமானது என்று சொல்லப்பட்டுள்ளது.

இப்படி குர்ஆன் ஹதீஃத் எதற்கும் பொருந் தாத ஒன்றை நாம் செய்து அதை மார்க்கமாக்கிக் காட்டுவது நல்ல வழியா? ஈஸா நபி(அலை) அவர் களின் பிறந்த நாளை கிறிஸ்தவர்கள் பெரும் விமர்சையாக கொண்டாடுவது ஈஸா நபியை கிறிஸ்தவர்கள் கடவுள் ஆக்கியதைப்போல் நீங் கள் என்னை செய்து விடாதீர்கள். நானும் உங் களை போல் மனிதனே என்று நபியே சொல்லி இருக்கிறார்கள். நாம் அவர்களின் மீது வைத் துள்ள பிரியத்தைக் காட்டுவது மெளலூது ஓது வதோ மீலாது நபி செய்வதிலோ இல்லை! மாறாக அவர்கள் சொல்லை ஏற்று அப்படியே அதன்வழி நடப்பதுதான் ஆகும். என்மீது ஸல வாத்து சொல்லுங்கள் அது 10 நன்மையை தரும் 10 தீமையை அழிக்கும்; என் வழியையும் இறைச் செய்தியையும் பின்பற்றுங்கள். அது சுவ னத்தைத் தரும், என் அடக்கத்தளத்தில் சலாம் சொல்லுங்கள், எனக்கு சலாம் சொல்லுவது போல் ஆகும் என்றுதான் சொல்லியிருக்கிறார் கள். ஆனால் பிறப்பை கொண்டு விழா செய்யுங் கள் என்று சொல்லவும் இல்லை; மேலும் சொல் லாத ஒன்றை செய்யவும் மார்க்கத்தில் நமக்கு அனுமதியும் இல்லை.

இவர்களின் பேச்சை கேட்கும் அடுத்த தலை முறை என்ன செய்யும்? பிற தலைவர்களின் பிறப்பைப் புகழ்வது போல் நபிக்கு பிறப்பைக் கொண்டு விழா செய்வது சரி என்றால் பிற தலை வர்களை போல் நபிக்குச் சிலை வைப்பதும் தவறு இல்லையே என்ற ஒரு சிந்தனைக்கும் ஒரு தவறான வழிகாட்டுதலுக்கு வழி வகுக்குமா? தவறு இல்லையா? இதற்கு யாரிடம் பதில் இருந் தாலும் அல்லாஹ்விற்கு அஞ்சி குர்ஆன், ஹதீஃத் ஆதாரத்துடன் இருந்தால் சொல்லவும். இந்த சிறிய துவக்கத்திற்கு பெரிய விளக்கத்தை சுன்னத் ஜமாஅத் கூட்டம் முன் மொழியுமா? யார் எதைச் சொன்னாலும் தலையாட்டும் மாக் களாக நாம் இல்லாமல் அல்லாஹ் கொடுத்த 6ம் அறிவைக் கொண்டு மக்களே நாம் சிந்தித்து செயல்படுவோமாக! வெற்றி பெறுவோமாக!

Previous post:

Next post: