ஐயமும்! தெளிவும்!!

in 2015 நவம்பர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : நபி(ஸல்) எந்த சந்தர்ப்பத்திலாவது எந்த ஒரு நபி தோழரையாவது சபித்ததுண்டா?
றீ.னி.யஹ்யா, காரைக்கால்
தெளிவு : (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக-அருட்கொடையாகவே யன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் : 21:107). இவ் இறை வசனத்தை நிரூபிக்கும் நபிமொழியையும் பாரீர் : அல்லாஹ்வின் இவ்வருள் வாக்குப்படி நபி (ஸல்) அருட்கொடையாக இருந்தார்களேயன்றி சபிப்பவராக இருந்ததில்லை. தமது நபித்தோழர் களில் எவரும் தவறு செய்துவிட்டால், அதனை பலர் அறிய, அல்லது தவறு செய்தவர் மனம் வருந்தும்படிக் கூட கூறமாட்டார்கள். தாம் பொது பயான் (குத்பா) செய்யும்போது உங்களில் ஒரு சிலர் இந்தத் தவறு செய்வதைக் காண்கிறேன்.(பெயர் குறிப்பிடமாட்டார்கள்) அது தவறு என உபதேசிப் பார்கள். (இப்னு ஹிஷாம்) எனவே யாமறிந்த வரை நபி(ஸல்) எந்த ஒரு நபிதோழரையும் சபித்ததாக காண முடியவில்லை. ஆனால் செயல் அடிப்படை யில் அல்லாஹுவின் ஆணைக்கு மாறு செய்பவர் களை மொத்தமாக சபித்துள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதனையும் அல்லாஹ்வின் ஆணைப் படியே செய்தார்கள்.
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் நெறிநூலில் மனிதர் களுக்காக விளக்கிய பின்னரும் யார் மறைக்கிறார் களோ, நிச்சயமாக அவர்களைச் சபிப்பதற்கு உரிமையுடையவர்களும் சபிக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 2:159)
இவ்விறை வசனப்படி சபிப்பதற்கு அல்லாஹு விடமிருந்து உரிமை பெற்றவர்கள் உண்டு என் பதை அறியலாம். அவ்வுரிமை பெற்றவர்கள் வான வர்கள், ரசூல்மார்கள், நபிமார்கள் போன்றோர் முதலிடம் வகிக்கின்றனர். இவ்வுரிமைப் பெற்ற வானவர்களின் முக்கியமானவர் ஜிப்ரயீல்(அலை) அவர்களும், நபி(ஸல்) அவர்களும் மூன்று கூட்டத் தாரை சபிப்பதை கீழ்க்காணும் நபிமொழி மூலம் நன்கு உணரலாம்.

ரமழான் மாதத்தில் ஒரு குத்பாவின்போது எல்லா நபி தோழர்களையும் மிம்பருக்கு அருகில் வர ஆணையிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் மிம்ப ரின் முதல் படியில் கால் வைத்ததும் ஆமீன் என்றார் கள். இரண்டாவது படியிலும் ஆமீன் என்றார்கள். மூன்றாவது படியிலும் ஆமீன் என்றார்கள், என்று மில்லாதபடி புதுமையாக நபி(ஸல்) அவர்கள் மிம்ப ரில் ஏறும்போது ஆமீன் சொல்வதைக் கண்ட நபி தோழர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாமும், ஜிப்ரயீல்(அலை) அவர்க ளும் உரையாடியதை விளம்பினார்கள். அது வருமாறு :
நபி(ஸல்) மிம்பரின் முதல் படியில் கால் வைத்த போது

ஜிப்ரயீல்(அலை): எவரொருவர் ரமழான் மாதத் தைப் பெற்று அதில் தமது பாவ மன்னிப்புக்கான நல்லமல் எதுவும் செய்து கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்.
ரசூல்(ஸல்) : ஆமீன் (இவரது சாபத்தை ஏற்றுக் கொள்வாயாக)
இரண்டாவது படியில் கால் வைத்தபோது,
ஜிப்ரயீல்(அலை) : நபி(ஸல்) அவர்களை நினைவு படுத்தப்படும்போது எவரொருவர் அவர்கள் மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவரும் நாசமாகட்டும்.
ரசூல்(ஸல்) : ஆமீன்! (இதனை ஏற்றுக் கொள்வாயாக)
மூன்றாவது படியில் கால் வைத்தபோது,
ஜிப்ரயீல்(அலை) : எவரொருவர் தனது வயது முதிர்ந்த பெற்றோரில் இருவரையோ அல்லது ஒரு வரையோ அமையப் பெற்று அவர்கள் மூலம் சொர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்.

ரசூல்(அலை) : ஆமீன்! (இதனை ஏற்றுக்கொள் வாயாக) அறிவிப்பு : கஃபு இப்னு உஜ்ரா(ரழி) ஆதாரம்: புகாரீ, திர்மிதீ, பைஹகீ, தப்ரானி, ஹாக்கிம், இப்னு ஹிப்பான்.
மேற்கண்ட ஹதீஃத் மூலம் ரமழானில் நற்செயல் செய்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பது அவசியம். நபி(ஸல்) அவர்களை நினைவுபடுத்தப் பட்டால் கேட்போர் ஸலவாத் சொல்ல வேண்டும். வயோதிகர்களான பெற்றோருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இந்த நற்செயல்கள் செய்யாதவர் யாராக இருந்தாலும் அவர்கள் வானவர், ரசூல் (ஸல்) சாபத்திற்கு உரித்தாகிறார்கள் என்பதை அறியலாம்.

 

ஐயம் : வடக்கே தலை வைத்து தெற்கே கால் நீட்டி யும், மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டியும் படுக்க வேண்டுமென்பது ரசூல்(ஸல்) காட்டித் தந்த முறையா? இதற்கு ஹதீஸில் ஆதாரமுண்டா? அல் லது நமது நாட்டுக்கு மேற்கே கஃபத்துல்லா இருப்ப தால் நாம் தரும் மரியாதையா? மு.அப்துல் ஹமீது, நிரவி

தெளிவு : கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம், நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அல்லாஹ்வின் முன்னிலையுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்திருப்பவன். எல் லாம் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 2:115)
நன்மை(புண்ணியம்) என்பது உங்கள் முகங் களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள் வதிலில்லை. ஆனால்,
நன்மை என்பது அல்லாஹுவின் மீதும்,
மலக்குமார்கள் மீதும், நெறிநூல்களின் மீதும்,
நபிமார்கள் மீதும், ஈமான் கொள்ளுதல்,
(தன்) பொருளை இறைவன் மேலுள்ள பாசத் தின் காரணமாக பந்துக்களுக்கும், அநாதைகளுக் கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர் களுக்கும், யாசிப்போருக்கும், (அடிமைகள், கடனா ளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்.

இன்னும் தொழுகையை ஒழுங்காக கடை பிடித்து முறையாக ஜகாத்(ஏழை வரி) கொடுத்து வருதல் (இவைகளே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறை வேற்றுவோரும், (வறுமை, இழப்பு போன்ற) துன் பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறி யாளர்கள், இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (அல்குர்ஆன் : 2:177)

திசைகளுக்கு எவ்வித முக்கியத்துவமுமில்லை. அல்லாஹ் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறான் என் பதை முதல் குர்ஆன் வசனம் நிரூபிக்கிறது. ஒருசில திசைகளை சிறப்பாக்கி நன்மை கிடைக்குமென செயல்படுவதை இரண்டாவது இறைவசனம் மறுக் கிறது. உண்மையான நன்மை, புண்ணியம் எப்படி கிடைக்கும் என்பதையும் பட்டியலிட்டு காட்டுகி றது. அல்லாஹ் கூறும் இந்தச் செயல்களை செய்யா மல் ஒரு திசையில் கால் நீட்டுவது கூடாது. அத்திசை யில் தலை வைக்க வேண்டுமென சிறப்பிப்பது அல் லாஹ் கூறும் அருள் மொழியும், நபி வழியுமல்ல.
நபி(ஸல்) அவர்கள் படுக்கப் போகும்போது எப் படி நடந்து கொள்ளவேண்டுமென்பதை அறிவித் தார்களோ, அப்படி நடப்பதே நபிவழியாகும்.

தொழுகைக்கு ஒளூ செய்வது போல ஒளூ செய்ய வேண்டும். படுக்கையை தூய்மையாக உதறி விரித்து, நமது உடலின் வலப்புறத்தை சாய்த்து அல்லாஹும்ம பிஸ்மிக்க ரப்பீ வழஃத்து ஜன்பீ, வபிக அரஃ(ய்)பஉகு வஇன் அம்சக்தஹா நப்ஸீ ஃபர்ஹம்ஹா, வஇன் அர்சல்த்தஹா ஃய்பஹபழ் பீமா தஹ்பழ இபாதுக்க சாலிஹீன்.

பொருள் : யா அல்லாஹ்! எனது இரட்சகனே! உனது திருநாமத்தை உச்சரித்தவனாக, எனது உடலை சாய்க்கிறேன். உன்னைக் கொண்டு அதை உயர்த்து வேன். (நான் உறங்குகையில்) எனது உயிரை கைப் பற்றிக் கொண்டால் அதனை (சுவர்க்கம் தந்து) அருள் பாலிப்பாயாக! (விழிப்பது மூலம்) எனது உயிரை திருப்பிந்தால் (தீய செயலிலிருந்து) உனது நல்லடியார்களை பாதுகாத்தது போல் பாதுகாப் பாயாக! ஆதாரம் : புகாரீ, முஸ்லிம், அஹ்மது

வடக்கே தலை வை! தெற்கே கால் நீட்டு! மேற்கே காலை நீட்டாதே! கிழக்கே தலை வைக் காதே! என்றெல்லாம் நபி(ஸல்) கூறியதற்கு ஆதார மில்லை. தமிழகத்தில், மேற்கே கஃபத்துல்லாஹ் இருப்பதால் அத்திசையில் கால் நீட்டக் கூடாது என்று நினைக்கின்றனர். இதே அடிப்படையில் ஒரு சிலர் அவர்களது குல தர்ஹா விருக்கும் திசை நோக்கியும் கால் நீட்டக் கூடாது என சட்டமியற்றி நடந்து வருவதைப் பார்க்கிறோம். இவை மூட நம்பிக்கையாகும். கிப்லாவை நோக்கி கால் நீட்டக் கூடாது என்பதற்கு எவ்வித குர்ஆன், ஹதீஸ் ஆதார முமில்லை. ஆனால் திறந்த வெளியில் கிப்லாவை முன் நோக்கியோ, பின்னோக்கியோ மலம், ஜலம் கழிப்பதற்கு தடை இருக் கிறது.

நீங்கள் மலம், ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன் நோக்க வேண்டாம். பின் நோக்கவும் வேண் டாம். (அபூ அய்யூபில் அன்ஸாரி(ரழி),புகாரி.

அறிவியல் அடிப்படையில் மனிதனின் தலைப் பகுதி வடக்காகவும் (ஹிலிrமிஜு ஸ்ரீலியிe) கால் பகுதி தெற்கா கவும் (றீலிற்மிஜு ஸ்ரீலியிe) இருப்பதால், வடக்கும், வடக்கும் எதிர்ப்பதால், (றீழிதுe Pலியிeவி யூeஸ்ரீeயி) தலையை வடக்கு நோக்கி வைக்கக் கூடாது என்று தடை செய்கின்றனர்.

ஐயம் : நபி(ஸல்) மக்காவை விட்டு மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) புறப்பட்டதிலிருந்துதானே நமது இஸ் லாமிய ஆண்டு கணக்கிடப்படுகிறது. அப்படி யிருக்க ரபியுல் அவ்வல் பிறை 12ல் ரசூலுல்லாஹ் (ஸல்) பிறந்தார்களென்றும், 40வது வயதில் நுபுவத் (நபிப்பட்டம்) வந்ததென்றும் கூறுகிறோமே அது எந்த ஆண்டைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஹிஜ்ரத் நபி(ஸல்) அவர்களின் 53வது வயதில் தானே ஏற்பட்டது?! மு. அப்துல்ஹமீது, நிரவி.

தெளிவு : தாங்கள் குறிப்பிட்டது போல் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த ஆண்டிலிருந்தே இஸ்லா மிய ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பிக்கவில்லை. நபி(ஸல்) ஹிஜ்ரி 11ல் வஃபத்தானார்கள். அடுத்து அபூபக்கர் (ரழி) ஆட்சி நடந்தது. அவர்கள் 2டி வருடங்கள் ஆட்சி செய்து ஹிஜ்ரி 14ல் வஃபாத்தானார்கள். பின் உமர்(ரழி) ஆட்சி ஆரம்பமானது. அப்போதுதான் இஸ்லாமிய காலண்டர் உருவானது. ஹிஜ்ரி ஆண்டு என பெயரிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பும் 12 மாதங்களைக் கொண்ட வருட கணக்கு நடை முறையிலிருந்தது. அதற்கு இன்றைய அரபி மாதங் களின் பெயர்களும் இருந்துள்ளன என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் ஆதாரங்களுள்ளன.

நிச்சயமாக அல்லாஹுவிடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டில்) பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இது தான் நேரான மார்க்கமாகும். (அல்குர்ஆன் : 9:36)
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங் களாயிருக்கும். (2:197)
ரமழான் மாதத்தில் குர்ஆன் இறக்கப்பட்டது. (2:185)
போர் விலக்கப்பட்ட (ரசூல்(ஸல்) விளக்கப்படி, துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு) சங்கைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால்.
(அல்குர்ஆன் : 9:5)

மேற்கண்டவாறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்பே கணக் கிடப்பட்டுக் கொண்டிருந்தன என்பதை அறிய லாம். அல்பிதாயா வந்நிஹாயா என்ற பெரும் சரித் திர நூல் எழுதிய இமாம் இப்னு கதீர்(ரஹ்) அவர் கள் ஹிஜ்ரி ஆண்டு வருவதற்கு முந்திய காலங்களை ஆமூல் ஃபீல் (யானை வருடம்) எனக் குறிப்பிடுகி றார்கள். எனவே ரபீயுல் அவ்வல் மாதம் நபி(ஸல்) அவர்களுக்கு 40 வயதில் நபிப் பட்டம் கிடைத்தது அனைத்தும் அன்றைய நடைமுறையில் இருந்து கணக்குப்படி கணக்கிடப்பட்டதுதான். அதனை மாற்றி விடாதபடியே சந்திர ஓட்டத்தை (ஸிUஹிபுயூ றீக்ஷுறீவீசினி) கணக்கிட்டு ஹிஜ்ரி ஆண்டு உமர்(ரழி) காலத்தில் உருவாக்கப்பட்டது.

அன்றைய அரபிகளிடம் ஞாபக சக்தி அதிகம். தன் குதிரையின் எழுபது தலைமுறையைக் கூட ஞாபகத்தில் வைத்திருந்தனர். எனவே நாள், மாதம், ஆண்டு கணக்குகளை நினைவில் வைத்திருந்தது வியப்பில்லையே! அன்றைய “ஆமுல்பில்’ கணக்கில் கொண்டிருந்தனர். அது உமர்(ரழி) காலத்தில் ஹிஜ்ரியாக, ஹிஜ்ரத் நடந்த ஆண்டிலிருந்து புதுப் பிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்கள் புது ஹிஜ்ரி ஆண்டை உருவாக்கினார்களே ஒழிய முந்திய கணக்கை பொய்ப்பிக்கவில்லை என்பதை அறிய வும். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
குறிப்பு : திருவள்ளுவரின் பிறப்பு பல நூறு ஆண்டு களுக்கு முன் நிகழ்ந்திருந்தாலும், வள்ளுவர் ஆண்டு அண்மையில்தான் தமிழகத்தில் கணிக்கப்பட்டது.

ஐயம் : வியாழன் மாலை வெள்ளி இரவு ஒவ் வொரு வாரமும், கடைகளிலும், பள்ளிகளிலும் பலாமுசீபத்து நீங்கி பரக்கத் கிடைப்பதற்காக யாஸீன் ஓதி சிலர் காசு வாங்குகிறார்கள். இது மார்க் கத்தில் உள்ளதா? னி.பு.அப்துல் காதிர், விருதுநகர்.

தெளிவு : பலாமுசீபத்து என்ற பெயரில் பல அநாட் சாரங்கள் முஸ்லிம்களிடம் நிலவி வருகிறது. அவற் றில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு வியாழன் இரவை வெள்ளி இரவு என்று சொல்லி யாஸீன் ஓத வேண்டு மென மார்க்கமாக்கியவர் யார்? என்பது எவருக்கும் தெரியாத உண்மை. தினமும் குர்ஆன் படியுங்கள்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் படியுங்கள்! நபி (ஸல்) அவர்கள் வாக்குப்படி கட்டாயம் நன்மை கிடைக்கும்.

வியாழன் இரவு பலாமுசீபத்து நீங்க யாஸீன் ஓது கிறார்கள் என்றால் அன்றுதான் பலாமுசீபத்து இறங்குகிறதா? மற்ற நாட்களில் இறங்குவதில் லையா? மற்ற நாட்களில் பலாமுசீபத்து இறங்கி னால் என்ன செய்வார்கள்? எந்த நாளில் பலாமுசீ பத்து இறங்கும் என்பதை இவர்களுக்கு கற்றுத் தந்தது யார்? இதற்கெல்லாம் பதில் சொல்ல மாட் டார்கள். குர்ஆன் ஓதுவது தவறா? யாஸீன் ஓதக் கூடாதா? அல்லாஹுவின் கலாமை ஓதுவதால் நன்மை தானே! எனக்கூறி காசு தேடவே முற்படுவர்.

ஒவ்வொரு வியாழன் இரவும் யாஸீன் ஓதி காசு வாங்கும் நீங்கள் குறிப்பிட்டபடி ஒரு சில ஆலிம்கள் எவ்வித பலாமுசீபத்தும் இல்லாமல் சுபீட்சமாக இருக்கிறார்களா? என்பதைப் பாருங்கள். உங்க ளுக்கு உண்மை தெரிந்துவிடும். அவர்களது பொரு ளாதார வாழ்வில் பரக்கத் இல்லாததால்தான், அவர் கள் யாஸீனை வாராவாரம் வியாழன் இரவுகளில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரே ஒரு தடவை ஒருகடையில் வியாழன் இரவு யாஸீன் ஓதுவதால் பரக்கத் அக்கடையில் ஏற்படு மென்றால், பல கடைகளில் பல தடவைகள் யாஸீன் ஓதும் ஒரு சில ஆலிம்களின் வாழ்வு எவ்வளவு பரக் கத்தாக இருக்க வேண்டும். இருக்கிறதா? ஒவ் வொரு வியாழன் இரவும் பல கடைகளில் யாஸீன் ஓதி காசு பெற்று பரக்கத் கிடைக்குமென கூறும் ஆலிம்கள் அடுத்த வியாழன் இரவுக்கும் யாஸீன் ஓதி காசு பெறும் நிலையிலேயே அவர்களுக்கு பரக் கத் இருக்கிறது என்பதையும் உணருங்கள். இவர் களைப் பற்றி நபி(ஸல்) அன்றே நமக்கு அறிமுகப் படுத்தி விட்டு சென்றுள்ளார்கள்.

எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல்லாஹ் விடமே கேட்கட்டும். வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடையே (கூலி) கேட்பவர்கள் தோன்றுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள். ஆதாரம் : திர்மிதீ, அஹ்மது.

குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள் என நபி (ஸல்) எச்சரித்தார்கள்.
ஆதாரம் : அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகீர்

மேற்கண்ட ஹதீஸ்களை பார்வையிடுபவர்கள், வியாழன் இரவு பலாமுசீபத்து, பரக்கத்து பெயரில் யாஸீன் ஓதி காசு வாங்குபவர்கள் எப்படிப்பட்ட வர்கள் என்பதை உணரலாம். அரபி படித்தவர்கள், குர்ஆன் ஓதக் தெரிந்தவர்கள் என்ற ஒரே காரணத் தில் இஸ்லாமிய மக்களை இவர்கள் ஏமாற்றி வரு கின்றனர். நாமும் குருட்டு நம்பிக்கையில் நடந்து வருகிறோம். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பா னாக! இது போன்ற மூடப்பழக்கத்திலிருந்து விடு பட்டு தினமும் அல்லது நேரம் கிடைக்கும் போது குர்ஆன் படித்து, படிக்கக் கேட்டு அல்லாஹுவின் அருட் கொடையை அள்ளிக் கொள்ளுங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.

ஐயம் : தொழும்போது இரு ஸுஜூதுகளுக்கும் இடையிலுள்ள சிறு இருப்பில் நபி(ஸல்) அவர்கள் எதையும் நாம் ஓதும் வகையில் கற்றுத் தந்திருக் கிறார்களா. நிஃமத் ஹுஸைன், கத்தார்.
தெளிவு : ஹுதைஃபா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கு மத்தி யில்(இருக்கும் சிறு இருப்பில்) ரப்பிஃ ஃபிர்லீ, ரப்பிஃ ஃபிர்லீ என்று ஓதிக் கொண்டிருந்தார்கள்.
பொருள் : எனது ரப்பே! என்னை மன்னித்து விடு! எனது ரப்பே! என்னை மன்னித்து விடு!
நபி(ஸல்) அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கு மத்தி யில் (உள்ள சிறு இருப்பில்) அல்லாஹும் மஃ ஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வஹ்தினீவர்ஜுக்னீ என்று ஓதிக் கொண்டிருந்தார்கள். (ஜைது பின் ஹுபாப்(ரழி) ஹாக்கிம்
பொருள் : யா அல்லாஹ் என்னை மன்னித்தருள் வாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குறை களை நிவர்த்திப்பாயாக! எனக்கு நேர்வழி காட்டு வாயாக! எனக்கு ரிஜ்கு தந்தருள்வாயாக!

ஐயம் : முஸ்லிம்களின் திருமணத்தின் போது பெண் ணுடைய கழுத்தில் தாலி கட்டுவது அவசியமா? தாலி கட்டுவது பற்றி மார்க்கத்தில் ஏதேனும் கூறப் பட்டிருக்கிறதா? றீ.க்ஷி.னி.நாஸிர், ரியாத்
தெளிவு : திருமணத்தின்போது பெண்ணுடைய கழுத்தில் தாலி கட்டுவது என்பது அவசியமற்ற தோர் செயலேயாகும். இதற்கு இஸ்லாத்தில் இம்மி யளவும் ஆதாரம் கிடையாது. இத்தகைய அர்த்த மற்ற பழக்கங்கள் நம்மிடையே பழக்க தோ­த்தி னால் ஏற்பட்டவையாகும். மாற்று மதக் கலாச்சார மாகும்.
அன்னை பாத்திமா(ரழி) அவர்கள் கூட தமது கழுத்தில் தான் சங்கிலி போட்டிருந்தார்கள் என்று நமது தாய்மார்கள் பேசிக் கொள்வார்கள். அதற் கெல்லாம் ஹதீஃத்களில் அறவே ஆதாரமில்லை. திருமண சபையில் அன்னை பாத்திமா(ரழி) அவர் களோடு அலி(ரழி) அவர்களின் பெயரைச் சேர்த்து “கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வ பாத்திமத் திஜ் ஜஹ்ரா’ என்று யாரோ சுயமாக தயாரித்த அந்த துஆவில் இந்த வாசகத்தை ஓதம்போது ஹூம்… ஹூம்… தாலி கட்டுங்கள் என்று சபையிலுள்ளோர் கூறுவார்கள். அப்பொழுது தான் தாலி கட்டப் படும். இப்பழக்கம் அநேக இடங்களில் உண்டு. எடுத்துக் கூற ஆள் இல்லாததால் இது போன்ற சடங்கு முறைகள் நமது சமுதாயத்திலும் வேறூன் றிப் போய்க் கிடக்கின்றன.
ஐயம் : ஸலவாத்துன் நாரியா 4444 தடவை கூட் டாக சேர்ந்து சிலர் ஓதுகிறார்கள். இது மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? குர்ஆன் ஹதீத்படி விளக்கம் தரவும். னி.பு.அப்துல் காதிர், விருதுநகர்.
தெளிவு : இப்படி ஒரு ஸலவாத்தை நபி(ஸல்) அவர் கள் கற்று தந்ததில்லை. இதற்கான தெளிவான விளக் கத்தை அந்நஜாத் செப்டம்பர், அக்டோபர் 1986 இதழ்களில் ஸலவாத் என்ற தலைப்பில் காண்க.

ஐயம் : 1. நபி(ஸல்) அவர்கள் மீது மலக்குகளும், மூஃமின்களும் கூறும் ஸலவாத்துக்கு, நபி(ஸல்) அவர்களுக்கு அருள் புரியும்படி, அவர்கள் துஆ செய்கிறார்கள் என்பது அர்த்தம் என்று கூறுவோ மேயானால், அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மீது கூறும் ஸலவாத்துக்கு என்ன பொருள்?
2. பூமி அல்லாத செவ்வாய் போன்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்பு கிறார்கள். இது சம்பந்தமான ஹதீஸ் விளக்கம் தேவை. அ.அப்துஸ்ஸலாம், மஞ்சக்கொல்லை.
தெளிவு : 1. ஸலவாத் எனும் பதத்திற்கு பல பொருட்கள் உள்ளன. ஸலவாத் எனும் பதத்தை அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறும் போது ஒரு பொருளும், மற்றவர்களுடன் இணைத்துக் கூறும் போது பிரிதொரு பொருளும் அதற்குண்டு.

பொதுவாக அருள்புரியுதல், அபிவிருத்தி செய் தல், நேசித்தல், புகழ்தல், உதவி ஒத்தாசை செய்தல், நற்பிரார்த்தனை புரியுதல் ஆகியவை அதன் பொருட்களாகும்.
அல்லாஹ்வுடன் ஸலவாத் எனும் பதத்தை இணைத்துக் கூறும்போது, அவன் அருள் புரிகிறான், அபிவிருத்தி செய்கிறான், நேசிக்கிறான், புகழ் கிறான், உதவி ஒத்தாசை செய்கிறான் என்பது பொருளாகும்.

இவ்வாறே மூமின்களுடன் அப்பதத்தை இணைத்துக் கூறும்போதும், அவர்கள் அருள் புரி யும்படி அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள், நேசிக்கிறார்கள், புகழ்கிறார்கள், உதவி ஒத்தாசை செய்கிறார்கள் என்பதே அதன் பொருளாகும்.

சுருங்கக் கூறின், அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் செய்கிறான் என்றால், அவன் அவர்கள் மீது அருள்புரிகிறான் என்றும் மலக்குகள் மூமின்கள், அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்கிறார் கள் என்றால், அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது அருள் புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்கிறார் கள் என்பதாகவும் அறிகிறோம்.
எனவே, அல்லாஹ் நம்மை நோக்கி, மூமின்களே! நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறுங்கள் என்று கட்டளையிட்டிருப்பதை நாம் உற்று நோக்கும்போது, நமது நாவினால் மட்டும் “அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதி’ (யா அல் லாஹ் நபி(ஸல்) அவர்கள் மீது அருள்புரிவாயாக!) என்று துஆ செய்வதோடு இருந்துவிடாது. மேற் கண்டபடி முழுமையாக ஸலவாத்தின் பொருட்கள் அனைத்தையும் அமுல்படுத்தும் வகையில் நபி(ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்தி, முறையாக அவர் களை நேசிப்பதுடன், அவர்கள் தமது உயிரினும் மேலாக பேணி வளர்த்து நம்மிடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற நம் தீனுல் இஸ்லாத்தின்படி நாமும் நடந்து, பிறரும் நடக்க ஆவனச் செய்வதும் அவசி யம் என்பதை உணருகிறோம்.
2. தாங்கள் கூறியிருப்பது போல் பூமி அல்லாத மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புவதாலும் நாம் அதை நம்பு வதிலோ, அல்லது நம்பாது போவதிலோ, நமக்கு எதுவும் ஏற்படுவதற்கில்லை. அவற்றில் உயிரி னங்கள் வாழ்வது குறித்து குர்ஆன் ஹதீஸ்களில் விபரங்களை நாம் பார்க்கவில்லை.

Previous post:

Next post: